Jump to content

லண்டன் ரஞ்சன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாங்கோ வாங்கோ!

எப்படி நலமா!

இவரை நன்றாகவே தெரியும். வீட்டிற்கும் வந்து இருக்கிறார். என்னேடு சேர்ந்து உணவருந்தியும் இருக்கிறார். ஆனால்.... அவருக்குத்தான் நான் யார் என்று தெரியாது.

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தொல்லியல் திணைக்களம், வீதி அதிகார சபை தவிசாளர் நிரோஷிற்கு எதிராக வழக்கு    1 Views நிலாவரையில் தொல்லியல் திணைக்களத்தின் அரச கடமைக்கு தடை ஏற்படுத்தினார் என தவிசாளர் தியாகராஜா நிரோஷிற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பெயர்ப்பலகையினை அகற்றினார் எனக் குற்றச்சாட்டப்பட்ட ஏற்கனவேயுள்ள வழக்குகளுமாக மத்திய அரசின் தாபனங்களால் தாக்கல் செய்யப்பட்ட இருவேறு வழக்குகள் மல்லாகம் நீதிமன்றில் புதன்கிழமை எடுத்துக்கொள்ளப்படுகின்றன. இவ் வழக்குகளுக்கான அழைப்பாணைகள் வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளார் தியாகராஜா நிரோஷிடம் அச்சுவேலி பொலிசாரினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. நிலாவரை கிணற்றுப் பகுதியில் தொல்லியல் திணைக்களமும் இராணுவமும் இணைந்து இரண்டு தடவைகள் சந்தேகத்திற்கிடமான முறையில் அகழ்வுப் பணிகளை முன்னெடுத்திருந்தனர். இவ் அகழ்வுப் பணிகள் மக்களின் கடும் எதிர்ப்பினால் கைவிடப்பட்டன. மக்கள் எதிர்ப்பை வெளிப்படுத்துவதற்கு தவிசாளரே காலரணம். பலரை அழைத்து தொல்லியல் திணைக்களத்தின் அரச கடமைக்கு தடை ஏற்படுத்தினார் என அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் தொல்லியல் திணைக்களத்தினர் முறையிட்டனர். அதனடிப்படையில், தவிசாளர் தியாகராஜா நிரோஷ்க்கும் தொல்லியல் திணைக்கள பணிப்பாளர் நளின் வீரரத்தினவுக்கும் இடையில் மல்லாகம் சிரோஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், அச்சுவேலி பொலிஸ் பொறுப்பதிகாரி உள்ளடங்கியோர் சமரசத்திற்கு முயற்சித்தனர். தவிசாளரை நிலாவரை விடயத்தில் தலையிடக்கூடாது எனக் கூறி சுமார் மூன்று மணிநேரம் விசாரணைகளும் இடம்பெற்றன. இதற்கு தவிசாளர் உடன்படவில்லை. தவிசாளர், தொல்லியல் திணைக்களம் மேற்கொள்ளவுள்ள முயற்சிகள் தொடர்பில் மக்களுக்கு விளக்கமளிக்குமுகமாக தமக்கு உத்தியோகபூர்வமாக தெரியப்படுத்துவதுடன் மாவட்ட அபிவிருத்திக்குழுவின் அனுமதி பெறப்படவேண்டும் என விட்டுக்கொடுப்பின்றி வலியுறுத்திய நிலையில் தொடர்ந்து தவிசாளருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய முடிவு எடுக்கப்பட்டது. பின்னர் தொல்லியல் திணைக்களத்திற்கு பொறுப்பான அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தலைமையில் கொழும்பில் இடம்பெற்ற உயர்மட்ட கலந்துரையாடலில் அமைச்சர், தொல்லியல் திணைக்கள அதிகாரிகளுக்கு பிரதேச சபை , பிரதேச செயலகம் போன்றவற்றிற்கு அறிவித்து மாவட்ட அபிவிருத்திக்குழுக்களின் அனுமதி பெற்றே நிலாவரை மற்றும் உருத்திரபுரம் பகுதியில் செயற்படும் என