Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மனிதஉரிமை மீறலா? இன அழிப்பா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மனிதஉரிமை மீறலா? இன அழிப்பா?

எமக்கு நடந்தது நடந்து கொண்டிருப்பது மனித உரிமை மீறலா அல்லது இனஅழிப்பா என்பது பற்றி பலர் தவறான கருத்துக்களை முன் நிறுத்துகின்றனர்.

உண்மையில் இறுதிப்போரில் இது இரண்டுமே நடைபெற்றது. பின்னர் எதற்கு இந்த கேள்வி என்று நீங்கள் கேட்கலாம். இங்கே நம்மில் பலர், முக்கியமாக புலம்பெயர்ந்த இளையோர்கள் மனித உரிமை மீறல் நடந்தது என்பதோடு மட்டும் நிறுத்திக்கொள்கிறார்கள். எமக்கு நடந்ததுஒரு திட்டமிட்ட இனஅழிப்பு என்பதை தெரிந்தோ தெரியாமலோ மறைத்து விடுகிறார்கள்.

இரண்டிற்கும் என்ன வித்தியாசம் உள்ளது?

ஜரோப்பிய ஒன்றிய மனித உரிமை சட்டம் என்ன சொல்கிறது என்று பார்ப்போம். 

ARTICLE 41
Just satisfaction
If the Court finds that there has been a violation of the Convention 
or the Protocols thereto, and if the internal law of the High 
Contracting Party concerned allows only partial reparation to be 
made, the Court shall, if neces-sary, afford just satisfaction to the 
injured party.

அதாவது உள்நாட்டு சட்டங்களினால் முழுமையான நீதி கிடைக்காவிட்டால் மட்டுமே  ஜரோப்பிய ஒன்றிய மனித உரிமை சட்டம் தேவையேற்படின் நமக்கு நீதி கிடைக்க வழிவகுக்கும். எம்மை ஆண்டாண்டு காலமாக அடிமைபடுத்தியே வாழ்ந்து வந்த சிங்கள ஆட்சியாளர்களிடம் நாம் நீதியை எதிர்பார்க்கலாமா?
 
ARTICLE 2
Right to life
1. Everyone’s right to life shall be protected by law. No one shall be deprived of his life intentionally save in the execution of a sentence of a court following his conviction of a crime for which this penalty is provided by law.
2. Deprivation of life shall not be regarded as inflicted in contravention of this Article when it results from the use of force which is no more than absolutely necessary:
 
(a) in defence of any person from unlawful violence;
 
(b) in order to effect a lawful arrest or to prevent the escape 
of a person lawfully detained;
 
© in action lawfully taken for the purpose of quelling a riot 
or insurrection.

சட்டத்திற்கு எதிராக செயல்படுபவர்களை கொலை செய்தால் அது மனிதஉரிமை மீறல் ஆகாது என்பது தான் இதன் சுருக்கம். இதை தான் சிறீலங்கா அரசாங்கம் பயங்கரவாதத்திற்கு எதிரான போராக மாற்றி தன்னை காத்துக்கொள்கிறது. கொல்லப்பட்ட புலிகள் பயங்கரவாதிகள் அவர்களிற்கு மனிதஉரிமை சட்டம் செல்லுபடியாகது, புலிகளினால் மக்கள் கேடயங்களாக பாவிக்கப்பட்டதால் அவர்களும் கொல்லப்பட்டார்கள் என்று சொல்லி தப்பிக்கும் முயற்சியே இது. 

2011ஆம் ஆண்டு மே தீன உரையில் மகிந்த இப்படி கூறுகிறார்:"வன்னியில் இடம்பெற்ற போரின்போது விடுதலைப் புலிகளைத் தோற்கடித்ததைச் சிலர் போர்க்குற்றம் என்கின்றனர். சிலர் மனித உரிமை மீறல் என்கின்றனர். ஒரு இனத்தை அழிவிலிருந்து மீட்டது மனித உரிமை மீறலா?" நாம் மேலே பார்த்தது போல் இது மனிதஉரிமை மீறல் இல்லை என்பதை அவர்களும் தெரிந்து வைத்து தப்பிக்க பார்க்கிறார்.

ஆனாலும் சிறீலங்கா அரசாங்கத்தின் மனிதஉரிமை மீறல்களிற்கு தண்டணை கிடைக்க வேண்டும் என்று நாம் எதிர்பார்ப்போம். ஏற்கனவே எழுதியது போல் உள்நாட்டிலயே அவர்கள்  குழு அமைத்து தங்களை விசாரித்துக்கொள்ளலாம். இதை தான் அமெரிக்க தீர்மானம் வலியுறுத்தியது. இதை தான் இந்தியா ஆதரிதித்தது. சிங்களவர்களே தங்களின் குற்றத்தை விசாரிப்பது குற்றவாளியே தனது குற்றத்தை விசாரிப்பது போன்றது.

