Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வெளிநாட்டு பிரஜாவுரிமையாளர்கள் தொடர்பு கொள்க..!

Featured Replies

கொழும்பு திரும்ப முடியாமல் யாழில் தங்கியுள்ள வெளிநாட்டு பிரஜாவுரிமை பெற்றவர்கள் தூதுவராலயங்களுடன் தொடர்பு கொள்ளவும்

-வீரகேசரி நாளேடு

வெளிநாடுகளில் இருந்து விடுமுறைக்காக இலங்கை வந்து யாழ். சென்றவர்களும், தற்பொழுது யாழ்ப்பாணத்தில் நடைபெறும் மோதல்கள் காரணமாக அங்கிருந்து கொழும்பு வரமுடியாமல் சிக்குண்டிருக்கும் வெளிநாட்டு பிரஜாவுரிமை பெற்றவர்களும் தத்தமது தூதுவராலயங்களுடன் தொடர்பு கொள்ளுமாறு வேண்டப்படுகின்றனர்.

தற்பொழுது ஏ9 பாதை மூடப்பட்டுள்ள நிலையிலும், கொழும்பு யாழ். விமான சேவைகள் தடைப்பட்டுள்ள நிலையிலும், கொழும்பு வர முடியாமல் தவிக்கும் வெளிநாட்டு பிரஜாவுரிமை பெற்றுள்ள இலங்கையர்களை கொழும்புக்கு அழைத்து வருவதற்கு அந்நாட்டு தூதுவராலயங்கள் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் உதவியை கோரியுள்ளன.

யாழ்ப்பாணத்தில் இவ்வாறு கொழும்பு வரமுடியாமல் சிக்குண்டிருப்பவர்கள் யாழில் எப்பகுதியில் தாம் தங்கியுள்ளனர் என்னும் சரியான முகவரி மற்றும் தமது கடவுச்சீட்டு இலக்கம் என்பன போன்ற முக்கிய விடயங்களுடன் தூதரகங்களுடன் தொடர்பு கொள்ளுமிடத்து தூதரகங்களின் பணிப்பின் பேரில் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினர் அவர்களை கொழும்புக்கு அழைத்துவரும் பணிகளை மேற்கொள்ளுவர் என சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் தொடர்பாடல் ஒருங்கிணைப்பாளர் டாவிட்டே "கேசரி'க்குத் தெரிவித்தார்.

சிப்பிக்குள் முத்தாய் சிறைப்பட்டுக் கிடப்பதை விட, சுதந்திரமாக, உப்பாகி, நீரோடு கரைவதே மேல்..........

முத்து சிப்பிக்குள் கிடப்பது பெருமையல்ல...

நங்கையின் சங்கெனும் கழுத்தினில்..

ஆரமாய்ஆவதே.. அழகு.

உப்பு கடலில் கரைந்து காணமல்

போகுமாயின்.. உணவுக்கு ஏது சிறப்பு...

உன் சுதந்திர உணர்வை உணர்கிறேன்.

நண்பரே.. இதைக்காட்டிலும் அது என

வாழ்வதற்கா பிறந்தோம்.

இல்லை சிப்பியை பிளந்திடும் முத்தாய்

ஒரே கொள்கையில் உரமாய் வாழ்வோம்

விகடகவி வாசிக்க நன்றாகத்தான் இருந்திருக்கும். இதை நீங்கள் இலண்டனிருந்து எழுதாமல் தாயகத்திலிருந்து எழுதியிருந்தால்!!!!!
  • தொடங்கியவர்

நன்றி விகடகவியாரே...........

post%20mount%20duck%20adress%20marker.jpg

வெளி வேசங்களை விட

ஆத்மார்த்தமான

செயல்பாடே முக்கியமானது.

அதற்கு முகவரி தேவையில்லை.

