Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறிலங்கா அரசின் நகைப்புக் கிடமான வீடியோ இழவு

Featured Replies

சிறிலங்கா அரசின் நகைப்புக் கிடமான வீடியோ இழவு

இலங்கைப் பாதுகாப்பு அமைச்சு மிகவும் முக்கியமான classified வீடியோவை வெளியிட்டிருக்கிறது. இந்த வீடியோ முல்லைத்தீவுப் பகுதிக்கு (Naddalamoodankulam) மேலே பறந்து எடுக்கப்பட்டதாம். 28 ஜூலை 2004ல் எடுத்த இந்த ஒளிப்படத்தில்

புலிகள் இராணுவ உடுப்புடன் பயிற்சி எடுப்பதும்

Camouflage செய்யப்பட்ட ஊர்திகளில் செல்வதும்

ஆயுதமேந்திய புலிகளைத் தாங்கிய வண்டிகளையும்

“குழந்தைகள் இல்லம்” என்று சொல்லப்படுவதைச் சுற்றிய பாதுகாப்பையும்

தெளிவாகக் காணலாம் என்று சொல்லியிருக்கிறது. செய்தி நெட்டார் கண்ணிலே விளக்கெண்ணெய் ஊற்றி ஊற்றி எத்தனை high resolution மானிட்டரில் பார்த்தாலும் ஒன்றுமே தெரியமாட்டேனென்கிறதே. இதெல்லாம் இலங்கை இராணுவத்தின் கண்ணுக்கும், வெளியிட்டிருக்கும் பாதுகாப்பு அமைச்சின் மீடியா செண்டருக்கும் தெரிந்தது எப்படியோ? இந்தத் தெளிவோடு பார்த்துவிட்டுத்தான் பயிற்சி முகாம் என்று முடிவெடுத்துக் குண்டு வீசினார்களோ? அடப்பாவிகளா!

http://seythi.net/2006/08/15/185

http://www.defence.lk/new.asp?fname=20060815_08

  • தொடங்கியவர்

உந்த வீடியோவில காடும் , கட்டிடங்களும் பின்னர் அம்புலன்ஸுகளும் தெரிகிறது.இது ஆள் இல்லாத உஏவி என்னும் இசுரேலிய விமானத்தால் எடுக்க பட்டிருக்கிறது.

இடப்புறம் இருக்கும் எண்கள் விமானம் பறந்த உயரத்தையும் மற்றும் திசையையும் காட்டுகிறது.முதல் காட்டப் படும் படம் 2004 ஆண்டு எடுதிருகிறார்கள், கடைசியாகக் காட்டப் படுவது தாக்குதல் நடந்த பின் அம்புலன்ஸில் காயப்படவர்களைக் கொண்டு போனதை எடுதிருக்கிறார்கள்.

ரம்புக்கல அதி உயர் இன்டலிஜன்ஸ் எண்டுறதுக்கு இதில ஒண்டும் இல்லை, இலங்கை அரசு உதக் காட்டி எல்லோரது நகைப்புக்கும் ஆளானது தான் மின்சியிருக்கு.

  • கருத்துக்கள உறவுகள்

2004 இலா எடுக்கப்பட்டது?

28 ஜூலை 2004ல் எடுத்த இந்த ஒளிப்படத்தில்
  • தொடங்கியவர்

2004 இலா எடுக்கப்பட்டது?

ஆம் அன்று எடுத்து இப்போது தாக்கி இருக்கிறார்கள்.இந்தப் படத்தை பத்திரிகையாளர் மா நாட்டில் காட்டிய போது அந்த படத்தின் வலது மூலையில் இந்தத் திகதி இருந்துள்ளது அப்போது இது பற்றி பதிரிகையாளர்கள் கேட்டபோது தான் இது முன்னர் எடுக்க பட்ட படம் என்று ஒத்துக்கொண்டார்கள்.இதை அவர்களாக முதலில் கூறவில்லை.

அது சரி தாக்குதல் நடத்தப்பட்ட இடமும் 2004 இல் பதிவு செய்யப்பட்ட இடங்கமும் ஒன்றா? அந்த பிரதேசம் சமாதான கிராமமாக பல வருடங்களாக இருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

அது சரி தாக்குதல் நடத்தப்பட்ட இடமும் 2004 இல் பதிவு செய்யப்பட்ட இடங்கமும் ஒன்றா? அந்த பிரதேசம் சமாதான கிராமமாக பல வருடங்களாக இருக்கிறது.

மரங்களும் வாகனங்களும்தான் தெரியுது பிறகென்னத்தை வைச்சு கதைக்கிறாங்களோ...

