Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பழையதும் புதியதும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் எதிர்கால யதார்த்தங்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பழையதும் புதியதும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் எதிர்கால யதார்த்தங்கள்
12 அக்டோபர் 2013

சாந்தி சச்சிதானந்தம்

1970ம் ஆண்டு பொதுத்தேர்தல்கள் காலம். எனது தந்தையார் லங்காசமசமாஜ கட்சியில் யாழ் மாவட்டத்தில் நல்லூர் தொகுதியில் வேட்பாளராக நின்றிருந்தார். நான் அப்போது மிக இளம் வயதாக இருந்தாலும்கூட என்னையும் தேர்தல் பிரசாரங்களில் ஊர் ஊராக நடந்து துண்டுப் பிரசுரம் வழங்குவது போன்ற எடுபிடி வேலைகளில் அவர் ஈடுபடுத்தினார். அரசியல் பற்றிய கீழிருந்து மேலாகப் பார்க்கின்ற (உண்மையாகவே) அனுபவத்தை இது தந்தது எனலாம். அப்போதெல்லாம் வீடு வீடாகச் சென்று இடதுசாரி அரசியலைப் பற்றி எமது குழுவினர் விளக்க நான் பார்த்துக்கொண்டு நிற்பேன். 'சிங்களக் கட்சிகள் என்ட வாசல்படி மிதிக்கக்கூடாது' என்று வீராவேசமாக எம்மைத் துரத்திய பெண்கள், வேண்டாவெறுப்பாக எம்மை எதிர்கொண்ட ஆண்கள் எனப் பலதரப்பட்டவர்களைச் சந்தித்தும் சளைக்காமல் அவர்கள் ஒவ்வொருவருக்கும் சிங்கள உழைக்கும் வர்க்கத்துடன் இணைய வேண்டியதன் அவசியத்தை எம்மவர்கள் புரியவைத்தனர். இதற்காக குட்டிக் குட்டிக் கூட்டங்களும் போட்டனர்.

இப்படி எங்கள் டீம் இரவு பகலாக உழைத்துக்கொண்டிருக்க, தமிழரசு தமிழ்க்காங்கிரஸ் கட்சிக்காரர்கள் என்ன செய்வார்கள் தெரியுமா? மாலை வேளைகளில் ஊருக்குள் நுழைந்து விதானையாரையும் ஜேபியையும் (சமாதான நீதவான்) வளைப்பார்கள். நீங்கள் இந்தக் கிராமத்து வாக்குகளைத் திரட்டித் தாருங்கள். தெரியுந்தானே... நாங்கள் பதவிக்கு வந்ததற்குப் பிறகு உங்களையும் கவனிப்பம்.. என்ற வகையில் டீல்கள் போடப்படும். அதுவே போதும். அப்படித்தான் அவர்கள் வீடுவீடாகத்தான் பிரசாரம் செய்தாலும், நிறையப் பேசத் தேவையில்லை. ஒரு தமிழனாக தமிழுக்கு வாக்களியுங்கள் என்று சொல்லிவிட்டு அப்படியே போக வேண்டியதுதான். ஒரு கட்;சியாக இயங்கி மக்கள் மத்தியில் அரசியல் பற்றிய அறிவினைப் பரப்பி அணிதிரட்டும் வேலையைத் தமிழ்க் கட்சிகள் 1950களின் ஆரம்பத்தில் செய்திருக்கக் கூடும், ஆனால் நிச்சயமாக 1960களின் பின்பு அந்தக் குணாம்சத்தையே அவை இழந்து விட்டன என்பது கண்கூடு. குறிப்பாக டட்லி செல்வா உடன்படிக்கையில் ஆரம்பித்து சகலமுமே அவற்றிற்கு பேரம் பேசும் விடயமாகப் போய் விட்டது. இன்றுவரை அவை மாறவில்லை, மாற வேண்டிய அவசியமே ஏற்படவில்லை. ஏனெனில் காலங்காலமாக சிங்கள ஆளும் வர்க்கத்தினைக் காட்டிக் காட்டியே அரசியல் பிழைப்பு நடத்தக் கூடியதாக இருந்தது. இன்றும்கூட, தேர்தலுக்குத் தேர்தல் உணர்ச்சி ததும்பும் உரைகள் ஆற்றப்படும் சில பொதுக்கூட்டங்களை நடத்தி, போஸ்டர் ஒட்டி, வேட்பாளர் பற்றி பயோ அடங்கிய துண்டுப்பிரசுரம் வினியோகிப்பதுடன் அவற்றின் அரசியல் நடவடிக்கைகள் முடிவடைகின்றன. மாகாணசபைத் தேர்தல்களிலும், யாரை வேட்பாளர்களாகப் போடவேண்டும், அவர்களில் யார் அமைச்சர்களாக வரவேண்டும் என்பதெல்லாமும் ஒவ்வொரு பேரமாகப் போய்விட்டது.

