Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழ விடியலுக்காக மரணித்த மாவீர செல்வங்களின் கோவில்களில் ஒளியேற்றுமா கூட்டமைப்பு.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

விளக்கம் பிளீஸ்?

 

பனைக்கே பதநீரா = கருப்பணி 
 
போதிய அளவு கருப்பணியை பனை சுரந்துகொண்டே இருக்கும்.
 
கருப்பணிக்கு விளக்கம் = தமிழர்களுக்கு தெரியும்.
மற்றையவர்களுக்கு எப்படி விளங்க  படுத்துவது என்பது தெரியவில்லை.

பனைக்கே பன்னீரா?

 

 

 

பனைக்கே பதநீரா = கருப்பணி 
 
போதிய அளவு கருப்பணியை பனை சுரந்துகொண்டே இருக்கும்.
 
கருப்பணிக்கு விளக்கம் = தமிழர்களுக்கு தெரியும்.
மற்றையவர்களுக்கு எப்படி விளங்க  படுத்துவது என்பது தெரியவில்லை.

 

 

மருதங்கேணி,

 

விவசாயி விக் அவர்கள் "பனைக்கே பன்னீரா?" என்று எழுதியுள்ளாரே. "பனைக்கே பன்னீரா?" எனும் சொற்தொடரில் பொருள் மயக்கம் உள்ளது அல்லவா?

 

1910d.jpgதமிழீழ விடுதலைக்கான போரட்டத்தில் தமது உயிர்களை ஆகுதியாக்கிய வீரமறவர்களின்
கல்லறைகளும் நினைவுக்கற்களும் அமையப்பெற்ற புனிதபூமியான மாவீரர் துயிலுமில்லங்கள் இன்று உருத்தெரியாதவகையில் சிதைக்கப்பட்டு, அழிக்கப்பட்டு வீரமறவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்குக் கூட சிங்களம் தடை விதித்துள்ளது.
 
1910b.pngகடந்த மூன்று வருடங்களாக இராணுவத்தின் இரும்புப்பிடிக்குள் சிக்கித்தவித்த மக்கள் தமது பிரதேசங்களின் உள்ளூராட்சி சபைகளின் ஊடாக தற்பொழுது மாவீரர் துயிலுமில்லங்களில் அஞ்சலி செலுத்தவேண்டும் என்ற மனஉணர்வுகளை வெளிப்படுத்தியுள்ளனர்.
 
மாவீரர் துயிலும் இல்லங்கள் புனரமைக்கப்பட்டு தமிழ் மக்களுக்கான உரிமைப்போரில் உயிர் நீத்தவர்களுக்கு அஞ்சலி செலுத்த ஏற்பாடு செய்யவேண்டும் என்ற கோரிகையினை பிரேரணையாக முன்வைத்த சாவகச்சேரி பிரதேச சபை உறுப்பினர்கள் அதனை தீர்மானமாக நிறைவேற்றி நடைமுறைப் படுத்துவதற்கு தமது கட்சியின் அனுமதியை வேண்டியிருந்தனர்.
 
இதேபோல், கிளிநொச்சி- கனகபுரம் மாவீரர் துயிலுமில்ல வளாகத்தைத் துப்பரவு செய்து மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவது என கரைச்சி பிரதேச சபையிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
 
kumarappa-pulendran-12-lttes.jpgதமது ஆளுகைக்குட்பட்ட பிரதேசங்களிலுள்ள ஆலயங்கள், பாடசாலைகள், பொதுக்கிணறுகள், பொதுமண்டபங்கள், சுடுகாடுகள், சுடலைகள், மாவீரர் கல்லறைகள், தூபிகள், நினைவுக்கற்கள் போன்ற சிலவற்றையும் போணிப்பராமரிக்க வேண்டிய பொறுப்பு பிரதேச சபைகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
 
இந்தவகையில், இவ்விரு பிரதேச சபைகளும் முற்போக்காகச் செயற்பட்டு மாவீரர் துயிலுமில்லங்களை புனரமைக்கத் தீர்மானித்துள்ளன. ஏனைய சபைகளும் இதுபோன்ற தீர்மானங்களை விரைவில் எடுக்கும்.
 
