Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வெள்ளிக்கிழமை சத்தியப் பிரமாணம்! ஆனால் அமைச்சுப் பதவி சர்ச்சை நீடிக்கிறது! சித்தார்த்தன்

Featured Replies

sitharthan.jpgவட மாகாணத்திற்கான அமைச்சர் நியமனங்கள் தொடர்ந்து இழுபறி நிலையில் இருந்து வருவதாக புளொட் அமைப்பின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.

நான்கு கட்சிகளுக்கும் அமைச்சுப் பொறுப்புக்கள் வழங்கப்பட வேண்டும் என புளொட் அமைப்பு கேட்டுள்ளபோதிலும் எவ்வாறான முடிவுகள் எட்டப்படும் என்பது குறித்து தெரியவில்லை எனவும் அவர் கூறுகிறார்.

முடிவுகள் எதுவாக இருந்தாலும், அமைச்சுப் பதவிகள் கிடைக்காவிட்டாலும் தொடர்ந்தும் மக்களுக்கான சேவைகளையும், அவர்களுக்கான பங்களிப்பையும் செய்வதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வழங்கிய செவ்வியில் இதனைத் தெரிவித்தார்.

http://tamilworldtoday.com/home

 

 

  • கருத்துக்கள உறவுகள்

பருப்பு வேகல்லைப் போல.. உடன மக்களுக்கான சேவை. நீங்கள் மக்களுக்குச் செய்த சேவையையும் மக்கள் இலகுவில் மறந்திருக்கமாட்டார்கள்..! நீங்க எல்லாம் கூட்டமைப்புக்குள்ள வந்துதான் என்னத்தைச் சாதிக்கிறீங்க. இதிலும் வெளில நின்றிருக்கலாம். என்ன இப்ப மீண்டும் 3 வேளை சாப்பாடுகிடக்கும். அதுவும் புலம்பெயர் தமிழனின் காசாத்தான் இருக்கும்..! :icon_idea::rolleyes:

சித்தாத்தன் அவர்கள் முதலமைச்சர் மகிந்த முன் சத்தியபிரமாணம் எடுக்கக்கூடாது என்று கதைவிட்டுவிட்டு , பின்  சத்தியபிரமாணம் நிகழ்வுக்கு அவரும் போயிருந்தார்.இவங்கள் எல்லாம்---

  • கருத்துக்கள உறவுகள்

சித்தாத்தன் அவர்கள் முதலமைச்சர் மகிந்த முன் சத்தியபிரமாணம் எடுக்கக்கூடாது என்று கதைவிட்டுவிட்டு , பின்  சத்தியபிரமாணம் நிகழ்வுக்கு அவரும் போயிருந்தார்.இவங்கள் எல்லாம்---

 

உதுகளைச் சொல்லிக் குற்றமில்ல. அதுகள் அப்படித்தான். உதுகளை மனிசர் என்று மதிக்கிறவைக்குத் தான் செருப்பால அடிக்கனும்.. புத்தி வர..!

 

அதுகள் இவ்வளவு காலமும் ஒட்டுக்குழு கால் அமுக்கல்.. எலும்பு பொறுக்கல்.. எதிரிக்காக சுட்டுத்தள்ளல்.. அரசியல் நடத்தினதுகள். அதுகளட்டப் போய்.. சுயாட்சி.. சுயமரியாதை.. தனி நாடு.. தமிழீழம்.. சுயநிர்ணயம்.. தாயகம் என்று.. சொன்னால் எப்படி இருக்கும்..! அதுகள் எஜமானன் வாசல் எப்ப கிடைக்கும்.. குழிதோண்டு அதில படித்திருந்து தூக்கி வீசிற எலும்பை பொறுக்கலாம் என்று காத்துக்கிடக்கிறதுகள்..! அதுகளட்டப் போய்.... :icon_idea::lol:

 

சித்தாத்தன் அவர்கள் முதலமைச்சர் மகிந்த முன் சத்தியபிரமாணம் எடுக்கக்கூடாது என்று கதைவிட்டுவிட்டு , பின்  சத்தியபிரமாணம் நிகழ்வுக்கு அவரும் போயிருந்தார்.இவங்கள் எல்லாம்---

 

அப்படியா?. சித்தார் அப்படி சொன்னாரா?. ஏனாம் 2011 வரை அரச ஓட்டுக்குழுவாக இருந்து இவர் செய்த ஜனாயக வேலைகள் மகிந்தர் மறந்திட்டாராமா?. 
 