இப்படி வரலாற்று ரீதியாக வளர்ந்த இந்த அரசியல் நடைமுறை அக்கட்சிகளின் கட்டமைப்பிலும் பிரதிபலிக்க வேண்டுமல்லவா? எமது உடலின் கை கால்கள் போன்ற அவயவங்களை நாம் உபயோகிக்காது விட்டால் அவை அப்படியே செயலிழப்பது போல, இக்கட்சிகளின் செயற்பாட்டு உறுப்புக்களும் காலப்போக்கில் செயலிழந்து விட்டன. ஒரு உறுப்பினர் படை, அவர்கள் உருவாக்கும் கிராம மட்ட கட்சிக் கழகங்கள், இவை பிரதிநிதித்துவப்படுத்தும் மாவட்ட தேசிய மட்ட கட்டமைப்புக்கள், பெண்கள் அணியினர், இளைஞர் அணியினர், தொழிற்சங்கங்கள், கல்விமான்கள் குழுக்கள் என பல்வகை நலன்களைப் பிரநிதித்துவப்படுத்தும் பாகங்கள் இக்கட்சிகளுக்குக் கிடையாது. கட்சிகளுக்குள் எடுக்கப்படும் தீர்மானங்கள் வெளிப்படைத்தன்மையாகவும் சம்பந்தப்பட்ட அனைவரும் பங்குகொள்ளும் முறையிலும் எடுக்கப்படுவதற்கான பொறிமுறைகளும் கிடையாது. இந்த நடைமுறையெல்லாம் செத்தொழிந்து ஆண்டுகள் பல கடந்து விட்டன. ஒரு சராசரியான மூன்றாம் உலக நாட்டில் சாதாரண அரசியல் பண்ணிப் பிழைக்கும் கட்சிகளில் ஒரு கட்சியாக இவை பிழைக்கக்கூடுமென்றால் பிரச்சினையில்லை. ஆனால், அவற்றின் துரதிர்ஷ்டம், பாரிய சவால்களுக்கு முகம் கொடுத்து ஒரு சிறுபான்மைத் தேசியத்தின் விடுதலைக்காகப் போராட வேண்டிய கடமை அவற்றின் மீது வலுக்காட்டாயமாகச் சுமத்தப்பட்டிருக்கின்றது. மக்களை அணிதிரட்ட வேண்டிய இப்போராட்டத்திற்கு அவசியமாக நாம் முன்னே கூறிய கட்சிக் கட்டமைப்புக்கள் அனைத்தும் தேவையாகும். குறைந்த பட்சம், மக்கள் மத்தியில் அரசியல் விழிப்புணர்வு ஏற்படுத்த உதவும் வாய்ப்புக்களாகத் தன்னும் தேர்தல்களை அவர்கள் நோக்க வேண்டும்.

