Jump to content

யார் இந்த களப்பிரர்கள்? பாகம் 04 (களப்பிரர் ஆட்சி இருண்ட காலமா?)

Recommended Posts

களப்பிரர் ஆட்சி இருண்ட காலமா?

photo30.jpg

களப்பிரர் ஆட்சியால் தமிழகத்தில் விளைந்தவை யாவை? அமைதி கெட்டது; கலகங்கள் தோன்றின; மக்கள் வாழ்க்கை சீர்குலைந்தது; தமிழ் மரபு நூல்கள் அழிந்தன போன்ற குற்றச்சாட்டுகளே களப்பிரர் ஆட்சியைப் பற்றிக் கூறப்படுகின்றன. சைவத்தில் நாட்டம் கொண்டவரே இத்தகைய குற்றச்சாட்டுகளைக் கூறுகின்றனர். களப்பிரரால் தமிழ்க் கழகம் அழியவில்லை. ஏற்கெனவே கழகக் காலம் முடிந்து, கழகமருவிய காலம் தொடங்கியிருந்தது. களப்பிரர் வேற்று மொழியினர்; சமண, சாக்கிய சமயங்களைப் பின்பற்றியவர்கள்; அவர்கள் தமிழகத்தில் ஆளுமை பெற்ற போது இச்சமயங்கள் சாய்காலுடன் இருந்தன. ஆகவே, அவர்களின் தொடக்ககால ஆக்கம் அச்சமயங்களின் கொள்ளிட மொழிகளாய் விளங்கிய பாலி, பிராகிருதம், சமற்கிருதம் ஆகிய மொழிகளுக்கே பயன்பட்டது. இது வரலாற்றுப் போக்கில் வளர்ந்த புதிய இயலேயன்றிக் களப்பிரரால் விளைந்த கேடு எனில் முற்றும் பொருந்தாது. ஆயின், பின்னர் வந்த பல்லவர் காலத்தில் சமற்கிருதம் ஆக்கம் பெற்றதேன்?

களப்பிரர் ஆட்சியில் சமணர்கள் தமிழைப் பேணிக் காத்தனர். தமிழில் பல அரிய இலக்கண, இலக்கிய நூல்கள் இவர்களால் எழுதப்பெற்றன. ஏற்கெனவே கி.பி. 470இல் வச்சிரநந்தி என்பான் அமைத்த திரமிளசங்கம் சமண சமய வளர்ச்சிக்கு உறுதுணையாக நின்று இத்தகைய நூல்கள் வெளிவர உதவியது. நாலடியார் போன்ற பதினெண்கீழ்க்கணக்கு நுல்களும், சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய நூல்களும் சமண சாக்கிய சமயச் சார்புடைய நூல்களே. இவை கழகம் மருவிய காலத்தில் தோன்றியவையே. ஆகவே, களப்பிரர் ஆட்சியால் தமிழகத்தில் புதிய பொலிவு ஏற்பட்டது, மொழி வளர்ச்சியேற்பட்டது என்பதையே உணரமுடிகிறது.

photo29.jpg

ஆனால், களப்பிரர் தமிழகத்தில் இருண்ட காலத்தை ஏற்படுத்தி விட்டனர் எனப் பலரும் புலம்புகின்றனர். அவ்வாறே எழுதியும் நம்பவைத்து விட்டனர். இவர்களின் புலம்பலுக்கும் காரணம் இல்லாமலில்லை, களப்பிரர் வருகையால், தமிழகத்தில் கால்கொண்டிருந்த வருணாசிரம தருமம் ஆட்டங்கண்டது; பார்ப்பனியம் நசிந்து போயிற்று. சமணமும், புத்தமும் இவற்றை ஒழிக்கவே வீறிட்டெழுந்த சமயங்களென்பதையும், களப்பிரர் இச்சமய வீரர்களென்பதையும் மனத்திற்கொண்டு நோக்கினால் உண்மை ஒளி தெரியும்.

இந்திய வரலாற்றில் எப்பொழுதெல்லாம் எங்கெல்லாம் பார்ப்பனியம் செழித்துக் காணப்படுகிறதோ அப்பொழுதெல்லாம் அங்கெல்லாம் பொற்காலம் எனப் போற்றப்படுவதையும், பார்ப்பனியத்திற்கு மாறாகத் தோன்றும் ஆட்சி, அல்லது மாறாகத் திளைக்கும் கருத்துச்சுடர் நிலவும் போதெல்லாம் இருண்ட காலம் என இழித்துரைக்கப்படுவதையும் காண்கிறோம். உலக வரலாற்றிலேயே சிறந்த இடத்தைப் பெறுவது அசோகர் காலம்.

இந்திய வரலாற்றில் புத்தம் தலைசிறந்து விளங்கியதும் அசோகர் காலமே. ஆனால், இதனைப் பொற்காலம் எனப் போற்றினரா? இல்லை. ஆரியம் செழித்து, மிளிர்ந்த குப்தர் காலத்தையே பொற்காலம் என்கின்றனர். மௌரியர் காலத்தில் புத்தக் கலைகளும், அறிவியல் நூல்களும் ஏராளமாய்த் தோன்றின; உலக நாடுகளிலெல்லாம் பரவின;

உலக நாடுகளிலிருந்து பல்வேறு பண்பாடுகள் இந்தியாவிற்குள் நுழைந்தன. ஆயினும், இதனைப் பொற்காலம் என்றனரில்லை. இதைப் போலவே புத்தம் புகழ்பெற்ற குசானர் காலமும், வர்த்தனர் காலமும் பொற்காலமாகவில்லை, இவை யாவும் ஆரியரின் வருணாசிரம தருமத்திற்கும் வேள்வி முறைக்கும் மாறாகச் செயல்பட்ட ஆட்சியமைப்புகள்.

தமிழகத்திலும் ஆரியத்திற்கு ஏற்றமளித்த பல்லவர் ஆட்சிக் காலத்தையும், சோழர் ஆட்சியின் ஒரு பகுதியையும் பொற்காலம் என்றனர். ஆகவே, சமணமும் புத்தமும் தழைக்கவும், வருணாசிர தர்மம் ஒழியவும் பாடுபட்ட களப்பிரர் ஆட்சிக் காலத்தை இருண்ட காலம் என்று அழைப்பதைக் கண்டு வியப்படையத் தேவையில்லை. ஆரியம் சிறந்தோங்கி நின்ற காலங்களையே இந்திய வரலாற்றில் பொற்காலம் என்பர். இது கண்மூடித்தனமாகக் கையாளப்படும் பொது நெறி.