அறிவித்திருந்தார். எனினும் தற்போதைய நிலையில் மாவட்ட அபிவிருத்திக்குழுக்கூட்டம் மற்றும் தமக்கு உத்தியோக பூர்வ அறிவிப்புக்களை செய்து தொல்லியல் திணைக்களம் செயற்பட கோரிய தவிசாளருக்கு எதிராக வழக்குத்தாக்கல் செய்யப்பட்டுள்ளமை அரசாங்கத்தின் அறிவிப்பிற்கும் நடைமுறைக்குமிடையில் பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. அன்றைய தினத்திலேயே வீதி அபிவிருத்தி அதிகாரசபையினால் தவிசாளருக்கு எதிராக ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்ட மற்றொரு வழக்கும் மீள மன்றில் எடுத்துக்கொள்ளப்படுகின்றது. அனுமதியின்றி அச்செழு அம்மன் வீதியை புனரமைப்பதற்கு நடவடிக்கை எடுத்து பிரதேச சபையின் அனுமதியின்றி வீதி அதிகாரசபை நாட்டிய பெயர்ப்பலகையினை தவிசாளர் அகற்றிய வழக்கே மீள எடுத்துக்கொள்ளப்படுகின்றது. குறித்த விளம்பரப்பதாகை அகற்றப்பட்டதைத் தொடர்ந்து தவிசாளரைக் கைதுசெய்வதற்கு பொலிசார் தீவீரமுயற்சி எடுத்தனர். தவிசாளர் மல்லாம் நீதிமன்றில் தோன்றி சட்டத்தரணி வி. திருக்குமரன் தலைமையிலான சட்டத்தரணிகள் குழாம் ஊடாக உள்ளூராட்சிக்குப் பகிரப்பட்ட அதிகாரத்தை தான் நடைமுறைப்படுத்தும்போது எழுந்த பிரச்சினை எனத் தெரிவித்து அரசியல் பழிவாங்கல் கைதில் இருந்து முன் பிணையில் தற்போது உள்ளார். இந்நிலையில், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் சட்டத்திணைக்களம் உள்ளுராட்சித் திணைக்களத்தின் சட்டவிதிகள் மீது கவனத்தினைச் செலுத்தாது தாம் பிரதேச சபையின் அனுமதிபெறவேண்டிய அவசியமில்லை என ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தது. இந் நிலையில் நாளை மறுதினம் புதன் கிழமை மத்திய அரசாங்கத்தின் தாபனங்களான தொல்லியல் திணைக்களம், வீதி அபிவிருத்தி அதிகார சபை போன்ற மத்திய அரசின் தாபனங்கள் உள்ளுராட்சி மன்ற அதிகாரத்தை தவிசாளர் பிரயோகித்தமைக்காக அவருக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் எடுத்துக்கொள்ளப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.   https://www.ilakku.org/?p=47744  
    • அன்னை பூபதியின் குடும்பத்தினருக்கு காவல்துறையினர் எச்சரிக்கை    12 Views அன்னை பூபதியின் நினைவு தினத்தினை அவரது சமாதிக்கு சென்று அனுஸ்டித்தால் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவீர்கள் என காத்தான்குடி  காவல்துறை தம்மிடம் தெரிவித்துள்ளதாக அன்னை பூபதியின் மூத்த மகள் திருமதி லோகேஸ்வரன் சாந்தி தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் உள்ள மட்டு.ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர்  மேலும் தெரிவிக்கையில், “எங்களது அன்னையின் நினைவு தினத்தினை நாங்கள் கடந்த மூன்று வருடத்திற்கு மேலாக அனுஸ்டித்து வருகின்றோம். ஆனால் இன்று எங்களது குடும்பத்தினை  அவரது நினைவிடத்திற்குச்  சென்று அஞ்சலி செலுத்த வேண்டாம் எனவும் மீறினால்  கைது செய்யப்படுவீர்கள் என்றும் காத்தான்குடி  காவல் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார். எங்களது தாயின் இறப்பினை அவரை புதைத்துள்ள இடத்தில் அனுஸ்டிப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதானது மிகவும் கவலைக்குரியது. இது அரசியல் சார்ந்த செயற்பாடு அல்ல. அன்னை பூபதி எனது தாயார் எனது தாயாரின் இறப்பினை நாங்கள் நினைவு கூருகின்றோம். அதில் எந்தவித பயங்கரவாத செயற்பாடும் இல்லை. எனது தாயார் அன்னையர் முன்னணி என்ற அமைப்பின் ஊடாக இந்திய இராணுவத்திற்கு எதிராகவே போராடி உயிர்துறந்தார். அவர் ஆயுதம் ஏந்தி எந்த போராட்டத்தினையும் நடாத்தவில்லை. இந்த நாட்டிலிருந்து இந்திய படையினரை வெளியேற்றவே போராட்டினார். அவ்வாறானவரை யாரும் பயங்கரவாதியாக சித்திரிக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கின்றோம். நாங்கள் எந்த அரசியல் கட்சியுடனும் இணைந்து எமது தாயாரை நினைவுகூரவில்லை. நாங்களும் எங்களும் குடும்பமுமே அவரை நினைவு கூருகின்றோம். இவ்வாறான நிலையில் எங்களை குறித்த நினைவினை செய்ய வேண்டாம் என தெரிவிப்பது கவலைக்குரியது. இன்று உலகம் எங்கும் எங்கள் தாயாருக்கு நினைவு தினம் நடாத்தப்பட்டுவரும் நிலையில், அவரது சமாதியில் எங்களுக்கு நினைவு தினம் நடாத்தமுடியாமல் இருப்பது வேதனையளிக்கின்றது” என்றார்.   https://www.ilakku.org/?p=47681  
    • மட்டக்களப்பு மாநகரசபைக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் – அதற்கு எதிராக மாநகரசபைக்குள் ஆர்ப்பாட்டம்  13 Views ஜி.கே. அறக்கட்டளையின் இலவச அமரர் ஊர்தி சேவை வாகனத்தை மட்டக்களப்பு மாநகரசபை வளாகத்திலேயே தரிப்பதற்கு ஆதரவு தெரிவித்து மட்டக்களப்பு சமூகப் பற்றாளர்களினால் இன்றைய தினம் மட்டக்களப்பு மாநகரசபை முன்றலில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. ஏழை மக்களின் இறுதிக் கட்டத்தில் இலவச சேவையனை வழங்கி வருகின்ற இவ்அமரர் ஊர்தி சேவையில் தங்களது அதிகார மோதலை வெளிப் படுத்துவதை ஆணையாளர் உடன் நிறுத்த வேண்டும் எனவும், அரசியல் பின்புலத்தில் இவ்வாறான செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுவது தடுக்கப்பட்டு மக்களின் சேவைக்காக இயங்கும் இவ் அமரர் ஊர்தி சேவை வாகனத்தினை மாநகர வளாகத்திலேயே தரிப்பதற்கு எவ்வித இடையூறும் வழங்காது அனுமதியளித்து மக்களுக்கான சேவைகளைத் தொடருவதற்கு ஆவன செய்ய வேண்டும் எனவும் அவர்கள் தெரிவித்தனர். அமரர் ஊர்தியில் அரசியல் வேண்டாம், அதிகார மோதலில் மக்கள் சேவையைத் தடுக்காதே போன்ற கேசங்களை எழுப்பியவாறும், ஆணையாளரே ஊழியரை மிரட்டாதே, ஜி.