கடந்த வட மாகாணசபைத் தேர்தலில் எவ்வளவு செய்திருக்கலாம்? தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது வேட்பாளர்களை ஒன்றுகூட்டி எந்த விடயங்கள் குறித்த பிரசாரங்கள் மேற்கொள்ளப்படவேண்டுமென்கின்ற தீர்மானித்திருக்க வேண்டும். அதனை மக்கள் மத்தியில் கொண்டு செல்வதற்கான பயிற்சிகளை நடத்தியிருக்கவேண்டும். வேட்பாளர்கள் உபயோகிப்பதற்கான விடயதானங்களை வழங்கியிருக்க வேண்டும். அவர்களைக்கொண்டு மாகாண சபையின் அதிகாரங்கள் பற்றி மக்களுக்கு விளக்கியிருக்கலாம். தற்போது சர்வதேச மயப்படுத்தப்பட்டிருக்கின்ற எமது பிரச்சினை ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் எவ்வளவு தூரம் கொண்டு செல்லப்படலாம் என்பது பற்றிய விளக்கங்களை அளித்திருக்கலாம். ஒவ்வொரு முறையும் அரசும் அரசின் ஆதரவுடனான சக்திகளும் தமிழ் மக்களின் காணிகளைப் பறிக்கும்போது எமது காணிச் சட்டங்கள் எவ்வாறு மீறப்படுகின்றன என்றும் அதற்கு மாற்றாக மக்கள் சட்ட ரீதியாகவும் போராட்ட ரீதியாகவும் என்ன செய்யலாம் என்றுகூட விளக்கியிருக்கலாம். ஆனால் நடந்தது என்ன? மாகாணசபையைக் கைப்பற்றி இராஜதந்திரப் போர் மூலம் (?) அபிவிருத்தி கொண்டுவரப்போவதாயும், ஜெனீவாவில் தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்கப்போகின்றது என்றும் அப்பட்டமாகப்பொய்கள் பேசப்பட்டன. இதோ சர்வதேசத்தின் தலையீட்டினால் தீர்வு கிடைக்கப் போகின்றது என்று உருவாக்கப்பட்ட மாயையினால் மக்களைத் தாலாட்டித் தூங்க வைத்த கைங்கரியந்தான் நடந்தது. ஆனால் இதுவல்ல ஆச்சரியம். இப்படி அதிகாரத்துக்கு வந்த கட்சிகள் தமக்குள் உறுப்பினர் நியமனத்துக்கும் அமைச்சர் பதவிகளுக்கும் அடிபடுகின்றார்களேயென்ற விமர்சனங்கள் நாலாபுறமும் இருந்து எழுவதுதான் ஆச்சரியமாக இருக்கின்றது. இப்படி தேர்தல் விளையாட்டுக்குள் நுழையும் கட்சிகள் பின் எப்படி நடந்து கொள்ளுமாம்?

தமிழ்க் கட்சிகளின் உள்ளார்ந்த இயல்புகள், அவை செய்ய வேண்டிய பணிகள் இவையிரண்டிற்குமிடையேயான பெரிய இடைவெளிதான் அமைச்சர் நியமன முறை பற்றியும் சத்தியப்பிரமாணம் எடுத்த முறை பற்றியும் ஒருங்கிணைப்புச் செயலாளர்களை நியமித்த விடயம் பற்றியும் இன்று நாலாபுறமும் எழுந்துள்ள கண்டனங்களின் காரணமாகும். காலத்துக்குக் காலம் நடத்தப்படும் தேர்தல்களில் தமிழ்க்கட்சிகள் வெற்றி ஈட்டுவது நிச்சயம் என்பது வரையில் எந்தவிதக் கண்டனங்களும் பயனெதுவுமின்றி விழலுக்கிறைத்த நீராகும். அதிக பட்சமாக கூட்டமைப்புத் தலைமைகள் சில அறிக்கைகளை வெளியிடுவது தவிர வேறெந்தக் காத்திரமான மாற்றமும் நடக்காது. இராஜதந்திரப் போரின் பெயரினால் ஆங்கிலப் புலமை இருக்கின்ற ஒரு சின்னக்குழுவின் கைகளில் கூட்டமைப்பின் அதிகாரம் குவிந்து விடவும், கொழும்பை மையமாக வைத்த அரசியல் நடத்தப்படவும்தான் இந்நிலைமைகள் இட்டுச் செல்லுகின்றன. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் இப்போக்கிற்கு ஒரு சவாலாக உருவாகும் வாய்ப்புக்கள் கிடையாது. அது தீவிர தேசியவாதம் பேசும் ஒரு அறிஞர் குழாமாகும். அது பேசும் தீவிர தேசியவாதத்தினை இம்முறை தேர்தல்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனதாக வரித்தக்கொண்டு விட்டதே. தென்னிலங்கையில் ஜேவிபி பேசிய அதே தேசியவாதத்தினை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கம் தனதாக வரித்துக்கொண்ட பின்னர், ஜேவிபி மக்களுக்குத் தேவையில்லாமல் போனது போலவே த.தே.ம.முயும் தமிழ் மக்களுக்குத் தேவையில்லாமல் போகும் நாளும் வரும். சுயநிர்ணய உரிமை, பகிர்ந்த தேசியம் என்பன தேர்தல்களில் உபயோகிக்கும் கொள்கைப்பிரகடனங்களாவும், மாகாணசபை உள்ளுராட்சி மன்றங்கள் போன்ற ஆட்சியலகுகள் தமது போக்கில் இயங்கிக் கொண்டிருப்பவையாகவும் யதார்த்தங்கள் நிலவும்.