காற்று கலப்பதோடு சரி

அது இல்லாமல் யாரும் வாழ்வதாய்

அது சொன்னதில்லை

வானம் பொழிவதோடு சரி - அது

தன் கடமை தவறுவதில்லை :lol:

  • தொடங்கியவர்

விகடகவி வாசிக்க நன்றாகத்தான் இருந்திருக்கும். இதை நீங்கள் இலண்டனிருந்து எழுதாமல் தாயகத்திலிருந்து எழுதியிருந்தால்!!!!!

:P :lol: :P

விகடகவி வாசிக்க நன்றாகத்தான் இருந்திருக்கும். இதை நீங்கள் இலண்டனிருந்து எழுதாமல் தாயகத்திலிருந்து எழுதியிருந்தால்!!!!!

இதை நீரும் அல்லைப்பிட்டியில் இருந்து சொல்லி இருக்கலாம் சுவிஸில் இருந்து சனி நாயகம் பேச தேவை இலை :P :lol::lol:

இதை நீரும் அல்லைப்பிட்டியில் இருந்து சொல்லி இருக்கலாம் சுவிஸில் இருந்து சனி நாயகம்

:wink: :lol::lol:

மன்னிக்கவும்..

யாரையும் புண்படுத்த அதனை....நான் எழுதவில்லை.

புலத்தில் வாழும் இளைஞர்கள் எல்லோரும் கோழைகளல்ல..

தாய்மண்ணை மறந்தவர்களும் அல்ல..

முத்து உப்பாவதில் ஒப்பில்லாமல்..சொல்லிவிட்டேன்

எல்லோரும் மன்னிக்குக..

எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்பதறிவு.

¿ýÀ¡ º¢Ä ±ØõÒ ¾¢ýÉ¢¸ÙìÌ ¸‰¼Á¡¸ þÕìÌõ ¬É¡ ¸ñθ¡¾¢í¸û ¬¨º¨ÂÔõ «¼ì¸ ܼ¡Ð Åó¾ ¸Å¢¨¾¨ÂÔõ Á¨Èì¸ Ü¼¡Ð ¦¾¡¼÷óÐ ±ØÐí¸û

புதிதாக நண்பர்களை சேர்ப்பதைவிட இருக்கின்ற நண்பர்களை எதிரிகளாக்காமல் பார்த்துக் கொள்வதே மேலானது

வசம்பு நீங்கள் இந்த வாசகத்தை காப்பாற்றுவதாக தெரியவில்லை....

அடுத்தவர் விசயத்தில் மூக்கை நுழைத்தால் நண்பனும் எதிரியாவான்.

:lol::lol::lol:

¬¸¡ þÐ ¿¡ö §Àö ¦ºÕôÀÊ ÅºõÒìÌ :P :P

புதிதாக நண்பர்களை சேர்ப்பதைவிட இருக்கின்ற நண்பர்களை எதிரிகளாக்காமல் பார்த்துக் கொள்வதே மேலானது

வசம்பு நீங்கள் இந்த வாசகத்தை காப்பாற்றுவதாக தெரியவில்லை....

அடுத்தவர் விசயத்தில் மூக்கை நுழைத்தால் நண்பனும் எதிரியாவான்.

:lol::D:D

இந்தளவு அறிவை எல்லாம் எதிர்பார்க்க கூடாது...... :wink: :D:D

  • தொடங்கியவர்

மன்னிக்கவும்..

யாரையும் புண்படுத்த அதனை....நான் எழுதவில்லை.

புலத்தில் வாழும் இளைஞர்கள் எல்லோரும் கோழைகளல்ல..

தாய்மண்ணை மறந்தவர்களும் அல்ல..

முத்து உப்பாவதில் ஒப்பில்லாமல்..சொல்லிவிட்டேன்

எல்லோரும் மன்னிக்குக..

எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்பதறிவு.

அன்பு விகடகவிக்கு

உங்கள் கவிதை என்னை மிகவும் கவர்ந்தது.

கவிதைக்கும் உங்களுக்கும் மீண்டும் நன்றி!