கே அறக்கட்டளை மட்டக்களப்பிற்குத் தேவையான ஒரு சேவை, ஆணையாளரே ஏழை மக்களின் இலவச சேவையை முடக்காதே, ஆணையாளரே ஏழை மக்களின் கண்ணீருக்குப் பதில் சொல், ஆணையாளரே உமது ஆணவத்தை ஏழைமக்கள் மீது காட்டாதே, கிழக்கின் ஆளுநரே நீதியினை நிலைநாட்டு போன்ற வாசகங்களை ஏந்தியவாறும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். குறித்த விடயம் தெடர்பில் மாநகர முதல்வர் உட்பட உரியவர்கள் வருகை தந்து தங்களுக்குரிய உகந்த பதிலை வழங்க வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரிக்கையினை முன்வைத்தனர். இது எவ்வித அரசியல் பிரச்சினையும் இல்லை. இது மக்களின் பிரச்சினை, மக்களுக்கான இலவச சேவையை முடக்குவதற்கு எவருக்கும் அனுமதிக்க முடியாது, அரசிலைத் தாண்டி மக்கள் பற்றி சிந்தித்து அனைவரும் செயற்பட வேண்டும். இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் நன்மை பெற்ற இவ்அமரர் ஊர்தி சேவைக்கு தடையினை எற்படுத்தவதென்பது பாவப்பட்ட ஏழை மக்களுக்குத் தீங்கு விளைவிக்கும் செயற்பாடாகும் என்று தெரிவித்தனர். இதன் போது அவ்விடம் மாநகர முதல்வர் தி.சரவணபவன், பிரதி முதல்வர் க.சத்தியசீலன் உட்பட உறுப்பினர்கள் சிலர் வருகை தந்து ஆர்ப்பாட்டக் காரர்களுடன் கலந்துரையாடினர். 2019ம் ஆண்டு ஜி.கே அறக்கட்டளையின் வேண்டுகோளுகிணங்க மாநகரசபை அமர்வில் தீர்மானம் கொண்டு வரப்பட்டு 38 உறுப்பினர்களின் ஏகோபித்த ஆதரவுடனும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இவ்அமரர் ஊர்தி மாநகர வளாகத்தில் தரிப்பதற்கு அனுமதியளிக்கப்பட்டிருந்தது. இரண்டரை வருடங்களுக்கு மேல் எவ்வித பிரச்சினையும் இல்லாமல் இயங்கி வந்த சேவை தற்போது புதிய ஆணையாளர் வருகை தந்ததன் பின்னர் இவ்வாகனம் வெளியில் போடப்பட்டது. பின்னர் இன்னுமொரு சபைத் தீர்மாதனத்தைக் கொண்டு வந்து வாகனம் மீண்டும் தரிப்பிடத்தில் கொண்டு செல்லப்பட்ட வேளை அவ்வானத்தைச் சேதப்படுத்தி, வாகனத்தைச் சூழ கற்களைக் குவித்து, ஜி.கே. அறக்கட்டளை இலவச அமரர் ஊர்தி என வாகனத்தில் பதிக்கப்பட்டிருந்த பெயரையும் வெள்ளைப் பூச்சினால் அழித்த செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டது. இறுதியில் உரியவர்களிடம் வாகன சாவி இருக்கையில் எவருக்கும் தெரியாமல் திருப்பெருந்துறைக்கு வாகனம் மாற்றப்பட்டுள்ளதாகவும் அறிகின்றோம். இது முற்றுமுழுதாக ஆணையாளரின் செயற்பாடுகள். சபையின் தீர்மானங்களை மீறிச் செயற்படுகிறார் என்று கூறி ஆணையாளருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்து நீதிமன்றத் தடையுத்தரவு பெற்றிருந்தும் நீதிமன்றத்தினையும் அவமதிக்கும் முகமாக மேலும் மேலும் ஆணையாளர் செயற்பட்டு வருகின்றார் என பிரதி முதல்வர் இதன் போது சுட்டிக் காட்டினார். இதேவேளை மாநகர ஆணையளரின் தலைமையில் ஊழியர்களை ஒன்று திரட்டி மாநகர வாயிலில் இவ்வார்ப்பாட்டத்திற்கு எதிராகவும், ஜி.