தமிழ் மக்கள் சிந்தித்து ஒரு மாற்று சக்தியை, ஒரு தகுந்த மாற்றுக் கட்சியினை, ஆதரிக்காத வரையில் இந்நிலைமை மாறாது. குறிப்பாக புலம் பெயர் தமிழரும் கண்ணை மூடிக்கொண்டு கூட்டமைப்பே ஒரே கதி என்று இருக்காது மாற்று வழிகளில் இலங்கையின் அரசியலை நகர்த்த ஆதரிக்க வேண்டும். தமிழர் தமது ஒற்றுமையைப் பல தடவைகள் காட்டியாயிற்று. இனியெங்கள் செயலூக்கத்தைக் காட்டுவோமே.

அடி என்னடி உலகம், இதில் எத்தனை கலகம்

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/97574/language/ta-IN/article.aspx

தமிழ் தேசியம் இவ்வளவு சிந்தித்து செயற்படமாட்டாது .மக்களுக்கான அரசியலை விட அவர்களை மேய்ப்பதில் தான் அவர்கள் கவனம் ,அதற்காக அந்த அந்த நேரத்திரற்கேற்ப முடிவுகளை எடுத்து சுயநலஅரசியல் செய்து பம்மாத்து விட்டுக்கொண்டே இருப்பார்கள் .

இதனால் தான் தொடர்ந்தும் சிங்களம் எம்மை இலகுவாக ஆட்டிப்படைக்குது .

இப்படி எங்கள் டீம் இரவு பகலாக உழைத்துக்கொண்டிருக்க, தமிழரசு தமிழ்க்காங்கிரஸ் கட்சிக்காரர்கள் என்ன செய்வார்கள் தெரியுமா? மாலை வேளைகளில் ஊருக்குள் நுழைந்து விதானையாரையும் ஜேபியையும் (சமாதான நீதவான்) வளைப்பார்கள். நீங்கள் இந்தக் கிராமத்து வாக்குகளைத் திரட்டித் தாருங்கள். தெரியுந்தானே... நாங்கள் பதவிக்கு வந்ததற்குப் பிறகு உங்களையும் கவனிப்பம்..

 

உண்மை நேர்மை இடது சாரிகளை விட்டு போனபைன்னர் அவர்கள் சிறிமாவை ஏமாற்றி இலனகையின் சோபரி அரசியல் அமைப்பைக் கெடுத்தார்கள். தன் தலையில் யானை மண் அள்ளிப்போடுவது போல இடத்து சாரிகள் இலனகை இராணி சிறிமாவுக்காக ஜனநாயக பாராளுமன்ற முறையாக இருந்த அரசியல் அமைப்பை மாற்றி ஏகாதிபத்திய ஜனாதிபதி முறையை கொண்டுவந்தார்கள். இதை தான் வடக்கில் பெண்கள் இவர்களை துரத்த துரத்த பொல்லாத நாராயனணன்களாக தமிழ் மக்களுடன் ஒட்டி நின்று நாட்டை கெடுத்த சரித்திரம். 