(நூல்: தமிழக வரலாற்று வரிசை _ 9, தாய்நில வரலாறு- _ 1)

பேரா.முனைவர் கோ.தங்கவேலு

நன்றி: http://www.unmaionline.com/new/64-unmaionline/unmai2013/january/1285-%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%BE.html

பாகம் 01 : http://www.yarl.com/forum3/index.php?showtopic=128991

பாகம் 02: http://www.yarl.com/forum3/index.php?showtopic=129131

பாகம் 03 : http://www.yarl.com/forum3/index.php?showtopic=129394

Link to comment
Share on other sites

களப்பிரர்கள் தமிழை வளர்த்தார்கள் என்பதற்கு ஆதாரம் இல்லை மேலும் அவர்கள் தமிழை வளர்ப்பதற்கு எந்த முகாந்திரமும் இல்லை , மாறாக அவர்கள் ஆட்சி காலத்தில் தமிழில் பல நூல்கள் வந்ததற்கு  தமிழின் முக்கியத்துவம் குறைந்து போனதால் தமிழை காக்கும் பொருட்டு சமய பேதம் இல்லாமல் தமிழ் சான்றோர்களால் அதிகமான நூல்கள் இயற்றப்பட்டதே காரணம் என்று கூறப்படுகிறது.

பார்ப்பனர்களிடமிருந்து நிலத்தைப் பறித்ததாக வேள்விக்குடி செப்பேடுகளில் மட்டுமே உள்ளது. ஆனால் பூலாங்குறிச்சிக் கல்வெட்டுகள் இறையிலி நிலங்களை குறிப்பிடுவதால் அவர்கள் பிராமணர்களுக்கு எதிரானவர்கள் அல்ல என்று மயிலை சீனி.வேங்கடசாமி கூறுகின்றார்.

Link to comment
Share on other sites

களப்பிரர்கள் ஆட்சி 6ஆம் நூற்றாண்டில் முடிந்தது...அவர்கள் சமண நெறியை ஆதரித்தவர்கள் என்பது நமக்குத் தெரிகிறது...சமணம் என்றால் இங்கு நான் குறிப்பிடுவது தமிழர்களின் ஆசீவக நெறியைத் தான்...சமணம் என்ற சொல் முக்காலத்தில்(ஜைனமும் புத்தமும் தோன்றாத காலத்தில்) ஆசீவக நெறியை மட்டுமேக் குறித்தது...பின்பு, அது தமிழகத்தின் வடக்கில் சமணம்>ஸ்ரமணம் என்றுத் திரிந்தது...

7ஆம் நூற்றாண்டில் சிவ நெறியாளர்களுக்கும்(சைவம்) விண்ணவ நெறியாளர்களுக்கும்(வைணவம்) இடையே போட்டி வந்து சமணர்களைத் தங்கள் நெறிக்கு மாற்ற முயன்றனர்...சில சமணர்கள் மாறினர்(இதனால் தான் ஆசீவக நெறியின்(அப்போதைய சமணம்) கோட்பாடுகளான ஊன் உண்ணாமை, உண்ணா நோன்பு, பிள்ளையார் சுழி, பிள்ளையார், ஐயனார், ஐயப்பன், முருகன் மற்றும் பல அறிவியல்கள் தற்போதைய இந்து நெறியில் உள்ளன)...அப்படி மாற மறுத்த எண்ணாயிரம் சமணர்கள் சிவ நெறியாளர்களால் கழுவேற்றம் செய்யப்பட்டனர் என்று பெரியபுராணம் முதலிய தமிழ் சிவ நெறியாளர்கள் இயற்றிய இலக்கியங்கள் கூறுகின்றன...அப்பொழுது, ஆசீவகர்களின் அடையாளமாக இருந்த குகைகள்/படுக்கைகள்/பள்ளிகள்/சுவடிகள்/கோயில்கள் முதலியவை அழிக்கப்பட்டன...சில சமண கோயில்கள் சிவன் கோயில்களாக மாற்றப்பட்டன...நமக்கு இக்காலத்தில் இயற்றப்பட்டதாகக் கூறப்படும் இலக்கண இலக்கிய நூல்கள் அழிக்கப்படாமல் மிஞ்சியவையே/காக்கப்பட்டவையே...களப்பிரர்கள் கால அடையாளங்கள் இந்நிகழ்வில் அழிக்கப்பட்டிருக்கலாம்...

தமிழகத்தின் வடக்கில் சமணம்>ஸ்ரமணம் என்று எவ்வாறுத் திரிந்தது எனப் பார்க்கலாம்...

அம்மண்ணம்(அம்+அண்ணம்)>அம்மணம்>அமணம்>ஸமணம்(ஸ்+அமணம், சமணம்)>ஸ்ரமணம்(Sramanam)>ஸ்ரமணா(Sramana)

சமணம்>ஸ்ரமணம் என்றத் திரிபுக்கு

ஒப்புநோக்குக(வந்தவர்கள் வாயில் நுழைந்தது அவ்வளவுதான்):
காமம்(கதிர்காமம்)>க்ராமம்(காமம் என்ற சொல் கமம் என்ற சொல்லிலிருந்து வந்திருக்கலாம்...விடயம் அறிந்தவர்கள் கூறவும்)
மெது(Methu)>ம்ரெது(Mrethu)>ம்ருது
மாதங்கம்?>மதங்கம்(Mathangam)>ம்ரதங்கம்(Mrathangam)>ம்ருதங்கம்
படி(Padi)>ப்ரடி(Pradi)>ப்ரதி
தமிழ்(Thamil>Dhamil)>த்ரமில்(Dhramil)>த்ரமித்(Dhramith)>த்ரவித்>த்ரவிட்(Dhravid)>த்ராவிட்(Dhraavid)
தமிழர்(Thamilar>Dhamilar)>த்ரமிலர்>த்ரமிதர்>த்ரமிடர்>த்ரவிடர்>த்ராவிடர்
தமிழம்(Tamilam>Dhamilam)>த்ரமிலம்(Dhramilam)>த்ரமிதம்>த்ரமிடம்>த்ரவிடம்>த்ராவிடம்
தமிழகம்(Thamilagam>Dhamilagam)>த்ரமிலகம்(Dhramilagam)>த்ரமிதகம்>த்ரமிடகம்>த்ரவிடகம்>த்ராவிடகம்
பார்ப்பன்>ப்ராப்பன்>ப்ராம்மன்>ப்ராமன்(பிராமணன்)>ப்ராமின்(பிராமின், Anglicized)
திருச்சி>த்ரிச்சி(Trichy)

