Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலிக்கொடி விவகாரம்; சந்தேகநபரை கொண்டுவர பேச்சு; சி.ஐ.டி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

1(3082).jpg

ஐக்கிய இராஜியத்தில் கார்டிஃப் நகர மைதானத்தில் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியின் போது புலிக்கொடியுடன் ஓடிய சந்தேகநபரை இலங்கைக்கு கொண்டுவருவது பற்றி பிரித்தானிய பொலிஸாருடன் பேசிவருவதாக குற்றப்புலனாய்வு பிரிவினர் நீதிமன்றத்தில் நேற்று திங்கட்கிழமை தெரிவித்தனர்.

இந்த வழக்கு விசாரணை கொழும்பு பிரதான நீதவான் முன்னிலையில் நேற்று திங்கட்கிழமை விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டபோதே சி.ஐ.டியினர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அத்துடன் குறித்த சந்தேகநபரை மான்செஸ்டர் பொலிஸின் சர்வதேச குற்றச்செயல் கிளை தேடிவருவதாக குற்றப்புலனாய்வு பிரிவினர் கொழும்பு நீதவானிடம் அண்மையில் தெரிவித்திருந்தனர்.

சந்தேகநபரான லோகேஸ்வர்ன மணிமாறன் இன்னும் கைது செய்யப்படாது மறைந்து வாழ்வதால் விசாரணையை முடிக்க முடியவில்லை என்றும் குற்றப்புலனாய்வு பிரிவினர் நீதிமன்றத்தின் கவனத்திற்கு அன்று கொண்டுவந்தனர்.

ஆகையால், ஏற்கெனவே தடுத்து வைக்கப்பட்டுள்ள இரண்டு சந்தேகநபர்களான குலதீபன் மற்றும் உதயனை தொடர்ந்தும் தடுப்புக்காவலில் வைத்து விசாரிப்பதற்கு அனுமதியளிக்குமாறு குற்றப்புலனாய்வு பிரிவினர் அன்று அனுமதி கோரியிருந்தனர்.

இந்த வழக்கு கொழும்பு மேலதிக நீதவான் நிசாந்த பீரிஸ் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே சந்தேகநபரை இலங்கைக்கு கொண்டுவருவது பற்றி பிரித்தானிய பொலிஸாருடன் பேசிவருவதாக சி.ஐ.டியினர் தெரிவித்தனர்.

இதேவேளை, புலிக்கொடியுடன் ஓடியவரின் கடவுச்சீட்டை பறிமுதல் செய்யுமாறு கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலபிட்டிய ஜூலை மாதம் 30 ஆம் திகதி உத்தரவிட்டிருந்தார்.

யசோதார சடாச்சரமூர்த்தி எனும் பெயரில் 2000 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 08 ஆம் திகதி பெற்றுக்கொண்ட கடவுச்சீட்டையே பறிமுதல் செய்யுமாறு நீதவான் அன்று உத்தரவிட்டிருந்தார்.

அவருக்கு எதிரான வழக்கு ஜூன் 30 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே நீதவான் மேற்கண்டவாறு உத்தரவிட்டிருந்தார்.

சாம்பியன்ஸ் கிண்ணத்துக்கான கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் இரண்டாவது அரையிறுதி ஆட்டம் ஜூன் மாதம் 20 ஆம் திகதி  கார்டிஃப் நகர மைதானத்தில் நடைபெற்றது.

இதன்போது மைதானத்திற்குள் புலிக்கொடியுடன் ஓடியவரையே கைது செய்யுமாறு கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலபிட்ட திறந்த பிடியாணையை ஜுலை 3 ஆம் திகதி புதன்கிழமை பிறப்பித்தார்.

இந்நிலையில், கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு அவர் வருகைதந்தால் கைது செய்யுமாறு ஜூன் 15 ஆம் திகதி திங்கட்கிழமை உத்தரவிட்ட நீதவான் சிவப்பு அறிவிப்பு விடுத்துள்ளார்.

புலிக்கொடியுடன் மைதானத்திற்குள் ஓடி குழப்பம் விளைவித்த லோகேஸ்வரின் மணிமாரன் என்பவருக்கே இவ்வாறு சிவப்பு அறிவிப்பு விடுக்கப்பட்டு திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், வழக்கு விசாரணை செப்டெம்பர் 23 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த உறவை கொடூர சிங்கள அரசின் பிடிக்குள் சிக்காது காப்பாற்ற இங்கிலாந்தில் உள்ள சட்டவாளர்கள் உதவி வழங்க முன்வருவது.. நல்ல மனிதாபிமானமாகவே பார்க்கப்படும். :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

இவரை கள்ள மட்டை போடுபவர் என்று பேசினார்கள்.. இப்ப உதவிக்குப் போவார்களா?