இந்த ஒட்டகம், ஒரு அமைப்பை தலமை தாங்கி செய்த கொலை, கற்பளிப்பு, கப்பம், சித்தரவதை, காட்டிக்கொடுப்புகள், சிறுவரை படையில் சேர்த்தல் எல்லாம் செய்துவிட்து அரச உளவாளியாக, தமிழ் தேசிய கூடாரத்தில் புகுந்து தான் செய்த ஆக்கிரமங்களுக்கு சன்மானமாக எந்த மக்களை தூப்புறுத்தினானோ அந்த மக்களிடமிருந்து அமைச்சு பதவி கோருகின்றார். இந்த யுத்த்த குற்றவாளி மகிந்தருக்கு பக்கத்தில் குற்றவாளி கூண்டில் நிக்கவேண்டியவன். 
 
இங்கே வாசியுங்கள் மீண்டும் பதிக்கின்ரேன். இவன் எண்ணுவேலாம் செய்தான் என்று. நான் கீழே போடுவது இவரின் நடவடிக்கைகளில் ஒரு சின்ன உதாரணமே. மேலும் தேவை வேண்டின் சொலுங்கோ. இங்கை போடுரான் இந்த அமைச்சுக்கு அலையும் மேதாவியின் தகமைகளை.
 
இந்த கொலைக்ாருக்கு பதிவி குடுப்பதிலும் பார்க்க நான் முழு முட்டாள் மெர்வின் சில்வாவுக்கு அமைச்சு பதிவு குடுத்திட்டு போடுவான்
 
--
சித்தர் 2011 மட்டும் இலஙகை இராணுவத்தின் ஒரு அங்கமாக ஒரு அமைப்பை தலமை நடாத்தி (command responsibility) எந்த தமிழ் மக்களை பிரதிநிததுவம் செய்ய வாக்கு கோட்டாரோ ஆதே மக்களை கொடுமைக்கு ஆளாக்கியவர். மகிந்தர் எப்படி கொலைகாரனோ அப்படியே இவரும். 
அவரை 3வதாக விருப்பு வாக்கு போட்டு தேர்வு செய்த மக்கள் அதை மறந்து விட்டது ஜனாயகம் எப்படி அநியாயம் செய்யலாம் என்றததுக்கு ஒரு சான்று.
 
2009ல் தாற்காலிக முகாம்களில் அடைத்துவைக்கப்பட்ட எமது உறவுக்காலி கண்காணிப்பதிலும், காட்டிக்கொடுப்பதிலும் இந்த குழு செய்த வேலைகள் பற்றி HRW/UNHCR எழுதியிருந்தது. அது மட்‌டுமல்லாமல் வவுனியாவில் இரகசிய சித்திரவதை கூடத்தை இயக்கி வந்த இவரை தலமையாக கொண்ட குழு இன்று ஜனாயகம் பேசுகின்றாரகள். அதைக்கெட்டு நாங்கள் அவர் விருப்பியததை கொடுக்கவும் வேண்டுமாம்!!. 
 
இவரைப்போலவே இன்னும் சில ஜனாயக பிரியர்கள் செய்யாத கொடுமைகளை செய்துவிட்து மனித உரிமை பற்றி பேசிக்கொண்டு கூடமைப்புக்குள் இருக்கின்றார்கள். டக்கிளசு போலவே இவர்களையும் மக்கள் களையவேண்டும்
 
 
ஆங்கிலம் தெரிந்தவர்கள் வாசியுங்கள்:
 
The Human Rights Watch (HRW) report ‘War on the Displaced - Sri Lankan 
Army and LTTE Abuses against Civilians in the Vanni’ of February 2009 noted that:
 