சரி, இப்பொழுது இனஅழிப்பு பற்றி பார்ப்போம்.

ஐக்கிய நாடுகளினால் 1948ஆம் ஆண்டு இனஅழிப்பிற்கெதிராக கொண்டுவரப்பட்ட சட்டங்களை பார்ப்போம்.

Art. I: போர் நடக்கும் போதோ அல்லது சமாதான காலத்தில் நடந்தாலோ அது  அனைத்துலகச்சட்டத்தின் படி இனஅழிப்பு.

ஆனால் மனிதஉரிமை மீறல் என்பது முதலில் உள்நாட்டு சட்டத்தினை அடிப்படையாக கொண்டே விசராரிக்கப்படும் என்பதை நினைவுபடுத்த விரும்புகின்றேன்.

Art. II: தேசியம், இனம், மதம் இவைகளை காட்டி அவர்களை முழுமையாகவோ அல்லது ஒரு பகுதியினரை அழிப்பதும் இனஅழிப்பே.

பல தமிழர்கள் எல்லோரையும் அவர்கள் அழிக்கவில்லையே பின்னர் எப்படி இனஅழிப்பு பற்றி பேசுவீர்கள் என்று விவாதம் செய்வார்கள். ஒரு பகுதியினரை அழித்தாலும் அது இனஅழிப்பே என்று இங்கே பார்த்தோம்.

Art. IV: இதில் முக்கியமான விடயம் என்னவெனில் இனஅழிப்பை செய்தவர்கள் ஆட்சியில் இருப்பவர்களாக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும் என்பதேயாகும்.

"Völkermord wird gefördert durch Diskriminierung, Hassrede und Aufrufen zu Gewalt und Menschenrechtsverstössen." என்று சுவிஸ் வெளிவிவகாரத்துறை அமைச்சு (EDA)சொல்கிறது. மனிதஉரிமை மீறலின் உச்சக்கட்டமே இனஅழிப்பு என்பதனை 
சுவிஸ் வெளிவிவகாரத்துறை அமைச்சு (EDA)சொல்கிறது. எனவே மனிதஉரிமை மீறல் என்பது இனஅழிப்பிற்கு சமமானது அல்ல. 

அதனால் தான் தமிழ்நாட்டு மாணவர்களின் இரண்டாவது கோரிக்கை இப்படி அமைகின்றது:

2. இலங்கையில் நடைபெற்றது வெறும் போர்குற்றமோ மனித உரிமைமீறலோ மட்டுமல்ல அது திட்டமிடப்பட்ட இனப்படுகொலை.

எனவே தான் நாம் மனிதஉரிமை மீறல்கள் சிறீலங்கா அரசாங்கம் செய்துள்ளது என்று பேசும் ஒவ்வொரு முறையும் அதை கேட்பவர்கள் சர்வசாதரணமாக எடுத்துக்கொள்வார்கள். மனிதஉரிமை மீறல்கள் நடைபெறாத நாடு உண்டா என்பதே சந்தேகம் தான்.

மனிதஉரிமை மீறல் பற்றி பேசும் போது நமக்கு சாதகமாக பேசுவதற்கு பல நாடுகள் பின் நிற்கும் என்று ஒரு கருத்து உண்டு. எமக்கு சாதகமாக அவர்கள் வாக்கழிக்கும் பட்சத்தில் நாளை அவர்களின் மனிதஉரிமை மீறல்கள் பற்றி விவாதம் நடைபெறலாம் என்ற அச்சம் காரணமாக எமக்கு எதிராக வாக்களிக்கலாம். பல மூன்றாந்தரப்பு நாடுகள் எமக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையில் வாக்களிப்பதற்கு இதுவும் ஒரு காரணம் என்று கருதப்படுகிறது.

இந்நிலை இனஅழிப்பு விவாதம் என்று வரும்போது மாறுபடலாம். எனவே நாம் வெறமனே மனிதஉரிமை மீறல்கள் பற்றி பேசிவிட்டு நிறுத்திவிடாமல் இது ஒரு திட்டமிட்ட இனஅழிப்பு என்பதனையும் முன்னிறுத்துவோம்.

இது எனது அறிவிற்கு எட்டிய அளவு நானாக தேடிய தகவல்கள். தவறுகள் இருந்தால் சுட்டிக்காட்டும்படி கேட்டுக்கொள்கின்றேன். சில மாதங்களிற்கு முன்னர் ஜ.நா. முன்றலில் நடந்த பேரணியிலும் ஜேர்மன் இளையோர் அமைப்பு இதனை மேடையில் வெளிப்படுத்தியிருந்தது. ஆங்கிலத்தில் அவர்கள் உரையாற்றியதால் அங்கு பலரிற்கு அது புரியவில்லை.

நன்றி

Edited by செங்கொடி

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல  பகிர்வு

நன்றி

எனது கருத்தையும் இங்கே சொல்ல வேண்டும் எண்டு பார்க்கிறேன்...

