Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தன்னிச்சையான முடிவுகள் தமிழ்த் தேசியத்திற்கு செய்யும் துரோகமாகும் - இரா.துரைரெட்ணம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தன்னிச்சையான முடிவுகள் தமிழ்த் தேசியத்திற்கு செய்யும் துரோகமாகும் - இரா.துரைரெட்ணம்

21 அக்டோபர் 2013

thurairatnam_CI.jpg

தமிழ்த் தேசியத்திற்காக செய்த தியாகங்களை வாக்குகளாகப் பெற்ற நாம் இதயசுத்தியுடனே தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டும். தன்னிச்சையான முடிவுகள் தமிழ்த் தேசியத்திற்கு செய்யும் துரோகமாகும் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இரா.துரைரெட்ணம் தெரிவித்துள்ளார். தமிழ் தேசியக் கூட்டமைப்பில் உள்ள கட்சிகளின் ஒற்றுமையின் அவசியம் தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தமிழ் மக்களின் நலனுக்காகவும் உரிமைக்காகவும் நல்லாட்சி முறைமைக்கான தலைமைத்துவத்தை உருவாக்க முன்னின்று உழைப்பதை விடுத்து ஒருகட்சி சார்ந்த பக்கச்சார்பான தனி நபர் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவது உடன் நிறுத்தப்படல் வேண்டும். இவ்வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அண்மைக்கால நடவடிக்கைகள் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் உள்ள சகல கட்சிகளும் பேசி தெளிவான முடிவுகளை எடுக்க இதயசுத்தியுடன் முன்வரவேண்டும்.

கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகள் அனைத்தும் தமிழ் தேசியத்தின் விடுதலை என்ற கோட்பாட்டின் அடிப்படையிலேயே ஒன்றிணைந்துள்ளன.  ஆயினும் எம்மிடையே ஒரு கட்;சிச் சர்வாதிகாரம் மேலோங்கி நிற்பதும், ஜனநாயக உரிமையும், பன்முகத்தன்மையும் பேணப்படாமையும் காரணமாக நீறுபூத்த நெருப்பாக இருந்த நீண்டகால முரண்பாடுகளும் ஜனநாயக மறுதலிப்புகளும் இக்கட்டமைப்பை வெடிப்பு நிலைக்கு இட்டுச் செல்கின்றதா என்ற ஐயம் தோன்றியுள்ளது.

வட மாகாண தேர்தல் முலம் வடக்கு மக்கள் தங்களுக்கு நிகழ்ந்த அநீதிகளுக்கும் அவமானங்களுக்கும், தங்கள் வாக்குப் பலத்தின் மூலம் தகுந்த பாடம் புகட்டியுள்ளதோடு தங்கள் உரிமைகள் அபிலாசைகள் தொடர்பாக அரசிற்கும், சர்வதேசத்திற்கும் மீண்டும் ஒரு முறை சனநாயக ரீதியாகத் தெளிவுபடுத்தி உள்ளனர். இவற்றிக்கெல்லாம் அப்பால் தமிழர்களது நீண்டகால ஆயுதப் போராட்டத்தினையும் அதற்கான காரணங்களையும் நியாயப்படுத்தியும் உள்ளனர்.

இவற்றின் மூலம் தமிழ்த் தேசியம் தமது போராட்ட தியாகத்தின் பெயரால் போராட்டத்திற்கு வெளியில் இருந்த பல திறமைசாலிகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் அரசியலுக்கு அறிமுகப்படுத்தியும் உள்ளது.

தமிழரின் அரசியல் இருப்புக்காகப் போராடிய பல கட்சிகளைச் சேர்ந்த நாம் ஒன்று சேர்ந்து சர்வதேசத்திற்கும் சிறிலங்கா அரசிற்கும் தமிழ் தேசியத்தின் அங்கலாய்பை இத்தேர்தல் முலம் இன்று வெளிகாட்டியிருந்த போதும் எம்மிடையே இருந்த பலம், பலவீனம் காரணமாக தனிநபர்களின் ஆதிக்கம் அதிகரித்தள்ளது.

