Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

என் வீட்டுக் கண்ணாடி (நனவிடை தோய்தல்)

Featured Replies

விம்பம் (1)

 

காலங்களுக்குத்தான் எத்தனை அவசரம்.

 

நேற்றுத்தான் நிகழ்ந்தது போலிருக்கிறது.

 

'என்ர பறாளாயான்களே.. நீங்கதான் எப்பவும் என்ரை பிள்ளைக்குப் பக்கத்தில இருக்க வேணும்..'

அந்த பறாளாய் முருகன் பிள்ளையாரை வேண்டி விம்மலுடன் என்னை வழியனுப்பி வைத்தாள் அம்மா. 1984 கார்த்திகையில் நிகழ்ந்த அந்தப் பிரிவு என்னுள் இன்னமும் பசுமரத்தாணியாக...!

 

அப்போது அது எனக்குப் பெரிதாகத் தோற்றவில்லை. ஜேர்மனிக்குப் போகிறோம் என்ற சந்தோசம்மட்டுமே மேலோங்கி இருந்தது. புதிய மண்ணைத் தரிசிக்கப் போகிறன்.. புதிய மனிதர்களைச் சந்திக்கப் போகிறேன்.. புதிய அனுபவங்களைப் பெறப் போகிறேன் என்ற ஆர்வமே என்னுள் வியாபித்திருந்தது.

 

83 யூலை இனக்கலவரம் காரணமாக 'ஸ்ரீமானி' என்ற சரக்குக் கப்பலில் காங்கேசன்துறையை அடைந்தேன்.

 

(எனது யூலை 83 இனக்கலவர அனுபவத்துக்கு...)

 

இலங்கைப் போக்குவரத்துச் சபையின் வஸ் போகாத எனது வீட்டுத் தகரப் படலையடிக்கு இபோச வஸ் கஸ்ரப்பட்டு வேலிகளை உரசியும் கொஞ்சியும் சென்று என்னை இறக்கிவிட்டது. அதற்குப் பின் ஏறக்குறைய ஒன்றரை வருடங்கள் தொடர்ச்சியாக ஊர் வாசம்.

 

ஒரு வீட்டில் நானும் அம்மாவும்மட்டுமே... 9ம் வகுப்பில் இருந்து கொழும்பு 'கொஸ்ரல்' வாசம்.. றோயல் தோமியன் கிறிக்கற் வாசம்.. ஹோலி பமிலி கொன்வென்ற், லேடீஸ் கொலிஜ் வாசம்.. பின்னர் ஓடிற் பேர்ம் ஒன்றில் cash book, ledger, balancs sheet என்று அல்லாடி.. ICMA படித்துக் கொண்டே Thillies Groupsஇல் வேலை செய்தபோதுதான் 83 இனக்கலவரம் வந்து எனது பாதையையும் திசைமாற்றியது.

ஆகவே 9ம் வகுப்பு படிக்கும் போதிலிருந்து அம்மாவை எப்பொழுதாவது சில நாட்கள் வந்து பார்த்து செல்லும் எனக்கு இனக்கலவரமானது ஒன்றைரை வருடகாலம் அவருடன் என்னைத் தொடர்ச்சியாகத் தங்க வைத்தது.

 

'இனி என்ன செய்யப் போகிறேன்.. எதிர்காலம் என்ன?' என்ற கேள்விகள் அவ்வப்போது மனதுள் தோன்றினாலும் நானும் அதைப்பற்றி அவருடன் உரையாடியதில்லை. அவரும் வினவியதில்லை.

 

எனது கிராமத்தில் நான் வசிக்கும் பகுதியில் பறாளாய் விளையாட்டுக் கழகம், நாவலர் சனசமூக நிலையம் ஆகியன ஒரே நிர்வாகத்தின் கீழே இயங்கிக் கொண்டிருந்தன. கொழும்பிலிருந்து வந்தவன் என்ற எண்ணமோ அல்லது வேலைவெட்டி இல்லாமல் இருக்கிறானே என்ற காரணமோ அந்த நிர்வாகத்தில் என்னை செயலாளர் பதவியில் அமர்த்தினார்கள். அந்த அமைப்புகள் ஆட்கள் வசிக்காத ஒரு வீட்டில் இயங்கின.