 

இக்கட்சிகளின் செயற்பாட்டு உறுப்புக்களும் காலப்போக்கில் செயலிழந்து விட்டன. ஒரு உறுப்பினர் படை, அவர்கள் உருவாக்கும் கிராம மட்ட கட்சிக் கழகங்கள், இவை பிரதிநிதித்துவப்படுத்தும் மாவட்ட தேசிய மட்ட கட்டமைப்புக்கள், பெண்கள் அணியினர், இளைஞர் அணியினர், தொழிற்சங்கங்கள், கல்விமான்கள் குழுக்கள் என பல்வகை நலன்களைப் பிரநிதித்துவப்படுத்தும் பாகங்கள் இக்கட்சிகளுக்குக் கிடையாது. 

 

இடதுசாரி SLFP யின் பதியுதின் தரப்படுத்தலை கொண்டுவந்த பின்னர், N.M. Perera  வெள்ளிக்கிழமைகளில் இந்துக்கள் சோறு சமைத்து உண்ணக்கூடது என்று சட்டம் கொண்டுவந்த பின்னர், டட்லியின் ஒபந்தத்தை கிளிதேரிய இடது சாரிகளும், SLFP காரண்மாக இருந்து முடிய தமிழருக்குள் பிரிவு இல்லாமல் சுதந்திரம் வேண்டும் என்ற கருத்து முன் எழ் ஆரம்பித்துவிட்டது. எனவே குழ்ந்தையோ, இளைஞனோ, கிழவனோ, பெண்ணொ, ஆணோ எல்லோருக்கும் தேவை ஒன்றேயாக மாறிவிட்டது. அது உரிமை. இதானால் கட்சிக்கு பல அமைப்புகள் தேவை இல்லை.  மேற்கு நாட்டில் பெண் ஒருத்தி பருவகாலங்களுக்கு அமைய வசந்தம், கோடை, இலையுதிர், கார் என்று தன் உடைகளை மாற்றிக்கொள்வாள். இது வாழ வசதி உள்ளவள் செய்வது. ஆனால் முல்லைதீவில் உடுத சீலையுடன் தான் வெளியே போவாள். தூங்குவாள், குளிபாள். ...... இது வாழ்வு புலம் கெடுக்கப்பட்ட தமிழரின் வசதி.

 

இராஜதந்திரப் போரின் பெயரினால் ஆங்கிலப் புலமை இருக்கின்ற ஒரு சின்னக்குழுவின் கைகளில் கூட்டமைப்பின் அதிகாரம் குவிந்து விடவும், கொழும்பை மையமாக வைத்த அரசியல் நடத்தப்படவும்தான் இந்நிலைமைகள் இட்டுச் செல்லுகின்றன.

............................

.............................

தென்னிலங்கையில் ஜேவிபி பேசிய அதே தேசியவாதத்தினை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கம் தனதாக வரித்துக்கொண்ட பின்னர், ஜேவிபி மக்களுக்குத் தேவையில்லாமல் போனது போலவே த.தே.ம.முயும் தமிழ் மக்களுக்குத் தேவையில்லாமல் போகும் நாளும் வரும். சுயநிர்ணய உரிமை,

 

மொஸ்கோவில் மழை பெய்தால் கொழும்பில் குடை பிடிக்கும் இடதுசாரிகள்,  தமிழ் மக்களின் தேவைகளை அறிய மறந்த்தால் வடக்கிலிருந்து வேறோடு பிடிங்கி எறிப்பட்டார்கள். காராள சிங்கம், வலகம்பாகு, சண்முகநாதன்,  பொன்னம்பலம், துரையப்பா எல்லோரும் தம்மைத்தாம் தோழர்களாக அழைத்துக்கொண்டு, SLFPயுடன் மட்டும் உண்மையான தோழமை வைத்துக்கொண்டு தமிழ் மக்களின் முக்கிய தேவைகளை அறியாமல் அவர்களுக்கு துரோகிகளாக செயல்பட்டுவிட்டர்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
இடதுசாரியாக இருந்து தற்போது அமைச்சராக இருக்கும் விக்கி அவர்களின் சம்பந்தியார் பதவிக்காக இனவாதிகளுடன் சேர்ந்து தனது இடதுசாரி கொள்கையை பதவிக்காக விட்டார்.இப்படி இலங்கையில் படித்த மேதை எனப்படும் கொல்வின் ஆர் டி சில்வா கூட  சிறிமாவின் அரசில் அமைச்சராகி கொள்கையை கைவிட்டார்.
 
