Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆரியம், திராவிடம் என்று பிரிப்பதே தவறு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சமகால இந்தியவியலாளர்களில் மிக முக்கியமானவர் 
மிஷல் தனினோ
 (Michel Danino). இவரது சமீபத்திய புத்தகம் (The Lost River: On The Trail Of The 
Sarasvati
 ) சரஸ்வதி: ஒரு நதியின் மறைவு என்னும் தலைப்பில் வெளியாகியுள்ளது. 
B.R. மகாதேவன்
, இணையம் வாயிலாக மிஷல் தனினோவுடன் மேற்கொண்ட நேர்காணல் இது.

உங்கள் பிறப்பு, கல்வி பற்றிக் கூறுங்கள்?

MD-at-Bithoor-on-the-Ganges-20111-300x221956-ல் ஃப்ரான்ஸில் பிறந்தேன். என் பெற்றோர் அப்போதுதான் மொராக்கோவில் இருந்து புலம்பெயர்ந்திருந்தார்கள். என் இளமைக் காலம் வெளித்தோற்றத்துக்கு மிகவும் சந்தோஷமானதாகவே இருந்தது. ஆனால், உள்ளுக்குள் வாழ்க்கை குறித்த ஆழமான புரிதல், அதன் அர்த்தம், நோக்கம் சார்ந்த தேடல் ஓடிக் கொண்டிருந்தது. இதன் காரணமாக நான் விஞ்ஞான படிப்புகள் நோக்கி நகர ஆரம்பித்தேன். ஆனால், என் மனம் கேட்கும் கேள்விகளுக்கான பதில்களை விஞ்ஞானத்தால் கொடுக்க முடியாது என்பது புரியவந்தது.

இந்தியா, இந்தியவியல் குறித்த ஆர்வம் எப்படி ஏற்பட்டது?

இள வயதில் நான் மேற்கொண்ட தேடல்களின் வாயிலாக இந்திய ஆன்மிகம் தொடர்பான புத்தகங்கள் சிலவற்றைப் படிக்க நேர்ந்தது. ஸ்ரீ ராமகிருஷ்ணர், சுவாமி விவேகானந்தர், ஸ்ரீ அரவிந்தர் ஆகியோருடைய நூல்களைப் படிக்க ஆரம்பித்தேன். மனிதனின் உண்மையான இயல்பு உட்பட நான் தேடிக் கோண்டிருந்த பல்வேறு கேள்விகளுக்கான விடைகள் கிடைத்தன. ஸ்ரீ அரவிந்தரின் சிந்தனையை ஏற்றுக்கொண்டு அவர் காட்டிய வழியில் நடக்க ஆரம்பித்தேன். அது வெறும் அறிவுசார்ந்த தேடலில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒன்று மட்டுமே அல்ல.

இந்தியாவில் 1977-ல் இருந்து வசித்து வருகிறீர்கள் அல்லவா? அரோவில் நினைவுகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

அங்கு 1982 வரை ஐந்து வருடங்கள் வசித்தேன். அது மிகவும் கடினமான முன் அனுபவம் இல்லாத வாழ்க்கை. ஆனால், மிகவும் அருமையான சம்பவங்கள் நிறைந்ததும் கூட. ஆரோவில்லில் வசிப்பவர்கள் மிகவும் குறைவுதான். பல்வேறு பிரிவுகள் உண்டு என்றாலும் கூட்டு வாழ்க்கை என்பது உண்மையான அர்த்தத்தில் அங்கு அனுபவித்தேன். இன்று இருப்பதைவிட விஷயங்கள் மிகவும் லகுவானதாகவும் வெளிப்படையானதாகவும் அன்று இருந்தன. அரசு கையகப்படுத்திய பிறகு (ஒருவகையில் அது தவிர்க்க முடியாத ஒன்றாக ஆகியிருந்தது) ஆட்களின் என்ணிக்கை அதிகரித்தது. இப்போது பல்வேறு புதிய சவால்கள் முளைத்துவிட்டிருக்கின்றன.

நீலகிரி மலைத்தொடரில் இருக்கும் சோலைமலைகளின் பாதுகாப்பு தொடர்பான போராட்டத்தில் பங்கெடுத்தீர்கள். அது குறித்துச் சொல்லுங்கள்?