 

பகலில் தினசரி பத்திரிகைகள் அங்கே இடம்பெறும். மாலைவேளைகளில் அவ்வூர் பெண்களுக்கான தையல் சமையல் பயிற்சி வகுப்புகள்.. இதைவிட இளைஞர்களுக்கான வொலிபோல்.. கிறிக்கெற் போன்ற விளையாட்டுகள்.. கூடவே அந்த வருடம் முதன் முதலாக லெதர்போல் கிறிக்கெற்றும் ஆரம்பித்திருந்தோம்.

 

ஒருநாள் இரவு.. ஒன்பது மணி இருக்கும்.. முன் ஒழுங்கையிலிருந்து எவரோ அழைத்தார்கள். 'இந்த நேரத்தில் யாராக இருக்கும்' என்ற கேள்விக்குறியுடன் படலையடிக்குச் சென்று வெளியே எட்டிப் பார்த்தேன். குறைந்தது பதினைந்து இளைஞர்களாவது இருக்கும். கும்பலாக அதேநேரம் தயங்கியவாறு மௌனமாக நின்றிருந்தார்கள். அவர்களுடன் எனது நண்பனாகப் பழகும் உறவினனான சாந்தன்.

''மச்சான்.. அவசரமாய் ஒரு உதவி...''

 

பதட்டத்துடன் கிசுகிசுத்தான். திகைப்புடன் பார்த்தேன்.

 

(தொடரும்... மிகுதி அடுத்த கிழமை..)

 

(குறிப்பு: சம்பவங்கள் உண்மையானாலும் இதில் வரும் பெயர்களும் இனி வரும் பெயர்களும் கற்பனைப்பெயர்களே!)

 

Edited by sOliyAn

தொடருங்கள் சோழி வாசிக்க மிக ஆவல். அடுத்த கிழமை மட்டும் பொறுமையில்லை நாளை தொடருங்கள்  :D

  • தொடங்கியவர்

நன்றி! தொடர் சிலவேளை நாளையும் வரலாம்.. அடுத்த கிழமை என்றது ஒரு பாதுகாப்புக்காகத்தான். :D

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி! தொடர் சிலவேளை நாளையும் வரலாம்.. அடுத்த கிழமை என்றது ஒரு பாதுகாப்புக்காகத்தான். :D

 

எப்பயாவது வந்தால் சரி....தொடருங்கோ....

  • தொடங்கியவர்

விம்பம் (1) தொடர்ச்சி... (1 a)

 

தூரத்தில் ஒரு தெருவிளக்கு ஏதோ விளக்கு என்ற பெயருக்காக மங்கலாக ஒளிர்ந்து தன்னிலை விளக்க, இருட்டு நிழலாடும் பரிட்சயமில்லாத முகங்கள்.

 

பதட்டத்துடன் கிசுகிசுத்த சாந்தன் தொடர்ந்தான்.

''சனசமூக நிலையத்தின்ரை திறப்பு வேணும்...''

 

''ஏன்..''

 

''இவங்களுக்கு மெடிக்கல் செக்அப் செய்ய வேணும்..''

 

''என்ன..''

 

''ஓம்.. ராவைக்கு இறாத்தலடீல இருந்து தமிழ்நாட்டுக்கு றெயினிங்குக்காக போகினம்.. அதுக்கு முதல் மெடிக்கல் செக்அப் செய்ய வேணும்..''

 

''சனசமூக நிலையத்தின்ரை துறப்பு என்னட்டை இருந்தாலும் நான் நினைச்சபாட்டுக்குத் தரேலாது.. விசயத்தை கேள்விப்பட்டால் வீட்டுக்காரர் வீட்டைத் திருப்பி வாங்கிப்போடுவினம்....''

 

''அவசரம்டா.. ப்ளீஸ்டா..'' - கெஞ்சினான்.

 

அந்த இளைஞர்களை உற்றுப் பார்த்தேன். மீசைகூட முளைக்காத பருவம். சாறங்களுடன் சிலர்.. அரைக் காற்சட்டைகளுடன் சிலர்... ஒரு சிலருடைய கைகளில் கசங்கிய பேப்பர் வாய்க்.. அதனுள் ஒரு சேட்டோ கழிசாணோ அல்லது துவாயோ...

 

''வேணும் எண்டால் ஒண்டு செய்.. இண்டைக்குமட்டும் எண்டால் எங்கடை வீட்டில செய்.. இனிமேல் உந்த வேலை எல்லாம் இஞ்சை வேண்டாம்..''