அம்புலன்ஸ் மட்டும் தான் எனக்கு தெரியுது :P

http://www.zshare.net/video/naddalamoddank...8-2006-wmv.html

எனக்கும் அம்புலன்ஸ் மட்டும்தான் தெரிகின்றது...இந்தப் படத்தை வைத்து அரசாங்கம் இது புலிகளின் பயிற்சி பெறும் இடம் என்பதற்கு ஆதரம் என்றுசொல்வது உலகநாடுகளையும் முட்டாள் ஆக்குவது போலுள்ளது :x :x

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் படத்தை வைத்து அரசாங்கம் இது புலிகளின் பயிற்சி பெறும் இடம் என்பதற்கு ஆதரம் என்றுசொல்வது உலகநாடுகளையும் முட்டாள் ஆக்குவது போலுள்ளது

உலக நாடுகளும் முட்டாள்கள் போல நம்புகினம்தானே!

  • கருத்துக்கள உறவுகள்

போன வாகனங்களுக்கும், குழந்தைகள் இருந்த பாடசாலைக்கும் என்ன சம்பந்தம்? பழிச்சொல்லில் இருந்து தப்புவதற்காக சிறிலங்கா அரசு நன்றாக நாடகம் ஆடுகின்றது. ஆனால் சிறிலங்கா அரசு குழந்தைப் படுகொலைகளைச் செய்தது என்பதை உலகிற்கு அறிவிக்க ஒன்றிணைய வேண்டிய தேவை எமக்கிருக்கின்றது

ஓரு சிறூவரையும் கானோமே என்ன ரஜபக்ஷ குடும்பத்துகு மட்டும் தெரியகூடிய அலைவரிசையில் எடுக்கபட்டுளது போல lol

இவன்கள் எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என்ன சீவகன் e.n.d.l.f ஒட்டுக் குழுவின் லண்டன் வானொலிக்கான செய்தித் தொகுப்பாளராக இருக்கிறாராம் உண்மையா

நிதர்சனத்தில் இதை பர்த்தனான்

ஈழத் தமிழர் பெரும் தன்மை என்றால் என்ன விலை, எந்தக் கடையில் என்று கேட்கும் பி.பி.சி அன்பரசன்.

ஈழத்தமிழருக்குப் பெரும்தன்மை சொல்லிக் கொடுக்க வெளிக்கிட்டு தன்மூக்கை உடைத்தார் பி.பி.சி ஊடகக்கற்றுக்குட்டி அன்பரசன். ஈழத்தமிழரின் கடந்த 4 வருடகால பெரும்தன்மையின் மகத்துவத்தை பி.பி.சி அன்பரசனுக்கு நிதர்சனம் சொல்லிக் கொடுக்க விரும்புகின்றது. யுத்தத்தில் இருந்து சமாதானத்திற்குத் திரும்புவதாக ஒரு தலைப்பட்ச யுத்த நிறுத்த அறிவித்தலை முதலில் அறிவித்தது தமிழர் தரப்பு. இது தமிழரின் பெருந்தமையா அல்லது இந்த யுத்த நிறுத்த காலத்தில் பல நூறு போராளிகளையும் பொதுமக்களையும் கொன்றொளித்த சிங்கள அரசு சாவகச்சேரியில் இருந்து முகமாலை வரைக்கும் முன்னேறியது பெருந்தன்மையா ?

யுத்த நிறுத்த உடன்படிக்கையினை அமுல்படுத்த வேண்டிய இலங்கையரசு யுத்த நிறுத்த காலத்தில் 3000 அப்பாவித் தமிழர்களையும் பலநூறு போராளிகளையும் கொன்றொழித்தும் தமிழர் அமைதி காத்தது பெரும் தன்மையா அல்லது முதன் முதல் கிளாலிப் பகுதியில் விடுதலைப் புலிகளின் மகளிர் படையணி நிலைகளுக்குள் துப்பாக்கிப் பிரயோகம் செய்து யத்த நிறுத்த உடன்படிக்கைக்கு உலை வைத்தது பெருந்தனமையா?