அமணம்>ஸமணம்(ஸ்+அமணம், சமணம்) என்றத் திரிபுக்கு

ஒப்புநோக்குக(வந்தவர்கள் வாயில் நுழைந்தது அவ்வளவுதான்):
அம்மணம்(Ammanam)>ஸ்+அம்மணம்>சம்மணம்(Sammanam)
அமை(Amai)>ஸ்+அமை>சமை(Samai)
அமையல்(Amaiyal)>ஸ்+அமையல்>சமையல்(Samaiyal)
அறவாணன்>ஸ்+அறவாணன்>சரவாணன்>சரவணன்
அடை(மூடுதல்)>ஸ்+அடை>சடை
அவை>ஸ்+அவை>சவை>சபை
அங்கு(குறுகிய வளைவான பகுதியைக் கொண்டது)>ஸ்+அங்கு>சங்கு
அங்கம்(அங்கு+அம் - குறுகிய வளைவான பகுதியைக் கொண்ட இடம்(கூடும் இடம்))>ஸ்+அங்கம்>சங்கம்
அங்கமம்(அங்கம்+அம்)>ஸ்+அங்கமம்>சங்கமம்
அக்கரம்(அ+கரம் - எட்டு கரங்களைக்(கைகளைக்) கொண்ட ஒன்று)>ஸ்+அக்கரம்>சக்கரம்
அட்டம்(Attam - எட்டு முனைகளைக் கொண்ட ஒன்று, பெட்டி, மூடிய ஒன்று)>ஸ்+அட்டம்>சட்டம்(Sattam)
அமம்>ஸ்+அமம்>சமம்
அரசுவதி>ஸ்+அரசுவதி>சரசுவதி
அதம்(தொகுதி)>ஸ்+அதம்>சதம்

இந்த ஸ்ரமணத்திலிருந்து(Sramana) தான் பின்னாளில், ஜைனம் மற்றும் புத்தம் பிரிந்தன...ஜைனமும் புத்தமும் பிரிந்த பிறகு, சமணம் என்ற சொல் ஆசீவகம், ஜைனம், புத்தம் ஆகிய மூன்றையும் சேர்த்துக் குறித்தது...தற்காலத்தில் தான் ஆய்வாளர்கள் ஆசீவகம் ஜைனத்தின் ஒரு பிரிவாகவும், ஜைனம் என்பதற்கு சமணம் என்றும் தவறாக மொழிபெயர்ப்பு செய்கிறார்கள்...

பார்ப்பார் என்ற சொல் கல்வெட்டிலிருந்தால் அது பிராமணர்களைக்(தற்காலத்துப் பார்ப்பனர்களைக்) குறிக்கும் என்று, அச்சொல் பயன்படுத்தப்பட்ட இடம், காலம், பொருள் பற்றி ஆயாமல் ஆய்வாளர்கள் குறிப்பிடுவது மிகவும் தவறானது...

ஐ மற்றும் ஔ ஆகிய எழுத்துக்கள் ஆசீவகத் தொடர்புடையன...சொல்லப்போனால், ஆசீவக நெறியின் சிறப்பெழுத்துக்கள்...அதனால் தான் இவ்வெழுதுக்கள் கொண்ட சொற்கள் இலக்கியங்களில் இல்லை...இரண்டாம் வேற்றுமை உருபாகவே ஐயின் உயிர்மெய்யெழுத்துக்கள் பயன்படுத்தப் பட்டிருக்கும்...ஐயன், ஐயனார், ஔவை, ஔவையார், ஐயப்பன், ஐயம், ஐயர், ஐயங்கார், ஐராவதம்(ஆனை), ஐயா, ஐந்து ஆகிய ஐயில் தொடங்கும் அனைத்து வேர்ச்சொற்களும் ஆசீவகத் தொடர்புடையன...இது மட்டுமில்லாமல் அந்தணர், பார்ப்பார் ஆகிய சொற்களும் ஆசீவகத் தொடர்புடையன...இதிலிருந்தே, அந்தணர், பார்ப்பார், ஐயர், ஐயங்கார் என்ற சொற்கள் முன்பு ஆசீவகர்களைக் குறித்து பிற்காலத்தில் பிராமணர்களைக்(தற்காலத்துப் பார்ப்பனர்களைக்) குறிக்கப் பயன்பட்டது என்றுணரலாம்...தற்போதைய பிராமணர்களில் ஒரு பிரிவினரான ஐயர் மற்றும் ஐயங்கார் என்றழைக்கப்படுவோர் தமிழகத்தில் மட்டுமே உள்ளார்கள் என்பதையும் இங்கு நாம் பார்க்க வேண்டும்...அதனால், களப்பிரர் காலத்துக் கல்வெட்டுகளில் பார்ப்பனர் என்றிருந்தால் அது ஆசீவகர்களைக் குறிக்குமே தவிர அது பிராமணர்களைக்(தற்காலத்துப் பார்ப்பனர்களைக்) குறிக்காது...கீழே பகிர்ந்துள்ள ஆசீவக(ஆசீவகம்=ஆசு+ஈவு+அகம்) நெறி பற்றிய காணொளிகளைப் பார்த்த பின்பு, அந்தணர்(அந்தம்+அணர்), பார்ப்பார்(பார்ப்பு+ஆர்) ஆகிய சொற்களுக்குப் பிரித்துப் பொருள் கண்டால் தெளிவாக அச்சொற்களின் பொருள் நமக்குப் புரியும்...சங்க காலத்தில் ஔவையார், வள்ளுவர், கணியர் என்பவர்களும் ஆசீவகர்கள் என்பது நமக்குப் புரியும்...