அந்த மலைகளைப் பாதுகாக்க வேண்டும் என்பதுதான் இலக்கு. வன இலாகாவின் தவறான கொள்கைகளால் அந்தப் பசுமை மாறாக் காடுகள் பெரும் அழிவைச் சந்தித்து வந்தன. கோத்தகிரியில் தனி ஒருவனாக பத்து ஆண்டுகளுக்கு மேல் போராடினேன். அங்கு ஒரு கண்காணிப்புக் குழுவை உருவாக்கினோம். அந்தக் குழு மிகச் சிறந்த முறையில் ஒழுங்கு நடவடிக்கைகளை எடுத்தது. பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் மத்தியில் விழிப்பு உணர்வு முகாம்கள் நடத்தினோம். வன இலாகா அதிகாரிகளுக்கும் கிராமத்தினருக்கும் இடையில் பேச்சுவார்த்தைகளுக்கு ஏற்பாடு செய்தோம். காடுகளைப் பாதுகாப்பதில் அங்கு வசிக்கும் மக்களின் பங்களிப்பு மிகவும் அவசியம் என்பது எங்கள் செயல்களின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டது. ஆனால், துரதிஷ்டவசமாக ஒரு சிலரே தீவிரமாகப் போராட முன்வருகிறார்கள்.

‘ஆரியர்கள் இந்தியாவின் மீது படையெடுக்கவும் இல்லை, புலம் பெயர்ந்து வரவும் இல்லை. இந்தியாவின் பூர்வ குடிகளே அவர்கள்.’ இதுதானே உங்கள் ஆய்வின் முடிவு?

ஆரியர்கள் என்று தனியாக ஓர் இனக்குழு இருப்பதாகக் கூறுவதையே முற்றாக மறுதலிக்கிறேன். உள் நாட்டு தஸ்யுகள் அதாவது திராவிடர்களை ஆரியர்கள் போரிட்டு வென்றதாக 19-ம் நூற்றாண்டு ஐரோப்பிய சமஸ்கிருத ஆய்வாளர்கள் ரிக்வேதத்தைப் படித்துவிட்டு சொன்னார்கள். அது வலிந்து உருவாக்கப்பட்ட, இன வாத அடிப்படையிலான கருத்து. ரிக்வேதத்தில் எந்த இடத்திலும் ஆரியர்கள் வெளியில் இருந்து இந்தியாவுக்கு வந்ததாகவோ அவர்களுடைய சொந்த பூமியாகவோ எதையும் குறிப்பிடவே இல்லை. தொல்லியல் சான்றுகளோ மானுடவியல் சான்றுகளோ எதுவும் இல்லாததால் அந்தக் கோட்பாடு இன்று முற்றிலும் வலுவிழந்துவிட்டது.

அப்படியானால், அந்தக் கோட்பாடு எதனால் முன்வைக்கப்பட்டது?

பல்வேறு நோக்கங்கள் இருக்கின்றன: முதலாவது சமஸ்கிருதத்துக்கும் ஐரோப்பிய மொழிகளுக்கும் இடையில் ஓர் உறவு இருக்கிறது என்பதை நிறுவ வேண்டிய அவசியம் இருந்தது. அது ஒருவகையில் உண்மையும் கூட. ஆசியாவில் ஏதோவொரு இடத்தில் இருந்து இந்தியா, இரான், ஐரோப்பா என்று ஆரியர்கள் இடம்பெயர்ந்தார்கள் என்று சொல்வது மிகவும் எளிய யூகமாக இருந்தது.

இந்தியாவின் வேத கலாசாரத்தை வெளியில் இருந்து பூர்வ குடிகள் மேல் திணிக்கப்பட்ட ஒன்றாகத் திரிக்க வேண்டும் என்பது இரண்டாவது நோக்கம். மேல், கீழ் சாதிகளுக்கும் வட-தென் இந்தியர்களுக்கும் இடையிலான இடைவெளியை அதிகரிப்பதற்காகவும் இந்தக் கோட்பாடு முன்வைக்கப்பட்டது. மேலும் பிரிட்டிஷாரின் ஆக்கிரமிப்பு இன்னொரு ஆரிய அலையாக அடையாளம் காணப்படவும் இந்த வாதம் பயன்பட்டது.

திராவிட இயக்கம் தமிழர்களை திராவிடர்கள் என்றும் பிராமணர்களையும் வட இந்தியர்களையும் ஆரியர்கள் என்றும் குறிப்பிடுகிறது. உங்கள் கருத்து?

இது முற்றிலும் ஆதாரமற்ற, அறிவியல் அடிப்படையற்ற கோட்பாடு. 19-ம் நூற்றாண்டு இனவாதக் கோட்பாடுகளை எந்த விமரிசனமும் இன்றி அப்படியே ஏற்றுக் கொண்டு சொல்கிறார்கள். திராவிட இனம், ஆரிய இனம் என்று எந்த இனங்களும் கிடையாது. உயிரியல் கோட்பாடுகள் இந்தக் கருத்தாக்கத்தை பல பத்தாண்டுகளுக்கு முன்பாகவே நிராகரித்துவிட்டிருக்கிறது. தமிழர்களின் பழம் பெரும் இலக்கியமான சங்க இலக்கியத்தில் ஆரிய திராவிட சண்டைகள் பற்றி எந்தக் குறிப்பும் இல்லை. பிராந்திய வேறுபாடுகள் இருந்தனவே தவிர வடக்கும் தெற்கும் ஒரே கலாசாரத்தைப் பின்பற்றின என்றே அது சொல்கிறது. அதாவது அவை ஒன்றுக்கொன்று மாறுபட்டு இருந்தனவே தவிர எதிரிகளாக இருந்திருக்கவில்லை. (மிரர் ஆஃப் தமிழ் அண்ட் சான்ஸ்க்ரிட் என்ற நூலில் டாக்டர் டி.ஆர்.நாக ஸ்வாமி இதற்கான ஏராளமான உதாரணங்களைத் தந்திருக்கிறார்).

