Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மண்டேலாவைப் போலவே பிரபாகரனும் ஒரு இனவிடுதலை போராளி.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
மண்டேலாவைப் போலவே பிரபாகரனும் ஒரு இனவிடுதலை போராளி.
வியாழக்கிழமை, செப்டம்பர் 5, 2013
 
VP%20and%20Airwing.jpg
 
"மண்டேலாவும் வெள்ளையர்களை குண்டு வைத்துக் கொலை செய்தவர் தான். ஆனால், இன்று மண்டேலாவை அகில உலகமே மாமனிதராகப் போற்றுகிறது'' ஆனால் பிரபாகரனை தீவிரவாதி எனக் கூறுகின்றார்கள்.
.
இது ஏன் நவ நீதம் பிள்ளைக்கு கூட விளங்கவில்லை? இவ்வாறு கூறியுள்ளார் கலா நிதி விக்கிரமபாகு கருணாரட்ன.
.
அதிகாரத்தைப் பகிர்ந்து நாட்டை ஐக்கியப்படுத்துவோம் அமைப்பின் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு கொழும்பில் நேற்று இடம்பெற்றது. அதில் கலந்துகொண்ட விக்கிரமபாகு மேலும் தெரிவித்ததாவது,
,
இலங்கை வந்திருந்த நவிப்பிள்ளை, அரசிற்கு எதிராக மாத்திரம் குற்றங்களை சுமத்தி விட்டுச் சென்றுள்ளனார் எனக் கூறப்படுகிறது.   ஆனால், இவர் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பையும் கடுமையாக விமர்சித்து விட்டுச் சென்றுள்ளார்.
.
புலிகளின் செயற்பாட்டை முற்றாக நிராகரித்தே இவர் கருத்துகளையும், விமர்சனங்களையும் தெரிவித்துள்ளார்.   நவிப்பிள்ளை ஒன்றை மாத்திரம் தெரிந்து கொள்ள வேண்டும், அவர் வாழும் நாடான தென்னா பிரிக்காவின் தலைவரான நெல்சன் மண்டேலாவும் பிரபாகரன் செய்ததையே தான் செய்தார்.
.
மண்டேலாவும் பல வெள்ளையர்களை குண்டு வைத்துக் கொலை செய்தவர் தான். ஏன், அவர் மனைவிக்கு எதிராகவும் பல குற்றங்கள் முன்வைக்கப்பட்டன.   ஆனால், இன்று அவர் அனைவராலும் போற்றப்படுகின்ற, சர்வதேசமே மதிக்கின்ற ஒரு மனிதராக இன்று வாழ்ந்து வருகிறார். காரணம், அவர் தம்மின மக்களுக்காக நடத்திய போராட்டத்தில் வெற்றி பெற்றார். அதனால்தான், இன்று இவ்வாறான நிலையிலுள்ளார்.
.
அதே செயற்பாட்டைத்தான் பிரபாகரனும் அன்று செய்தார். ஆனால், இன்று சர்வதேசத்தின் முன் ஒரு பயங்கரவாதியாக முத்திரைக் குத்தப்பட்டுள்ளார். பிரபாகரன் போராட்டத்தை மேற் கொண்டவிதம்  பிழையாக இருக்கலாம். ஆனால், தமது இன மக்களுக்காகப் போராடிய இவரது குறிக்கோளை ஒரு போது பிழையென்று கூறவே முடியாது.
.
இங்கு நடைபெற்ற யுத்தம் மன்மோகன் சிங் மற்றும் சோனியாவின் யோசனைகளின் படியே நடைபெற்றது. தற்போது நடைபெறுகின்ற அபிவிருத்திகளும் இவர்களின் ஆலோசனைகளின்படியே இடம் பெறுகின்றன. இவர்கள் ஏதோ இந்த அரசின் உறவினர்கள் போல செயற்படுவது மிகவும் வேடிக்கையாக உள்ளது'' எனவும் தெரிவித்தார்.
 
  • கருத்துக்கள உறவுகள்

இது ஏன் நவ நீதம் பிள்ளைக்கு கூட விளங்கவில்லை? இவ்வாறு கூறியுள்ளார் கலா நிதி விக்கிரமபாகு கருணாரட்ன.
பிரபாகரன் காலத்தில் வாழ்ந்தவருக்கே அவரைப்பற்றி விளங்கவில்லை.....நவீபிள்ளைக்கு விளங்கப்போகுதோ
  • கருத்துக்கள உறவுகள்

சரியான கேள்வி.. நவி பிள்ளை அவர்கள் சிங்களவனுக்கோ, மேற்குலகுக்கோ பயப்படாமல் கருத்துக்களை முன்வைக்க வேண்டும்.. :rolleyes:

நவி பிள்ளை அவர்கள் தமிழனுக்கோ, சிங்களவனுக்கோ, மேற்குலகுக்கோ பயப்படாமல் கருத்துக்களை முன்வைக்க வேண்டும்.. :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

நவி பிள்ளை அவர்கள் தமிழனுக்கோ, சிங்களவனுக்கோ, மேற்குலகுக்கோ பயப்படாமல் கருத்துக்களை முன்வைக்க வேண்டும்.. :rolleyes:

ஏன் சார்.. தமிழரைப் பார்ந்து பயப்படுகிற நிலையிலா இப்ப உலகம் இருக்கு??

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் சார்.. தமிழரைப் பார்ந்து பயப்படுகிற நிலையிலா இப்ப உலகம் இருக்கு??

 

 

அவருக்கு

பல்லுக்கு பதமாக  கடிப்பதற்கு இன்று வேறு எதுவும்  கிடைக்கவில்லைப்போலும்......... :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.