தமிழர் கடந்த 80 வருடங்களாக 1920ம் ஆண்டு அருணாச்சலம் ஜயாவிற்கும் ஜேம்ஸ் பீரிஸ்க்கும் இடையில் இருந்து இறுதியாக மகிந்தவிற்கு இந்த வருடகாலப்பகுதியாக கொடுக்கபட்ட தயவு காலம் வரை சுமார் 96 வருடங்களாக தமிழர் நடந்து கொண்ட விதம் பெரும் தன்மையா அல்லது மகிந்த திருமலையில் பல்கலைக்கழக மாணவர்கள் கொலை மூதூரில் தமிழர் கொலை நல்,}ரில் 46 பொதுமக்கள் கொலை அல்லைப்பிட்டிக் கொலை மண்டைதீவுக் கொலை மன்னார் கொலையென்று கட்டவிழ்த்து விட்ட பயங்கரவாதங்களையும் சகித்துக் கொண்ட தமிழர் தரப்பின் பெருந்தன்மையை யார் உணர்வார் ?

தமிழர் தரப்பின் பெருந்தன்மைகளின் வெளிப்பாடுகள் தென்படும் போதுதான் அரச பயங்கரவாதத்தின் அடக்கு முறைகள் மூனைப்புப் பெற்ற காலங்களாக இருந்து. இரண்டு தரப்பும் சண்டைப்படுவதாகவும் இடையில் மக்கள் கொல்லப்படுவதாகவும் பெருந்தன்மை பேசும் இவர் சுனாமியில் பல்லின மக்கள் பாதிக்கப்பட்ட போது தென்னலங்கையில் இருந்து நிவாரணம் வடக்கிற்கு வரமுதல் வடக்கிலிருந்து தென் இலங்கைக்கும் இயற்கை நீர் பெருக்கு அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட இரத்தினபுரி மாவட்ட மக்களுக்கும் பல லொறிகளில் உணவு அனுப்பியது பெரும் தன்மையா இலங்கை அரச பயங்கரவாதம் அடிப்படை நிவாரணத்திற்கு உடன்பட்டு சுனாமிக்குப் பின்னரான முகாமைத்துவக் கட்டமைப்பெற்ற திட்டத்தை முடக்கியது பெரும் தன்மையா?

இதைவிட ஜெனிவா வரைக்கும் வந்து பேசி இனியாவது ஒற்றுமையாகப் போவோம் என்று கூறிக்கொண்டு நாடு திரும்பியும் சுமார் 2000 தடவைக்கும் மேல் இலங்கை அரசு யுத்தத்தினை மீறியுள்ள போது அமைதிகாத்தமை பெரும் தன்மையா அல்லது இதற்குப் பழிவாங்கும் முகமாக அரச பயங்கரவாதம் தமிழரைக் கொல்வது பெரும் தன்மையா?

ஜெனிவாவில் ஒட்டுக்குழுவிடம் இலங்கை அம்பலமான பின்னரும் அதனைத் திருத்திக் கொள்ள விரும்பாத இலங்கை அரசின் செயல்களுக்கு மத்தியிலும் தொடரும் கொலைகள் கற்பளிப்புக்களை இலங்கை அரசு நிறுத்தாமல் இருப்பது பெரும்தன்மையா?

இது இப்படியிருக்க e.n.d.l.f ஒட்டுக் குழுவின் லண்டன் வானொலிக்கான செய்தித் தொகுப்பாளராக இருக்கும் பூ.சீவகன் அதே நேரத்தில் பி.பி.சி தமிழ் ஒசையில் சேவையாற்றுவதும் எந்த வகையில் நியாயமானது?

பி.பி.சி செய்தித் தொகுப்பாளரே உமக்கு ஈழத்தமிழர் பெரும்தன்மை பற்றிக் கதைப்பதற்கு எந்த அருகதையும் இல்லை. தமிழர் வரலாறு தெரியாமல் பெரும்தன்மை கதைக்க உமக்குத் தகுதி இல்லை. அல்லைப்பிட்டி தேவாலயம் தாக்கப்பட்ட போதும் கதிரவெளி பொதுமக்கள் கொல்லப்பட்ட போதும் இவை புலிகளின் முகாம்கள் என்று இலங்கையரசு நியாயப்படுத்திய போது உங்கள் பெரும்தன்மை எங்கு போனது?

