Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வட மாகாணசபைத் தேர்தல் மிகவும் முக்கியமானவை – பான் கீ மூன்

Featured Replies

banki_CI.jpg

 

வட மாகாணசபைத் தேர்தல் மிகவும் முக்கியமானது என ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச்; செயலாளர் பான் கீ மூன் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் மாகாணசபைத் தேர்தல் வடக்கில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த சிறந்த சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக்கொடுத்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

அமைதியான முறையில் அனைத்து கட்சிகளும் தேர்தலில் பங்கேற்க வேண்டியது அவசியமானது என அவர் தெரிவித்துள்ளார்.

நீண்ட கால யுத்தத்தின் பின்னர் நடைபெறும் தேர்தலின் மூலம் மக்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தவும், அரசியல் நல்லிணக்கத்தை ஏற்படுத்தவும் வழிகோலும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

வடக்கில் மாகாணசபைத் தேர்தலை நடாத்த எடுத்தத் தீர்மானம் வரவேற்கப்பட வேண்டியது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தேர்தலின் பின்னர் அனைத்து தரப்பினரும் இணைந்து நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/96739/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறவுகள்

முதலில மூவர் பரிந்துரையை அமுலாக்கிற அலுவலைப் பாருங்கோ. இன நல்லிணக்கம் எல்லாம் தமிழர்களைப் பொறுத்த வரை வெறும் வார்த்தைகள் என்பதை கடந்த 65 வருசமா கண்டுவிட்டார்கள். எனியும் அதைப் பேசிக் கொண்டிராமல்.. தமிழ் மக்களின் விருப்புக்கு இணங்க.. பிரிந்து சொல்வதற்குரிய தேர்தலை நடத்த ஐநா முன் வரணும். பிரிந்து போக.. தேர்தல்.. ஸ்காட்லாண்டில நடக்குது.. கியூபெக்கில நடக்குது.. கொசவோவில நடக்குது.. தென் சூடானில நடக்குது.. கிழக்குத் தீமோரில நடக்குது.. ஏன் தமிழர்களுக்கு மட்டும் வேண்டாத நல்லிணக்கம். ஐநா தமிழர்கள் வேண்டாததை அவர்கள் மீது திணிப்பதைக் கைவிட்டு தமிழ் மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு நடக்க முன்வர வேண்டும். அதுதான் ஜனநாயகமும்.. ஐநாவின் பொறுப்பும் ஆகும்..! ஆட்சியாளர்களின் அநியாயங்களை மறைத்து.. இனப்படுகொலைகளை மறைத்து இனப்படுகொலையை சந்திக்கும் இனத்தை வற்புறுத்தி இனப்படுகொலை செய்பவனிடம் மண்டியிடக் கேட்பது நல்லிணக்கம் அல்ல. அது வெளிப்படையான மனித உரிமை மீறல். அதனையே பாங்கி மூன் உள்ளிட்டவர்கள்  நல்லிணக்கம் என்ற உச்சரிப்பின் ஊடாகச் செய்கிறார்கள்.  :icon_idea:

  • தொடங்கியவர்

வட மாகாணசபைத் தேர்தல் மிகவும் முக்கியமானவை – பான் கீ மூன்

600635_653902784634671_916036367_n.jpg

// தம்பி மூன் பப்ளிக் பிளேஸ்ல அப்படியெல்லாம் பேச கூடாதுடா...

திடீர்னு செருப்ப கெழட்டி அடிச்சாங்கன்னா என்ன செய்வ?....//

அமைதியான முறையில் அனைத்து கட்சிகளும் தேர்தலில் பங்கேற்க வேண்டியது அவசியமானது 

 

வழமையில் தேர்தல் முடிய தெற்கில் வெல்லும் SLFP யோ அல்லது UNP யோ கலகத்தை ஏற்படுத்துவார்கள். இந்த முறை அதற்கு சாட்டுக்கு பாங்கி முனும் தயாராகிறார்.

 

சோழியன் குடும்பி சும்மா ஆடாது. நாட்டை பிரிக்கச்சொல்லி தேர்தல் விஞ்ஞாபனம் வெளிவிட்டதால்தான் கலகம் வந்தது என்று சொல்ல முயற்சிக்கிறார். 

  • கருத்துக்கள உறவுகள்

இதுவும் கடந்து போகும்.

 

அமைதியாக தேர்தலை நடாத்தியதை வாழ்த்தி, பான் கீ மூனின் வாழ்த்தும் விரைவில் பறந்து மகிந்தாவுக்குப் போகும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.