கேஅறக்கட்டளையின் அமரர் ஊர்தி சேiவையினை மாநகர வளாகத்திற்குள் இடுவதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் முகமாகவும் கவனயிர்ப்பு ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டிருந்தது. இதன்போது அவ்விடம் செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்களிடம் ஊடகவியலாளர்கள் பக்கச் சார்பாகச் செயற்படுகின்றார்கள் என ஆணையாளர் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டார். இதனால் ஊடகவியலாளர்கள் மற்றும் ஆணையாளருக்கிடையில் கருத்து மோதல்கள் இடம்பெற்றன. இவ்வாறு ஊடகவியலாளர்களுக்குத் தெரிவிக்காமல் ஒரு விடயத்தை ஏற்பாடு செய்து விட்டு ஊடகவியலாளர்கள் பக்கச் சார்பாகச் செயற்படுகின்றார்கள் என்று சொல்வது பொருத்தமற்ற விடயம் என ஊடகவியலாளர்களினால் சுட்டிக் காட்டப்பட்டிருந்தது. பின்னர் அமரர் ஊர்தியினை மாநகர எல்லைக்குள் இடுவதற்கு மாநகர ஊழியர்களுக்கு விருப்பமில்லாத நிலை காணப்படுவதாகவும் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டிருந்தன. இவ்வாறு ஒரு தனிநபரின் அரசியல் செயற்பாடுகளுக்காக இவ்ஊர்தி சேவை செயற்படுவதாகவும், அவருக்கு மாவட்டத்தில் பல இடங்களில் காணிகள் உள்ளதாகவும், அவற்றில் இவ்வாகனத்தைத் தரித்து தங்கள் சேவையைச் செய்ய முடியும் என்றும் மாநகர ஆணையாளர் தெரிவித்தார். மாநகரசபை அனுமதியளிப்பதற்கு அதற்கு ஒரு வரைமுறை உள்ளது. எந்த அதிகார வரம்பிற்குள் மாநகரசபை இவ் ஊர்திக்கு அனுமதியளித்தது என்று தெரியாது. ஊழியர்களின் அச்சமும் நியாயமானது. எனவே தான் இதனை திருப்பெருந்துமுறைக்கு மாற்றினோம். அங்கிருந்தும் இச்சேவையைத் தொடர முடியும் எனறும் அவர் மேலும் தெரிவித்தார். இதன்போது ஊர்தி சேவைக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள். ஊழியர்கள் கடமை நேரத்தில் இவ்வாறு கவனயிர்ப்பில் எவ்வித நடைமுறைகளின் ஊடாக ஈடுபடுகின்றார்கள், ஆணையாளர் தனது அதிகாரத்தை துஸ்பிரயோகம் செய்கின்றாரா? என்ற கேள்விகளையும் முன்வைத்திருந்தனர். அதன் அடிபப்படையில் மாநகர முதல்வர் ஊழியர்களிடம் கடமை நேரத்தில் இவ்வாறு செயற்படுவது உகந்ததல்ல என்று தெரிவிக்கையில் மாநகர உத்தியோகத்தர்கள் பலர் கலைந்து சென்றனர். இதன் பிற்பாடு ஆர்ப்பாட்டக்காரர்களைக் கலைக்கும் முயற்சியில் மாநகர ஊழியர்கள் சிலர் முற்பட்டனர். இதன் போது பிரதான வாயிற் கதவு ஊழியர்களால் மூடப்பட்டு ஆர்ப்பாட்டக்காரர்கள் வெளியேற்றும் செயற்பாடு மேற்கொள்ளப்பட்டது. பொலிஸாரின் தலையீட்டிற்கமைவாக நுழைவாயில் மீளத்திறக்கப்பட்டு ஆர்ப்பாட்டக்காரர்களை அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தினை மேற்கொள்ளுமாறும். மாநகரசபைக்குள் நுழையாமல் ஆர்ப்பாட்த்தில் ஈடுபடுமாறும் தெரிவித்தமைக்கமைவாக வீதியில் இருந்து அமைதியான முறையில் ஆர்ப்பாட்ம் மேற்கொள்ளப்பட்டது. மீண்டும் மாநகரசபைக்குள் அமரர் ஊர்தி நிறுத்துவதற்கு மூன்று தினங்களுக்குள் நடவடிக்கையெடுக்காவிட்டால் காந்திபூங்கா முன்பாக சாகும் வரையிலான உண்ணாவிரத போராட்டத்தினை முன்னெடுக்கப்போவதாகவும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தெரிவித்தனர்.     https://www.ilakku.org/?p=47702  