பல கட்சிகளின் கூட்டுமுயற்சியில் ஸ்தாபிக்கப்பட்ட கூட்டமைப்பிற்குள் ஒருகட்சியின் மேலாதிக்கப் போக்கும் ஏதேச்சை அதிகாரப் போக்கும் முரண்பாட்டை தோற்றுவித்துள்ளன. இந்நிலையில் உரிமைகள் தொடர்பாகவும் சலுகைகள் தொர்பாகவும் பேசுவோர் பதவிகள் தொடர்பாக தமிழர் போராட்டத்தில் தங்கள் நிலை தொடர்பாக ஒருகணம் தம்மை சுய மதிப்பீடு செய்து கொள்ளவேண்டும்.

அதேவேளை தமிழ் மக்களின் உரிகைளைப் பாதுகாப்பதற்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்ததன் மூலம் சிங்கள மக்களுக்கும் சர்வ தேசத்திற்கும் ஒரு தெளிவான செய்தியை முன்னுதாரணமாக்கி உள்ளனர், நாம் எவருக்கும் எதிரானவர்கள் அல்லர் எமது உரிமைக்காகவே போராடுகின்றோம்.

இதேவேளை இதே இலங்கை அரசுதான் தமிழ் மக்களின் படுகொலைகளுக்கு காரணமாக இருந்ததோடு காலத்திற்கு காலம் தமிழர் தீர்வு திட்டங்களை நிராகரித்ததால் தமிழ் தலைமைகள் நம்பிக்கையீனம் கொண்டு சர்வதேசத்தின் ஆதரவை நாடவேண்டிய தேவை ஏற்பட்டது ஆனால் வடபுலத் தேர்தல் மூலம் இந்நிலை மாற்றம் உருவாவதற்கு அரசின் மனநிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதா?

ஆயினும் தமிழரின் ஐக்கியத்தையும் தமிழ்த் தேசியத்தின் உணர்வலைகளையும் தமிழர் போராட்டத்தின் இழப்புக்களையும் அவலங்களையும் அதை விட மேலான தியாகங்களையும் அர்தமற்றதாக்கி விடக்கூடாது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் தற்சமயம் தலைமைகள் கூடி பேசாமல் எழுந்துள்ள உட்கட்சி தற்காலிக முரண்பாடுகளையும் சிக்கல்களையும் தனிநபர் மேற்கொள்ளும் எழுந்தமானமான முடிவுகளையும் முடிவுக்கு கொண்டுவரும் பொருட்டு உடனடியாகக் கூடிப்பேசி தமிழ் மக்களின் நலனுக்காகவும் உரிமைக்காகவும் நல்லாட்சி முறைமைக்கான தலைமைத்துவம் ஒன்றை உருவாக்க முன்னின்று உழைப்போம்.

எமது மக்கள் தமிழ்த் தேசியத்திற்காகச் செய்த தியாகங்களை வாக்குகளாகப் பெற்ற நாம் இதய சுத்;தியுடனே தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டும். இதனைக் கொச்சைப்படுத்தும் தன்னிச்சையான முடிவுகள் தமிழ் தேசியத்திற்கு செய்யும் துரோகமாகும்.

எனவே தமிழ் தேசியக் கூட்டமைபில் அங்கம் வகிக்கும் கட்சித் தலைமைகள் ஒன்று கூடி கூட்டான ஐக்கிய அறிக்கையை வெளியிட முன்வர வேண்டும். இதற்கு மாறாக எடுக்கும் முடிவுகள் கிழக்கு மக்களின் அபிலாசைகளையும் தியாகங்களையும் குழி தோண்டிப் புதைப்பதாக அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/97907/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறவுகள்

முன்பு தமிழரசுக்கட்ச்சி அதீத ஜனநாயக பாதையை பின்பறியதால் தமிழ்ர் விடுதலைக் கூட்டணியை அரசு ஆதரவாளர்களிடம் இழந்தது. வரலாற்றின் படிப்பினைகள் தமிழர் கூட்டமைப்புக்கு ஜனநாயக மத்தியத்து தலைமையை தமிழரசுக்கட்ச்சியே வளங்கவேண்டும் என்பதையே சுட்டி நிற்க்கின்றன.

முன்பு தமிழரசுக்கட்ச்சி அதீத ஜனநாயக பாதையை பின்பறியதால் தமிழ்ர் விடுதலைக் கூட்டணியை அரசு ஆதரவாளர்களிடம் இழந்தது. வரலாற்றின் படிப்பினைகள் தமிழர் கூட்டமைப்புக்கு ஜனநாயக மத்தியத்து தலைமையை தமிழரசுக்கட்ச்சியே வளங்கவேண்டும் என்பதையே சுட்டி நிற்க்கின்றன.