இந்நிலையில் சாவகச்சேரிப் பிரதேச சபையில் இப்பிரேரணையை முன்வைத்து உரையாற்றிய உறுப்பினரை சிங்கள இரணுவப் புலனாய்வாளர்கள் கைதுசெய்து பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று தடுத்துவைத்து விசாரித்துள்ளனர். தவிசாளரும் அழைக்கப்பட்டுள்ளார்.
 
கிளி.கனகபுரத்திலும் துயிலுமில்லத்தைச் சூழலில் பலத்தபாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதுடன் இராணுவம் இப்பிரதேசத்தில் மக்கள் குடியிருப்புக்களில் தேடுதல் நடத்தியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
இந்நிலையில், மாவீரர் துயிலுமில்லங்களை புனரமக்கின்ற தீர்மானத்திற்கும் தமிழ்தேசிய கூட்டமைப்பின் உயர்வர்க்கத்தினருக்கும் தொடர்பில்லை எனத் தமிழ்த் தேசிய அரசியல் வாதிகள் காய்நகர்த்தியுள்ளனர்.
 
1910a.jpgஇக்காய் நகர்த்தல் சிங்களத்திடமிருந்து தம்மைப்பாதுகாக்கவா அல்லது மக்களைப் பாதுகாக்கவா என்பது தமிழ் மக்களுக்குத் தெரியாததொன்றல்ல.
 
வடக்கு மாகாண சபைக்கான தேர்தலில் தமிழ் மக்கள் தாமொரு தனித்துவமான இனமென்பதையும் தமக்கும் இந்நாட்டில் அரசியல், பொருளாதார, வாழ்வியல் உரிமைகளை வழங்க வேண்டும் என்பதையும் தெளிவாக சிங்கள தேசத்திற்கு விளக்கியுள்ளனர்.
 
இதேவேளை எமது மக்கள் தேசியக் கூட்டமைப்பினரிடம் உரிமைகளைப் பெற்றுக் கொடுக்கவேண்டிய பொறுப்பினை ஒப்படைத்துள்ளதால் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து உரிமைகளைப் பெற்றுக் கொடுக்கவேண்டிய கடமை கூட்டமைப்பினருக்குண்டு.
 
இந்நிலையில் பிரதேச சபைகள் மக்களின் பிரச்சினைகளை முன்னுரிமை அடிப்படையில் தீர்க்கவேண்டும் என்ற நோக்குடன் தமிழ் மக்களின் ஆத்மாக்கள் துயிலுகின்ற கல்லறைகளை சீர்செய்து அஞ்சலி செலுத்த ஏற்பாடுசெய்துகொடுத்து எமது மக்களுக்கு மன நிறைவினைக் பெற்றுக்கொடுக்கத் தீர்மானித்துள்ளனர்.
 
இதனை நிறைவேற்ற வேண்டியது மாகாண சபைகளின் பொறுப்பாகும். பாரளுமன்ற உறுப்பினர்களும் இதற்கு உதவியாக இருக்கவேண்டும். மக்களின் வாக்குப் பலத்துடன் அதிகாரத்தில் இருக்கின்றவர்கள் மக்களுக்கு ஏற்படுகின்ற தடைகளை நீக்கி அவர்களின் தேவைகளை பூர்த்திசெய்து, அரசியல் உரிமைகளைப் பெற்றுக்கொடுக்க முற்படவேண்டும்.
 
சிங்கள இராணுவத்திற்குப் பயந்து தமிழ் மக்களுக்கு ஆபத்து என உரிமைகளை கோரிப் பெற்றுக்கொள்ளாது ஒதுங்குவதும் அதனை நியாயப்படுத்துவதற்குக் காரணம் தேடுவதும் மக்கள் பிரதிநிதிகளாகச் செயற்படுகின்றவர்களுக்கு அழகன்று.
 