இதை எமது பிரச்சினையோடு சொல்வதானால்... நாம் தமிழர் தமிழர் எனும் காரணத்துக்காகவே ஒடுக்கப்படுகிறோம் அழிக்கப்படுகிறோம் என்பதை இன ஒடுக்கு முறை எண்று சொல்வார்கள்...

ஆனால் இங்ககையில் தமிழர்களுக்கு பிரச்சினைகளே இல்லை... இருப்பது தேவை இல்லாத பயங்கரவாதத்தோடு இணைந்த பிரிவினை வாதமே எனும் கருத்தை பல தமிழர்களால் அரசோடு இணைந்து பலவற்றை திரிவு செய்து மேற்குகலுக்கும் உலகநாடுகளுக்கும் நம்ப வைக்கப்பட்டு இருக்கிறது...

உதாரணமாக லஸ்மன் கதிர்காமர் , நீலன் திருச்செல்வம் , கூட்டணி போண்ற அமைப்புக்கள் எல்லாம் அடக்கம்... மக்களின் இழப்புக்கள் இவர்களால் எப்போதும் புலிகளால் நிகழ்த்தப்பட்டதாகவே திரிவு செய்யப்பட்டவை...

இந்த இலங்கை ஆட்சியாளர்கள் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணவே போர் புரிந்தார்கள் எனும் வகையிலேயே இந்த பிரச்சினையை உலகால் வெளிப்படையாக அணுக வேண்டிய தேவை இருந்தது...

இப்போ இருக்கும் பிரச்சினையின் படி இலங்கையில் தமிழர்கள் இலங்கை படைகளால் கொல்லப்பட்டார்கள் என்பதை நிரூபிப்பதின் மூலமே நடந்தது சுதந்திர போர் என்பதை நிறுவ முயலவேண்டும்...

இண்டைக்கு உலக நாடுகளுக்கு உண்மை தெரிந்து இருந்தாலும் அதை நிறுவ தேவையான ஆதாரங்களின் நம்பக தன்மையை புலிகள் எனும் திசை திருப்பல் நாடகங்களை இந்திய இலங்கை கூட்டு சதி தடுத்து வந்ததே உண்மை...

இராஜதந்திர ரீதியிலும் பொருளாதார ரீதியிலும் இந்தியாவுடனும் இலங்கயினுடன் நலன்களை பேணிய நாடுகள் அதை நம்பாவிட்டாலும் நம்புவது போல நடிக்கும் தேவைக்கு ஆளாகியது என்பதே உண்மை...

உண்மையை சொன்னால் நாங்கள் நடந்த படுகொலைகள் இலங்கை படைகளால் திட்டமிட்டு நடத்தப்பட்டவை என்பதை நீருபிப்பதின் ஊடாகவே நாடுகளை தீர்வை பெறுத்தர கேட்க முடியும்..

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

உண்மைதான் தயா

ஆனால்  இது எல்லொருக்கும் தெரிந்தது தானே...

முழுப்பூசனிக்காயை  மறைக்கின்றார்கள் என்பதும்

சிங்களத்தின் கொடூரங்கள் தொடர்வதும் தமிழருக்கு இருக்கும் பெரும் சாதகமான விடயங்களாகும்

அதை எவ்வாறு எவ்வளவு விரைவில் உமக்கு சாதகமாக நகர்த்தப்போகின்றோம்  என்பது தான் தமிழருக்கு இருக்கும் சவால்..

நன்றி   தங்கள் நேரத்திற்கு.

Edited by விசுகு

அதை இவ்வளவு அழிவுக்கு பின் வரை செய்கிறார்கள்  என்பது தான் கொடுமையானது... 

  • கருத்துக்கள உறவுகள்

அதை இவ்வளவு அழிவுக்கு பின் வரை செய்கிறார்கள் என்பது தான் கொடுமையானது...

இங்கேதான் சிங்களத்தின் இராஜதந்திரம் இருந்தது.. போரினில் எல்லா முக்கிய நாடுகளையும் நேரடியாகவோ, அல்லது மறைமுகமாகவோ சம்பந்தப்பட வைத்தார்கள்.. இதிலிருந்து வெளியேற அந்த நாடுகளுக்கும் சிறிது கால அவகாசம் தேவைப்படுகிறது..

உண்மைதான்

இந்தளவு கொடூரத்தை  எவரும் எதிர்பார்த்திருக்கமாட்டார்கள்.....

இலங்கையில் பயங்கரவாதம் ஒழிப்பு என்ற பெயரில் நடந்தது இன அழிப்பு ,இது உலகம் அறிந்த விடயம் .பயங்கரவாதம் அங்கு இருந்திருக்காவிடால் இலங்கை அரசால் அந்த இன அழிப்பை செய்திருக்க முடியாது .