    • தியாக தீபம் அன்னை பூபதி – மாரீசன்    80 Views இன்று தியாக தீபம் அன்னை பூபதி அவர்களின் 33ஆவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு இக்கவிதை பிரசுரமாகின்றது.   சிங்களப் படைகள் கொடுமைகள் கண்டனள் அங்கம் நெகிழ்ந்திட வெகுண்டு எழுந்தனள் எங்கும் எழும்பிய அவலக் குரல்களால் பொங்கியெழுந்திடும் எரிமலையாகினள் அகிம்சை வழியைக் காட்டிய பாரதம் அனுப்பிய படைகள் இம்சைகள் கண்டனள்   புலிகளைத் தேடி அழித்திட அலைந்ததை வாலிபர், இளைஞரைக் கொன்று குவித்ததை கண்டனள், அன்னையின் விழிகள் சொரிந்தன இதயம் குமுறிட எரிமலை வெடித்தது சிலையெனப் பிள்ளையார் முன்றலில் அமர்ந்தனள் முந்தையர் காந்தியார் காட்டிய நெறியினில் முப்பது நாட்கள் நோன்பினைத் தொடர்ந்தனள்.   படையினர் போரினை நிறுத்திட வேண்டும் புலிகளைப் பேச்சுக் கழைத்திட வேண்டும் என்றுரை விடுத்தனள் உறுதியா யிருந்தனள் ஆயினும் அன்னவர் இரங்கினார் அல்லர் இரக்க மென்பது இதயத் திலில்லா அரக்கர் கண்முன் அணைத்தவன் கலங்கிக் கண்ணீர் வடித்துக் கையறைந்தலற தமிழரின் விழிநீர் தாரையாயோட அமைதியின் மூச்சோ டாவியுமடங்கச்   சரித்திரம் படைத்தனள் பூபதி அம்மா எழுவான் திசையில் மட்டுமா நகரில் நாவலங்கேணி ஊற்றின் றீய்ந்த தாயாம் பூபதி முத்தாய் இலங்கும் அன்னையே நின்னடி வணங்குகின்றோம் நாம் தரணியே துதித்திடத் தெய்வமா யுயர்ந்தாய் பரணியில் நிலைத்தாய் பாவையே யும்மை நெஞ்சில் சுமந்தோம் என்றும் தொழுவோம்.     https://www.ilakku.org/?p=47656
    • உலக வரலாற்றில் ஒரு பெண் உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த வரலாறு அன்னை பூபதிக்கு மட்டுமே உண்டு! – பா.அரியநேத்திரன்    119 Views அன்னை பூபதியின் 33ஆம் ஆண்டு நினைவு 19/04/2021 இன்றாகும். ஆம்! கடந்த 33, வருடங்களுக்கு முன் வடக்கு, கிழக்கில் ஒரு அன்னிய நாட்டு படை எம்மண்ணில் நிலை கொண்டிருந்த காலம். ஆம்! இலங்கை – இந்திய ஒப்பந்தம் 1987 யூலை 29ஆம் திகதி இந்தியப் பிரதமர் இராஜீவ் காந்திக்கும், இலங்கை ஜனாதிபதி ஜே.ஆர் ஜெயவர்தனவுக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்டு 13ஆவது அரசியல் அமைப்பு மூலம் மாகாணசபை சட்டமூலம் அறிமுகமான காலம். அந்தக்காலத்தில் இந்திய அமைதிப்படைகள் இலங்கையில் குறிப்பாக வடக்கு, கிழக்கு பகுதிகள் எங்கும் முகாம் அமைத்து, வடக்கு, கிழக்கில் உள்ள தமிழ் மக்களுக்கு அமைதி என்ற போர்வையில் அட்டூழியங்களையும் செய்து வந்த காலம். அப்படியான வேளையில் தான் அன்னை பூபதி அவர்கள் சாகும்வரை உண்ணாவிரதம் ஒன்றை மேற்கொள்ளவேண்டிய நிலை உருவானது. முதலில் யார் இந்த அன்னை பூபதி என்பதை பார்ப்போம். மட்டக்களப்பு – அம்பாறை அன்னையர் முன்னணியின் செயற்பாட்டாளர். 1932ஆம் ஆண்டு, நவம்பர் மாதம் 03ஆம் திகதி மட்டக்களப்பில் பிறந்த தாயார். அவர் தனது 56ஆவது வயதில் இந்த தியாகத்தில் தன்னை ஈர்த்தார். ஆம்! விடுதலைப்புலிகளுக்கும், இந்திய அமைதிப் படைக்கும் சண்டை நடந்து கொண்டிருந்த காலம். அந்தக் காலத்தில் இந்தியப் படைக்கு எதிராக குரல் கொடுக்க, அறப் போராட்டங்களை நடத்த மட்டு-அம்பாறை மாவட்ட அன்னையர் முன்னணி முடிவு செய்தது. அவர்கள் இரண்டு கோரிக்கைகளை