இது நடந்தவற்றையும் நடப்பவற்றையும் விளங்கிக்கொள்ள முடியாமையால் 

சொல்லப்பட்டதாக அல்லது இந்த இடைக்காலத்தில் ஆரோகியமான பல விவாதங்கள் யாழில் நடப்பதை கண்டு குழப்பத்தை உருக்வாக்கி கூட்டமைப்பை (தமிழரசுகட்சி) - (PLOT, EPRLF,TLO, TULF) என்று பிரிவினைகளை நசூக்கா எற்படுத்த செய்யும் முயற்சியாக கொள்ளப்பட வேண்டும். 

 

அதீத ஜனநாயகம் என்றய புனை சொல் பொருள் இல்லாத பிரச்சாரம். அப்படி ஒரு சொற்தொடர் இருப்பதை நியாப்படுத்த முடியாது.

 

இந்த விளக்கமெல்லாவற்றையும் கூட்டிகழித்தால் நஜீப் மயீத் எப்படி வந்தார் என்பதை விளங்கப்படுத்துவது கஸ்டம். அது அதீத ஜனநாயகமா அல்லது அடி பிடி ஜனநாயகமா என்றதையும் சொல்ல வில்லை. எனவே அதீத ஜனநாயகமா அடிதடி ஜநாயகமா எடுபடுதிறது என்றதை ஆராயாத வசனம் அது.  தமிழரசுக்கட்சியின் சம்பந்தன் 2012ல் ஜெனிவா  போயிருந்தால் அவரின் அந்த அதீத ஜனநாயகம் எவ்வளவு தடையாக இருந்த்திருக்கலாம் என்பதும் விளங்கப்படுத்தப்படவில்லை. சம்பந்தனை கண்டால் புலி என்பார்கள் என்றவர்கள், அவர் அதீதா ஜனநாயகவாதி என்பதால் இப்போ தலைமை தாங்கசொல்கிறார்கள் என்று ஒருவருட்டத்திற்குள் பல்டி அடிப்பது அரசியலில் உண்மையான நடத்தையாக பார்க்க முடியாது.

 

இதில் தீர்மாநங்களில் முக்கிய பங்கு எடுக்கும் சுமந்திரன் எவ்வளவு அதீத ஜனநாயகவாதி என்பதும், அவர் எப்படி கட்சிக்குள் வந்தார் என்பதும் விக்கினேஸ்வரன் தமிழரசுக்கட்சியா என்பதும் விளங்கப்படுத்தப்படவில்லை.

 

தமிழரசுக்கட்சியின் அதீத ஜனநாயக பண்பு மற்றவர்களால் விளங்கிக்கொள்ள்ப்படுவத்தால் அதை தலைமைக்கு ஏற்றிவைக்கிறார்கள் என்பவர்கள், முதல் 20 பிரதிநிதிகளும் பங்கேற்ற போது பேசிய தமிழரசுகட்சியின் சிறிதரனின் பேச்சை கேடகவில்லை என்றது சந்தேகத்திற்கிடமில்லாதது. இதனால்தான் குறைந்த அரசியல் அறிவுடனான விளக்கங்கள் வைக்க வேண்டி வருகிறது.

 

அதீத ஜனநாயவாதியா தமிழரசுகட்சியில் வளரும் நட்சத்திரங்களான சிறிதரன், அனந்தி  என்பது குறிப்பிடவில்லை. இந்த அதீத ஜனநாயகத்தில் முதலமைச்சர் பதவிப் பிரமாண நேரம் இந்தியா போன தமிழரசுக்கட்சியின் இரண்டாம் தலைவரான மவையின் நிலையை விளக்கவில்லை.

 

உள்ளே உள்ள மற்றக்கட்சிகள் சம்பந்தர் மட்டும் தனியாக சர்வாதிகாரியாக தொழில் படுகிறார் என்று குற்றம் சாட்டும் போது அந்த விவாதங்களை முழுவதாக ஒதுக்கி வைத்துவிட்டு தமிழரசுக்கட்சியின் போன பிறவில் இருந்த அதீத ஜனநாயகத்துக்காக அதன் இந்தப்பிறவில்  எல்லோரும் கண்மூடித்தனமாக அதை தலைமையை ஏற்க அழைக்கிறார்கள் என்பது மக்களும் அரசியல் வாதிகளும் தேர்தலுக்கு தேர்தல் பேச்சும் பேச்சுகளைகளை மட்டும்தான் நினைவில் வைத்து வாக்கு கேட்பதும் போடுவதும் செய்கிறார்கள் என்ற உண்மையை மறுதலிக்கிறது.

