Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விக்கினேஸ்வரனும் சம்பந்தனும் நாடகமாடாது முஸ்லிம்களின் நிலங்களை ஒப்படைக்க வேண்டும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
வடக்கில் இருந்து முஸ்லிம் மக்­களை வெளி­யேற்­றி­ய­மைக்கு வடக்குத் தமி­ழர்­களும் பொறுப்புக் கூற வேண்டும். அன்று துப்­பாக்கி முனையில் விரட்­டப்­பட்ட அப்­பாவி முஸ்லிம் மக்­க­ளுக்கு இன்று வரை ஆத­ரவு கிடைக்­க­வில்லை.
sambanthan-vigneswaran.jpg
விக்கி­னேஸ்­வ­ரனும் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பும் நாட­க­மா­டாது முஸ்லிம் மக்­களின் நிலங்­களை உட­ன­டி­யாக ஒப்­ப­டைக்க வேண்டும் என்று முஸ்லிம் சகோ­த­ரத்­துவ அமைப்பு தெரி­வித்­துள்­ளது.
 
பிர­பா­க­ரனால் முஸ்லிம் மக்கள் விரட்­டப்­பட்டு 23 வரு­டங்­க­ளா­கின்­றன. இதற்கு எதிர்ப்பு தெரி­விக்கும் வகையில் கொழும்பில் பாரிய ஆர்ப்­பாட்­ட­மொன்­றி­னையும் மேற்­கொள்­ள­வுள்ளோம் எனவும் அவ்­வ­மைப்பு தெரி­வித்­துள்­ளது.
 
செள­சி­ரி­பா­யவில் நேற்று முன்­தி­னம் முஸ்லிம் சகோ­த­ரத்­துவ அமைப்­பினால் ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்த செய்­தி­யாளர் சந்­திப்பின் போதே அவ் அமைப்­பினர் மேற்­கண்­ட­வாறு கருத்து தெரி­வித்­தனர்.
 
இது தொடர்­பாக முஸ்லிம் சகோ­த­ரத்­துவ அமைப்பின் உறுப்­பி­னரும் தேசிய சுதந்­திர முன்­ன­ணியின் அர­சியல் குழுத் தலை­வ­ரு­மான மொஹமட் முசம்மில் கருத்துத் தெரி­விக்­கையில்,
 
வடக்கில் இருந்த அப்­பாவி முஸ்லிம் மக்கள் விடு­தலைப் புலி­க­ளினால் வெளி­யேற்­றப்­பட்டு 23 வரு­டங்­க­ளா­கின்­றது. அன்று ஆயு­த­மு­ணையில் அப்­பாவி மக்­களை வெறும் 500 ரூபா­வுடன் விரட்­டினர். முஸ்லிம் பெண்­க­ளையும் வய­தா­ன­வர்­க­ளையும் அச்­சு­றுத்தி அவர்­களின் சொத்­துக்­களை கொள்­ளை­ய­டித்து ஒரு அரா­ஜ­க­மான செயலே அன்று பிர­பா­கரன் செய்தார். பின்னர் இலங்கை இரா­ணு­வத்­தினர் அர­சாங்­கத்­துடன் சேர்ந்து செய்­து­மு­டித்த யுத்த வெற்­றி­யோடு நாட்டில் இருந்த தீவி­ர­வாதம் முடி­விற்குக் கொண்­டு­வ­ரப்­பட்­டுள்­ளது.
 
எனினும் தற்­போது வட மாகாண சபைத் தேர்­தலின் பின்னர் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்­பினர் முஸ்லிம் மக்­களை ஆத­ரிப்­ப­தாக வாக்­கு­று­தி­ய­ளித்­துள்­ளனர்.
 