ஆகையால், களப்பிரர்கள் காலத்தில் சமணம் என்ற சொல் ஆசீவகம் ஜைனம் புத்தம் ஆகிய மூன்றையும் சேர்த்துக் குறித்தாலும், களப்பிரர்கள் ஆசீவக நெறியைச்(சமணம்) சார்ந்தவர்களாக இருக்க வாய்ப்புகள் அதிகம்...ஏனென்றால், இக்காலத்தில் இயற்றப்பட்டு நமக்குக் கிடைத்த இலக்கியங்களில் தமிழர்களின் ஆசீவகக் கோட்பாடுகள் நிரம்பிக் கிடக்கின்றன...களப்பிரர்கள் ஆட்சிகாலத்தின் அடையாளங்கள் கிடைக்கவில்லை என்றக் கூற்றுடன், இவர்கள் காலத்திற்குப் பின்பு சமணர் கழுவேற்றமும் அவர்களின் அடையாள அழிப்பும் நடந்தது என்றக் கூற்றையும் சேர்த்துப் பார்க்கும் பொழுது, களப்பிரர்களின் அடையாளங்கள் சமணர் கழுவேற்றத்தின் பொழுது அழிக்கப்பட்டிருக்கலாம் என்றும், களப்பிரர்கள் ஆசீவக நெறியைப்(சமணம்) பின்பற்றியவர்களாக இருக்க அதிக வாய்ப்புகள் உள்ளன என்றேத் தோன்றுகிறது...
----------------------------------------------------------------------------------------------------------------------------------
ஆசீவக நெறியைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள:

Vinayaga worship - The great mystery solved videos(8 Parts):

Part 1 - முன்னுரை - http://www.youtube.com/watch?v=9gijDMTfJW4
Part 2 - சித்தர்கள் கோட்பாடுகள் -  http://www.youtube.com/watch?v=O6omKaHFCQY
Part 3 - விநாயகர் வழிபாட்டின் தோற்றம் - http://www.youtube.com/watch?v=M9Ch8oQOl7M
Part 4 - சிவன் - http://www.youtube.com/watch?v=jDhZBFwewao
Part 5 - திருமால்(விஷ்ணு) - http://www.youtube.com/watch?v=cHInqRywGhA
Part 6 - பிரம்மா - http://www.youtube.com/watch?v=F0D_T9M4vRY
Part 7 - முருகன் மற்றும் இந்திரன் - http://www.youtube.com/watch?v=9pgUpfV5WsY
Part 8 - முடிவுரை - http://www.youtube.com/watch?v=9u5t9yY8oLo

The Great Mariamman Mystery Solved - http://www.youtube.com/watch?v=YrsO-tovxxs

காணொளிக்கு நன்றி - தமிழர் சிந்தனைப் பேரவை

பதிவை மேலும் மெருகூட்டிய தமிழ் வேந்தனுக்கு மிக்க நன்றிகள் .

Link to comment
Share on other sites

 ஆசீவக நெறியைப் பற்றி இன்றுதான் கேள்விப்படுகிறேன் தமிழ்வேந்தன்.

களப்பிரர் காலத்துக் கல்வெட்டுகளில் பார்ப்பனர் என்றிருந்தால் அது ஆசீவகர்களைக் குறிக்குமே தவிர அது பிராமணர்களைக்(தற்காலத்துப் பார்ப்பனர்களைக்) குறிக்காது..

சங்க காலத்தில் குறிப்பிட்ட பார்ப்பார்  என்ற சொல் இன்று நாம் சொல்லும் பார்ப்பனர்களை குறிப்பது அல்ல என்று இராவண காவியம் எழுதிய புலவர் குழந்தை கூறியுள்ளார். தலைவன் தலைவி இடையே நிகழும் பிணக்குகளை தீர்க்க தூது செல்பவனே பார்ப்பன் என்றும் கூறுவதும்  இங்கு நோக்கத்தக்கது.

Link to comment
Share on other sites

சங்க காலத்தில் குறிப்பிட்ட பார்ப்பார்  என்ற சொல் இன்று நாம் சொல்லும் பார்ப்பனர்களை குறிப்பது அல்ல என்று இராவண காவியம் எழுதிய புலவர் குழந்தை கூறியுள்ளார். தலைவன் தலைவி இடையே நிகழும் பிணக்குகளை தீர்க்க தூது செல்பவனே பார்ப்பன் என்றும் கூறுவதும்  இங்கு நோக்கத்தக்கது.

புலவர் குழந்தை அவர்கள் கூறிய விளக்கத்தைப் பகிர்ந்துகொண்டமைக்கு நன்றிகள்...ஆய்விற்கு உதவும்...

 ஆசீவக நெறியைப் பற்றி இன்றுதான் கேள்விப்படுகிறேன் தமிழ்வேந்தன்.

என்ன செய்வது...வந்தவர்கள் திட்டமிட்டே நம் நெறியை அழித்துவிட்டார்கள்...இது, ஒரு மரத்தை அதன் கிளையால் செய்த கோலைக் கொண்ட கோடாரியால் வெட்டிய உண்மைக்கதை...

Link to comment
Share on other sites

யாராவது என்னை ஆரியர்கள் படையெடுத்தார்களா எனக் கேட்டால், நான் ஆமாம் என்று ஆணித்தரமாகக் கூறுவேன். ஆரியர்கள் படையெடுத்தார்கள், முதலில் பண்பாட்டுப் படையெடுப்பு, பின் அரசியல் படையெடுப்பு. நிறைய ஆய்வாளர்கள்(ஆரியர்களாகக் கூட இருக்கலாம்), ஆரியர்கள் படையெடுப்பு என்றால் அது அரசியல் படையெடுப்பு மட்டுமே எனப் பரப்பி அவர்கள் படையெடுக்கவில்லை என நிறுவ முற்பட்டனர். ஆனால், ஒரே ஒரு வெளிநாட்டவர் தான், தன் நூலில் ஆரியர்களின் படையெடுப்பு, பண்பாட்டுப் படையெடுப்பையேக் கொண்டது என்று கூறினார். யாரும் கண்டுகொள்ளவில்லை. இருந்தாலும் அதுதான் உண்மை. என் புரிதல் படி, தமிழகத்தில் ஆரியர்களின் பண்பாட்டுத் தாக்கம் குறைந்தபட்சம் இரண்டு முறை வந்துள்ளது.