நான்

யாழ்களத்தில் அரசியல் சம்பந்தமான கருத்துகளை

பேசுவதில்லை என்று அண்மையில் முடிவெடுத்தேன்.

அது தொடரும்...............மாற்றமில்லை.

இருப்பினும்

யாருக்காவது பயன் அளிக்கும்

செய்திகள் கிடைத்தால்

அதையும் சிந்தித்து முடிவெடுத்தே

இங்கு இணைப்பேன்.

ஒருவரது கருத்து அல்லது கேள்வியில்

கருத்து முரண்பாடு இருந்தால்

அதை தெளிவுபடுத்துவதுதான் நாகரீகம்.

அதை விடுத்து தான் பெரிய அறிவாளி என

மற்றவனை ஏளனப்படுத்துவதோ

அல்லது இழிவுபடுத்துவதோ

அதற்கு பதில் தர முடியாமல்

பலவந்தமாக மிரட்டி பொய் அவதூறை உருவாக்கி

வாய் மூட வைப்பது போலாகும்.

இதில் எனக்கு சற்றும் உடன்பாடு இல்லை.

இதை எழுதும் போது

சிறுவயதில் நான் பார்த்த ஒரு நிகழ்வு நினைவுக்கு வந்தது.

அதை இங்கே பகிர்ந்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன்.

நான் இலங்கையில் வாழ்ந்த சிறுவயது அது.........

என் வீட்டில் நடந்த பிறந்த நாள் வைபவத்துக்கு

என் அப்பாவோடு வேலை செய்த நண்பர்கள் வந்திருந்தார்கள்.

மகிழ்வோடு நடந்த விழாவில் கேலியும் கூத்துமாய்

அனைவருமே மகிழ்ந்து போயிருந்த நேரத்தில்

ஒரு சிலர் மட்டும் ஏதோ ஒரு பெரிய விவாதமொன்றை

ஒரு பக்கத்தில் நடத்திக் கொண்டிருந்தார்கள்.

இடையே

ஒருவர் முன்வைத்த கருததொன்றுக்கு

பதிலளிக்க முடியாத மற்ற நண்பர் அவரை இழிவாக

பேசி தலைகுனிய வைத்தார்.

இதை இங்கே எழுதுவதற்காக மன்னியுங்கள்.

இருந்தாலும் அதை எழுதாவிடில் யாருக்கும் புரியாது?

அதாவது

ஒருவர் ஒரு தர்க்கத்தை முன் வைக்க

அதை தகர்த்து பேச முடியாமல் திணறிய அடுத்தவர்

"சக்கிலயனே உன்னை யாராடா இங்க வர விட்டது?"

என்று கத்தினார்.

விழாவே ஒரு கணம் அதிர்ந்து நின்றது.

முன்னயவர் பேசாது திடுக்கிட்டு நின்றார்.

அடுத்தவர்களும் திகைத்து போய் இருந்தார்கள்.

என் அப்பா கோபப்பட்டதை

என் வாழ்நாளில் நான் கண்டதே இல்லை.

எல்லா வேலைகளையும் விட்டு விட்டு

என் அப்பா செய்த முதல் காரியம்

திட்டியவரை வெளியே அழைத்துச் சென்றார்.

திட்டுவாங்கியவரோ வேதனையோடு உட்கார்ந்திருந்தார்.

மற்றவர்கள் எவரும் அவருக்கு ஆறுதல் கூட சொல்லவில்லை.

சிறிது நேரம் கழித்து அப்பா மட்டும் வீட்டுக்குள்ளே திரும்பி வந்தார்.

திட்டுவாங்கியவரை மட்டும் படுக்கை அறைக்குள் அழைத்துச் சென்று

ஏதோ தனியாக பேசிய பின்

வெளியே வந்த அப்பா

விழா முடியும் வரை அவரோடேயே இருந்தார்.