எனவே, மாவீரர் துயிலுமில்லங்கள் அமைக்கப்பட்டுள்ள நிலங்கள் சிங்களத்தால் 1910f.jpgதென்பகுதியினருக்கு பகிர்ந்து கொடுக்கப்படுவதற்கு முன்னராவது, வீரமறவர்கள் உறங்குகின்ற புனித பூமியைப் பாதுகாக்க அனைவரும் ஒன்றிணைந்து செயலாற்ற முற்படவேண்டும் என்பதே சகல தமிழ் மக்களினதும் வேண்டுகோளாகவுள்ளது என்பதை தமிழ்த் தேசியம் பேசுகின்ற கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கருத்திலெடுக்க வேண்டும்.
 
தமிழீழமே எங்களின் உயிர் மூச்சாகவும், அதற்காகவே தங்களின் இன்னுயிர்களை விடுதலை வேள்வியில் ஆகுதியாக்கிய அந்த மாவீர செல்வங்களையும் ,விடுதலை தீயில் 
உரம் சேர்த்த ஈழ மக்களையும் நினைவு கூறும் தேசியநாள் தான் மாவீரர் நாள்.இந்நாளில் ஒவ்வொரு தமிழனும் அந்த ஆன்மாக்களின் உணர்வுடன் சங்கமிப்போம்.
 
 
இராவணன்
நன்றி - ttnnews.com
.

 

இங்கே மக்கள் ஆர்வமாக ,விருப்பமாக இருக்கிறார்கள் என்பதையே மேலுள்ள விடயத்தில் அறியக்கூடியதாக ,அப்பட்டமாக உள்ளது .தூயவன் .

யாழ் மாநகரசபை இப்படி ஒரு தீர்மானத்தை நிறைவேற்றவில்லை. அதை யாரும் கண்டிக்கவில்லை. இதன் பொருள் என்ன? மாகாண சபை எந்த அளவுக்கு நகர சபைகள், பிரதேச சபைகள் மீது காட்டுப்பாடு வைத்திருக்கு என்பதைப் பற்றி இந்த கட்டுரை எதுவும் விவாதிக்கவில்லை. சாவகச்சேரி பிரதேச சபை கேட்பதை மாகாண சபை செய்யவேண்டும் என்பதுதான் கட்டுரையின் விவாத்தைன் உட்பொருளாக இருக்கிறது. ஆனால் மாகாணசபை தானாக எதை செய்யலாம் என்றதை கட்டுரை விவாதிக்கவில்லை. இன்னொருவைகையில் மாகாண சபையை தனது மாவீர துயிலும் இல்லம் சம்பந்தமான தீர்மானத்தை நிறைவேற்றும் படி கட்டுரையிந் கோரிக்கை அமையவில்லை.  கட்டுரையாளர் மாகாணசபை எடுக்கும் தீர்மானம் பிரதேசபையின் முடிவை விட வேறுபட்ட முடிவை எடுக்கலாம் என்பது கட்டுரையாளரின் பீதியாக இருக்கலாம். கட்டுரையை எழுதியவர் வெறுமனே விக்கினேஸ்வரின் மாகாணசபை கூட்டமைப்பு, மற்ற்யவர்களின் பிரதேசசபை கூட்டமைப்பு என்ற பிரிவினையை கண்டுபிடிக்கிறார் என்பது மட்டும்தான் உண்மை. 