பயங்கரவாதம் அழிப்பென்ற பேரில் இன ஒழிப்பு செய்ய இலங்கை அரசிற்கு களம் அமைத்து கொடுத்ததற்காகதான் புலிகளில் எமக்கு இந்த வெறுப்பு .

தயா எழுதியதில் எதுவித உண்மையும் இல்லை ,இலங்கையில் தமிழர்களுக்கு பிரச்சனை இல்லை என்று எவனும் சொல்லவில்லை முடிந்தால் அதற்கான ஆதாரம் எதையும் வைக்கட்டும் பார்க்கலாம் .ஏதோ புலிகள் தான் அதை கண்டு பிடித்தது மாதிரியும் அவர்கள் மட்டும் தான் அதற்கான தீர்விற்காக போராடிய மாதிரியும் எழுதியுள்ளார் .

உங்கள் இன  மக்கள் மீது கொண்டு மழை பொழிந்தது உங்களூக்கு பயங்கரவாதமாக தெரியவில்லையா?
உங்களின் கருத்துப்படி புலிகளுக்கு முன் இலங்கை அரசு இனப்படுகொலைகளை செய்துள்ளது. ஆகவே கூட்டமைப்பு, தமிழரசு கட்சி , தமிழ் காங்கிரஸ் ஆகியவை பயங்கரவாத அமைப்பு.
 
புலிகள் தான் தீர்வுக்காக இதய பூர்வமாக செயற்பட்டார்கள்.எஞ்சி இருந்த புளட்,கூட்டமைப்பு எல்லாம் வெறும் சப்பு சவர்கள்.சுயநலவாதிகள்.தமது மக்களை காட்டிக்கொடுத்தவர்கள்.
 
அர்சுண் போண்றவர்கள் தான்  தமிழர்களின் பிரச்சினையே...  வெறும் காள்ப்புணர்வு கொண்டு  ஒருதரப்பை மட்டும் சாடி  மக்கள் ஆதரவளித்த  விடுதலை போரை பயங்கரவாதம் எனும் சொல்லால் தமிழ் மக்கள் மீதான அரசபயங்கரவாதத்தை  நியாயப்படுத்தும் கொடூரர்கள்...  இதை தான் பல ஆண்டுகளாக செய்கிறார்கள்.. 

இதுதான் தமிழ் மக்களின் சாபக்கேடு...   தங்களின் நலன் காக்க தங்களை முன்னிறுத்தி கொள்ள  முன்னாலை நிற்பவர்களை இழுத்து கீழே தள்ளிவிட்டு அந்த இடத்துக்கு வர நிண்டதினால் தான் இந்த நிலை...   தமிழர்களின் அதிகார மோகம் ...  

புலிகளை புறம் தள்ளி அந்த இடத்தில் இவர்கள் இருந்து இருந்தால் இண்றைய நிலையை விட  கேவலமாக அமைந்து இருக்கும்...  அதற்கு  மாற்று ஆயுத குழுக்கள் உள் நடந்த சம்பவங்கள் நல்ல உதாரணம்... 

புலிகளை அரவனைத்து சேர்ந்து பயணிக்க தயார் இல்லாமல் வெறும் புலிகளை குறை கூறி கொண்டு தங்களின் நலன்களை பேணவும்  பதவிகளை அடையவும்  தான் இவர்கள் அரசியல் செய்தார்கள்... 

எல்லாரும் தங்களின் குறைகளையும் அயோக்கிய தனங்களையும் மறைக்க புலிகளை திரையாக பயன்படுத்துவது தான் நடக்கிறது... 

உங்கள் இன  மக்கள் மீது கொண்டு மழை பொழிந்தது உங்களூக்கு பயங்கரவாதமாக தெரியவில்லையா?
உங்களின் கருத்துப்படி புலிகளுக்கு முன் இலங்கை அரசு இனப்படுகொலைகளை செய்துள்ளது. ஆகவே கூட்டமைப்பு, தமிழரசு கட்சி , தமிழ் காங்கிரஸ் ஆகியவை பயங்கரவாத அமைப்பு.
 
புலிகள் தான் தீர்வுக்காக இதய பூர்வமாக செயற்பட்டார்கள்.எஞ்சி இருந்த புளட்,கூட்டமைப்பு எல்லாம் வெறும் சப்பு சவர்கள்.சுயநலவாதிகள்.தமது மக்களை காட்டிக்கொடுத்தவர்கள்.
 
உலக அரசியல் விளங்க கொஞ்சம் விபரம் வேண்டும் .இது நானும் நீங்களும் அடிபடும் விசயமல்ல .சரி பிழை நீதி நியாயம் பார்த்து உலகம் இயங்குவதில்லை ,நாங்கள் இராஜதந்திரத்தை பாவித்து சிங்களத்தின் உண்மை முகத்தை உலகிற்கு காட்ட  வைத்திருக்க வேண்டுமல்லாது அவர்கள் வைத்த பொறியில் நாங்கள் அகப்பட்டது எமது அரசியல் வறுமை ,அதுதான் நான் ஒரு சொல்லை அடிக்கடி பாவிப்பேன் .