விழா முடிந்த பின்னர்

எங்கள் எல்லோரையும் உட்கார வைத்து

விடயத்தை தெளிவுபடுத்தி விட்டு

"ஒருவர் செய்யும் வாதத்தையோ தர்க்கத்தையோ

வெட்டி பேச முடியாவிட்டால்

அவர்களை இழிவாக்கி மனம் நோக வைத்து ஒருபோதும்

வெல்லக் கூடாது.

அது கோழைத்தனம்.

நாம் பெரியவர்கள் என்று நமக்குள் நினைக்கிறோம்.

நம்மை எத்தனை பேர் இழிவாக பார்க்கிறார்களோ...........

யாருக்குத் தெரியும்?" என்று மனம் வருந்தினார்.

நான் சொல்வது புரியும்?

இதுபோன்ற சில நிகழ்வுகளுக்குப் பின்

நானாக எடுத்த முடிவு......விலகியே நிற்பது என்பது.......

என் நண்பர்கள்

என்னை புரிந்து கொள்வார்கள்!

அது போதும்................

நன்றி!

ஒரு

நண்பனாக

நானும் புரிந்துகொண்டேன்.

  • கருத்துக்கள உறவுகள்

"ஒருவர் செய்யும் வாதத்தையோ தர்க்கத்தையோ

வெட்டி பேச முடியாவிட்டால்

அவர்களை இழிவாக்கி மனம் நோக வைத்து ஒருபோதும்

வெல்லக் கூடாது.

அது கோழைத்தனம்.

நாம் பெரியவர்கள் என்று நமக்குள் நினைக்கிறோம்.

நம்மை எத்தனை பேர் இழிவாக பார்க்கிறார்களோ...........

யாருக்குத் தெரியும்?"

அஜுவன் அண்ணா, மிகவும் அருமையான கருத்து. என்னை நிறையவே சிந்திக்க வைத்தது. :idea:

நன்றி

-சபேஸ்-

þø¨Ä «ƒ£Åý ºÁÂí¸Ç¢ø §ºü¨È §ºÚ ±ýÚ «¨Æì¸¡Å¢ð¼¡ø «Ð ºó¾Éõ §À¡Ä §À¡Ä¢ §Åºõ §À¡ðÎ ±ø§Ä¡¨ÃÔõ ²Á¡üÈô À¡÷ìÌõ.

«ôÀÊÂ¡É §º÷Ú ÁÉ¢¾÷¸ÙìÌ ¿¡Óõ §ºüÈ¡ø «Êò¾¡ø¾¡ý ¯ñ¨Á À¢¨ÆìÌõ.

மிகவும் பொருத்தமான உதாரணம் அஜீவன்.. இருந்தாலும் உங்களது பார்வையிலிருந்து எனது பார்வை சற்று விலகியுள்ளது.. தூற்றல்..அச்சுத்தல்களுக்கு பயந்து (கள விதிகளுக்கமைய) கருத்து எழுதாமல் விலகியிருப்பது நல்லதல்ல.. சில வேளைகளில் விலகியிருந்து கருத்துக்களைப்பார்த்து சிரித்துக்கொண்டிருப்பது உத்தமமாக தெரிந்தாலும் மத்தித்திலுள்ள சுவை ஒரு தனி ரகம்.. என்னை எப்படியெல்லாமோ தூற்றி முடித்து தற்போது எப்படியாவது வெளியேற்றுவதற்கான நடவடிக்கையில் இறங்கியுள்ளார்கள்.. வெளியேற்றப்படும்வரை எனது கருத்துக்கள் கள விதிகளுக்கமைய ஆங்காங்கே தொடரும்..

வந்தவேலையை எப்போதோ முடித்துவிட்டேன்.. ஆவலோடு காத்திருக்கிறேன்..

:P :D:lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தூற்றல் அச்சுறுத்தல்கள் என்று பயப்பிடாமல்(ஏனெனில் கணணி தானே) ஏதாவது எழுதுக்கொண்டிருப்பீர்கள். நாமும் தேவையான நேரங்களில் நமது பதிலை தருவோம்.

