Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாகாண அமைச்சு பதவிகள் தகுதியானவர்களுக்கே வழங்கப்படும்

Featured Replies

 

Published on September 26, 2013-10:07 am   ·   No Comments

sri-lanka-north-150x150.jpgவட மாகாண சபை தேர்தலில் வெற்றி பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதன் மாகாண அமைச்சரவைக்கு பொருத்தமான, தொழில்சார் புலமை பெற்றவர்களை அமைச்சர்களாக நியமிக்க எண்ணியுள்ளது.  இலங்கை அரசியல் யாப்பின் படி, மாகாண சபையொன்றுக்கு முதலமைச்சர் பதவி நீங்கலாக நான்கு அமைச்சரவை பதவிகள் உருவாக்க அதிகாரம் உள்ளது.

இது தவிர தவிசாளர் ஒருவரையும் மாகாணசபை உறுப்பினர்களின் தெரிவு மூலம் நியமிக்க முடியும். மாகாணசபை கலைக்கப்பட்டாலும் அடுத்த மாகாணசபை பதவி ஏற்கும் வரை தவிசாளர் பதவியில் இருப்பார் என இலங்கை அரசியல் யாப்பின் மாகாணசபை சட்டம் கூறுகிறது. உதாரணமாக வடகிழக்கு மாகாணசபையின் தவிசாளராக சூரியமூர்த்தி பதவி ஏற்றிருந்தார். வரதராசபெருமாள் தலைமையிலான வடகிழக்கு மாகாணசபை ஒரு வருட காலத்தில் கலைக்கப்பட்ட போதிலும் தவிசாளராக சூரியமூர்த்தி பதவி வகித்து வந்தார். அதற்கான சம்பளத்தையும் பெற்று வந்தார்.

மாகாண சபையில் முதலமைச்சர் தவிர நான்கு அமைச்சர்களை நியமிக்க முடியும்.

1. கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை அமைச்சு

2. சுகாதார சமூக நல மேம்பாட்டு அமைச்சு

3. விவசாய நீர்ப்பாசன கால்நடைவளர்ப்பு உள்ளுர் மீன்பிடி காணி அபிவிருத்தி அமைச்சு

4. வீதி அபிவிருத்தி, வீடமைப்பு

5. முதலமைச்சரின் கீழ் உள்ளுராட்சி, மாகாண திறைசேரி, திட்டமிடல் , பொதுநிர்வாகம், ஆகியன வரும்.

அமையவுள்ள வட மாகாண சபை அமைச்சரவையில் சுகாதார அமைச்சராக மருத்துவர் சத்தியலிங்கம் தெரிவு செய்யப்பட வாய்ப்புள்ளது. இவர் வவுனியா மாவட்டத்தில் அதிக விருப்பு வாக்குகளை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கல்வி அமைச்சராக கிளிநொச்சி மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட தம்பிராஜா குருகுலராஜா தெரிவு செய்யப்பட அதிக வாய்ப்புள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தின் கல்வி பணிப்பாளராக இருந்த இவர், மாவட்ட அறியப்பெற்ற ஒரு கல்வியாளராவர்.

ஏனினும் குருகுலராஜாவை விட சற்று அதிக விருப்பு வாக்குகளுடன் கிளிநொச்சியில் முன்னிலையில் தெரிவான பசுபதி அரியரட்ணம் கூட கிளிநொச்சி மாவட்ட கல்விப் பணிப்பாளராக பணியாற்றியதுடன், வட மாகாண கல்விப் பணிப்பாளராகவும் பண்ணியாற்றி உள்ளார். கல்வி அமைச்சராக இவர்கள் இருவரில் ஒருவர் நியமிக்கப்படலாம் என ஊகம் ஏற்கனவே நிலவிய போதும், குருகுலராஜா இறுதித் தெரிவாக அமையக் கூடிய வாய்ப்பே அதிகமுள்ளது.

மன்னார் மாவட்டத்தில் இருந்து தெரிவான பொறியியலாளர் ஒருவருக்கு வீதி அபிவிருத்தி அமைச்சு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.  விவசாய அமைச்சராக சி.வி.கே.சிவஞானம் அல்லது தர்மலிங்கம் சித்தார்த்தன் நியமிக்கப்படலாம் என தெரியவருகிறது.

தவிசாளர் பதவிக்கு சட்டத்தரணி ஒருவர் தெரிவு செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது சிலர் தமக்கு அமைச்சு பதவி வழங்கப்பட வேண்டும் என தமிழரசுக்கட்சி தலைவர் சம்பந்தனிடமும் முதலமைச்சர் விக்னேஸ்வரனிடமும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இறுதி முடிவை விக்னேஸ்வரனே எடுத்து ஆளுநருக்கு அறிவிப்பார் என தெரியவருகிறது.

இந்த தெரிவுகள் அனைத்தும் முடிந்து விட்டதாகவும் முதலமைச்சராக விக்னேஸ்வரன் சத்திய பிரமாணம் செய்து கொண்டதும் ஏனைய அமைச்சு விபரங்களை அறிவிப்பார் என்றும் தெரியவருகிறது.

 

 

- See more at: http://www.thinakkathir.com/?p=52699#sthash.vLuFI7N5.dpuf

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.