டெல்கியில் ஒவ்வோரு எம்பசியாக ஏறி இறங்கியதும் exhibition வைத்துக்கொண்டு திரிந்தது பின்னர் எதற்காம் .

உலகம் ஆயிரம் சொல்லட்டுமே எனக்கு நான் தான் நீதிபதி என்று பாட இது சினிமா இல்லை .

தயா ,கிணற்றை விட்டு ஏறி வாங்கோ .

தயா ,கிணற்றை விட்டு ஏறி வாங்கோ .

உங்கட பிரச்சினைகளே இதுதான்...  

இலங்கையின் வலையில் புலிகள் எண்டதை விட உண்மை வேறு ...  

தர்மரத்தினம் சிவராம் ( தாரகி ) அவர்கள் புலிகள் சமாதான ஒப்பந்தத்தை கைசாத்திட்டதை எதிர்த்து...  அதே காலத்தில் தன்னிச்சையான  போர்நிறுத்தத்தை செய்ததை விமர்சித்து ஒரு கட்டுரையை எழுதி இருந்தார்  (தமிழ்நேசனில் இருக்கிறது தேடிப்படியுங்கள்... )...  

புலிகள் இந்த சமயத்தில் சமாதானத்துக்கு போவது  அவர்களின் அழிவுக்கே சாத்தியம்...  பலமாக இருக்கும் வேளையில் புலிகள் சமாதானத்தை தேடுவது தேவை இல்லாதது எனும் தொனியில் விமர்சித்தலெழுதியும் இருந்தார்... 

அவரின் கூற்று நடக்க கூடாது என்பதுதான் எல்லாரது ஆவலாகவும் இருந்தது உண்மை...  ஆனால் நடந்தது  அவர் சொன்னது போலவே... !  

2004ல் ஜனாதிபதி தேர்தல் வந்த போது  இதுவே சமாதானத்துக்கு சாவு மணி எண்று எழுதி இருந்தார்...     அதுவே நடந்தது... 

என்னை கேட்டால் உங்களை எல்லாம் விட தாரகி புலிகளையும் உலகையும் நன்கு புரிந்து வைத்து இருந்தார்...     அவரால் முடிந்தது எதுவும் உங்களால் முடியவில்லை எண்டதுதான் உண்மை... 

Edited by தயா

புலிகளை முப்பத்திரண்டு நாடுகள் தடை செய்திருந்தன ,அதுவும் பெரும்பாலாக தமிழர்கள் புலம் பெயர்ந்து இருந்த நாடுகள் .எவருக்குமே அந்த தடையை நீக்கும் அளவிற்கு தேவை  இருக்கவில்லை இவங்கள் என்னதையும் செய்யட்டும் தலைவர் நாட்டை பிடிப்பார் என்ற ஒற்றை சொல்லு மந்திரத்தில் மயங்கியிருந்தார்கள் .

இதெல்லாம் நாங்கள் எழுதும்போது கேட்கவில்லை இனி கேட்டு என்ன பிரயோசனம் .

தடை செய்ய முன்நிண்று உழைத்தவர்களுக்கு தெரியாதா என்ன பொய்களை சொல்லி தடை செய்ய வைத்தார்கள் எண்று...?? 

அதில் லக்ஸ்மன் கதிர்காமரோடு தொடர்பில் இருந்த அணிகளையும் தமிழர்கள் மறக்கவா போகிறார்கள்... 

  • கருத்துக்கள உறவுகள்
32 நாடு தடை செய்ய வெளிநாட்டுக்கு வந்த நாமும் ஒரு பிரதான காரணம்.காரணம் ஒவ்வொருவரும் தமது  அகதி வழக்கில் வெற்றி பெற அரச படைகளாலும் பிரச்சனை மற்றது புலிகளாலும் பிரச்சனை என எழுதி கொடுத்து எமது சுயநலத்துக்காக எம்மை நாமே காட்டிக்கொடுத்துள்ளோம்.
 
புலிகள் ஒரு பக்கம் எடுக்காமல் நின்று நீதிக்காக போராடியதும் பிழை தான். இந்தியாவின் இரட்டை வேடத்தால் அவர்கள் அந்த முடிவை எடுத்திருப்பார்கள் என நம்புகிறேன்.மற்றது நீதியை உலகத்திடம் இருந்து எதிர்பார்க்கவே முடியாது என்பதையும் ஆணித்தரமாக புலிகள் நிறுவி இருந்தார்கள்.
 