உங்கள் வேலை முடிந்துவிட்டதா???????????? நீங்கள் யாருக்காக வேலை செய்கிறீர்கள் என்று நம்மில் பலருக்கு தெரியும். பலர் முப்பது வருடங்களிற்கு மேலாக அதை செய்கிறார்கள். நீங்கள் எவ்வளவு காலமோ தெரியாது. ஆனால் உங்கள் வேலை முடியாது. :lol::D:D

விகடகவி வாசிக்க நன்றாகத்தான் இருந்திருக்கும். இதை நீங்கள் இலண்டனிருந்து எழுதாமல் தாயகத்திலிருந்து எழுதியிருந்தால்!!!!!
:lol::D:D:D:D
  • தொடங்கியவர்

ஒரு

நண்பனாக

நானும் புரிந்துகொண்டேன்.

நன்றி நண்பா!

மெளனத்தை தவிர

உன்னிடம் பகிர - வேறு

வார்த்தைகளில்லை என்னிடம்

அஜுவன் அண்ணா, மிகவும் அருமையான கருத்து. என்னை நிறையவே சிந்திக்க வைத்தது. :idea:

நன்றி

-சபேஸ்-

எனக்கு யாழில் கிடைத்த நட்புகள் - உறவுகள் ஏராளம்.

அவர்களிடம் நான் பெறும் அன்பு அலாதியானது.

என்னைப் பொறுத்த வரை

ஒருவரை ஒருவர் நேரில் கண்டதில்லை

இருந்தாலும் உள்ள ஈடுபாடு...............

வார்த்தைகளால் விபரிக்க முடியாதது.

உதாரணத்துக்கு கனடாவில் யாழ் களத்தின் மூலம்

நான் பெற்ற தம்பி - தங்கைகளின் நண்பர்களின் அன்பு!

என் கனேடிய நண்பனே

அவர்கள் (கனேடிய உறவுகள் சந்திப்பு) என்னோடு பழகிய விதத்தை கண்டு

பொறாமையாக இருப்பதாக சொன்ன போது

என் இதயமே ஆனந்தமாய் துள்ளியது.

என் வீட்டு வராத்தாவில் இன்றும் அவர்களது

வாழ்த்து மடல் அவர்களை தினமும் நினைக்க வைக்கிறது.

நன்றி சபேஸ்....... :lol:

þø¨Ä «ƒ£Åý ºÁÂí¸Ç¢ø §ºü¨È §ºÚ ±ýÚ «¨Æì¸¡Å¢ð¼¡ø «Ð ºó¾Éõ §À¡Ä §À¡Ä¢ §Åºõ §À¡ðÎ ±ø§Ä¡¨ÃÔõ ²Á¡üÈô À¡÷ìÌõ.

«ôÀÊÂ¡É §ºற்Ú ÁÉ¢¾÷¸ÙìÌ ¿¡Óõ §ºüÈ¡ø «Êò¾¡ø¾¡ý ¯ñ¨Á À¢¨ÆìÌõ.

ஒருவிதத்தில் நீங்கள் சரி...........!

ஆனால் எப்போதுமே அது சரியாகாது என்றே நினைக்கிறேன் leanadodavinci_uk.

சில கேள்விகள் அல்லது கருத்துகள்

நேரடியாக ஒருவரிடம் இருந்து வருவதில்லை.

எங்கோ படித்த அல்லது கேட்ட ஒன்றை வைத்துத்தான்

எல்லோருமே வாதிடுகிறார்கள் அல்லது கேட்டு மூக்குடைபடுகிறார்கள்.

எனக்கும் அப்படி நடந்து இருக்கிறது.

இது எல்லோருக்கும் பொதுவாக நடப்பதுதான்!

உண்மையிலேயே இது ஓர் ஆர்வக் கோளாறு மற்றும் ஆசையின் உணர்ச்சி வேக உந்துதல்தான்.