 

நடப்பது

இந்தியா கொண்டுவந்த தேர்தல். அதன் பிரதான எதிரி 1948 தொடக்கம் தாயக அரசியலில் தலைமை பீடத்தை கைப்பற்றி வைத்திருந்து உரிமை கேட்கும் தமிழர்சுக்கட்சியே. இத்னால் இந்தியா தமிழரசுக் கட்சியின் போக்கை கட்டுப்படுத்துகிறது.  ய்தையேதான் அமிர்தலிங்கம் காலத்திலும் செய்தது இந்தியா. இந்தியா ஒன்றை தெளிவாக விள்ங்கிக்கொண்டுவிட்டது. காலத்துக்கு காலம் பல போதனைவாதிகள் தோன்றுவார்கள். இவர்களை ரோவின் பட்டியலில் போடுவதை விட தலைமைகளாக்கினால் வரதரின் தோல்வியைத்தான் சந்திக்கலாம் என்பதுவே. எனவே இந்த ஓடுகளிகளை இப்போது கழித்துவிட்டு அது தமிழரசுக்கட்சி மீதே கண் வைக்கிறது.

 

சம்பந்தர் இந்தியாவை மட்டும் அல்ல சர்வதேசத்தையும் அநுசரிக்க வேண்டும் என்று நினைக்கிறார். தெல்லிக்கு தெல்லி நின்று போலிச் சாமாதனத்தை பேசிக்கொண்டு, அதே நேரம் கூட்டமைப்பை உடைக்கத்தக்கதாக, சில தெரியப்பட்ட பிரதிநிதிகளை கூட்டமைப்பில் முன்னேற்ற முயலும் பிரிவினை வாதிகளால் ஒரு அடி முன்னேற்ற வக்கில்லை என்றதை அவர் புரிந்திருக்கிறார். இதனால் அவர்களின் சுய நல பிரசாரங்களுக்கு பதில் அளித்து விதண்டவாதங்களுக்குள் தன்னை மாட்டுவத்தில்லை. இதனால் அவர் கேள்விகளுக்கு பதில் அளிக்க விரும்பாத சர்வாதிகாரியாக இருக்கிறார்.

 

இதில் வக்கில்லாத பிரிவினையை திணிக்கும் நோக்குடைய வெளித்தூண்டல்களால் பதவிக்கு ஆடியவர்கள் தாம் மக்களின் ஆதரவை இழப்பதை ஒரு கிழமைக்குள் கண்டு கொண்டார்கள். தூண்டல்களில் ஈடுபடுபவர்கள் மக்களிடம் எந்த ஆதரவும் இல்லாதவர்கள் என்றதை இந்த தூண்டப்பட்டவர்கள் ஒரு கிழமைக்குள் உணர்ந்துவிட்டார்கள். தூண்டப்பட்ட  இவர்களே கூட்டமைப்பு என்ற நாமம் வலுவிளந்து த்மிழரசுக்கட்சி என்ற நாமத்தை மீள உச்சரிக்க வைத்த முட்டாளகள். இவர்கள் ஆனந்த சங்கரி என்ற கிழவி தான் தனது கோழிச் சேவலுடன் ஊரை விட்டு ஓடினால் இனி ஊரில் எவரும் விழிக்கப்பவதில்லை என்ற பிழையான தத்துவத்தை தமிழரசுக்கட்சியிடம் சோதித்து பார்த்து கண்ட தோல்விகளால் படித பாடத்தை கவனிக்கவில்லை. உதாரணத்துக்கு சுரேசின் மந்திரிப் பதவித் தவறு அவரை அவர் மந்திரிப்பதவிக்கு அழைத்து சென்ற சர்வேசுடன் கூட முரண்பாடுகளை கொண்டுவர வைத்தது. இந்த நிலையில் மக்களை அறியாமல் புதகங்கள் எழுதி அந்த பாடங்களை தாங்கள் தான் படிக்க வேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.