பேச்சுவார்த்தயின் போது நோர்வேயில் இருந்து யப்பான் வரை ஆடிய நாடகங்கள் மக்கள் அறிந்தவை.இவ்வளவும் தெரிய ஒரு அரசியல் தெரியாவிட்டாலும்  நீதி நியாயங்களை பகுத்தறிய பகுத்தறிவு இருந்தால் மட்டும் போதுமானது.
  • கருத்துக்கள உறவுகள்

புலிகளை முப்பத்திரண்டு நாடுகள் தடை செய்திருந்தன ,அதுவும் பெரும்பாலாக தமிழர்கள் புலம் பெயர்ந்து இருந்த நாடுகள் .எவருக்குமே அந்த தடையை நீக்கும் அளவிற்கு தேவை  இருக்கவில்லை இவங்கள் என்னதையும் செய்யட்டும் தலைவர் நாட்டை பிடிப்பார் என்ற ஒற்றை சொல்லு மந்திரத்தில் மயங்கியிருந்தார்கள் .

இதெல்லாம் நாங்கள் எழுதும்போது கேட்கவில்லை இனி கேட்டு என்ன பிரயோசனம் .

எழுத்துக்கு எழுத்த முரண்.

நீதி  நியாயம் பார்த்து உலகம் இயங்குவதில்லை என்பது முதல் பந்தி.

அடுத்தது

புலிகளை 32 நாடுகள்  பயங்கரவாத அடிப்படையில் தடை செய்தன என்று.

இதற்கு என்ன எடுதுகோள்????

தடை செய்த எந்த நாட்டில் பலிகள் பயங்கரவாதம்செய்தார்கள்???

புலம்பெயர்ந்தோர்  போராடவில்லை

அதனால் தடையை  எடுக்கவில்லை  என்பது அடுத்த வரி.

அப்படியென்றால் புலம் பெயர்ந்தவர் வன்முறையை  புலம் பெயர் நாடுகளில் கையாளவில்லை என்று தானே அர்த்தம்

ஏனெனில் ஐனநாயகமுறையில் லட்சம்  பேர் வீதி வீதியாக நின்றார்களே...... :(  :(  :(

விசுகு ,உலக அரசியல் விளங்க கொஞ்சம் விபரம் வேண்டும் என்று எழுதியது உங்களை போன்றவர்களுக்காகத் தான் ,

கதிர்காமர் ,அவர் பின்னால் நின்ற அணிகள்,புலம் பெயர்ந்தோர் கொடுத்த வாக்கு மூலங்கள் எல்லாம் இராமர் அணைக்கு அணிலின் பங்கு போன்றவை .

நாட்டில் புலிகளின் செயல்கள் தான் முதல் காரணம் ,இரண்டாவது புலம் பெயர் புலிகளின் அடாவடித்தனம் .

இவைஎல்லாம் நானாக எழுதவில்லை .மனித உரிமைகள் அமைப்பு காலம் காலமாக சொல்லிவந்தவை.

மனித உரிமை அமைப்புக்களின் குற்றச்சாட்டுக்களை கணக்கெடுப்பது என்றால்

அரசுக்கு 100  சொன்னால் புலிக்கு 5  சொல்வார்கள்

அப்படி பார்த்தால் அரசையல்லவோ தடை செய்யணும்   முதலில்???

விசுகு ,உலக அரசியல் விளங்க கொஞ்சம் விபரம் வேண்டும் என்று எழுதியது உங்களை போன்றவர்களுக்காகத் தான் ,

கதிர்காமர் ,அவர் பின்னால் நின்ற அணிகள்,புலம் பெயர்ந்தோர் கொடுத்த வாக்கு மூலங்கள் எல்லாம் இராமர் அணைக்கு அணிலின் பங்கு போன்றவை .

நாட்டில் புலிகளின் செயல்கள் தான் முதல் காரணம் ,இரண்டாவது புலம் பெயர் புலிகளின் அடாவடித்தனம் .

இவைஎல்லாம் நானாக எழுதவில்லை .மனித உரிமைகள் அமைப்பு காலம் காலமாக சொல்லிவந்தவை.

இவ்வளவு விபரமான நீங்களே சொல்லுங்களேன் ஊரில் நடந்த சம்பவங்களை  உலகம் எப்படி நம்பியது...??  

ஊரில் வந்து பார்த்தா....??? இல்லை செய்மதிகளூடாகவா...??    

அப்படி ஊரில் வந்து உளவு பார்த்திருந்தால் ஊரில் சிங்கள  அரச பயங்கரவாதத்தால்  நடந்த இனப்படுகொலைகள் அவர்கள் கண்ணுக்கு தெரியவில்லையோ...??    புலிகள் மட்டும் தான் தெரிந்தார்களோ....?? 

யாருக்கு அளக்கிறீர்கள்...  எங்களை  என்ன  தண்ணிப்பாட்டிக்கு வந்தாக்கள் எண்டா நம்புகிறீர்கள்... 

