Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாவீரர் துயிலும் இல்லங்கள் குறித்த தீர்மானத்திற்கு ஆதரவளிக்கப் போவதில்லை –TNA

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மாவீரர் துயிலும் இல்லங்கள் குறித்த தீர்மானத்திற்கு ஆதரவளிக்கப் போவதில்லை –TNA

21 அக்டோபர் 2013

 

மாவீரர் துயிலும் இல்லங்கள் குறித்த தீர்மானத்திற்கு ஆதவளிக்கப் போவதில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. மாவீரர் துயிலும் இல்லங்களை புனரமைக்க வேண்டுமென அண்மையில் சாவகச்சேரி பிரதேச சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமி;ழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களே இந்தத் தீர்மானத்தை நிறைவேற்றியிருந்தனர். பிரதேச சபையின் பிரதி தவிசாளர் ரீ.யோகராசா இந்த தீர்மானத்தை நிறைவேற்றியிருந்தார்.

சாவகச்சேரி பிரதேச சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு தமது கட்சி ஆதரளிக்காது என கட்சியின் ஊடகப்பேச்சாளர் சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார். தீர்மானம் நிறைவேற்றுவதற்கு முன்னதாக அனுமதி பெற்றுக்கொள்ளப்படவில்லை எனவும், இந்தத் தீர்மானத்தினை நிறைவேற்றுமாறு ஆலோசனை வழங்கப்படவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சாவகச்சேரி பிரதேச சபையின் சுயாதீன தீர்மானகவே இந்தத் தீர்மானத்தை கருத வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார். வடக்கு மக்களின் முக்கிய பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டியிருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, வாழ்வாதாரம் போன்ற காரணிகளுக்கே முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். எவ்வாறெனினும், யுத்தத்தின் போது உயிர் நீத்த தங்களது சொந்தங்ளை நினைவு கூறும் உரிமை மக்களுக்குக் காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார். யுத்தத்தில் உயிரிழந்த குழந்தைகள், பெண்கள் மற்றும் பொதுமக்களை நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்துவதனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்;க்கவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/97903/language/ta-IN/article.aspx

Edited by கிருபன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

துயிலும் இல்லங்களை புனரமைப்பதற்கு இது சரியான தருணமல்ல – சுரேஸ் பிறேமச்சந்திரன்
[ திங்கட்கிழமை, 21 ஒக்ரோபர் 2013, 01:40 GMT ] [ தா.அருணாசலம் ]

மாவீரர் துயிலும் இல்லங்களை மீளப் புனரமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி, சாவகச்சேரி பிரதேசசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம், ஒரு பிரதேசசபையின் தனிப்பட்ட முடிவு என்றும், அதனைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரிக்கவில்லை என்றும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ள அவர்,

“சாவகச்சேரி பிரதேசசபையினால் நிறைவேற்றப்பட்ட இந்த தீர்மானத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரிக்கவில்லை.

போரின் போது உயிரிழந்த விடுதலைப் புலிகளின் கல்லறைகளை மீளப் புனரமைக்க கோரும், தீர்மானத்தை சாவகச்சேரி பிரதேசசபையில் கொண்டு வர முன்னர், உறுப்பினர்கள் அதுபற்றி எமக்குத் தெரிவிக்கவும் இல்லை.

அத்தகைய தீர்மானத்தை நிறைவேற்றும்படி, அவர்களை நாம் கோரவும் இல்லை.

வடக்கில் தீர்க்கப்பட வேண்டிய பல பிரச்சினைகள் உள்ளன.

இடம்பெயர்ந்தவர்களை மீளக்குடியேற்றும் பிரச்சினை, போரினால் உடல் உறுப்புகளை இழந்தவர்களின் பிரச்சினைகளுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டிய தேவை உள்ளது.

அதேவேளை, போரில் தமது அன்புக்குரியவர்களை நினைவு கூரும் உரிமை மக்களுக்கு உள்ளது.

போரில் தமது பிள்ளைகளையோ, அன்புக்குரியவர்களையோ, இழந்தவர்களை நினைவு கூருவதை நாம் எதிர்க்கவில்லை.

ஆனால், அது சரியான வழிமுறைகளின், ஊடாக சரியான தருணத்தில் மேற்கொள்ளப்பட வேண்டும்.

இது அதற்குப் பொருத்தமான நேரம் அல்ல.” என்று அவர் தெரிவித்துள்ளார்.

சாவகச்சேரி பிரதேசசபையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் சிறிரஞ்சன் கொண்டு வந்த தீர்மானத்தை, பிரதி தவிசாளர் யோகராசா வழிமொழிந்திருந்தார்.

இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை அடுத்து, சாவகச்சேரி பிரதேசசபையில் தீர்மானத்தைக் கொண்டு வந்த உறுப்பினர் சிறிரஞ்சன் சிறிலங்கா காவல்துறையினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.

இந்தத் தீர்மானத்தைக் கொண்டு வந்ததற்கான காரணம் என்ன, அதனை ஊக்குவித்தவர்கள் யார் என்று அவரிடம் சிறிலங்கா காவல்துறை விசாரணை நடத்தியுள்ளது.

இதற்கிடையே, சிறிலங்கா படையினரால் அழிக்கப்பட்ட மாவீரர் துயிலும் இல்லத்தைப் புனரமைக்க சில குழுக்கள் திட்டமிட்டுள்ளதாக வெளியான தகவல்களை அடுத்து, கடந்தவாரம் 200 சிறிலங்கா காவல்துறையினர் கரைச்சி பிரதேச துயிலும் இல்லத்தில் குவிக்கப்பட்டதாகவும் கொழும்பு ஆங்கில நாளிதழ் தெரிவித்துள்ளது.

http://www.puthinappalakai.com/view.php?20131021109286

  • கருத்துக்கள உறவுகள்

வாக்குக் கேட்க மட்டும் பாவிக்கலாமாக்கும்..! அதுக்கு மட்டுமே மாவீரர் பொருத்தம் போல...!!! இவர் ஈபி ஆட்களைப் பலியிட்டுவிட்டு தானும் தன் குடும்பமும் என்று சொகுசா வாழ்பவர் தானே..! இவருக்கு இன்னும் சுப நேரம் கூடி வரவில்லை.

 

போராடாமல்.. எல்லாம் சுகமாக் கிடைக்கனும் என்று நினைக்கினம்.. கூட்டமைப்பினர். அது கஸ்டம் பாருங்கோ..! :icon_idea::rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

துயிலுமில்லங்களை புனரமைப்பதற்கு இது சரியான தருணமல்ல - சுரேஸ் பிரேமச்சந்திரன்

துயிலுமில்லங்களை இடிப்பதற்கு எந்நேரமும் சரியான தருணம் - இராணுவம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.