 

இந்தக் கண்டு பிடிப்பின் ஒரு நோக்கம் விக்கினேஸ்வரனை தமிழ் மக்கள் எதிரியாக காட்டும் நடத்தையே. இதே கட்டுரை எழுத்தாளர் விக்கினேஸ்வரன் எடுக்கும் முடிவுகள் கூட்டமைப்பில் விவாதிக்கப்பட வேண்டும் எனறு(மாவை கேட்டு) வந்த செய்தி பற்றி ஏதாவது எழுதினாரா?. அப்போது அதைவைத்து தாம் தனியவாக முடிவு எடுத்திருக்கும் பிரதேசபைகள் தமது முடிவுகளை கூட்டமைப்பின் விவாதத்திற்கு விட வேண்டும் என்றதை ஒத்துக்கொள்கிறாரா?. அதன்படி இதுவரையில் கூட்டமைப்பு (உ+ம் சாவகச்சேரி) பிரதேச சபையின் முடிவு கூட்டமைப்பின் முடிவுதான் என்றும், அதையேதான் வடமாகாண சபையும் எடுக்க வேண்டும் என்றும் தீர்மானம் எடுத்ததா?

 

 பேச்சுவார்த்தைகள் மூலம் வடமாகாண சபையின் அதிகாரங்களை அரசிடமிருந்து பெறுவது என்பதுதான் கூட்டமைப்புக்கு வெளியே  சென்று  விக்கினேஸ்வரனின் கையில்முதல் அமைச்சர் பதவியை கொடுத்ததின் நோக்கம். இது பலரும் அறிய இந்தியா, சர்வதேச எதிர்பார்ப்புகளுடன் கூட்டமைப்பு இணக்கி போக செய்த முடிவு. இதில் இந்தியாவின் பொதுநலவாய முடிவுகள், சர்வதேசத்தின் ஐ.நா பிரேரணைகள் எல்லாம் இணைக்கபட்டதாகத்தான் கருதப்பட்டது.  இதில் சிலர் வடமாகாணசபை பிரதேச சபைகளின் கோரிக்கைகளை கேள்வியின்றி நிறைவேற்றித்தான் வைக்க வேண்டும் என்பது யதார்த்தம் இல்லாதது. இவர்களில் சிலர் ஐ.நா பிரேரனையை குழப்ப கூடிய முடிவுகளை திணிக்கப் பார்க்கிறார்களா என்பது தெரியவில்லை. 

 

பொதுவில் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தையில் முடிவடையக்கூடிய முடிவுகளை கூட்டமைப்பும், அல்லாதவைகளை பிரதேச சபைகளும் எடுக்க முடிவாக வேண்டும். 2010 ல் பதவிகளை பெற்றுக்கொண்ட பிரதேச சபைகள், சந்திர சிறியின் காலத்தில், இன்றுவரை இத்தகைய தீர்மானங்களை நிறைவேற்றவிலை. இப்போது மட்டும் நிறை வேற்றியிருப்பது புதிதாக ஆரம்பிக்கப்பட்ட மாகாண சபை இதை அங்கீகரிக்கும் அதிகாரம் உள்ளது என்றதை தெரிந்து வைத்திருக்கிறார்கள் என்று எடுத்துக்கொள்ளலாம்(இல்லையேல் அவர்களின் தீர்மானம் சந்தர்ப்பவாதம் மட்டுமே- சந்திர சிறியிடம் கேடப்பயந்தவர்கள் விக்கினேஸ்வரனை இடித்து தூண்ட முயல்வதாகப்பொருள்படும்).  மாகாண சபையிடம் தேவையான அதிகாரம் இருந்தாலும், மாகாண சபை அரசுடன் முழுக் காணி அதிகாரத்துக்கான பேச்சு வார்த்தையில்தான் இறங்க வேண்டுமேயல்லாமல் மாவீரர் துயிலும் காணிகளை நிர்வகிக்கும் அதிகாரத்துக்கு முந்தக் கூடாது. இது சுறாப்போட்டு இறால் பிடிப்பதாகத்தான் முடியும்.