Edited by தயா

இன்று பி பி சி யில் போர் குற்ற விசாரணை பற்றிய கேள்விக்கு நீங்கள் இங்கு பதில் எழுதுவது போல் தான் பதிலளித்தார் ,

அமேரிக்கா ஆளில்லாத விமானக்களால் கொலை செய்யும் பயங்கரவாதிகளை விட பொதுமக்கள் தான் கூட அப்ப போய் அமெரிக்காவையும் விசாரணை செய்யுங்கோ என்று கடுப்பில் சொன்னார்  .

அமெரிக்காவை இவர்களை எல்லாம் கணக்கில் எடுப்பதில்லை ஆனால் தேவை வந்தால் தூக்கிவிடும் .சதாம் ,நோரியாகோ ,இந்த பட்டியலில் முபாரக் ,கடாபியையும் போடலாம் அடுத்து ஆசாத்.அமேரிக்கா செய்வது சரியா பிழையா நேர்மையா நீதியா என்று எல்லாம் கேள்வி கேட்க முடியாது ,

இந்த நிலையில் தான் எமது பிரச்சனையும் அணுகப்பட்டது .சிறீலங்கா ஒரு சுதந்திர ஜனநாயக நாடு அதில் நாம் பிரிவினை வாதிகள் ,சிறீலங்கா செய்வதையெல்லாம் நாமும் செய்யலாம் என்று நினைப்பதே தவறு ,நாங்கள் சரியாக நடந்து அவர்கள் பிழை விடுவதை உலகிற்கு காட்டி அவர்களை உலகில் இருந்து அன்னியோனிய படுத்தியிருக்க வேண்டும் கடைசி  எமது நோக்கங்கள் நிறைவேறும் வரையாவது அதை செய்ய்திருக்கலாம் .

நாம் இலங்கைக்கு மட்டும் அல்ல எதிரி ,இந்தியா ,சர்வதேசம் என்று படர்ந்துவிட்டது .தமிழ் மக்களிடம் நல்ல பேர் எடுக்க உலகையே பகைத்து விட்ட அமைப்பு புலிகள் அமைப்பு .

சும்மா குழப்பாமல் நேரடியாக விடயத்துக்கு வாங்கோ... 

அமெரிக்காவுக்கு புலிகளால் என்ன ஆபத்து...   இலங்கை அரசாங்கத்தை விட  புலிகள் என்ன கொடுமையான செயல்களை  அமெரிக்காவை கோவிக்க செய்யும் அளவு  செய்தார்கள்... ??

புலிகள் செய்த தவறு வேண்டும் எண்டால் இந்தியாவுக்கு  எதிராக செயற்படாமல் இந்தியாவை இரைஞ்சிக்கொண்டு இருந்தது மட்டுமாக இருக்கலாம்...  

மற்றும் படி  சுரத்தே இல்லாத நீங்கள்  அமரர் தாரகியின் கட்டுரைகளை படிப்பது நண்று...  புலிகள்  பற்றி  2004 இறுதியில் ஒரு கட்டுரையை எழுதி இருந்தார்...    என்னைக்கேட்டால் அதுவே உண்மை என்பேன்...  

  • கருத்துக்கள உறவுகள்

தயா.. நீங்கள் சிலவற்றை சிந்தித்துப் பார்க்க வேண்டும்.. :D புலிகளை 1998இல் அமெரிக்காவில் தடை செய்துவிட்டார்கள்.. பெரும்பாலான ஏனைய நாடுகள் சமாதான காலத்தில்தான் தடை செய்தார்கள்.. இதைத்தான் தராகி சொன்னாரோ தெரியாது.. சமாதானம் பேசினால் அழிவு வருமென்று.. :rolleyes:

சரி விடுங்கோ நாங்களாவது உருப்படியாக ஏதாவது பேசுவம்...  :)

தாரகி சொன்னது இதுதான்...   திருகோண மலையில் பேசியது இது...

"..நாம் இன்று அனுபவிக்கும் உரிமைகள் அனைத்துமே பேசிப் பெற்றவையல்ல, அடித்துப் பெற்றவையே.."
 
இது சம்பந்தமாக கடுப்பான  தினக்குரல் 2004 ல் பத்திரிகைக்கு ஒரு விளக்க உரையை குடுத்தார்... 
 
தமிழ் மக்கள் ஒரு தலைப்பட்சமாக மீண்டும் போரை ஆரம்பிக்கத் தேவையே இல்லை. அந்த வேலையை இப்பொழுதே சிறிலங்கா படைத்துறையின் உளவியற் போர் பணியகம் தொடங்கி முன்னெடுத்து வருகிறது.இது நாளை எம்மீது முழுமையான போராக பாயும் என்பதில் சந்தேகமில்லை. அதுமட்டுமன்றி போர் நிறுத்தம் ஏற்பட்ட காலத்திலிருந்து இன்றுவரை ஐக்கிய தேசியக் கட்சியும் சரி சிறிலங்கா சுதந்திரக்கட்சியும் சரி இலங்கையின் இராணுவச் சமநிலையை சிங்களதேசத்தின் பக்கம் சாய்ப்பதிலேயே பேரவாக் கொண்டு செயற்பட்டு வருகின்றன என்பது கண்கூடு.
 