1. களப்பிரர்கள் ஆட்சிக்கு வருவதற்கு முன் - களப்பிரர்களால் நிறுத்தப்பட்டது
    கீழ் வரும் புறநானூற்றுப் பாடல்களை எடுத்துக்கொண்டால்,
        15. எதனிற் சிறந்தாய்?
            பாடியவர் :கபிலர்.
            பாடப்பட்டோன் : சேரமான் செல்வக் கடுங்கோ வாழியாதன்
        224. இறந்தோன் அவனே!
            பாடியவர்: கருங்குழல் ஆதனார்.
            பாடப்பட்டோன்: சோழன் கரிகாற் பெருவளத்தான்
    இவ்விரண்டு செய்யுள்களிலும் ஆரியர்களுக்கே உரிய வேள்வி செய்யும் நம்பிக்கை பற்றி குறிப்புகள் உள்ளன. இச்செய்யுள்களில் பாடப்பட்டவர்களான
        சேரமான் செல்வக் கடுங்கோ வாழியாதன் - முதல் அல்லது இரண்டாம் நூற்றாண்டைச் சார்ந்தவன்
        சோழன் கரிகாற் பெருவளத்தான் - இரண்டாம் நூற்றாண்டைச் சாந்தவன்
    இதன்மூலம், அக்கால சேர சோழ நாடுகளில் முதல் நூற்றாண்டிலேயே ஆரியர்கள் தங்கள் ஆதிக்கத்தைச் செலுத்தத் தொடங்கிவிட்டனர் என்பதும் தெரிகிறது.

    கீழ் வரும் ஐங்குறுநூறுப் பாடல்களை எடுத்துக்கொண்டால்,
        அன்னாய் வாழிவேண் டன்னை நம்மூர்ப்
        பார்ப்பனக் குறுமகப் போலத் தாமும்
        குடுமித் தலைய மன்ற
        நெடுமலை நாடன் ஊர்ந்த மாவே.
            -ஐங்குறுநூறு(202) - கூடலூர் கிழார்

    இந்தப் பாடலை நோக்கினால், குதிரையின் வால் ஆடுவது பார்ப்பனர் குடுமி ஆடுவதைப் போல உள்ளது என நகையாடுகின்றனர் என்று பொருள் உள்ளது. ஆசீவகச் சித்தர்கள் குடுமி வைத்தவர்கள் அல்லர். அப்படியென்றால், ஐங்குறுநூறு இயற்றப்பட்டக் காலத்திலேயே ஆரியர்கள் வந்துவிட்டனர் என்று தானே பொருள். மேலும், ஆரியர்களைப் பார்ப்பனர் என்றுக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம், ஆரியர்கள் ஆசீவகச் சித்தர்களின் இடத்தைப் பிடித்துவிட்டார்கள் என்றே எண்ணத் தோன்றுகிறது. மேலும், மக்கள் ஆரியர்களின் குடுமியைப் பார்த்து நகையாடுவதைப் பார்க்கும் பொழுது, மக்களிடம் ஆரியர்களுக்கு செல்வாக்கு வெகுவாக இல்லை என்றே எண்ணத் தோன்றுகிறது.

2. களப்பிரர்கள் ஆட்சி முடிவிற்கு வந்த பின் - ஆரியர்களின் பண்பாட்டுத் தாக்கம் நிலைத்துவிட்டது

ஆகவே, களப்பிரர்கள் ஆரியர்களை ஆதரித்த அரசர்களை எதிர்த்தே ஆட்சிக்கு வந்தார்கள் என்பதற்கு வாய்புகள் அதிகம். மேலும், அவர்கள் ஆசீவக(சமண) நெறியைப் பின்பற்றியவர்கள் என்ற கருதுகோலுக்கும் வலு சேர்க்கிறது. ஏனென்றால், பிற்காலத்தில் ஆரியர்களை எதிர்த்தவர்கள் ஆசீவக(சமண) நெறியினர்.

முன்பு களப்பிரர்களை வைத்து ஆரியர்களை எதிர்த்து தமிழகத்திலிருந்த ஆரியர்களைக் கொன்றது ஆசீவக நெறி என வைத்துக்கொள்வோம். பின்பு, களப்பிரர் ஆட்சிக்குப் பின் அதே ஆசீவக நெறியை அழிக்க வந்தவர்கள் ஆரியர்கள். அதனால் தான் இந்தியாவில் சமணமும் புத்தமும் பெரும்பான்மையாக அழிந்ததற்குக் காரணம் எனத் தோன்றுகிறது.

Link to comment
Share on other sites

முன்பு இட்டக்கருத்தில், ஆரியர்கள் தமிழகத்தில் முதல் நூற்றாண்டிலேயே ஆதிக்கம் செலுத்தத் துவங்கிவிட்டனர் எனக் கூறினேன். ஆனால், வடஇந்தியாவில் அவர்கள் கி.மு. இரண்டாம் நூற்றாண்டிலேயே ஆட்சி செலுத்தத் தொடங்கிவிட்டனர்(Sunga Dynasty). இங்கு குறிப்பிடத்தக்கது என்னவென்றால், களப்பிரர்களுக்கு முன்பு ஆரியர்கள் தமிழகத்தில் இருந்தனர்/ஆதிக்கம் செலுத்தினர் என்ற கூற்றுக்கு வலுசேர்க்கும் விதமாக,

1. The History of Indian Literature(1904) எனும் நூலில் Albrecht Weber என்பவர், சம்ஸ்கிருத இலக்கண ஆசிரியரான பாணினியின் காலம் கி.பி. 140க்குப் பின்தான் என்று சான்றுகளுடன் அறுதியிட்டுக் கூறுகிறார்.
அந்தச் சான்றுகள் கீழே. பக்கம் 217,

Bohtlingk, to whom we owe an excellent edition of the grammar, has attempted to fix his date for the middle of the fourth century B.C., but the attempt seems to be a failure. Of the reasons adduced, only one has any approach to plausibility, which is to the effect that in the Katha-sariti, a collection of popular tales belonging to the twelfth century, Panini is stated to have been the disciple of one Varsha, who lived at Pataliputra in the reign of Nanda, the father of Chandragupta(2av&p6tcv7TTo<i). But not only is the authority of such a work extremely questionable in reference to a period fifteen centuries earlier; the assertion is, besides, directly contradicted, both as to time and place, by a statement of the Buddhist Hiuan Thsang, who travelled through India in the first half of the seventh century. For Hiuan Thsang, as reported by Eeiuaud (M6m. sur I'fnde, p.88), speaks of a double existence of Panini, the earlier one belonging to mythical times, while the second is put by him 500 years after Buddha's death, i.e., loo years later than the reign of king Kanishka, who lived, as he says, 400 years after Buddha.* As Kanishka is proved by coins to have reigned down to A.D. 40 (Lassen, /. AK., ii. 413), Panini, according to this, would have to be placed not earlier than A.D. 140. A statement so precise, obtained by Hiuan Thsang on the spot, can hardly be a mere invention ; while no significance need be attached to the earlier mythical existence, nor to the circumstance that he makes Panini a Buddhist.