முன்வைத்து இந்திய அரசுக்கெதிராக உண்ணாநோன்புப் போராட்டத்தைத் தொடங்கினர். அந்த இரண்டு கோரிக்கைகளும் இதுதான்.. உடனடியாக போர் நிறுத்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். புலிகளுடன் பேச்சு நடத்தித் தீர்வு காண வேண்டும். இந்த கோரிக்கைகளை முன்வைத்தே மட்டக்களப்பு மாமாங்கப் பிள்ளையார் ஆலயத்தில் குருந்தை மரநிழலில் 1988, மார்ச்,19ஆம் திகதி சாகும்வரையிலான உண்ணாவிரத போராட்டத்தை அன்னை பூபதி ஆரம்பித்தார். மகாத்மா காந்தியின் அகிம்சை போராட்டாத்தால் விடுதலை பெற்ற பாரத நாடு என வரலாறு கூறப்படும் இந்திய நாடு, அன்னை பூபதியின் அகிம்சைவழி போராட்டத்தை கணக்கில் எடுக்கவில்லை. போராட்டம் ஆரம்பிப்பதற்கு முன்னமே இந்தியப் படை அதிகாரிகளுடன் பல பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன. அன்னையர் முன்னணியின் கோரிக்கைகள் எதுவுமே இந்தியப்படையினரின் கவனத்தை ஈர்க்கவில்லை. ஆனால் தமிழ்ப் பெண்கள் அடையாள உண்ணாநோன்புப் போராட்டத்தில் அணி திரண்ட நிலையில், 1988ஆம் ஆண்டு ஜனவரி 4 ஆம் திகதி அன்னையர் முன்னணியைத் திருமலைக்குப் பேச்சுவார்த்தைக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் கோரிக்கைகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. போராட்டம் தொடர்ந்து நடந்தது. 1988 ஆம் ஆண்டு பெப்ரவரி 10 ஆம் திகதி அன்னையர் முன்னணியின் நிர்வாகக் குழுவினர் கொழும்பில் இந்திய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தை முறியவே சாகும் வரை உண்ணாநோன்புப் போராட்டத்தைத் தொடங்க முடிவு எடுத்தனர். அன்னை பூபதி போராட்டத்தை ஆரம்பிப்பதற்கு முன்னமே அப்போது பலர் சாகும் வரை உண்ணாநோன்புப் போராட்டத்தில் குதிப்பதற்காக முன்வந்தனர். இறுதியில் குலுக்கல் முறையில் தேர்வு இடம் பெற்றது. முதலில் அன்னம்மா டேவிட் தெரிவு செய்யப்பட்டார். 1988ஆம் ஆண்டு பெப்ரவரி 16 ஆம் நாள் அமிர்தகழி மாமாங்கேஸ்வர் கோயிலில் அன்னம்மாவின் உண்ணாநோன்புப் போராட்டம் தொடங்கியது. ஆனால் படையினர் உண்ணாவிரத மேடையில் இருந்தவரைக் கடத்திச் சென்றதில் அவரால் தனது போராட்டத்தை நிறைவேற்ற முடியவில்லை. இந்த நிலையில் தான் பூபதியம்மாள் தன் போராட்டத்தை 19மார்ச்  1988 இல் தொடங்கினார். முன்னெச்சரிக்கையாக “சுயவிருப்பின் பேரில் உண்ணாவிரதமாயிருக்கிறேன். எனக்கு சுயநினைவிழக்கும் பட்சத்தில் எனது கணவனோ, அல்லது பிள்ளைகளோ என்னை வைத்தியசாலையில் அனுமதிக்க முயற்சிக்கக் கூடாது” எனக் கடிதம் எழுதி வைத்தார். பத்துப் பிள்ளைகளுக்கு, தாயார் இவர். நீர் மட்டும் அருந்தி சாகும் வரை உண்ணாநோன்பு இருந்தார். இடையில் பல தடங்கல்கள் வந்தன. உண்ணாவிரதத்துக்கு ஒத்துழைப்பு வழங்கியவர்களையும், அன்னை பூபதியின் பிள்ளைகள் சிலரையும், இந்திய இராணுவம் கைது செய்தது. ஆயினும் போராட்டம் நிறுத்தப்படவில்லை. அவர் உறுதியாகப் போராட்டத்தைத் தொடர்ந்தார். கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்படாத நிலையில் சரியாக ஒரு மாதத்தின் பின் 19.04.1988 அன்று காலை 8.45, மணிக்கு அவர் உயிர் நீத்தார். மட்டக்களப்பு மண்ணே கண்ணீரில் மூழ்கியது அன்னையர் முன்னணியினர் அன்னைபூபதியின் உடலத்தை சூழ்ந்து ஒப்பாரி வைத்து அழுதனர். அவரின் திருவுடல் முகத்துவாரம் வீதியில் உள்ள சீலாமுனை விளையாட்டு மைதானத்தில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.  மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களில் இருந்து மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து மலர் மாலை, மலரஞ்சலி செலுத்தி வழிபட்டவண்ணம் இருந்தனர். என்றாலும் மக்கள் மனதில் ஒரு அச்ச உணர்வும் தென்பட்டது. இந்திய அமைதிப்படையினரின் அச்சுறுத்தலை தாண்டியே மக்கள் இறுதி வணக்கத்தை செலுத்தினர். பதாதைகளும், அஞ்சலி துண்டுப்பிரசுரங்களும், தமிழ் ஊடகங்களில் முதன்மை செய்தியாகவும் அன்னை பூபதியின் தியாக மரணம் வெளிக்கொணரப்பட்டன. 1988, எப்ரல் 19ஆம் திகதி செவ்வாய்கிழமை காலை 8.45, மணிக்கு உயிர் பிரிந்த அன்னைபூபதியின் வித்துடல் 1988, ஏப்ரல், 22 வெள்ளிக்கிழமை வரை முகத்துவாரவீதி சீலாமுனை விளையாட்டு மைதானத்தில் மக்கள் அஞ்சலிக்காக மூன்று நாட்கள் தொடராக வைக்கப்பட்டு 22ஆம் திகதி பி.ப: 2.15, மணிக்கு ஈமைக்கிரியைகள் இடம்பெற்று அலங்கரிக்கப்பட்ட வாகன ஊர்தியில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. சர்வமத பெரியார்கள், பொதுமக்கள், அன்னையர் முன்னணி உறுப்பினர்கள் என பல நூற்றுக்கணக்கானோர் முகத்துவார வீதி ஊடாக அரசடி சந்தி கல்முனை வீதியால் கல்லடிப் பாலத்தை கடந்து கடற்கரை வீதி வழியாக நாவலடியை அடைந்து அங்கு மாலை வேளையில் அன்னைபூபதியின் வித்துடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. ஆயிரக்கணக்கான மக்கள் மண்போட்டு இறுதி மரியாதையை செலுத்தினர் நாவலடியில் இன்றும் அன்னைபூபதியின் நல்லடக்க நினைவிடம் அப்படியே உள்ளது. கடந்த 2004,டிசம்பர், 26இல் ஏற்பட்ட கடல்கோள் அனர்த்தம் சுனாமி தாக்கத்தால் நாவலடி ஊர் முழுமையாக பாதிக்கப்பட்டு பல கட்டங்கள் ஆலயங்கள் சேமக்காலை கல்லறைகள் சேதமாக்கப்பட்டபோதும், அன்னை பூபதியின் கல்லறையில் எந்த சேதங்களும் ஏற்படவில்லை என்பதை இந்த இடத்தில் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். இன்று 33, ஆண்டுகள் அன்னை பூபதி மறைந்தாலும் அவர் தியாகம் எம்மைவிட டு பிரியாது, உலக வரலாற்றில் ஒரு பெண் உண்ணாநோன்பு இருந்து உயிர்த்தியாகம் செய்த வரலாறு வேறு எந்த நாட்டிலும் இல்லை ஈழமணித் திருநாட்டில் மட்டக்களப்பு மண்ணின் 56, வயது நிரம்பிய தாய் தியாகி அன்னை பூபதிக்கு மட்டுமே உண்டு என்பதை அனைவரும் புரிந்து கொள்வோம். “எழில் கொஞ்சும் மட்டக்களப்பிலே எதிரியின் முகத்திரை கிழித்த ஏக தலைவி எதற்கும் அஞ்சா தாயகத்தாய் அன்னைபூபதி என்றும் அழியாது அன்னாரின் தியாகம்”     https://www.ilakku.org/?p=47650
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.