இப்படியான பாதிப்புகளுக்குள்ளாகும் போது

ஒன்று இவர்கள் அதற்கு பிறகு பேசாமல் விட்டு விலகியே சென்று விடுகிறார்கள்.

அல்லது எதிர் கருத்துகளை தொடர்ந்து ஆக்ரோசமாக பேசத் தலைப்படுகிறார்கள்.

கருத்துகள் சரியோ தவறோ என்பது முக்கியமல்ல

அந்த மனிதருக்கு(கருத்துக்கல்ல) எதிராக எதையாவது சொல்லி

மட்டம் தட்ட நினைப்பதுவே அங்கு முக்கியமாகிறது.

இவை ஒரு நல்ல சமுதாயத்தை உருவாக்க நினைப்போர் தவிர்க்க வேண்டியவை என்றே கருதுகிறேன்.

இங்கே அநேகர் தன் பெயரிலேயே வருவதில்லையே

அப்படி இருக்கும் போது

களத்தில் யார் வெல்வது தோற்பதல்லவே பெரிது.

நல்ல கருத்துகள் இடம் பெறுகிறதா இல்லையா என்பதுதான்

முக்கியமானது.

அதற்காக ஏதோ ஒன்றை மனதில் வைத்து தாக்கும் போது..........

இன்று அது நல்லது போலவே தோன்றும்.

ஆனால் காலப் போக்கில் அது அவரை மட்டுமல்ல

அவர் சொல்லும் நல்ல கருத்துகளைக் கூட யாருமே

கண்டு கொள்ளாமலே விட்டு விட வைத்துவிடும்.

அப்படியானவர்களை இந்த யாழ்களம் கண்டு இருக்கிறது.

அவர்கள் மிக படித்த புத்திசாலிகள்.

இருந்தாலும் என்ன பிரயோசனம்?

யாரும் இப்போது கண்டே கொள்வதில்லையே!

தொடர்ந்து இருக்க விரும்புவோருக்கு

இது சரியான அணுகுமுறை இல்லை என்பதே

என் தனிப்பட்ட கருத்து leanadodavinci_uk.

மிகவும் பொருத்தமான உதாரணம் அஜீவன்.. இருந்தாலும் உங்களது பார்வையிலிருந்து எனது பார்வை சற்று விலகியுள்ளது.. தூற்றல்..அச்சுத்தல்களுக்கு பயந்து (கள விதிகளுக்கமைய) கருத்து எழுதாமல் விலகியிருப்பது நல்லதல்ல.. சில வேளைகளில் விலகியிருந்து கருத்துக்களைப்பார்த்து சிரித்துக்கொண்டிருப்பது உத்தமமாக தெரிந்தாலும் மத்தித்திலுள்ள சுவை ஒரு தனி ரகம்.. என்னை எப்படியெல்லாமோ தூற்றி முடித்து தற்போது எப்படியாவது வெளியேற்றுவதற்கான நடவடிக்கையில் இறங்கியுள்ளார்கள்.. வெளியேற்றப்படும்வரை எனது கருத்துக்கள் கள விதிகளுக்கமைய ஆங்காங்கே தொடரும்..

வந்தவேலையை எப்போதோ முடித்துவிட்டேன்.. ஆவலோடு காத்திருக்கிறேன்..

:P :D:D

எனது பார்வை மட்டுமல்ல என் நிலை கூட வேறு மதி!

எனது பெயரில் இணைந்து நிற்கிறேன்.

எனக்கான குறிக்கோள் வேறு............!

இங்கே பரந்து வாழும் தமிழரின் உணர்வுகளை பிரச்சனைகளின் சில துளிகளைத் யாழ் களத்தினூடாக தெரிந்து கொள்கிறேன்.

அதில் வரும் கருத்துகள் என்னிடம் இருப்பதை விட வேறு கோணத்தில் இருப்பதை பார்க்க முடிகிறது.

இது எனக்கு தேவை!

