Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எனது செவ்வியை ஹிந்து பத்திரிகை திரிவுபடுத்தி வெளியிட்டுள்ளது - சீ.வி.விக்னேஸ்வரன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
Vigneswaran-TNA-150.jpg

தமிழரும் சிங்களவரும் கணவன் - மனைவி உறவு போன்றவர்கள் என நான் எங்கும் குறிப்பிடவில்லை. த ஹிந்து பத்திரிகை எனது செவ்வியை திரிவுபடுத்தியே பிரசுரித்துள்ளது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முதன்மை வேட்பாளர் சீ.வி.விக்னேஸ்வரன் குற்றஞ்சாட்டியுள்ளார். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகவியலாளர் மாநாடு மாட்டின் வீதியில் உள்ள தமிழரசுக் கட்சியின் யாழ். மாவட்ட அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குற்றஞ்சாட்டியுள்ளார்.

  

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

 

அண்மையில் நான் த ஹிந்து பத்திரிகைக்கு செவ்வி ஒன்று வழங்கியிருந்தேன். அந்த செவ்வியின் சில விடயங்கள் குறித்து தற்போது காரசாரமாக பேசப்பட்டு வருகின்றது. எனினும் த ஹிந்து பத்திரிகையின் நிருபர் என்னிடம் 10ற்கு மேற்பட்ட கேள்விகளைக் கேட்டிருந்தார். அத்தனை கேள்விகளுக்கும் கொடுத்த பதில்களில் ஒன்றாவது வரவில்லை. ஆனால் இந்த ஒரு கேள்விக்கான பதில் மட்டும் திரிவுபடுத்தப்பட்டு வந்துள்ளதுடன் நான் கூறிய முக்கியமான சில விடயங்களையும் அவர் குறிப்பிடாது விட்டுள்ளார்.

 

நான் அந்த செவ்வியில் குறிப்பிட்டதாவது,

 

தென்னிந்திய இளைஞர் யுவதிகள் நடாத்திய போராட்டமும் அவர்கள் தமது உணர்வுகளைத் தெரிவித்த விதமும் எமக்கு மகிழ்ச்சியைத் தருவதுடன் அதனால் எமக்கு பல நன்மைகள் கிடைத்துள்ளன என்று கூறியிருந்தேன். மேலும் அரசியல் கட்சிகள் எமது பிரச்சினைகளை தமது சுயநலனுக்காக பாவிக்ககூடாது என்றும் அப்படி பாவிப்பது ரெனிஸ் பந்தை அடிப்பது போல் இருக்கும்.

 

அத்துடன் பிரிவினையை ஒரு தீர்வாக வெளிநாட்டில் இருப்பவர்கள் கூறுவது ஒரு கணவன் மனைவி சம்பந்தப்பட்ட விடயத்தில் மூன்றாவது நபர் ஒருவர் குறுக்கே வந்து நீங்கள் திருமண நீக்கத்திற்குச் செல்லுங்கள் என்று கூறுவது போல் இருக்கிறது என்றும் தெரிவித்திருந்தேன். இதில் கணவன் மனைவி என்று தமிழரையும் சிங்களவரையும் நான் குறிப்பிடவில்லை. அந்த மூன்றாம் நபர் உட்புகுந்து நடவடிக்கை எடுப்பது தொடர்பில் தான் அவ்வாறு குறிப்பிட்டேன்.

 

அதன்படி மூன்றாம் நபர்கள் உட்புகுந்து நீங்கள் பிரிந்து விடுங்கள் என்று கூறுவது கணவன் - மனைவிக்கு எவ்வாறு இருக்குமோ அதுபோல தான் பிரிவினை ஒன்றே தீர்வு என்று தென்னிந்தியாவில் உள்ள கட்சிகள் கூறுவதும் எமது நாட்டு அரசுடன் பேசும் போது பிரச்சினையை ஏற்படுத்துகின்றது என்று கூறினேன். எனினும் தென்னிந்திய மக்களுக்கும் எனக்கு எதுவித பிரச்சினையும் இல்லை அங்குள்ளவர்களில் பலர் எனது நண்பர்கள் இருக்கின்றனர்.

 

அவர்களது அனுசரனையும் உதவிகளும் எமக்கு வருங்காலத்தில் வடமாகாண சபையிலோ அல்லது எந்தவொரு சந்தர்ப்பத்திலோ தேவையானது. எனவே அவற்றை மறந்து அவர்களை நான் கொச்சைப்படுத்தியதாக குறித்த பத்திரிகை பிரசுரித்துள்ளமை எனக்கு மிகுந்த மன வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது என்றார்.

 

http://www.seithy.com/breifNews.php?newsID=92957&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்
அத்துடன் பிரிவினையை ஒரு தீர்வாக வெளிநாட்டில் இருப்பவர்கள் கூறுவது ஒரு கணவன் மனைவி சம்பந்தப்பட்ட விடயத்தில் மூன்றாவது நபர் ஒருவர் குறுக்கே வந்து நீங்கள் திருமண நீக்கத்திற்குச் செல்லுங்கள் என்று கூறுவது போல் இருக்கிறது என்றும் தெரிவித்திருந்தேன். இதில் கணவன் மனைவி என்று தமிழரையும் சிங்களவரையும் நான் குறிப்பிடவில்லை. அந்த மூன்றாம் நபர் உட்புகுந்து நடவடிக்கை எடுப்பது தொடர்பில் தான் அவ்வாறு குறிப்பிட்டேன்.