 

ஒருமாதிரியாக அம்மாவைச் சமாளித்து அறைக்குள் போகச் சொல்ல.. அம்மா வந்தவர்களுக்கு தேத்தண்ணீர் கொடுத்துவிட்டுத்தான் போவேன் என்று அடம்பிடிக்க.. அதுவே அவ்வாறான நிகழ்வுகள் மேலும்மேலும் எனது வீட்டில் தொடர ஏதுவாயிற்று.

 

யாழ் மருத்துவ பீட மாணவர்கள் இருவர் வந்தார்கள். 'டெலஸ்கோப்'பை ஒருவர் மார்பில் வைக்க, மற்றவர் குதிக்காலில் இரண்டு மூன்றுமுறை ஒரு சிறு பலகைத் துண்டால் தட்டினார். அவ்வளவுதான். அதுதானாம் மெடிக்கல் செக்அப். நானும் என்னவோ ஏதோ என்று பெரிதாக எதிர்பார்த்து ஏமாந்ததுதான் மிச்சம். அந்த இளைஞர் குழு சென்றுவிட்டது.

 

அதன் பிறகு இளைஞர்கள் குழு குழுவாக வந்தார்கள். வகுப்பு வகுப்பாக வந்தார்கள். ரியூட்டரி ரியூட்டரியாக வந்தார்கள். மெடிக்கல் செக்அப் என்ற பெயரில் அந்த பல்கலைக்கழக மாணவர்களும் எவரிடமிருந்தோ கடத்தப்பட்ட காரில் வந்து போய்க் கொண்டிருந்தார்கள். அம்மாவும் அதன் விளைவுகளின் தாக்கம் புரியாமல் அடுப்படிக்குள் ஓடியோடி தேத்தண்ணி போடுவதிலேயே கவனம் செலுத்திக் கொண்டிருந்தார்.

 

அப்பொழுது 1983, 1984களில் பெரும்பாலும் சுழிபுரத்தில் PLOT என அழைக்கப்படும் மக்கள் விடுதலைக் கழகமே தனது செயற்பாடுகளைப் பரவலாக்கிக் கொண்டிருந்தது. அதற்கு தோழர் சுந்தரம் சந்ததியார் போன்றோர் சுழிபுரத்தைச் சேர்ந்தவர்களாக இருந்ததும் ஒரு காரணமாக இருக்கலாம்.

 

தோழர் சுந்தரத்தின் உறவினர்கள் சுழிபுரத்தில் இறாத்தலடி என்ற கடல் சார்ந்த பகுதியில் வசித்தார்கள். அவர்களது முக்கிய பரம்பரைத் தொழில்களாக கட்டிடத் தொழிலும் மீன்பிடித் தொழிலுமே விளங்கின. அதனால் புளொட்டில் இணையும் இளைஞர்களை தமிழ்நாட்டிற்கு அவர்களே தமது படகுகளில் ஏற்றிச் சென்றார்கள். அதேவேளை மாதகலில் இருந்தும் புளொட்டிற்கு பெருமளவு இளைஞர்கள் அர்ப்பணிப்புடனும் துணிவுடனும் சென்று கொண்டிருந்தார்கள்.

 

ஆனால் இறுதியில் இந்த இளைஞர்களது அர்ப்பணிப்பு உணர்வும் தியாக சிந்தையும் தலைமைகளால் எவ்வாறு முகவரியற்று மலினப்படுத்தப்பட்டன என்பதை நினைத்துப் பார்க்கும்போது நெஞ்சம் வலிப்பதை தவிர்க்க முடியவில்லை.

 

நாட்கள் செல்லச் செல்ல எனது வீட்டில் மெடிக்கல் செக்அப் செய்வதை.. அதுதான் 'டெலஸ்கோப்'பை மார்பில் வைத்து குதிக் காலில் சிறு பலகைத் துண்டால் தட்டுவதை வேடிக்கை பார்க்கவென்றே சின்னஞ்சிறுசுகள் எல்லாம் கூடத் தொடங்கிவிட்டார்கள். அவர்களை விரட்டினாலும் திரும்பத் திரும்ப வந்துகொண்டே இருந்தார்கள்.