நாம் இன்று அனுபவிக்கும் உரிமைகள் அனைத்துமே பேசிப் பெற்றவையல்ல, அடித்துப் பெற்றவையே என போர்நிறுத்தம் ஏற்பட்ட காலத்தில் நான் திருமலையில் பேசியதை தினக்குரல் முன்பக்கத்தில் வெளியிட்டதை நான் இங்கு நினைவுபடுத்த விரும்புகிறேன்.

கால்நூற்றாண்டுக்கு மேலாக சட்டவல்லுநர்களான எமது தமிழ் அரசியல் வாதிகள் எவ்வளவோ பேசிப்பார்த்தும் நீக்கப்படாத பயங்கரவாதத் தடைச்சட்டத்தை சிங்கள தேசம் இறுதியாக எமது படைபலத்தைக் கண்டு அஞ்சியே தற்காலிகமாக நீக்கவேனும் உடன்பட்டது என்பதை நாம் கவனிக்க வேண்டும். நான் சரியென்று உறுதியாகக் கண்டதை எழுதுகின்றேன். அதற்காக எந்த அழிவையும் சந்திக்க தயாராகவே இருக்கின்றேன். ஓடி விடமாட்டேன். எமக்குத் தேவையான கருத்துகளை விவாதிப்பதற்கான களத்தை மேலும் விரிவாக்கியதற்கு தினக்குரலுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். 

http://tharakai.blogspot.co.uk/

எனது கருத்தையும் இங்கே சொல்ல வேண்டும் எண்டு பார்க்கிறேன்...

இதை எமது பிரச்சினையோடு சொல்வதானால்... நாம் தமிழர் தமிழர் எனும் காரணத்துக்காகவே ஒடுக்கப்படுகிறோம் அழிக்கப்படுகிறோம் என்பதை இன ஒடுக்கு முறை எண்று சொல்வார்கள்...

ஆனால் இங்ககையில் தமிழர்களுக்கு பிரச்சினைகளே இல்லை... இருப்பது தேவை இல்லாத பயங்கரவாதத்தோடு இணைந்த பிரிவினை வாதமே எனும் கருத்தை பல தமிழர்களால் அரசோடு இணைந்து பலவற்றை திரிவு செய்து மேற்குகலுக்கும் உலகநாடுகளுக்கும் நம்ப வைக்கப்பட்டு இருக்கிறது...

உதாரணமாக லஸ்மன் கதிர்காமர் , நீலன் திருச்செல்வம் , கூட்டணி போண்ற அமைப்புக்கள் எல்லாம் அடக்கம்... மக்களின் இழப்புக்கள் இவர்களால் எப்போதும் புலிகளால் நிகழ்த்தப்பட்டதாகவே திரிவு செய்யப்பட்டவை...

இந்த இலங்கை ஆட்சியாளர்கள் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணவே போர் புரிந்தார்கள் எனும் வகையிலேயே இந்த பிரச்சினையை உலகால் வெளிப்படையாக அணுக வேண்டிய தேவை இருந்தது...

இப்போ இருக்கும் பிரச்சினையின் படி இலங்கையில் தமிழர்கள் இலங்கை படைகளால் கொல்லப்பட்டார்கள் என்பதை நிரூபிப்பதின் மூலமே நடந்தது சுதந்திர போர் என்பதை நிறுவ முயலவேண்டும்...

இண்டைக்கு உலக நாடுகளுக்கு உண்மை தெரிந்து இருந்தாலும் அதை நிறுவ தேவையான ஆதாரங்களின் நம்பக தன்மையை புலிகள் எனும் திசை திருப்பல் நாடகங்களை இந்திய இலங்கை கூட்டு சதி தடுத்து வந்ததே உண்மை...

இராஜதந்திர ரீதியிலும் பொருளாதார ரீதியிலும் இந்தியாவுடனும் இலங்கயினுடன் நலன்களை பேணிய நாடுகள் அதை நம்பாவிட்டாலும் நம்புவது போல நடிக்கும் தேவைக்கு ஆளாகியது என்பதே உண்மை...

உண்மையை சொன்னால் நாங்கள் நடந்த படுகொலைகள் இலங்கை படைகளால் திட்டமிட்டு நடத்தப்பட்டவை என்பதை நீருபிப்பதின் ஊடாகவே நாடுகளை தீர்வை பெறுத்தர கேட்க முடியும்..

இதில் ஒருவரை விட்டு விட்டீர்கள் என இருந்தேன். தானாகவே ஓடி வந்து விட்டார். புலிக்காய்சசோலோடு.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.