 

மக்கள் கூட்டமைப்பின் மாகாண சபைக்குத்தான் வாக்களித்தார்கள். அது விக்கினேஸ்வரனுக்கு ஒரு பதவிக்காலம் கொடுக்கிறது. அதை நினைவில் வைத்துக்கொண்டுதான் விவாதம் தொடர வேண்டும். சட்டத்துறை விற்பனரான விக்கினேஸ்வரன் மக்கள் ஆணையை இந்த துள்ளுமான் குட்டி ஊடகவியலாரை விட விளங்கிக்கொள்வார் என்பது முதல் அனுமானமாக இருக்க வேண்டும். சில முடிவுகள் கூட்டமைப்பினதாக இருக்க வேண்டும். மாகாணசபை, பிரதேச சபை முரண்கள் பொதுவில் அரசியல் அமைப்பின் விவரணத்தில் தங்கியே தீர்மானிக்கப்படும். கூட்டமைப்பு இரண்டையும் வைத்திருப்பத்தால் பிரதேசசபைகளின் தீர்மானம் மாகாண சபையை கடமைக்குள்ளாக்காது. 

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே மக்கள் ஆர்வமாக ,விருப்பமாக இருக்கிறார்கள் என்பதையே மேலுள்ள விடயத்தில் அறியக்கூடியதாக ,அப்பட்டமாக உள்ளது .தூயவன் .

 

ஆர்வமாக உள்ள நிலைமை வேறு. செயற்படுத்துவது என்பது வேறு. அங்கே எத்தனை பேர் துணிவோடு செயற்பட முடியும். கூட்டமைப்பினை ஏற்றச் சொல்கின்றவர்கள் எத்தனை பேர் கூட நிற்பார்கள் என்பதே கேள்வி. மற்றும்படி புலத்தில் இருந்து கதைப்பது எல்லாம், சீண்டி முடியும் வேலை தான்

ஆர்வமாக உள்ள நிலைமை வேறு. செயற்படுத்துவது என்பது வேறு. அங்கே எத்தனை பேர் துணிவோடு செயற்பட முடியும். கூட்டமைப்பினை ஏற்றச் சொல்கின்றவர்கள் எத்தனை பேர் கூட நிற்பார்கள் என்பதே கேள்வி. மற்றும்படி புலத்தில் இருந்து கதைப்பது எல்லாம், சீண்டி முடியும் வேலை தான்

 

சும்மா தேர்தலுக்கு உதவிய எனது உறவினர்களே இன்று புலனாய்வு நாய்களின் துன்புறுத்தலுக்கு தொடர்ந்து உள்ளாகி வருகின்றனர். சென்றியில் வைத்து பயமுறுத்தல், மொபைலில் கூப்பிட்து அச்சுறுத்தல் என்று இந்த நாய்களின் பிடியில் சிக்கி எமது மக்கள் தங்கள் வாழ்நாளை கழிக்கவேண்டியுள்ளது. ஆனால் இங்குள்ள சிலர் தூயவன் எழுதியது போலே சனத்தை மேலும் தொலைக்குள் போட கட்டுரை வரகின்றார்கள். மாவீரர் எதத்காக தமது உயிரை கொடுத்தார்கள்?. தமக்கு விளக்கெட்றசொல்லியா? 

 

தலைவர் கூறியது போல "எமது தேசம் விடுதலை பெற்று, எமது மக்கள் சுதந்திரமாக, தன்மானத்துடன் வாழவேண்டும் என்ற சத்திய இலட்சியத்திற்காக" மடிந்தவர்கள் அல்லவா இவர்கள். அந்த கொள்கையில் நாம் எவ்வளவு தூரம் முனோக்கி போகின்றோமா அவளவு விரவில் சுதந்திரமாக அவர்களுக்கு விளக்கெற்றும் நாள் வரும். அதுவரை அந்த இலக்கு நோக்கி காலத்தையும், உலக ஓட்டத்த்தையும் கருத்தில் எடுத்து முனோக்கி பயணிப்போம்.