 

அவர்களின் வேடிக்கை பார்த்தலானது என்னை ஊரில் இருந்து விரட்டப் போகிறது என்பதை எவரால்தான் அப்போது உணர முடிந்தது? அந்த நாள் ஒருநாள் வந்தது..

 

(தொடரும்... மிகுதி அடுத்த கிழமை..)

Edited by sOliyAn

தொடருங்கள் சோழியன்!

  • கருத்துக்கள உறவுகள்

ஆனால் இறுதியில் இந்த இளைஞர்களது அர்ப்பணிப்பு உணர்வும் தியாக சிந்தையும் தலைமைகளால் எவ்வாறு முகவரியற்று மலினப்படுத்தப்பட்டன என்பதை நினைத்துப் பார்க்கும்போது நெஞ்சம் வலிப்பதை தவிர்க்க முடியவில்லை.
மொத்தத்தில் தலமைகளை நம்பக்கூடாது.....
  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள் சோழியான். எழுத்து உங்களுக்கு மிக இலகுவாக வருகிறது.

அண்ணோய் தொடருங்கோ,நிற்பாட்டி போடாதையுங்கோ  

அண்ணோய் தொடருங்கோ வரலாறு முக்கியம் .

  • கருத்துக்கள உறவுகள்

அங்க விரட்டப் படுறன்  எண்டு  இங்க விட்டுட்டுப்  போயிடாதேங்கோ !  தொடருங்கள் வாழ்த்துகள்  சோழியன் !! :D

  • தொடங்கியவர்

தொடருங்கள் சோழியன்!

 

நன்றி!

 

மொத்தத்தில் தலமைகளை நம்பக்கூடாது.....

 

புளொட்டின் தலைமையுடன் றோவும் நிறையவே விளையாடிவிட்டது என நினைக்கிறேன்.

 

தொடருங்கள் சோழியான். எழுத்து உங்களுக்கு மிக இலகுவாக வருகிறது.

 

இப்பவுமா.. தங்களது உற்சாகமூட்டலுக்கு மிகவும் நன்றி.

 

அண்ணோய் தொடருங்கோ,நிற்பாட்டி போடாதையுங்கோ  

 

ஒரு கரைகண்டுதான் நிப்பாட்டுறது!! :D

 

அண்ணோய் தொடருங்கோ வரலாறு முக்கியம் .

 

வரலாறு அது இதென்று கனக்க எதிர்பார்க்காதேங்கோ.. முக்கிய நோக்கம் 80களில் யேர்மனியில் எமது நிலை. :)

 

அங்க விரட்டப் படுறன்  எண்டு  இங்க விட்டுட்டுப்  போயிடாதேங்கோ !  தொடருங்கள் வாழ்த்துகள்  சோழியன் !! :D

 

தொடங்கியாச்சு.. இனி ஒரு முடிவு கண்டுதான் போறது.. நன்றி. :D

 

Edited by sOliyAn

  • கருத்துக்கள உறவுகள்

சோழியன்  தொடருக்கு நன்றி.

 

ஆனால்  அதிகம் இப்படி  இழுக்கக்கூடாது.

உங்களது  நேரம்  ஒருபுறமிருக்க

உங்களை  ஊக்குவிக்கவும்

தங்களது ஆக்கங்களை  வாசிக்கவும் என ஓடிவரும்

எம்மை சிறுசிறு பந்திகள்  எழுதி

வெறுப்படைய  வைப்பது 

உங்களைப்போன்ற பெரும் எழுத்தாளர்களுக்கு அழகல்ல.

(புறம் பேச  தெரியாது.  நெற்றிக்கண்  திறப்பினும்  குற்றம் கற்றமே என நேரே சொல்லித்தான் பழக்கம்.

தப்பாயின்  மன்னித்தருள்க)

 

  • தொடங்கியவர்

சோழியன்  தொடருக்கு நன்றி.

 

ஆனால்  அதிகம் இப்படி  இழுக்கக்கூடாது.

உங்களது  நேரம்  ஒருபுறமிருக்க

உங்களை  ஊக்குவிக்கவும்

தங்களது ஆக்கங்களை  வாசிக்கவும் என ஓடிவரும்

எம்மை சிறுசிறு பந்திகள்  எழுதி

வெறுப்படைய  வைப்பது 

உங்களைப்போன்ற பெரும் எழுத்தாளர்களுக்கு அழகல்ல.