ரிக்வேதம் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டதாக எப்படிச் சொல்கிறீர்கள்?

நிறையச் சொல்லலாம். உதாரணத்துக்கு, க்ருஷ்ண த்வச்  (Krishnā tvach)-அதாவது கறுப்பு நிறத்தால் போர்த்தப்பட்ட தஸ்யுகள் என்று சொல்லப்படுகிறது. உலகில் எல்லாக் கலாசாரங்களிலும் தீய சக்திகள் கறுப்பு நிறத்தால்தான் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. கறுப்பு தோல் மனிதர்கள் என்று இதைப் புரிந்துகொண்டது தவறு.

இந்த தஸ்யுகள் ரிக் வேதத்தில் ஒரே ஒரு இடத்தில் அநாச (anāsa) என்று குறிப்பிடப்பட்டார்கள். இதை மாக்ஸ் முல்லர், மூக்கு இல்லாதவர்கள் என்று மொழிபெயர்த்தார். உடனே அனைவரும் சப்பையான மூக்கு கொண்ட திராவிடர்களைத்தான் அது குறிப்பதாக எடுத்துக்கொண்டுவிட்டார்கள். உண்மையில் திராவிடர்கள் சப்பை மூக்கு கொண்டவர்கள் அல்லர். மேலும் அநாச என்பது அ-நாச (a_nāsa) என்று பிரித்துப் பொருள் கொள்ளப்படவேண்டிய சொல். அதாவது வாய் அற்றவர்கள் என்று பொருள். புனித மந்திரங்களைச் சொல்லாதவர்கள் அல்லது புனிதச் சடங்குகளைப் பின் பற்றாதவர்கள் என்று பொருள். இனம் சார்ந்த பிழையான தீர்மானமே இங்கும் திணிக்கப்பட்டது.

தஸ்யுக்களின் கோட்டைகள் (புரம்) கடவுள்களால் அல்லது வேத கலாசாரத்தினரால் தகர்க்கப்பட்டன என்று சொல்கிறார்கள். இதை உறுதிப்படுத்தும் எந்தத் தொல்லியல் ஆதாரமும் கிடைத்திருக்கவில்லை. புரம் என்பது கோட்டை என மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. உண்மையில் அது ஒரு குறியீட்டுச் சொல். நிஜ கட்டுமானத்தைச் சொல்லவில்லை. புரங்கள் நகரும் தன்மை கொண்டவை, கடவுள்களே புரம்தான் என்று சொல்லப்பட்டிருப்பதில் இருந்து இது மேலும் தெளிவாகிறது அல்லவா? இதே குறியீட்டு மொழிதான் பின்னாளில் திரிபுரம் எரித்த சிவன் என்ற ஐதீகத்திலும் இடம்பெற்றிருக்கிறது.

சரஸ்வதி கலாசாரத்துக்கும் கங்கைச் சமவெளிக் கலாசாரத்தும் இடையிலான தொடர்பைப் பற்றி சொல்லுங்கள்.

விவசாயம், உலோகவியல், கட்டுமானம் எனப் பெரும்பாலான துறைகளில் இந்த ஒற்றுமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஸ்வஸ்திகா (ஹரப்பாவினருக்கு மிகவும் புனிதமானது), திரிசூலம், முடிவற்ற முடிச்சு என பல குறியீடுகள் இரண்டு கலாசாரத்திலும் காணப்படுகின்றன. யோக நிலைகள், மூன்று முகங்கள் கொண்ட தெய்வங்கள், தியானத்தில் ஆழ்ந்த உருவங்கள், தீ வழிபாடு, தாய்த்தெய்வம், லிங்க வடிவிலான சிலை, புனித மரங்கள், நீரால் செய்யப்படும் சடங்குகள் போன்றவை இரண்டு கலாசாரத்துக்கும் பொதுவாக இருக்கின்றன.

சரஸ்வதி நதி எப்படி வறண்டது?