  • கருத்துக்கள உறவுகள்

அப்படி கள்ள மட்டை விவகாரம் ஒன்றிருந்தால்.. அது வேறு. இந்த சிங்கள அரசின்.. அரசியல் பழிவாங்கல் நோக்கம் கொண்ட நடவடிக்கை வேறு. அந்த வகையில்.. இதனை தனிப்பட்ட மனிதன் மீது தமிழன் என்பதற்காக சிங்களன் செய்யும் மனித உரிமை மீறலாகவே இதனைப் பார்க்க வேண்டும். இத்தாலியில் எத்தனையோ சிங்கள பாதாள உலகக் கோஷ்டியினர் தஞ்சம் பெற்று வாழ்கின்றனர். அவர்களில் சிலர் இங்கிலாந்திற்கும் களவா வந்து வாழ்கின்றனர். அவர்களை எல்லாம் பிடித்து வர கட்டளை இடாத சிங்கள நீதித்துறை.. இந்த விடயத்தில் மட்டும் இவ்வளவு கராராக இருக்க.. அரசியல் அழுத்தங்களும் இனவிரோதமுமே முக்கிய காரணம். :icon_idea:

 

எம்மவர்களிடம் உள்ள பிரச்சனையே.. தலையிடிக்கு வைத்தியரிட்டப் போனால்.. உடலில் அனைத்துப் பாகங்களிலும் வியாதி இருப்பதாக அடுக்கிக் கொண்டிருப்பார்கள். அப்புறம் வெளிய வந்து அவனுக்கு ஒன்றும் தெரியாது. ஒழுங்கா வைத்தியம் பார்க்கிறானில்ல என்று திட்டிக்கொண்டு போவார்கள். ஒரு தடவையில் ஒரு விடயத்தை மட்டும் தான் இதில் பார்க்கனும். அது சிங்கள அரசு தமிழர்கள் மீது தொடுக்கும்.. இந்த வகையான இனவிரோதங்களை எப்படி எதிர்கொள்வது என்பது. இதுவே பின்னர் பல தமிழர்களுக்கு உலை வைக்க உதாரணமாகவும் சிங்களத்துக்கு அமையலாம். இப்போ சும்மா இருந்துவிட்டு.. அப்போது அழுது புலம்பிப் பயனில்லை.  :):lol:

Edited by nedukkalapoovan

இந்த உறவை கொடூர சிங்கள அரசின் பிடிக்குள் சிக்காது காப்பாற்ற இங்கிலாந்தில் உள்ள சட்டவாளர்கள் உதவி வழங்க முன்வருவது.. நல்ல மனிதாபிமானமாகவே பார்க்கப்படும். :icon_idea:

 

இதெல்லம் சிங்களவன் சும்மா விடுற புருடா, பயங்கரவாதிகளையே நாடு கடத்துவது சுலபம் இல்லை, அப்படி பார்க்கும் போது கொடி பிடித்தது சப்பை மாட்டர், ஆனால் ஒண்டு மட்டும் விளங்குது இது சிங்களவனை எவ்வளவு பாதித்து இருக்கு எண்டு

  • கருத்துக்கள உறவுகள்

மட்டை விவகாரத்தில், இலங்கை நீதிமன்று சர்வதேச பிடியாணையும் பிறப்பித்து, கோரிக்கை விடுத்து இருந்தால், ஆளை காதோடு, காது வைத்த மாதிரி அனுப்பி இருப்பார்கள்.

 

இப்போது விடயம், விவகாரமாகி விட்டது. இப்ப, மட்டைப் பிரச்சனைக்கு மேலாக, கொடிப் பிரச்சனை வந்து நிக்குது.

 

ஆளைப் பிடித்து அனுப்பினால், அங்கு சங்கு தான் என்று சொல்லி தப்ப, தவிர்க்க முனையலாம்.

 

தெரிந்து தான், ஐடியா போட்டு கொடி பிடித்து இருப்பாரோ, மட்டைக்காரர்?

 

ஆள் கில்லாடியாக இருப்பார் போல இருக்கே!!

Edited by Nathamuni

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.