ஆர்வமாக உள்ள நிலைமை வேறு. செயற்படுத்துவது என்பது வேறு. அங்கே எத்தனை பேர் துணிவோடு செயற்பட முடியும். கூட்டமைப்பினை ஏற்றச் சொல்கின்றவர்கள் எத்தனை பேர் கூட நிற்பார்கள் என்பதே கேள்வி. மற்றும்படி புலத்தில் இருந்து கதைப்பது எல்லாம், சீண்டி முடியும் வேலை தான்

புலத்தில் இருந்து கதைப்பது சீண்டி முடியும் வேலை என்று முடிவெடுப்பது நீங்களோ நானோ அல்ல ......................என்னில் இருவருமே புலத்தில் இருக்கிறோம் .....................போராட்டகாலத்தில் புலத்தில் வாழும் எமக்குள்ள அதே அக்கறை தற்போதும் இருப்பதில் எந்த பிழையும் இல்லை ..................எம் எல்லூர்க்கானதுமான விடுதலையை ,தீர்மானிப்பதில், அவற்றை ,அதன் இலக்கை அடைவதைஅன்றில் இருந்து  இன்றுவரை புல உறவுகளும் ,தாயக உறவுகளும் ஒரே கோட்டில்,ஒன்றாக பயனித்துக்கொண்டிருப்பதே  யதார்த்தம்,உண்மை ........அதன் அடிப்படையில் புலம் ,தாயகம் என்று பிரித்து பார்க்காமல் செயல்படுவேதே காலத்தின் கட்டாயம் .......................தாயகத்தில் எவ்வாறான ஆபத்துக்கள் உள்ளதோ அது புலத்தையும் வந்து சேரும் என்பதை ..................மறுக்கமுடியாது . :)

  • கருத்துக்கள உறவுகள்

உங்களையும் என்னையும். செய்தி எழுதுகின்வர்ளையும் சேர்த்துச் சொன்னேன். வெளிப்படையாகச் செயற்பட முடியாவிடில் மறைந்து செயற்படலாம் அது தப்பில்லை. அதற்காக மற்றவர்கள் இப்படிச் செய்வது தான் சமூகப்பணி என்று கட்டுரை வரையக்கூடாது. இங்கே யாரும் மாவீர்களை நினைவில் கொள்ள வேண்டாம் என்று சொல்லவில்லை. அவர்களை மறக்காதீர்கள். ஆனால் மற்றவர்களை வம்பில் மாட்டாதீர்கள்.

போத்துகேயர் ஆலயங்களை அழித்தபோது, எம் மக்கள் நூற்றாண்டு காலத்திற்கு அதை ஒளித்து வைத்து வழிபட்டவர்கள். அப்படிப்பட்ட மக்கள் மாவீர்ரகளை மறந்து விடுவார்கள் என்பது எல்லாம் சாத்தியமா என்ன? ஆனால் அப்படி அவர்கள் மறக்கக்கூடாது என்றால் அதை அன்போதும், ஒற்றுமையோடும் எடுத்துச் சொல்ல வேண்டும். அதை விடுத்து கூட்டமைப்பினை வம்பில் மாட்டுவது, பல்கலைக்கழக மாணவர்களை ஏத்தி விடுவது வேண்டாமே....

கொஞ்சமாவது எம்மக்கள் வசதி பெற வழி செய்ய வேண்டும். பல பெண்கள் இன்று வடக்கிலும், கிழக்கிலும் பாலியல் தொழில் நோக்கிப் போகின்ற நிலைமைக்கு ஆளாகின்றார்கள். அதற்குக் காரணம் ஏழ்மை. அதில் இருந்து முதலில் அவர்களைக் காப்பாற்ற ஏதாவது அபிவிருத்தி வேண்டும்... இங்கே புலத்தில் இருந்து கதைக்கின்ற நிலைமை அங்கில்லை என்பதே அங்குள்ள நிலைமை...

எம் மக்கள் வசதியாக வாழவெண்டும் ,என்பதில் எந்தவிதமான மாற்றுக்கருத்தும் எனக்கில்லை .....................உங்கள் கருத்துடன் 100 வீதம் உடன்படுகிறேன் .விடைபெறுகிறேன் ...........மீண்டும் ஒருமுறை சந்திப்போம் தூயவன் .