2. மேலும், கி.பி. 150க்கு மேல் தான் சம்ஸ்கிருத மொழி இருந்ததற்கான முதல் சான்று கிடைக்கிறது. அதுவும், சம்ஸ்கிருத இலக்கணமில்லா சொற்றொடர்கள் பிராகிருத சொற்களுடன் பிராமி எழுத்து முறைமையில் எழுதப்பட்டு குஜராத்தில் கிடைத்த ஒரு கல்வெட்டு. ஏனென்றால், அக்காலத்தில் சமஸ்கிருதத்திற்கு சொந்த எழுத்துக்கள் கிடையாது. அதுவரை பிற மொழியின் எழுத்துக்களையே(குறிப்பாக தமிழ் மொழி எழுத்துக்கள் மற்றும் அதிலிருந்து தோன்றிய கிரந்த எழுத்து முறைமை) பயன்படுத்தி எழுதி வந்த ஆரியர்கள், கி.பி. 18ஆம் நூற்றாண்டிற்கு மேல் தான் தேவநாகரி என்ற எழுத்து முறைமையை சமஸ்கிருதத்திற்கு பின்பற்றத் தொடங்கினர்.

அதாவது, ஆரியர்கள் தாங்கள் கி.மு. இரண்டாம் நூற்றாண்டில் வடஇந்தியாவில் ஆட்சி செலுத்தத்தொடங்கியிருந்தாலும் அங்கு சமஸ்கிருத மொழிக்கான தடயங்கள் இல்லவே இல்லை. ஆனால், கி.பி. முதல் நூற்றாண்டில் தமிழகத்தில் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கிய பின்பு தங்களுக்கென்று ஒரு மொழியை பிறமொழிகளிலிருந்து சொற்களைக்(பெரும்பாலும் தமிழ் மொழி) கடன் வாங்கி உருவாக்கியிருக்கின்றனர்.

அதனால் தான் குறைந்தபட்சம் 60 விழுக்காடு சமஸ்கிருதச் சொற்கள் தமிழ்ச் சொற்களாக அல்லது தமிழ் வேர்கள் கொண்ட சொற்களாக உள்ளன(இது வரை நடந்த ஆய்வுகளின் படி, ஆந்திராவில் உள்ள ஒரு பல்கலைக்கழக பேராசிரியர் இம்மொழியியல் ஆய்வின் கூற்றைவெளியிட்டார். ஆனால், அந்த செய்தி ஓரிரு ஊடகங்களில் மட்டுமே வெளிவந்தது).

இதன்மூலம், களப்பிரர்களுக்கு முன்பு ஆரியர்கள் தமிழகத்தில் இருந்தனர்/ஆதிக்கம் செலுத்தினர் என்ற கூற்று வலுவாகிறது.

தன் கருப்பு நிறத்தைப் பெருமையாக நினைத்தத் தமிழர், எப்படி வெள்ளை நிறம் கொண்ட ஆரியர்களால் ஏமாற்றப்பட்டனர் என்றக் கேள்வி உங்களுக்கு எழலாம். காரணம் இல்லாமல் புதிதாய் இருப்பதால் சிறுபிள்ளை இராட்டினத்தைப் பார்த்து வியப்பதைப் போல வெள்ளைநிறத்தைக் கண்டு வியந்து ஏமார்ந்தனரா தமிழர்கள்?.
ஆதி காலந்தொட்டு ஆசீவக நெறியைப் பின்பற்றிய தமிழர்கள், அந்நெறியின் மிக உயர்ந்த நிலையைக்(கழிவெண் பிறப்பு) குறிக்கும் நிறமான வெள்ளை நிறத்தை மிகவும் மதித்தனர். அந்நிலையை அடைந்தவர்களை ஐயனார்(ஐயன், ஐயர்) அல்லது நல்வெள்ளையார்(சங்க காலப்புலவர்களில் கூட ஒருவர் உள்ளார்) என்றழைத்தனர். அந்நிலையை அடைந்தவர்கள் வெள்ளை நிற உடையை அணிவர். இதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட வெள்ளை நிறம் கொண்ட ஆரியர்கள், தாங்கள் பிறப்பிலேயே அவ்வுயரிய நிலையை அடைந்தவர்கள் என்று அரசர்களை ஏமாற்றி தற்காலப் போலிச்சாமியார்களைப் போல் அரசவைக்குள் நுழையத் துவங்கினர். அரசவையில் ஆசீவக சித்தர்களுக்கு இருந்த இடத்தைப் பிடித்தனர். இதனால், உண்மையான ஆசீவகச் சித்தர்களின்(தமிழர்கள்) முக்கியத்துவம் அரசர்களிடமும் குறையத் துவங்கியது. இதனால் முற்காலத்தில் ஐயன், ஐயர், அந்தணர், பார்ப்பார் என்ற சொற்கள் ஆசீவகச் சித்தர்களையேக் குறித்தது. ஆனால், பிற்காலத்தில் அச்சொற்கள் ஆரியர்களைக் குறிக்கப் பயன்படுத்தப் பட்டன. ஆசீவகச் சித்தர்கள் மற்றும் அவர்கள் தரும் தீர்வுகளின் மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருந்த அரசர்கள், அதே நம்பிக்கையை ஆரியர்கள் மீதும் அவர்களின் தீர்வுகளின் மீதும் வைத்தனர். இப்படி, வந்தேறிகளான ஆரியர்களால் தமிழர்களும் அவர்களின் அரசர்களும் ஏமாற்றப்பட்டனர்.