“Sri Lankan authorities have ignored calls from the international community to ensure the civilian nature of the camps. The perimeters of the sites are secured with coils of barbed wire, sandbags, and machine-gun nests. There is a large military presence inside and around the camps…Several sources reported to Human Rights Watch the presence of plainclothes military intelligence and paramilitaries in the camps. A UN official in Vavuniya told Human Rights Watch that she and colleagues have seen members of paramilitary groups in different camps. In particular, local staff members recognized several members of the People’s Liberation Organization of Tamil Eelam (PLOTE), a pro-government Tamil paramilitary organization long 
implicated in abuses, present at one of the camps. While officially the camps are run by civilian authorities, in reality the military remains in full control, ensuring, as one relief worker put it, that ‘nobody gets in or out.’
 
“Displaced persons confined in the camps enjoy no freedom of movement and are not allowed any contact with the outside world.” 
 
 
The UNHCR Eligibility Guidelines for Assessing the International Protection 
Needs of Asylum-Seekers from Sri Lanka (UNHCR Guidelines 2009), April 2009 noted that:
 
In addition to the military, police and security forces, the LTTE [prior to their defeat], the TMVP and armed factions of other political parties such as the EPDP and the PLOTE as well as criminal groups have all been implicated in the high number of abductions, disappearances, killings, extortions and forced recruitments in Sri Lanka.
 

 

Edited by puthalvan

 வடமாகாண சபைக்கான அமைச்சரவை தொடர்பான விபரங்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெளியிட்டுள்ளது

 

images1%28391%29.jpg

வடமாகாண சபைக்கான அமைச்சரவை தொடர்பான விபரங்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெளியிட்டுள்ளது

நேற்று நடைபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் விசேட கூட்டத்தில் இது தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார்.

நீண்டநாட்களாக இழுபறியிலிருந்த மேற்படி அமைச்சரவைத் தெரிவு, தற்போது இறுதியான தீர்மானத்திற்கு வந்துள்ளது.

இந்த நிலையில் கல்வி அமைச்சராக தம்பிராஜா குருகுலராஜா, சுகாதார அமைச்சராக பத்மநாதன் சத்தியலிங்கம், விவசாய அமைச்சராக பொன்னுத்துரை ஐங்கரநேசன், உள்ளூராட்சி அமைச்சராக பாலசுப்பிரமணியம் டேனிஸ்வரன் ஆகியோர் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர். அத்துடன், அவைத் தலைவராக கந்தையா சிவஞானம், பிரதி அவைத் தலைவராக அன்ரனி ஜெகநாதன் ஆகியோர்; தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

நேற்றையதினம் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஏனைய கட்சித் தலைவர்கள் எவரும் கலந்துகொள்ளாத நிலையில் வடமாகாண சபையின் முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன்,  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா, மதியாபரணன் ஆபிரகாம் சுமந்திரன் ஆகியோர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

 

EPRLFஇல் இருந்து அமைச்சரவை சண்டையால் ஐங்கரநேசன் வெளியேற்றம்! கட்சிக்குள் பிளவு?

 

வடமாகாண அமைச்சரவை பரிந்துரைகள் அறிவிக்கப்பட தயாரான நிலையில் EPFLF  சார்பில் பா.உ சுரேஸ் பிரேமச்சந்திரனின் சகோதரருக்கு தமது கட்சிக்கு வழங்கப்பட இருந்த அமைச்சுப் பதவி வழங்கத் தயாரான நிலையில் சில தகுதியின்மையால் நிராகரிக்கப்பட்ட நிலையில் தமது கட்சி சாந்து யாரும் அமைச்சுப்பதவி வகிக்க மாட்டர் என அறிவிக்கப்பட்ட நிலையில் பொ.ஐங்கரநேசன் அமைச்சுப் பதவியை பெற்றுள்ளமையால் கட்சிக்குள் பிளவு EPRLF சுரேஸ் அணி, வரதர் அணி, ஐங்கரனேசன் அணியா?? இது இவ்வாறிருக்க

வட மாகாண சபை தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பாக அமைச்சுப் பொறுப்புகளை வழங்குவதில் தொடர்ந்தும் இழுபறி நிலை காணப்பட்ட போதிலும், தற்போது முடிவுக்கு வந்துள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.