(புறம் பேச  தெரியாது.  நெற்றிக்கண்  திறப்பினும்  குற்றம் கற்றமே என நேரே சொல்லித்தான் பழக்கம்.

தப்பாயின்  மன்னித்தருள்க)

 

தங்களுடைய கருத்துக்கு முதலில் நன்றி. உண்மையைக் கூறுவதாயின் சில வருடங்களாக எழுதாததாலோ என்னவோ தற்பொழுது பொறுமையாக எழுதுவது சிரமமாகத்தான் உள்ளது. எனினும் படிப்படியாக இந்தத் தொடரை கனமானதாக்க முயற்சிக்கிறேன். அல்லது வாரம் இருமுறையாவது எழுத முயற்சிக்கிறேன்.

நன்றி விசுகு! :)

 

  • 1 month later...
  • தொடங்கியவர்

விம்பம் (1) தொடர்ச்சி... (1 b)

 

ப்படி 'மெடிக்கல் செக்அப்' என்பதில் ஆரம்பித்த அவர்களது வரவு, நாட்கள் செல்லச்செல்ல வட்டுக்கோட்டைத் தொகுதி முழுவதுக்குமான சுவரொட்டிகளை எழுதித் தயாரிக்கும் அளவுக்கு வளர்ந்தது. 

 

கொழும்பில் படிப்பு, பின் வேலையும் படிப்பும் என்று சுறுசுறுப்புடன் நகர்ந்த எனது நாட்கள், 1983 இனக் கலவரத்தின் பின் எவ்விதப் பயனுமின்றி, எந்தத் திசையில் பயணிக்கிறோம் என்ற அறிவின்றி, எனது வயதொத்த ஒரு சில என் வயதுக்கும் மேற்பட்ட நண்பர்களுடன் வொலிபோல் கிறிக்கெற் என நகர்ந்ததுபோலவே, இந்த 'மெடிக்கல் செக்அப்', சுவரொட்டிகளைத் தயாரித்தல் என்பனவாகவும் நகர்ந்தது. அப்போதைய எனது மனநிலையில் இவைகள் என்னைப் பொறுத்தளவில் வெறும் பொழுதுபோக்காகமட்டுமே நிகழ்ந்தன. அதனால் அவற்றின் கனதியையோ பெறுமதியையோ, அல்லது அவற்றால் உருவாகக்கூடிய சாத்தியமான விளைவுகளையோ பாதிப்புகளையோ பற்றி எல்லாம் சிறிதுகூடச் சிந்தித்துப் பார்க்க முடியவில்லை.

 

இன்றைய கணனி யுகத்தில் 'அச்சடித்தல்' என்பது மிகவும் இலகுவான தொழிலாக மலிந்துவிட்டது. ஒரு நாற்காலியில் அமர்ந்துகொண்டே தேவைக்கு ஏற்றவாறு விதம்விதமான வடிவங்களில் வெளியிடக்கூடியவாறு அமைந்த தற்போதைய தொழில்நுட்பங்களை நோக்கும்போது, அன்றைய காலகட்டத்தில் நாம் சுவரொட்டிகளை ஒரேவிதமான வடிவ எழுத்துகளில் சுயமாகத் தயாரிக்க மேற்கொண்ட வழிமுறைகளை நினைத்துப் பார்க்கும்போது நகைப்பிற்குரியதாகவே தோன்றுகிறது.

 

A2 அளவுள்ள Bristol Boad எனப்படும் மட்டைகளில் தேவையான விடயத்தை தடித்த எழுத்துகளில் எழுதி, எழுதியவற்றைமட்டும் மட்டும் வெட்டி எடுத்தால், மிகுதியான மட்டை சுவரொட்டிக்கான 'புளொக்' அமைப்பைப் பெறும். ஒரு சுவரொட்டிக்கான விடயம் அரையரைவாசியாக இரண்டு மட்டைகளில் அமரும். ஊரில் அனேகமான வீடுகளில் உள்ள நுளம்பு கொல்லி தெளிக்கப் பாவிக்கும் பம்பிகள் இரண்டு. ஒன்றில் கறுப்பு மை மற்றையதில் சிவப்பு.