இக்காலத்தில் தான்,
        ஆகங்கள்(யாகங்கள் அல்லது வேள்விகள்) - ஆரியர்களின் நம்பிக்கைப் படி வேள்வியில் ஒரு பொருளை எரித்தால், அது புகை வடிவமாக வானத்திலிருக்கும் புகை மேகங்களில் உள்ள தேவர்களுக்குச் சேரும் என்பதே.
        சுரா பானம் அருந்துதல்(ஒரு வகை மதுபானம், முற்காலத்தில் இதை அருந்துபவரை சுரர்(தேவர், அதாவது, ஆரியர்கள் தங்களை தேவர்கள் என அழைத்துக்கொண்டனர்) என்றும் அருந்தாதவரை அசுரர்(தமிழர்கள்) என்றும் ஆரியர்கள் அழைத்தனர், பிற்காலத்தில் ஆரியர்களால் தமிழர்களும் அதை அருந்தத் தொடங்கிவிட்டனர்)
        ஊன் உண்ணுதல்
    முதலிய ஆரியர்களுக்கே உரிய பிற போலியான பழக்க வழக்கங்களும் நம்பிக்கைகளும் பரவத் தொடங்கியிருக்கலாம். ஆசீவகர் என்றால் பிரச்சனைகளுக்கு உடனேத் தீர்வு தருபவர் எனப் பொருள். ஒவ்வொரு துறைக்குமேற்ற ஆசீவக சித்தர்கள் இருந்தனர்(மருத்துவம், கணியம், வானியல், போர்க்கலை, முதலியன). இதனால் தான் பள்ளி என்ற சொல் வாழ்வியல் கலைகளை சொல்லித்தரும் இடமாக மட்டும் இல்லாமல் போர்ப்பயிற்சி எனும் கலையை கற்றுத் தரும் இடங்களையும் பிற்காலங்களில் பள்ளி என்றழைக்கப்பட்டன. தமிழ் மொழி சொல்லித்தருவதற்கும் பள்ளிகள் இருந்தன. இக்கல்வி முறையின் நோக்கம் என்னவென்றால் மக்கள் வாழ்வில் வரும் பிரச்சனைகளை எதிர்கொள்ள எளிதாக இருக்க வேண்டும் என்பதுதான். ஆசீவகர் என்றால் பிரச்சனைகளுக்கு உடனேத் தீர்வு தருபவர் எனப் பொருள். பல மக்களும் முதலில் ஆரியர்களை நம்பினாலும், தங்கள் அன்றாட பிரச்சனைகளுக்கு ஆரியர்களிடம் சரியான தீர்வு கிடைத்திருக்காது. அதனால், ஆரியர்களின் உண்மையான திரனை காலப்போக்கில் தெரிந்துகொண்டிருப்பர். ஆனால், அரசர்கள் ஆரியர்களை இன்னும் அதிகமாக நம்பத் தொடங்கியிருக்கலாம். ஏனென்றால், பத்து பேர் சேர்ந்து பத்து பேரை ஏமாற்றுவதை விட ஒருவரை ஏமாற்றுவது எளிது என்றக் கோட்பாடுதான். ஆரியர்களின் பழக்கவழக்கங்கள் மூலமாக நாட்டில் நிலையாமை குடியேறியது. இதனால், மக்களுக்கு அரசன்மீது உள்ள நம்பிக்கை குறைந்தது. இப்படி இருந்த நிலையில், மக்களையும் ஆசீவக(சமண) நெறியையும் காக்கத் தோன்றியவர்கள் தான் களப்பிரர்களாக இருக்கலாம். ஆரியர்களின் பழக்க வழக்கங்களிலிருந்து மக்களை விடுபடவைக்க இக்காலத்தில் ஆசீவக நெறி கூறும் நீதி இலக்கியங்கள் அதிகமாக தோன்றியிருக்கக் காரணமாக இருக்கலாம்.

ஆசீவகச் சித்தர்கள்(சமணர்கள்) என்று கூறுகிறீர்கள், பிறகு எப்படி அவர்கள் வன்முறையை கையாண்டார்கள் என்று நீங்கள் கேட்கலாம். எந்த ஒரு நெறியினரும் நேரடியாக போரில் ஈடுபட மாட்டார்கள். மேலும், ஆசீவக நெறி(சமணம்) என்ற உடனே நமக்குத் தோன்றுவது ஆசீவகச் சித்தர்கள்(சமணர்கள்) அனைவரும் அமைதியானவர்கள். மன அமைதிக்காகவும் வீடுபேறு அடைவதற்காகவும் தன்நொழுக்கம் மற்றும் தியானம் செய்பவர்கள்(தற்கால ஜைனம் மற்றும் புத்த நெறியினரைப் போல). பிற உயிர்களுக்குத் துன்பம் தர மாட்டார்கள் என்ற பிம்பம் தான் நமக்குத் தோன்றும். நீங்கள் நினைப்பதைப் போல ஆசீவகர்களும் இவற்றைத்தான் செய்தார்கள். ஆனால், மற்ற நெறிகளில் இல்லாத ஒன்று ஆசீவக நெறியில் உள்ளது. அதுதான், மக்களுக்கான பயனுள்ள கண்டுபிடிப்புகள். அதாவது, மற்ற நெறிகள் வீடுபேறு என்ற ஒற்றை இலக்கை வைத்து ஒழுக்கம் முதலிய அனைத்துக் கோட்பாடுகளையும் அதைச் சுற்றி வைத்தன. ஆனால், ஆசீவக நெறி வீடுபேறு என்பதைச் சுற்றி மக்களின் வாழ்வுக்குத் தேவையான கண்டுபிடிப்புகளையும் முன் வைத்தது. அதாவது, வீடுபேறும் அடைய வேண்டும் மற்றும் ஒழுக்கத்துடனும் நலமுடனும் நன்றாகவும் வாழவேண்டும். ஆனால், வீடுபேற்றின் விளக்கம் தான் நெறிக்கு நெறி மாறுபடும். ஆசீவக நெறியில் குருவிடம் அவரின் அறிவைக் கற்று, பிற நூல்களையும் கற்று, அதன்மேல் ஆய்வு செய்து, அதன் மூலம் மக்களுக்குத் தேவையான புதிய கண்டுபிடிப்புகளை செய்து, அதை தம் மாணாக்கர்களுக்கு, தான் பெற்ற அறிவுடன் தான் கண்ட அறிவையும் சேர்த்துக் கொடுப்பதே ஆசீவகத்தின் மூலக்கோட்பாடு. இவர்களுக்கு அரசவைகளிலும் இடம் இருந்தன. ஆசீவகர் என்றால் பிரச்சனைகளுக்கு உடனேத் தீர்வு தருபவர் எனப் பொருள் எனப் பார்த்தோம். இதன் மூலம் கண்டுபிடிக்கப்பட்டவை தான் ஓகக் கலை முதல் சித்த மருத்துவம் வரை, கப்பல் கலை முதல் போர்க்கலை வரை.

