Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சனல்4 தொலைக்காட்சியில் வெள்ளை வான் திரைப்படம்

Featured Replies

சனல்4 தொலைக்காட்சியில் காணாமல் போன சம்பவங்களை அடிப்படையாக கொண்ட வெள்ளை வான் திரைப்படம்
[ திங்கட்கிழமை, 28 ஒக்ரோபர் 2013, 06:33.31 AM GMT ]

இந்தியாவின் சுயாதீன திரைப்பட நெறியாளரான லீனா மணிமேகலை பிரத்தியேக காட்சிகளுடன் கூடிய "வெள்ளை வான்" என்ற விவரண திரைப்படத்தை தயாரித்துள்ளார்.
வெள்ளை வான் என்ற இந்த திரைப்படம் இலங்கையில் காணாமல் போக செய்யும் சம்பவங்களை மையப்படுத்தி தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்த விவரணத் திரைப்படம் நவம்பர் மாதம் பிரித்தானியாவின் செனல் 4 தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பட உள்ளது.

இந்த திரைப்படத்தின் 12 நிமிடங்கள் கொண்ட விசேட தொகுப்பு அமெரிக்காவின் சி.என்.என். மற்றும் அவுஸ்திரேலியாவின் ஏ.பி.சி ஆகிய தொலைக்காட்சிகளிலும் ஒளிப்பரப்பட உள்ளது.

கொழும்பில் பொதுநலவாய நாடுகளின் அரச தலைவர்கள் கலந்து கொள்ளும் மாநாடு நடைபெறவுள்ள நிலையில் உலக தொலைக்காட்சிகள் இலங்கையில் மனித உரிமை மீறல்கள் அதிகரித்துள்ளமை தொடர்பில் கடும் விமர்சனங்களை முன்வைக்க உள்ளன.

இரண்டு மணி நேரம் ஓடக் கூடிய இந்த வெள்ளை வான் திரைப்படத்தை லீனா மணிமேகலை தயாரித்து இயக்கியுள்ளார்.

சகல இனங்களையும் சேர்ந்த மற்றும் மாகாண ரீதியில் போருக்கு பிந்திய இலங்கையில் காணாமல் போன நபர்களின் அன்புகுரியவர்களின் சோகங்களை அடிப்படையாக கொண்டு இந்த திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

1980 முதல் 1990 வரையில் நடந்த ஜே.வி.பியின் ஆயுத கிளர்ச்சியின் போது காணாமல் போனவர்கள் மற்றும் இலங்கையில் நடைபெற்ற தீவிர உள்நாட்டு போரின் போது காணாமல் போன தமிழ், சிங்கள, முஸ்லிம் அனைத்து இன மக்கள் தொடர்பான விடயங்கள் இந்த திரைப்படத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக லீனா மணிமேகலை தெரிவித்துள்ளார்.

 

உலகத் தமிழர் இணைய இணைப்பு

 

 

 

 

லீனா :icon_mrgreen:

 

  • கருத்துக்கள உறவுகள்

எல்லா இனத்தவர்களுக்கும் பொதுவாக எடுக்கப்பட்டது உண்மையாயின், எதிர்பாளர்கள் பலரை நெளிய வைக்கும்.

 

புரியாத ஒருவிடயம் என்னவெனில், லீலா மணிமேகலை எவ்வாறு வெள்ளைவானிடம் தப்பினார்?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.