மதிகெட்ட றம்புக் வெலவும் - வக்காளத்து வாங்கும் பி.பி.சி தமிழ் ஓசையும்.

bbc.jpgவடக்கில் விடுதலைப் புலிகள்தான் யுத்தத்தை ஆரம்பித்தார்கள் என்ற இலங்கை அரசாங்கத்தின் பொய்களை தற்போது பி.பி.சி மக்கள் மத்தியில் பரப்ப ஆரம்பித்துள்ளது. அடிப்படை அரசியல் மற்றும் நிகழ்கால அறிவு அற்றவர்கள் பி.பி.சி தமிழ் ஓசையில் நிகழ்ச்சி தயாரிப்பாளர்களாக செயற்படுகின்றமை மிகவும் அருவருக்கத்தக்க சம்பவமாகக் காணப்படுகின்றது. விடுதலைப் புலிகள்தான் யுத்தத்தை ஆரம்பித்தார்கள் என்று பி.பி.சி தமிழோசை நேற்றைய செய்தி ஒலிபரப்பில் இலங்கை அரசாங்கத்தின் கருத்து என்று கூறி தமிழர் தரப்பிடம் கேள்வியெழுப்பி இருந்தது. ஆனால் பி.பி.சி தமிழோசை சண்டை ஆரம்பமாகிய தினத்தையும் நேரத்தையும் ஆரம்பித்த நடைமுறையையும் மறந்துள்ளது. சண்டை ஆரம்பித்த தினம் அதிகாலை வளமையாகத் திறக்கபட வேண்டிய ஏ.9 பாதை இலங்கை அரசால் திறக்கப்படவில்லை. ஏ.9 பாதையை மூடிய இலங்கையரசு சுமார் 12 மணிநேரமாகப் பூட்டி வைத்து வன்னிப் பெருநிலப்பரப்பு மீது பிற்பகல் 5.41க்கு ஒரு தாக்குதலைத் தொடுத்தது. அந்த சந்தர்ப்பத்தில் தான் யுத்தம் வெடித்தது.

இரண்டாவது விடயம் குண்டுத் தாக்குதலில் சேதமடைந்த இடம் இராணுவ முகாம் என்றும் அங்கு ஒளிப்பதிவு செய்த காட்சிகள் இருப்பதாகவும் இலங்கை அரசு கூறியிருந்தது. அப்படியானால் அவர்கள் அதை யுனிசெவ் அமைப்புக்கும் ஜ.நா அமைப்புகளுக்கும் மட்டும் காட்ட வேண்டிய தேவை இல்லை உலகம் முழுவதும் பகிரங்கமாக ஊடகங்கள் இணையத் தளங்கள் ஊடாக அம்பலப்படுத்தலாம் ஆனால் அதனைச் செய்ய இலங்கை அரசு தயாராக இல்லை. ஆதாரங்கள் இருப்பதாக மட்டும் தெரிவிக்கும் இலங்கை அரசு அதனை மறைப்பதற்கான காரணம் என்ன?

மட்டக்களப்பிலும் வாகரையிலும் கதிரவெளியிலும் விடுதலைப் புலிகளின் பயிற்சிப் பாசறைகள் மீது தாக்குதல் நடாத்தும் போது விடுதலைப் புலிகள் பகிரங்கமாகத் தமது முகாம் சேதமடைந்துள்ளது பாரிய இழப்பு ஏற்பட்டுள்ளது என்று அறிவித்திருந்தார்கள். ஆனால் அவர்கள் அதே போன்றும் இந்த முகாமில் இருந்தவர்களையும் அப்படி உரிமை கோரி இருக்கலாம் அல்லவா? ஏன் செய்யவில்லை.

சரி மொத்தத்தில் இது ஒரு பயிற்சிப் பாசறையென்று எடுத்துக் கொண்டால் இந்தப் பயிற்சிப் பாசறையில் கட்டாயப்படுத்திக் கொண்டு வந்த சிறுமிகளை வைத்திருந்து ஆயதப் பயற்சி கொடுத்திருந்தால் இந்த இடத்தை முன்பே அறிந்து நன்கு கற்று ஆய்வு செய்து தாக்குதல் நடாத்தியதாகக் கூறும் இலங்கையரசு இந்த இடம் தொடர்பாக யுனிசெவ் க்கு ஏன் தெரியப்படுத்தவில்லை ? சரி அதைத்தானும் செய்யவில்லையென்று வைத்துக் கொள்வோம். சிறுவர்களை சிறுமிகளை கட்டாயப்படுத்திக் கொண்டு வந்து வைத்திருக்கும் சிறுமிகளை இலங்கை அரசாங்கத்தினர் ஆகாயவழி ஊடாகக் கொல்வதற்கு யார் உரிமை கொடுத்தார்? தாம் ஒரு அரசு என்று கூறிக்கொண்டு சிறுவர் சிறுமிகள் தொடர்பாகக் கவனம் செலுத்துவதாக சிறுவர் படையணி பற்றிக் கதைக்கும் இவர்கள் சிறுவர்களைக் கொல்ல முடியுமென்ற அனுமதியை எங்கிருந்து பெற்றார்கள்?

http://www.nitharsanam.com/2006/08/16/50089.php

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.