  • கருத்துக்கள உறவுகள்

விவசாயி/ மருதங்கேணி,

விவசாயியின் சொற்றொடர் " பனைக்கே பன்னீரா" என்பதே தவிர "பனைக்கே பதனீரா" என்பதல்ல.

பதனீர் என்பதை விவசாயி பன்னீர் என்று தவறுதலாக தட்டச்சு செய்தார் என்று சொல்லி இருந்தால் - அந்த கருத்தாடல் நேர்மை அவரிடம் இருந்த்ஹிருந்தால் அது நான் கேட்ட விளக்கத்துக்கு பதிலாக அமையும். ஆனால் இப்படி ஒரு விளக்கத்தை அவர் இன்று வரை தரவில்லை.

ஆகவே மீண்டும் கேட்கிறேன் " பனைக்கே பன்னீரா" என்பதற்க்கு விளக்கம் பிளீஸ்?

இதை விட கொடுமை என்னை மேலக தமிழனாக நினைத்துக் கொண்டு மேல்மாகாண தமிழர்களை, கொட்டஹேன குப்பத்தான், சேரி-நாய் சேக்ஸ்பியர் என்று விவசாயி தூற்றியது.

எத்தனை மலையக/ மேலக இளைஞர்கள் எமக்காக மடிந்து மாவீரராயினர்? எத்தனை வடகிழக்கு இளைஞர்கள் தோட்டங்களிலும் இவர் சொல்லும் குப்பங்களிலும் பாதுகாக்கப் பட்டனர்?

தமிழ் தேசியத்தின் அடிப்படையே வட- கிழக்கு - மேலக- மலையக பிரிவினையை பிரதேசவாத்தை முறியடிப்பதுதானே?

விவசாயின் மேற் சொன்ன கருத்துகள் ஒட்டுமொத்த தேசியத்தினதும் மாவீரர்களினதும் ஆன்மாவை கேலிசெய்தல் இல்லையா?

தனிநாடு கேட்பவர் மட்டுமே தேசியவாதிகள் அல்ல, திம்பு கோரிக்கை அடிப்படையில் சமஸ்டி கேட்பவரும் தேசியவாதிகளே.

இது இப்படியிருக்க, இங்கே தமிழ் தேசியத்தில் பழம் திண்டு கொட்டை போட்ட பலரும், இந்த கீழ்த்தர வசவுகளை கண்டும் காணாதது போல் போவதின் மர்மம் என்ன?

அநியாயத்தின் போது நல்லவர்கள் கொள்ளும் மெளனம், அந்த அநியாயத்திலும் கொடியது என்றானே மார்டின் லூதர் கிங்.

இங்கே மெளனம் காப்பதால் - மேலக தமிழர்கள் மீதான இந்த கொடிய வசவுகளை மற்றைய தமிழ் தேசியவாதிகளும் சரியென ஏற்றுக்கொள்கிறீர்களா?

உங்கள் ஊரவன், உங்கள் இணையவழி நண்பன் என்பதற்காக எதை சொன்னாலும் கண்டு கொள்ள மாட்டீர்களா?

இது தானா உங்கள் தமிழ்த்தேசிய உணர்வு?

இதுதானா உங்கள் மனித உரிமைப்பாங்கு?

இதுதானா உங்கள் தனிழின ஒற்றுமைப்பாடு?

சகதமிழர்களையே குப்பத்தான், சேரி-நாய்-சேக்ஸ்பியர் என்று வசவும் போது பார்த்து வாளாதிருக்கும் நீங்கள்தானா இனவாதம் பற்றி கூக்குரல் இடுவது?