இறுதி முடிவு இன்னும் எட்டப்படவில்லை. டெக்டானிக் தட்டுகள் நகர்ந்ததால் யமுனை, சட்லெஜ் நதிகளில் இருந்து சரஸ்வதி நதிக்குக் கிடைத்து வந்த நீர் திசை திருப்பப்பட்டுவிட்டது. பருவ கால மழையும் குறைந்திருக்கிறது. உண்மைக் காரணம் எதுவாக இருந்தாலும் பொது யுகத்துக்கு முன் – 1900 வாக்கில்தான் வற்றியிருக்கவேண்டும். அதனால்தான் ஹரப்பா நாகரிகத்தின் நகர்ப்புறக் காலகட்டம் முடிவுக்கு வந்திருக்கவேண்டும். ஆனால், ரிக்வேதத்தில் சரஸ்வதி நதி, மலையில் ஆரம்பித்து கடலைச் சென்றடையும் பிரமாண்ட நதியாகக் குறிக்கப்பட்டிருக்கிறது. இது நிச்சயம் பொ.யு.மு.2000க்கு வெகு முன்னர்தான் சாத்தியம். ஆனால், ஆரியப் படையெடுப்புக் கோட்பாட்டாளர்கள் பொ.யு.மு. 1200 வாக்கில்தான் ஆரியர்கள் வந்ததாகச் சொல்கிறார்கள். நதி வற்றியபின் வந்திருந்தால் பொங்கிப் பாய்ந்த நதி பற்றி எப்படிப் பாடியிருக்க முடியும்?

ஆன்மிகத் தளத்தில் மட்டுமே இந்தியா உயர்ந்த நிலையை எட்டியிருக்கிறது என்று சிலர் சொல் கிறார்கள். இது உண்மையா?

பொருளாதார, சமூக விஷயங்களில் பின்தங்கி இருக்கும் ஒரு பகுதியில் ஆன்மிக மலர்ச்சி சாத்தியமே இல்லை. ஆன்மிக சாதனைகள் நடத்தப்பட்ட அதே காலகட்டத்தில் சமூகத்தின் தொழில்நுட்ப, பொருளாதார லோகாதாய அம்சங்களிலும் சாதனைகள் நடந்திருக்கின்றன. உதாரணத்துக்கு குப்தர் காலகட்டத்தை எடுத்துக்கொண்டால், இலக்கியம், கட்டடக்கலையில் ஆரம்பித்து கணிதம், வான சாஸ்திரம் என ஒவ்வொரு துறையிலும் இந்தியா உச்சத்தை எட்டியிருக்கிறது.

‘கிறிஸ்தவர்கள் மதப் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபடுவதற்குக் காரணம், அவர்களுடைய மதம் பிரசாரம் செய்யத் தகுந்த ஒன்று. இந்தியர்களிடம் போதிக்கத் தகுந்த வகையில் எதுவுமே இல்லை. எனவே, அவர்கள் பிரசாரங்களில் ஈடுபடவில்லை!’ என்று ஒரு கிறிஸ்தவ மதபோதகர் என்னிடம் சொன்னார். இது உண்மையா?

கிறிஸ்தவ மத போதகர்கள் உள்ளுக்குள் ஒருவிதப் பாதுகாப்பின்மையை உணர்கிறார்கள். இதுதான் உண்மை. இதனால்தான் பல்வேறு சலுகைகளைக் காட்டி தங்கள் மதத்தைத் தீவிரமாகப் பிரசாரம் செய்கிறார்கள். இந்துக்கள், சமணர்கள், பௌத்தர்கள் என எல்லாரும் மதப் பிரசாரம் செய்தவர்கள்தாம். ஆனால், மலின யுக்திகளையோ நெருக்கடிகளையோ அவர்கள் பயன்படுத்தவில்லை. வலிந்து திணிக்கவில்லை. அறிவார்ந்த உரையாட லின் அங்கமாக விருப்பப்பட்டதைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளும் சுதந்தரத்துடன் அந்த பிரசாரங்கள் நடந்திருக்கின்றன.

அசோகர் இதைத் தன் கல்வெட்டில் மிகத் தெளிவாகவே குறிப்பிட்டிருக்கிறார்: ‘எவரொருவர் தன் மதத்தை அளவுக்கு அதிகமாகப் புகழ்ந்துகொள்கிறாரோ, தம் மதத்தைப் பெருமைப்படுத்தும் நோக்கில் பிற மதங்களை இகழ்கிறாரோ அவர் உண்மையில் தன் மதத்துக்குக் கெடுதலே அதிகம் செய்கிறார். எனவே, மதங்களுக்கு இடையிலான தொடர்பும் பரிவர்த்தனையும் நல்லதுதான். ஒருவர் இன்னொருவர் சொல்வதைப் பொறுமையுடன் காதுகொடுத்துக் கேட்கவேண்டும். அதை மதிக்க வேண்டும்.’