Link to comment
Share on other sites

கருத்துக்களைப் பதிந்த அனைத்துக் கள உறவுகளுக்கும் மிக்க நன்றிகள் .

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அவரும் தோற்கடிக்கப்படவேண்டியவரே. நான் அவருக்கும் வாக்கு போட்டிருக்க மாட்டேன். நிச்சயம் சிங்கபூரில் இருந்து டிக்கெட் போட்டு போய் அவருக்கு பிரச்சாரம் செய்து வாக்கு கேட்டிருக்க மாட்டேன். தவிரவும் அவரும் மட்டகளப்பு, அவர் வன்கொடுமை செய்ய பெண்ணும், மட்டகளப்பு, அவரை ஆதரித்த உள்ளூர் கட்சியினரும் மட்டகளப்பு  வாக்களித்த வாக்காளரும் மட்டகளப்பு எனும் போது இதில் பிரதேசவாதம், மையவாதம் என்ற கோணமே எழவில்லை. இல்லையே…அப்பட்டமாக பிரதேசவாதம் கக்காத தமிழ் தேசிய அரசியலும் செய்யாத பலர் அங்கே தேர்தலில் நின்றார்களே. தமிழ் தேசியத்தில் நம்பிக்கை இல்லை, சரி வேறு ஒரு தெரிவை எடுக்கலாமே? தென்னிலங்கை கட்சியில் கேட்ட ஒரு தமிழருக்கு போட்லாலாமே? நான் இன்றும் மேடைக்கு மேடை பிரதேசவாதம் கக்குபவருக்குதான் வாக்கு போடுவேப் ஆனால் நான் பிரதேசவாதி இல்லை என்பது நம்பும்படியாகவா இருக்கு? தெரியும். மட்டகளப்பு மாவட்டமும் பெரும்பான்மை தமிழர் பகுதிதான்.    பிரதர், நான் தமிழ் தேசிய வடையை நியாப்படுத்தவில்லை. அதை நீங்கள் ஆதரிக்க வேண்டும் என்றும் சொல்லவில்லை . நீங்கள் நன்னா டிரக்கை மாத்த வேண்டாம். தமிழ் தேசிய அரசியல் உதவாது என்ற நிலைப்பாடு = பிரதேசவாதம் என நான் எங்கும் எழுதவில்லை. ஆனால் அப்பட்டமாக செயலில், சொல்லில் இன்றுவரை பிரதேசவாதத்தை எழுப்புவரை, அவரின் கொள்கையை ஆதரிப்பது, இறங்கி வேலை செய்வது, நிச்சயம் பிரதேசவாதம்தான். இது நான் ஹிட்லரின் அனுதாபி, அவருக்கு வாக்கு போடுகிறேன், அவருக்கு வாக்கு போடுமாறு பிரச்சாரமும் செய்கிறேன் ஆனால் நான் நாஜி இல்லை என்பது போல ஒரு நிலைப்பாடு.
    • சங்கி ஆனந்தம் சொன்னது சம்பந்தமாக, மெதடிஸ்ட் (CSA, CoE, American Mission) இப்படி ஊருக்குள் போய் மதம் மாற்றுகிறார்களா? நான் அறிய 5ம் வேதம் என கூறப்படும், யெஹோவா சாட்சிகள், பெந்திகோஸ்த் ஆட்கள்தான் இப்படி செய்வது.
    • இதே போன்ற ஒன்றை மட்டக்களப்பு பெண்ணிற்கு இழைத்து இழைத்தவர் கூத்தமைப்பில் மட்டக்களப்பில் பா. ஊ வாக இருந்தார். ஒரு வேளை அவர் இதனை யாழில் செய்திருந்தால் கூத்தமைப்பில் நிறுத்தப்பட்டிருப்பாரா...? ஆகவே யாழ் மையவாதிகள் ஒன்றும் திறம் கிடையாது அடுத்தவனுக்கு பாடம் எடுக்க. ஆக என்ன சொல்ல வருகிறீர்கள் நீங்களும் நானும் பவுன்ஸிலும் டாலர்களிலும்  பாக்கெட்டிற்குள் போட்டுக் கொண்டு நம்ம அடுத்த வேலையை பார்க்கப்போக அங்கே இருக்கும் மட்டக்களப்பார்கள் மட்டும் யாழ் தேசியவாதிகளை நம்பி அடுத்த வேளை சோற்றுக்கு பிச்சையெடுக்க வேண்டும் அப்பிடியா...? முக்கால் வாசி தேசிய வியாதிகள் எல்லாம் ஒன்று புலம் பெயர், இல்லை தமிழர் பெரும்பான்மை பிரதேசத்தில் மட்டும் ஏன் இருக்கிறார்கள் என்று தெரியுமா..? சோற்றுக்கு வயிறு காயும் போதுதான் தெரியும் தேசியத்தின் பெருமை. தமிழர் பெரும்பான்மை பிரதேசங்களில் தேசியவாதிகள் சிறுபான்மை ஆகும் போது தெரியும் தேசியத்தின் பெருமை அதுவரை தேசியவாதிகள் வாயால் நன்னா வடை சுடலாம்
    • ""எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான்"" என்பது உந்தக் கரடிக்குத் தெரியாதோ?  😁
    • என்னப்பா உந்தப்பிரச்சனை இன்னும் முடியேல்லையே?😂 நானெண்டால் இத்தடிக்கு கார பாட்ஸ் பார்ட்சாய் கழட்டி வித்திருப்பன்.😎
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.