 

800px-Insecticide_Orion.jpg

 

வீட்டில் ஒரு பலகைக் கட்டில் இருந்தது. அதை செங்குத்தாக சரித்து நிறுத்தி, அதிலே சுவரொட்டிக்கான கடதாசியைப் பொருத்தி, அதற்குமேலே மட்டையிலான 'புளொக்'கை வைத்து, ஒரு மட்டைக்கு கறுப்பு மையிலும் மறு மட்டைக்கு சிவப்பு மையிலும் நுளம்பு கொல்லிப் பம்பிமூலம் விசிற, சுவரொட்டிகள் ஒரே அளவில்.. ஒரே அமைப்பில் இரு வண்ணத்தில் தயாராகிவிடும்.

 

அன்றைய தினம் நன்றாகவே நினைவிருக்கிறது. 

 

31.10.1984.  காரணம் இந்திரா காந்தி அம்மையார் சுட்டுக் கொல்லப்பட்ட நாள். அன்று அதிகாலை ஆறு மணியிருக்கும். வீதியில் வழமைக்கு மாறாக அதிக மனித நடமாட்டத்திற்கான சந்தடிகள். 

 

"ஆமிக்காரர் பள்ளிக்கூடத்தடீலை வந்து நிக்குறாங்கள்.."

"அங்கைமட்டுமில்லை.. காந்தி கடையடி ஒழுங்கையிலையும் நிக்குறங்கள் இஞ்சாலை சத்தியக்காட்டுச் சந்தியடியிலையும்"

 

பதறிக்கொண்டு ஓலைப் பாயிலிருந்து துள்ளி எழுந்தேன். 

"ஐயோ என்ரை பறாளாயான்களே இந்த பொடியள் எல்லாம் இதுக்கை வந்து இப்ப ஆராலும் என்னவாலும் சொன்னால் அவளவுதான்.."

அம்மா ஒப்பாரி வைக்கத் தொடங்கிவிட்டா. 

 

சுழிபுரத்தின் மூன்று திசைகளிலும் மூன்று பிரிவாக ஆமிக்காரர். நாலாவது திசையான வடக்கில் திருவடிநிலைக் கடல். புரிந்தது. மூன்று திசைகளிலும் இருந்து உள்ளே வரப்போகிறார்கள். 

 

அரைகுறையாக இருந்த 'பெயின்ற் ரின்'கள், பேப்பர் துண்டுகள், மட்டைக் கழிவுகள் யாவற்றையும் பொறுக்கிக்கொண்டு போய், பக்கத்து வெறும் வளவில் குழி தோண்டிப் புதைத்தாயிற்று. 

 

சற்றுப் பதட்டம் தணிந்தது. நாய்களின் குரைப்பொலி அதிகரித்தது. கூடவே அம்மாவின் புலம்பல்!!

 

"சும்மா கத்தாமை இரணை.."

எரிச்சலுடன் விராந்தையில் இருந்த பலகைக் கட்டிலைப் பார்த்துத் திடுக்கிட்டேன். கட்டில் முழுவதும் கறுப்பும் சிவப்புமாய் 'பெயின்ற்' அடையாளங்கள் அவற்றை அழிப்பதற்கு அவகாசமில்லை. ஆமிக்காரர் நெருங்குவதைத் தெளிவாகவே உணர முடிந்தது. திடீரென ஒரு பொறி ஒரு போர்வையால் கட்டிலை மூடிவிட்டு, அதன்மீது எனது அம்மாவைப் படுக்குமாறு கூறினேன்.

 

"ஆமிக்காரர் வரேக்கை இப்பிடியே சுகமில்லாத மாதிரி அனுங்கிக்கொண்டு படுத்திருக்க வேணும்"

 

வேற வழி?!! அப்போது அந்த நிலையில் அதுதான் தோன்றியது.

 

குழுவாக ஆமிக்காரர் முன் வீட்டுக்குள் நுழைவது தெரிந்தது. அவர்களின் பின்னே ஒரு கூட்டமாக அந்த ஒழுங்கையில் வசிக்கும் சின்னஞ்சிறுசுகள். அன்றுதான் கிராமத்துள் ஆமியின் முதல் வரவு என்பதால் அவர்களைப்பற்றி அந்தச் சிறுவர்களுக்குத் தெரிந்திருக்கவில்லை. அதிலே சில ஆமிக்காரர்களும் அரைகுறைத் தமிழில் அந்தச் சிறுவர்களுடன் கதைப்பதைப் பார்க்கையில் பதற்றமாகத்தான் இருந்தது. அந்தச் சிறுவர்களுக்கு எனது வீட்டில் நடப்பது சகலதுமே தெரியும். அதைப்பற்றி ஏதாவது கேட்டால் கூறிவிடுவார்களே என்ற பதற்றம் என்னைத் தொற்றிக் கொண்டது.