1977 ல் கூட்டமைப்பு தமிழீழம் தேவை என்ற கோசத்துடன்  தமிழ் மக்களின் உணர்வுகளை தூண்டி தமது அரசியல் லாபங்களை தேடிக்கொண்டனர். தேர்த்தலில் வென்ற பின் தமது பிள்ளைகளை வெளிநாட்டுக்கு அனுப்பி ( ஏ லெவலில் எல்லா பாடங்களிலும் குண்டடித்தவர் இன்று டாக்டர் எனும் போது) கல்வி கற்பித்தனர்.தமக்கு ஜால்ரா போட்டவர்களுக்கு வேலை வாய்ப்பை கொடுத்தனர்.
 
இன்றும் சம்பந்தர் உணர்வு அரசியலை விடவில்லை. மிக இலகுவான தந்திரம் மூலம் மக்களை உணர்வேற்றி தேர்த்தலில் வெற்றி பெற்று 77 க்கே சென்று விட்டார்கள்.
 
சம்பந்தரை பாருங்கள்.புலிகள் தன்னை சுடும் பட்டியலில் புலிகள் போட்டிருந்தார்கள் ஒரு அறிக்கையை யாரின் விருப்புக்காக விட்டார் என்பது போல் தெரிகிறது. பின்னர் இந்தியாவின் கூத்துக்கு ஆடி விக்கினேஸ்வரனை மாகாண சபை தலைவராக தெரிவு செய்தார். பின்னர் கட்சியில் உள்ள இதர கட்சிகளை மதிக்காமல் யாருடையதோ  அழுத்தத்தால் மகிந்தவின் முன் பதவி ஏற்றார்கள்.( சரி அல்லது பிழை என்பதல்ல வாதம். கட்சி உறுப்பினர்களுடன் சேர்ந்து ஒரு முடிவை எடுக்கவில்லை)

 

 

சம்பந்தரை பாருங்கள்.புலிகள் தன்னை சுடும் பட்டியலில் புலிகள் போட்டிருந்தார்கள் ஒரு அறிக்கையை யாரின் விருப்புக்காக விட்டார் என்பது போல் தெரிகிறது.
 
பின்னர் இந்தியாவின் கூத்துக்கு ஆடி விக்கினேஸ்வரனை மாகாண சபை தலைவராக தெரிவு செய்தார்.
 
பின்னர் கட்சியில் உள்ள இதர கட்சிகளை மதிக்காமல் யாருடையதோ  அழுத்தத்தால் மகிந்தவின் முன் பதவி ஏற்றார்கள்.( சரி அல்லது பிழை என்பதல்ல வாதம். கட்சி உறுப்பினர்களுடன் சேர்ந்து ஒரு முடிவை எடுக்கவில்லை)
 
இவ்வளவும் செய்தும்  
 
இன்றும் சம்பந்தர் உணர்வு அரசியலை விடவில்லை. மிக இலகுவான தந்திரம் மூலம் மக்களை உணர்வேற்றி தேர்த்தலில் வெற்றி பெற்று 77 க்கே சென்று விட்டார்கள்.

 

 

இந்தியா தூண்டிவிட அதன் கோரிக்கைக்களுக்காக மாவை, சிறிதரனின்  போன்ற மென்போக்கு அரசியல்வாதிகளின் சொற்களை சம்ப்ந்தர் மதிக்காமல் உணர்சி அரசியல் செய்வது சிந்தனைக்குரிய விவாதம்.  <_<

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.