  • கருத்துக்கள உறவுகள்

நிர்க்கதியான தமிழ் பெண்களுக்கு இராணுவத்தினர் பாலியல் தொந்தரவு கொடுகின்றார்கள் - மனோ கணேசன்

காணாமல் போனோர் குடும்ப அமைப்பு, நேற்று ஞாயிற்றுகிழமை காலை (27/10/2013) கொழும்புக்கு வடக்கே ரத்தொளுகம என்ற நகரில் நடத்திய நிகழ்வில் நான் கலந்து கொண்டேன். இந்த நிகழ்வுக்கு திருகோணமலையில் இருந்து வந்து கலந்து கொண்ட ஒரு தமிழ் பெண், பின்வரும் பாரதூரமான குற்றச்சாட்டை பகிரங்கமாக கண்ணீர் சிந்தியப்படி முன்வைத்தார். "......பெருந்தொகையான தமிழ் பெண்கள், எமது குடும்பத்து ஆண்களை இழந்து குழந்தைகளுடன் நிர்க்கதியாக தனித்து வாழ்கிறோம். எங்கள் வீடுகளுக்கு காணமல் போன எம் உறவுகளை கண்டுபிடித்து தர விசாரணை செய்கிறோம் என்று சொல்லிக்கொண்டு இராணுவ விசாரணையாளர்கள் வருகின்றார்கள். இப்படி வரும் இராணுவத்தினர் எங்கள் அபலை பெண்களின் தொலைபேசி எண்கள் மற்றும் அவர்கள் பற்றிய விபரங்களை பெற்று செல்கிறார்கள். பிறகு இரவு நேரங்களில் இந்த தொலைபேசி எண்களுக்கு அழைப்பு எடுத்து எங்களை, அந்த இராணுவ விசாரணையாளர்கள் தொந்தரவு செய்கிறார்கள். பெரும்பாலும் மது அருந்திய நிலையில் இந்த இராணுவ வீர்கள் தொலைபேசிகளில் ஆபாசமாக உரையாடுகிறார்கள். நாம் எங்கள் நாளாந்த தேவைகளுக்காக வெளியில் நடமாடும் போதும், இந்த இராணுவ வீர்ர்கள் எமக்கு தொல்லை கொடுக்கிறார்கள்...." இந்த நிலைமை போரினால் பெரிதும் பாதிக்கப்பட்ட கிளிநொச்சி, முல்லைதீவு ஆகிய மாவட்டங்களிலும் நிலவுகின்றதாக, அறிகிறேன்.

Edited by தூயவன்

  • கருத்துக்கள உறவுகள்

மனோ கணேசன் என் சகோதரன். அவர் கொட்டஹேன குப்பத்தான் என்றாலும் நானும் அதுவே.

நான் சேரி-நாய்-ஷேக்ஸ்பியர் என்றால் அவர் ஒரு சேரி-நாய்-ஷெல்லி.

உண்மையான தமிழ்தேசியவாதிகள் யாரும் பிரதேசவாதம் பேசமாட்டர்கள்.

மனோவின் கால்த்தூசிக்கும் இணையாக மாட்டார்கள். புலத்து யாவாரிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

நான் போட்டதுக்கும், நீங்கள் கதைப்பதற்கும் ஏதும் சம்பந்தம் இருக்கின்றதா?

  • கருத்துக்கள உறவுகள்

இறந்தவர்களுக்கு அஞ்சலி செய்வது அந்தந்த மக்களின் உறவுகளின் மனிதாபிமானக் கடமை. அதைக் கூட நிறைவு செய்ய அனுமதிக்காத இடத்தில்.. மெளனமாக இருந்து எதனை சாதிக்க முடியும்....????! மக்களின் உணர்வுகளை கூட்டமைப்பு பிரதிபலிக்கா விட்டால் கூட்டமைப்பை மக்கள் நிராகரிக்கும் நிலைக்குப் போக அதிக காலம் எடுக்காது..! :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

நிச்சயம் இருக்கிறது தூயவன். அந்த கருத்து உங்களுக்கு சொல்லப் பட்ட பதில் இல்லை. ஆனால் இப்படி எமக்கு குரல் கொடுக்கும் மனோ போன்ற மேலக தமிழரைத்தான் இந்த திரியில் ஒருவர் கொட்டஹேன குப்பத்துக்காரன், சேரி-நாய்-ஸேக்ஸ்பியர் என்று அர்ச்சிக்கிறார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.