 

என்னே ஆச்சரியம்!! முன் வீட்டிற்குள் போனவர்கள் அடுத்து வரவேண்டிய எனது வீட்டிற்கு வராமல் வந்த வழியே திரும்பிச் செல்ல ஆரம்பித்தார்கள்!

 

அம்மா கும்பிடாத கூப்பிடாத கடவுளில்லை.

 

அப்போதுதான் இந்திரா காந்தி அம்மையாரைச் சுட்டதாகச் செய்தி வந்ததாம். அதைக் கொண்டாடுவதற்காக வந்த நோக்கத்தை இடைநிறுத்திச் செல்கிறார்களாம்.

 

அன்று வந்தவர்கள் வீடு வீடாகச் சென்று இயக்கக்காரர் இங்கே உலாவுவது தங்களுக்குத் தெரியும் என்றும் அவர்களைப்பற்றித் தகவல் தர வேண்டும் என்றும் அதை தற்போது தயவாக கூறுவதாகவும்.. தவறின் மறுமுறை வரும்போது நடவடிக்கை கடுமையானதாக அமையும் எனத் தெரிவித்ததாகவும் பின்னர் அறிய முடிந்தது. 

 

அன்றிலிருந்து அம்மாவின் வழமையான சுபாவம் மாறிவிட்டது. 

 

"வெளிய போ"

"எங்கையாலும் வெளிநாட்டுக்கு போ"

"இங்கை இருக்க வேண்டாம்..!!"

 

எனக்கு ஒரு வயது ஆகும் முன்னரே கணவனைப் பிரிந்து.. மகனே துடுப்பு என்ற ஒரே நம்பிக்கையில் வாழ நிர்ப்பந்திக்கப்பட்ட எனது அம்மா.. எனது நலனுக்காக, என்னையும் பிரிந்து தனிமரமாகச் சித்தம் கொண்டாள்.

 

ஐயிரு திங்கள் சுமந்தெனை யீன்று

பவ்விய மாகக் காத்தாயே

மாசறு பொன்னாய் வலம்புரிச் சங்காய்

ஏற்றி நீ என்னைச் சுமந்தாயே

ஞாயிறின் ஒளியாய் ஞாலத்தின் அன்பாய்

சுற்றம் உவக்க வாழ்ந்தாயே

கோயிலும் நீயாய் உள்ளிறையும் நீயாய்

என்மனதுள் என்றும் திகழ்ந்தாயே.

 

சேயாய் உதித்துன் தாயையும் இழந்து

பிறப்பிலும் இன்னல் அடைந்தாயே

மனை(வி)யாய் புகுந்தும் எண்ணங்கள் எரிய

துணையைப் பிரிந்து தவித்தாயே

மகனும் துடுப்பென முகிழ்த்த நினைவும்

தேசத்தால் சிதைய சகித்தாயே

நோவாய் இரணமாய் தொடர்ந்த வாழ்வை

சிரிப்பாய் சிரித்து சுமந்தாயே.

 

எள்ளென்றாலும் எட்டாய்ப் பகிர்ந்துன்

ஈகை நிறுத்திக் களித்தாயே

வெள்ளிப் பற்கள் மலரச் சிரித்து

உறவுப் பாலம் அமைத்தாயே

அள்ளி அமுது வந்தவர்க் கீந்து

அதிலே உன்னை நிறைத்தாயே

சொல்லில் அடங்காப் பண்பின் உருவே

அல்லல் அறுக்கப் பறந்தாயே!

 

ஜேர்மனிக்குச் செல்ல முடிவெடுத்தேன்..!!!

 

(தொடரும்…)

Edited by sOliyAn

  • கருத்துக்கள உறவுகள்

அதுக்குப் பிறகு ......???///

  • தொடங்கியவர்

அதுக்குப் பிறகு ......???///

 

கொழும்புக்கு வந்துதான் ஜேர்மனிக்கு வரவேணும். வாறன்..!!

 

நன்றி!  :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.