கர்ம வினை, மறு பிறப்பு, யோகா, தியானம் போன்றவை மேற்குலகில் மிகவும் நிதானமாக மௌனமாகப் பரவியிருப்பதை ஒருவர் காணமுடியும். பிரசாரம் செய்யத் தகுதியில்லாததாக இருந்திருந்தால் எப்படி அவை பரவியிருக்க முடியும்?

சாதி முறைகள் பற்றிய உங்கள் கருத்து என்ன?

சாதி அதனளவில் மிகவும் இயல்பான ஒரு சமூகப் படிநிலைதான். மத்திய கால ஐரோப்பாவிலும் புரோகித வர்க்கம், மன்னர் வர்க்கம் அல்லது நிலப்பிரபுத்துவ வர்க்கம், வர்த்தகர்கள், பிற பணியாளர்கள் (இவர்கள் இந்தியாவில் இருந்த சூத்திரர்களைவிட மிகவும் மோசமான நிலையில் இருந்தனர்) என பிரிவுகள் இருக்கத்தான் செய்தன.

ஆரம்பகால இந்தியாவில் சாதிகள் அல்லது பல்வேறு சமூகங்கள் ஒட்டுமொத்த சமூகத்தின் பொருளாதார வளர்ச்சிக்கும் நிலைத்தன்மைக்கும் பெரும் பங்காற்றியிருக்கின்றன. அந்தச் சமூகம் கடமை களும் பணிகளும் கொண்ட சமூகம். ‘மனித உரிமைகள்’ பற்றிப் பேசிய சமூகம் அல்ல. ஆனால், உண்மையில் நாம் நினைத்ததை விட சாதிய அடுக்குகளில் மேல் கீழ் நகர்வுகள் இருந்திருக்கின்றன. எம்.என்.ஸ்ரீனிவாஸ் போன்றோருடைய படைப்புகளில் இருந்து அது நன்கு தெரியவந்திருக்கிறது. பிரிட்டிஷாரின் கணக்கெடுப்பு மூலமாக உருவான பிந்தைய சாதி அடையாளம்தான் இப்படியான நகர்வை முழுவதுமாகத் தடுத்து நிறுத்தியது. இட ஒதுக்கீட்டுக் கொள்கை அதை மேலும் இறுக வைத்திருக்கிறது.

சாதி அமைப்பு அதன் பயன் பாட்டுக் காலத்தைத் தாண்டியும் உயிர் வாழ்ந்துகொண்டிருக்கிறதா என்பதுதான் நாம் கேட்க வேண்டிய கேள்வி. சுதந்தர இந்தியாவில் இந்த சாதி இயல்பாகவே மாற்றமடைந்திருக்கும். ஆனால், இட ஒதுக்கீட்டுக் கொள்கைகள் அதை மேலும் இறுகச் செய்திருப்பதாகவே எனக்குத் தோன்றுகிறது.

ஓர் ஆய்வாளராக, இந்திய வரலாறு குறித்து உங்களுக்குக் கிடைக்கும் சித்திரம் என்ன?

காலனிய ஆதிக்கத்துக்கு உட்படுத்தப்பட்ட எல்லா நாடுகளின் வரலாறுகளைப் போலவே இந்திய வரலாறும் திரிக்கப்பட்டுத்தான் இருக்கிறது. அது ஆதிக்க சக்திகளால் எழுதப்பட்டது என்பதால், தன் வெற்றியை நியாயபடுத்துவதற்காக அடிமைப்படுத்தப்பட்ட நாடுகளை காட்டு மிராண்டித்தனமானவை என்றும் தேங்கிப் போன சமுதாயம் என்றும் அவர்கள் எழுதி வைத்தார்கள்.

(ஆர்.சி.மஜூம்தார் போன்றவர்கள் நீங்கலாக) மார்க்சிய வரலாற்றாய்வாளர்கள் இந்திய வரலாறு என்ற பெயரில் மார்க்சிய வரலாற்று சட்டகத்துக்குள் காலனியத் திரிபுகளை அரசியல் பக்கபலத்துடன் எழுதிவைத்திருக்கிறார்கள். பல்வேறு சுதந்தரமான வரலாற்று ஆய்வாளர்களின் பங்களிப்புகளின் மூலம் இந்தக் காலகட்டத்தில் இருந்து வெளியே வந்துகொண்டிருக்கிறோம். ஆனால், வரலாற்றுத் திரிபுகளை விட்டுவிலகி வருவது அத்தனை எளிதல்ல. குறிப்பாக பள்ளிக் கல்விப் புத்தகங்கள் எழுதிவரும் நபர்கள், இப்போது நடந்திருக்கும் மாற்றங்கள் எதையும் கணக்கில் கொள்ளாமல் பழைய தவறுகளையே தொடர்ந்து இடம்பெறச் செய்துவருகிறார்கள்.