இங்கே எனக்கு என்று ஜெயிப்பதற்கு எதுவுமில்லை.

உங்களை தடைசெய்வது என்பது என்னைப் பொறுத்த வரை

தவறு................

பலர் வெளியில் கேட்கும் - நினைக்கும் கேள்விகளை இங்கே இணைக்கிறீர்கள். அதில் உங்கள் கருத்தும் இணைந்து இருக்கலாம்!

பலரால் களத்தை பார்க்க - படிக்க முடிகிறது!

ஆனால் அவர்கள் எல்லோராலும் எழுத முடிவதில்லை அல்லது ஏன் வம்பு என்று விலகி நிற்கிறார்கள்!

அவர்களுக்கு நீங்கள் வைக்கும் கருத்துகள் - கேள்விகள் தொடர்பாக இங்கே கிடைக்கும் பதில்கள் அல்லது கருத்துகள்

(முறையாக பதில் எழுதினால்) அது உங்களுக்கு மட்டுமல்ல

வினாவோடு வெளியே நிற்பவர்களுக்கும் விடையாக சென்றடைகிறது.

உதாரணத்துக்கு ஒரு நிருபர் கேட்கும் கேள்வி அவரது சொந்தக் கேள்வியல்ல!

அதிகமாக பலரது கேள்விகளை அவர் கேட்கிறார்.

அது கூட பலரால் புரிந்து கொள்ள முடிவதில்லை என்பது வேதனைதான்.

அதை விடுத்து உங்களை விலக்குவதால்

(யாழ்களம் எனது வீடும் என்பதால் சொல்கிறேன்.)

நாங்கள் பலவீனமானவர்கள் என்பதாகிவிடுமே தவிர

வேறு எதையுமே நாங்கள் சாதிக்க முடியாது!

மதி இல்லை என்றால் கொதி என்று கூட உங்களால் வர முடியாதா என்ன? :D

முடிவு என்பது மற்றொன்றின் ஆரம்பம்!

தூற்றல் அச்சுறுத்தல்கள் என்று பயப்பிடாமல்(ஏனெனில் கணணி தானே) ஏதாவது எழுதுக்கொண்டிருப்பீர்கள். நாமும் தேவையான நேரங்களில் நமது பதிலை தருவோம்.

உங்கள் வேலை முடிந்துவிட்டதா???????????? உங்கள் வேலை முடியாது

முடிவு என்பது மற்றொன்றின் ஆரம்பம்!

ரகுவரன் - ஈழவன் மற்றும் ஏனைய உறவுகளுக்கும் நன்றி!

  • தொடங்கியவர்

வெளிநாட்டுப் பிரஜைகளை இன்று வன்னியிலிருந்து அழைத்து வர ஏற்பாடு

21 - August - 2006

வன்னியில் தங்கியுள்ள தென்னிலங்கையைச் சேர்ந்தோர் மற்றும் வெளிநாட்டுப் பிரஜைகள் இன்று திங்கட்கிழமை தமது வாகனங்களில் ஓமந்தை சோதனைச் சாவடி வழியாக வவுனியா வருவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் வழித்துணையுடன் இவர்கள் விடுதலைப் புலிகளுடைய கட்டுப்பாட்டுப் பிரதேசத்திலிருந்து அழைத்து வரப்படுவார்கள் என தொண்டர் நிறுவன அலுவலர் ஒருவர் தெரிவித்தார்.

தாக்குதல்கள் ஆரம்பித்த நாள் முதல் ஓமந்தை சோதனைச் சாவடி மூடப்பட்டுள்ளது. வவுனியா வடக்கிலும் மற்றும் முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்களிலும் வெளிநாட்டுப் பிரஜைகள் வவுனியாவிற்கு வர முடியாது அவதிக்குள்ளானார்கள். இவர்களை இராணுவ கட்டுப்பாட்டுப் பிரதேசமான வவுனியாவிற்கு அழைத்து வரவே ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

- தினக்குரல்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.