 

 

நன்றி விளக்கத்துக்கு ஐயா.ஹிந்து ராம் மீண்டும் தமிழர்களை சிண்டு முடிவதில் ஈடுபட்டதை வாசகர்கள் கவனத்தில் எடுக்க வேண்டும்.

ஹிந்து விடயத்தில் தமிழ் மக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். தமிழ்மக்களை எப்போதுமே உள்ளூர் வெறுக்கும் ஹிந்து நாளேட்டுக்கு தமிழ் ஈழம் பிரிவது மட்டும் பிரச்சனை அல்ல. தமிழ் மக்கள் கெளரவத்துடன் வாழக்கூடிய எந்த அரசியல் தீர்வு வந்தாலும் அதாவது சமஸ்டி தீர்வு வந்தாலும்  அதை குழப்பியடிக்க இத்தகைய சிண்டுமுடியும் வேலைகளை செய்து வருகிறது.

 

 தமிழர் விடுதலை கூட்டணி பெரு வெற்றி பெற்ற பின்னர் 1978 ல்   திரு அமிர்தலிங்கம் அவர்கள்  எமது போராட்டத்திற்கு ஆதரவு தேடி தமிழகம் சென்ற  போது அவரை தூற்றி அவரின் விஜயத்தை எவ்வளவு கொச்சைப்படுத்த முடியுமோ அவ்வளவு  கொச்சபடுத்தி தலையங்கம் எழுதி ஹிந்து பின்னர் அவர் கொல்லப்பட்டபின்னர் அவரைப்பற்றி போற்றி எழுதியதுடன். அவரின் நினைவு தினத்திலும் ஹிந்து ராம் லண்டன் சென்று கலந்து கொண்டிருந்தார். அதாவது தமிழரின் போராட்டத்தை பிரதிநிதிப்படுத்துபவராக திரு. அமிர்தலிங்கம் இருந்த போது அவரை தூற்றிய ஹிந்து, பின்னர் தமிழர் போராட்டத்தை நடத்திய விடுதலை புலிகளை தூற்ற அதே அமிர்தலிங்கத்தை போற்றியது. தற்போதும் திரு. விக்கினேஸ்வரன் தனது அறிவுத்திறமையால் தமிழ்மக்களின் போராட்டத்தை நியாயப்படுத்தி ஒரு கெளரவமான தீர்வை ஏற்படுத்திவிடுவாரோ என்ற அச்சத்தில் மேற்படி சிண்டு முடியும் வேலையை செய்து அவரிற்கும் தமிழ்மக்களிற்கும் இடையில் பிரச்சனையை உண்டுபண்ண விழைகிறது என்பது எனது கருத்து. திரு விக்கினேஸ்வரனை தமிழ் அரசியலில் இருந்து பிரிப்பதற்காகவே மேற்படி நஞ்சு வேலையை ஹிந்து செய்தது என்பதை அனைவரும் விளங்கி கொள்ள வேண்டும்.

 

பொதுவாகவே தமிழ் மக்கள் எளிதில் உணர்ச்சியடைபவர்கள் என்ற அவர்களின் பலவீனத்தை தெரி்ந்து வைத்து கொண்டு தமிழின எதிரிகள் எம்மை தோற்கடிக்க விழைகிறார்கள் என்ற உண்மையை விளங்கி நாம் அவர்கள் வெட்கி தலைகுனியும் வகையில் எமது ஒற்றுமையை அதாவது புரிந்துணர்வின் அடிப்படையிலான ஒற்றுமையை காட்டவேண்டும். அதற்காக எல்லோரும் ஒரே கருத்திலேயே ஒற்றை மனப்பாங்குடன் இருக்கவேண்டும் என்றில்லை. அப்படி இருப்பதும் சரியானதல்ல. எம்மில் பல்வேறு கருத்துகளுடன் பலர் இருக்கலாம். அது உலகில் சாதாரணமானது. எளிதில் உணர்ச்சிவசப்பட்டு ஒருவரை ஒருவர் தூற்றும் மனப்பாங்கை நாம் கைவிட்டு வித்தியாசமான எல்லாகருத்துகளுடன் இருப்பவர்களும் ஒருவரை ஒருவர் மதித்து நடப்பதே ஒற்றுமை ஆகும்.உணர்ச்சிவசப்படும் போது அறிவு மங்குவது இயல்பு.  இதைப் புரிந்து இவ்வகை அறிவுபூர்வமான  ஒற்றுமையை எதிர்காலத்தில் காட்டுவதன் மூலம் தமிழின எதிரிகளை தலைகுனிய வைக்க முடியும். அவர்கள் தலைகுனிகிறார்களோ இல்லையோ எமது மக்கள் மற்றவர் முன் தலைநிமிர்ந்து கெளரவத்துடன் வாழ முடியும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.