இந்தியாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? முக்கியமாகச் செய்ய வேண்டியவை எவைஎன்று நினைக்கிறீர்கள்?

Michel-Danino-at-Dholavira-16-03-09-300xலஞ்ச ஊழலை ஒழிக்க வேண்டும்; நல்ல ஆட்சி நிர்வாகத்தை கொண்டுவரவேண்டும்; கல்வியின் தரமும் வீச்சும் அதிகரிக்க வேண்டும். இப்படிப் பல விஷயங் கள். ஆனால், இவற்றை எப்படிச் செய்வது? தங்கள் மீதும் இந்தியா வின்மீதும் நம்பிக்கை வைத்திருக்கும் கணிசமான நபர்கள் இதற்கான முயற்சியை எடுக்கவேண்டும்.

ஒருவர் தன் மீது நம்பிக்கைகொண்டு சொந்தக்காலில் நிற்க வேண்டுமானால் கலாசாரத்தின் மதிப்பீடுகளில் ஆழமாக வேரூன்றியிருக்க வேண்டும். இன்று பெரும்பாலானோருக்கு இந்திய கலாசாரம் என்பது  ஒரு பழம் பொக்கிஷம்போல் தள்ளி நின்று பார்க்க வேண்டிய ஒன்றாகவே இருக்கிறது. வாழ்க்கையை மாற்றி அமைக்கும் ஒன்றாக அதைப் பார்ப்பதில்லை.

* ஆழம்  இதழில் வெளியான நேர்காணலின் முழு வடிவம்.

  • கருத்துக்கள உறவுகள்

இவரது கருத்துக்களில் பலவித முரண்பாடுகள் காணப்படுகின்றன! இராமாயாணத்தில் குறிப்பிடப்படும் சரயு நதியே சரஸ்வதி நதியாகும்! சீதையை இராவணன் தூக்கிக்கொண்டு சென்ற போது, 'சடாயு' சரயு நதிக்கரையிலேயே, இறகுகள் வெட்டப்பட்டுக் கிடந்ததை இராமன் காணுகிறான்! வசிட்டரும் தனது தவத்தை, சரஸ்வதி நதிக்கரையிலேயே செய்ததாக, இராமாயணத்தில் குறிப்புக் காணப்படுகின்றது! அத்துடன், ஹரப்பன்/ மொகஞ்சிதாரோ நாகரீகங்கள், இப்போதைய ஆப்கானிஸ்தான்/ பாகிஸ்தான் பகுதிகளிலேயே காணப்படுகின்றது! இந்தப்பகுதியால் தான் சரயு நதி ஓடியதாக, விண்வெளியில் இருந்து எடுத்த படங்கள் மூலம், நதியின் பாதை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது!

இவர் திராவிடர் எனக்குறிப்பிடுவது, பதின்மூன்றாம் நூற்றாண்டுகளில், தமிழ் நாட்டில் குடி புகுந்தவர்களையே!

அதாவது, 'தாசர்கள்' என்று வேதங்களில் குரிப்ப்டப்படுவதை, இவர் திராவிடர்கள் என்று குறிப்பிடவில்லை என்றே கருதவேண்டியுள்ளது!

தாசர்களிடமிருந்து கேள்வி ஞானத்தால் பெற்ற 'ருக்' வேதத்தை, சமஸ்கிரித மொழியில்  (தேவ மொழி) எழுதி, வேதத்தின் பொருளையே மாற்றித், தாசர்களை அழித்த வீர வரலாறாக எழுதிவிடுவதால், ஆரியர்கள் தாசர்களுக்குச் செய்த அநியாயங்களும், நில அபகரிப்புக்களும் மறைந்து விடாது! அதை விடவும் கெட்டித்தனம்,  தாசர்களின் அழிவுக்குக் காரணமான ஆரியர்களையே, தாசர்களின் தெய்வங்களாக்கி அவர்களையே வணங்க வைத்து,அவர்கள் தலையிலேயே மிளகாய் அரைப்பது தான்!

இங்கு தான், ஆரியம் மேலெழுந்து நிற்கின்றது! :wub:

மற்றும் படி, ருக் வேதமும், இன்னொரு 'மகாவம்சமே' ! :icon_idea:

‘ஆரியர்கள் இந்தியாவின் மீது படையெடுக்கவும் இல்லை, புலம் பெயர்ந்து வரவும் இல்லை. இந்தியாவின் பூர்வ குடிகளே அவர்கள்.’ இதுதானே உங்கள் ஆய்வின் முடிவு?

ஆரியர்கள் என்று தனியாக ஓர் இனக்குழு இருப்பதாகக் கூறுவதையே முற்றாக மறுதலிக்கிறேன். உள் நாட்டு தஸ்யுகள் அதாவது திராவிடர்களை ஆரியர்கள் போரிட்டு வென்றதாக 19-ம் நூற்றாண்டு ஐரோப்பிய சமஸ்கிருத ஆய்வாளர்கள் ரிக்வேதத்தைப் படித்துவிட்டு சொன்னார்கள். அது வலிந்து உருவாக்கப்பட்ட, இன வாத அடிப்படையிலான கருத்து. ரிக்வேதத்தில் எந்த இடத்திலும் ஆரியர்கள் வெளியில் இருந்து இந்தியாவுக்கு வந்ததாகவோ அவர்களுடைய சொந்த பூமியாகவோ எதையும் குறிப்பிடவே இல்லை. தொல்லியல் சான்றுகளோ மானுடவியல் சான்றுகளோ எதுவும் இல்லாததால் அந்தக் கோட்பாடு இன்று முற்றிலும் வலுவிழந்துவிட்டது.

அப்படியானால், அந்தக் கோட்பாடு எதனால் முன்வைக்கப்பட்டது?

பல்வேறு நோக்கங்கள் இருக்கின்றன: முதலாவது சமஸ்கிருதத்துக்கும் ஐரோப்பிய மொழிகளுக்கும் இடையில் ஓர் உறவு இருக்கிறது என்பதை நிறுவ வேண்டிய அவசியம் இருந்தது. அது ஒருவகையில் உண்மையும் கூட. ஆசியாவில் ஏதோவொரு இடத்தில் இருந்து இந்தியா, இரான், ஐரோப்பா என்று ஆரியர்கள் இடம்பெயர்ந்தார்கள் என்று சொல்வது மிகவும் எளிய யூகமாக இருந்தது.

இந்தியாவின் வேத கலாசாரத்தை வெளியில் இருந்து பூர்வ குடிகள் மேல் திணிக்கப்பட்ட ஒன்றாகத் திரிக்க வேண்டும் என்பது இரண்டாவது நோக்கம். மேல், கீழ் சாதிகளுக்கும் வட-தென் இந்தியர்களுக்கும் இடையிலான இடைவெளியை அதிகரிப்பதற்காகவும் இந்தக் கோட்பாடு முன்வைக்கப்பட்டது. மேலும் பிரிட்டிஷாரின் ஆக்கிரமிப்பு இன்னொரு ஆரிய அலையாக அடையாளம் காணப்படவும் இந்த வாதம் பயன்பட்டது.

படையெடுப்பில்(Invasion) இரண்டு வகையான படையெடுப்புகள் உள்ளன

1. அரசியல் படையெடுப்பு(போர் மூலம்)

2. பண்பாட்டுப் படையெடுப்பு

பண்பாட்டுப் படையெடுப்பைப் பற்றி விளக்கவேண்டுமென்றால், அதற்குச் சிறந்த உதாரணம் ஆங்கிலேயர்கள் தான். அவர்கள் நுழையும் பொழுது எப்படி நுழைந்தார்கள். போர் மூலம் நுழையவில்லை. வணிகத்திற்காக நுழைந்தவர்கள் அவர்கள். நம் நாட்டை விட்டுச் செல்லும் பொழுது எப்படிச் சென்றார்கள்(ஆட்சியில் இருந்தார்கள்). ஆரியர்களுக்கும் ஆங்கிலேயர்களுக்கும் ஒரே வித்தியாசம் தான். ஆங்கிலேயர்கள் வணிகத்தை பயன்படுத்தி நாடுகளையும் நாடுகளின் மன்னர்களையும் பிடித்தனர். ஆரியர்கள் மதத்தைப் பயன்படுத்தி நாடுகளையும் நாடுகளின் மன்னர்களையும் பிடித்தனர்.

இந்தக் கோட்பாட்டை பிரித்தறியத் தெரியாதவர்கள் தான் ஆரிய படையெடுப்பை பொய்யென்பர்.

ஆரியப் படையெடுப்பை ஆயும் ஆய்வாளர்கள், 'ஆரியப் படையெடுப்பு' என்றால் அது அரசியல் படையெடுப்புத்தான் என வேண்டுமென்றே ஆரியர்கள் செய்த பண்பாட்டுப் படையெடுப்பை மறைக்கிறார்களா அல்லது தெரியாமல் செய்கிறார்களா எனத்தெரியவில்லை.

இந்தியத் துணைக்கண்டத்தில் ஆரியர்கள் முதலில் பண்பாட்டுப் படையெடுப்பைச் செய்து, பின்பு அதன் மூலம் பிடித்த அரசை வைத்து அரசியல் படையெடுப்புச் செய்தவர்கள். வரலாறு கூறும் இவ்வுண்மைக்குச் சான்றுகள் பல. ஆனால், ஆரிய உலகம் அவற்றை ஏற்க மறுக்கிறது.

திராவிட இயக்கம் தமிழர்களை திராவிடர்கள் என்றும் பிராமணர்களையும் வட இந்தியர்களையும் ஆரியர்கள் என்றும் குறிப்பிடுகிறது. உங்கள் கருத்து?

இது முற்றிலும் ஆதாரமற்ற, அறிவியல் அடிப்படையற்ற கோட்பாடு. 19-ம் நூற்றாண்டு இனவாதக் கோட்பாடுகளை எந்த விமரிசனமும் இன்றி அப்படியே ஏற்றுக் கொண்டு சொல்கிறார்கள். திராவிட இனம், ஆரிய இனம் என்று எந்த இனங்களும் கிடையாது. உயிரியல் கோட்பாடுகள் இந்தக் கருத்தாக்கத்தை பல பத்தாண்டுகளுக்கு முன்பாகவே நிராகரித்துவிட்டிருக்கிறது. தமிழர்களின் பழம் பெரும் இலக்கியமான சங்க இலக்கியத்தில் ஆரிய திராவிட சண்டைகள் பற்றி எந்தக் குறிப்பும் இல்லை. பிராந்திய வேறுபாடுகள் இருந்தனவே தவிர வடக்கும் தெற்கும் ஒரே கலாசாரத்தைப் பின்பற்றின என்றே அது சொல்கிறது. அதாவது அவை ஒன்றுக்கொன்று மாறுபட்டு இருந்தனவே தவிர எதிரிகளாக இருந்திருக்கவில்லை. (மிரர் ஆஃப் தமிழ் அண்ட் சான்ஸ்க்ரிட் என்ற நூலில் டாக்டர் டி.ஆர்.நாக ஸ்வாமி இதற்கான ஏராளமான உதாரணங்களைத் தந்திருக்கிறார்).

சங்க இலக்கியங்களில் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் பற்றியும் அவன் செய்த ஆரியர்களுடனான போர் பற்றியும் இருப்பது அவருக்குத் தெரியவில்லை போலும்.

கி.பி. 1ஆம் நூற்றாண்டிலேயே சேர சோழ பாண்டிய வேந்தர்கள் வைதீக(ஆரிய) மதத்தை ஆதரித்ததாக சங்க இலக்கியங்கள் கூறுவது அவருக்குத் தெரியவில்லை.

தமிழ் இலக்கியங்களை, தமிழ் மொழியை முழுமையாகப் புரிந்துகொள்ளாதவர்கள் ஆய்ந்தால் இப்படித்தான்.

  • கருத்துக்கள உறவுகள்

திராவிட இயக்கம் தமிழர்களை திராவிடர்கள் என்றும் பிராமணர்களையும் வட இந்தியர்களையும் ஆரியர்கள் என்றும் குறிப்பிடுகிறது. உங்கள் கருத்து?

இது முற்றிலும் ஆதாரமற்ற, அறிவியல் அடிப்படையற்ற கோட்பாடு. 19-ம் நூற்றாண்டு இனவாதக் கோட்பாடுகளை எந்த விமரிசனமும் இன்றி அப்படியே ஏற்றுக் கொண்டு சொல்கிறார்கள். திராவிட இனம், ஆரிய இனம் என்று எந்த இனங்களும் கிடையாது. உயிரியல் கோட்பாடுகள் இந்தக் கருத்தாக்கத்தை பல பத்தாண்டுகளுக்கு முன்பாகவே நிராகரித்துவிட்டிருக்கிறது. தமிழர்களின் பழம் பெரும் இலக்கியமான சங்க இலக்கியத்தில் ஆரிய திராவிட சண்டைகள் பற்றி எந்தக் குறிப்பும் இல்லை. பிராந்திய வேறுபாடுகள் இருந்தனவே தவிர வடக்கும் தெற்கும் ஒரே கலாசாரத்தைப் பின்பற்றின என்றே அது சொல்கிறது. அதாவது அவை ஒன்றுக்கொன்று மாறுபட்டு இருந்தனவே தவிர எதிரிகளாக இருந்திருக்கவில்லை. (மிரர் ஆஃப் தமிழ் அண்ட் சான்ஸ்க்ரிட் என்ற நூலில் டாக்டர் டி.ஆர்.நாக ஸ்வாமி இதற்கான ஏராளமான உதாரணங்களைத் தந்திருக்கிறார்).

இதை யாழில எத்தனை வகையில எடுத்துச் சொன்னம். ம்ம்.. அதை அன்று நிராகரித்தவர்கள் இன்றும் திராவிடம் என்ற மாயையின் தீது கண்டு தாங்களாகவே ஒதுங்கிவிட்டனர். அண்ணன் சபேசனைத் தவிர..! :lol::D

Edited by nedukkalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.