வடக்கில் மீண்டும் முஸ்லிம் மக்கள் வாழ்­வ­தற்­கான சூழல் ஏற்­பட்­டுள்­ளது. இதனை குழப்பும் வகையில் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்­பினர் செயற்­ப­டக்­கூ­டாது விக்­கினேஸ்­வ­ரனும் சம்­பந்­தனும் பொய்­யான கருத்­துக்­களை கூறி மக்­களை ஏமாற்­றாது குறித்த கால எல்­லைக்குள் முஸ்லிம் மக்­களை குடி­ய­மர்த்த வேண்டும்.
 
விடு­தலைப் புலி­க­ளினால் அப­க­ரிக்­கப்­பட்ட முஸ்லிம் மக்­களின் நிலங்­களை மீண்டும் அம் மக்­க­ளுக்கே ஒப்­ப­டைக்க வேண்டும் எனவும் அவர் தெரி­வித்தார். இது தொடர்­பாக முஸ்லிம் சகோ­த­ரத்­துவ அமைப்பின் உறுப்­பினர் மெள­லவி எம். எப். பாரூக் தெரி­விக்­கையில்,
 
நாம் சகோ­த­ரத்­து­வத்­துடன் இலங்­கையில் அனைத்துப் பகு­தி­க­ளிலும் வாழ்ந்து வரு­கின்றோம். இதே நிலைமை வடக்­கிலும் ஏற்­பட வேண்டும். இலங்­கையில் வாழும் முஸ்லிம் மக்­களில் மூன்றில் இரண்டு பகு­தி­யினர் சிங்­கள மக்­க­ளு­ட­னேயே வாழ்ந்து வரு­கின்­றனர். அவர்கள் மகிழ்ச்­சி­யாக வாழ்ந்து வந்­தாலும் வடக்கில் இருந்து வெளி­யேற்­றப்­பட்ட மக்கள் நிம்­ம­தி­யான வாழ்க்­கை­யினை வாழ­வில்லை.
 
இன்று 20 ஆயி­ரத்­திற்கும் அதி­க­மான முஸ்லிம் குடும்­பங்கள் வடக்கில் இருந்து வெளி­யேற்­றப்­பட்­டனர். இதற்கு தமிழ் மக்கள் பெறுப்­புக்­கூற வேண்டும். இன்று வடக்கில் வாழும் தமி­ழர்கள் முஸ்லிம் மக்­களை ஆத­ரித்து அவர்­களின் இடங்­களை ஒப்­ப­டைக்க அர­சாங்கம் உதவி செய்ய வேண்டும். தமிழர் சிங்­க­ள­வர்­களைப் போல் முஸ்லிம் மக்கள் யுத்­தத்­தினை விரும்­பு­வ­தில்லை அவர்கள் அனைத்து இனத்­த­வர்­களும் இணைந்து அமை­தி­யாக வாழ எப்­போதும் நினைப்­ப­வர்கள். இதனை வடக்கில் வாழும் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
 
எமக்கு கிடைக்க வேண்­டிய உரி­மை­க­ளுக்­காக நாம் தொடர்ந்தும் போரா­டுவோம். எமக்கு வடக்கு, கிழக்கு இணைப்­பினை விடவும் முஸ்லிம் மக்­களின் உரி­மை­களே முக்­கி­ய­மா­னது. அதை புரிந்து கொண்டு அர­சாங்­கமும் வடக்கின் கட்­சி­களும் செயற்­பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
 
மேலும் வடக்கில் இருந்து முஸ்லிம் மக்களை விரட்டிவிட்டமைக்கும் வடக்கில் மீண்டும் மக்களை குடியமர்த்த வேண்டும் என்பதனை வலியுறுத்தியும் முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பினால் கொழும்பு லிப்டன் சுற்றுவட்டத்தில் ஆர்ப்பாட்டமொன்றினை மேற்கொள்ளவுள்ளதாகவும் அவ் அமைப்பு தெரிவித்துள்ளது.
 
முஸ்லிம் சகோ­த­ரத்­துவ அமைப்பின் உறுப்­பி­னரும் மொஹமட் முசம்மில் கருத்துத் தெரி­விக்­கையில்,

 

 

முஸ்லிம் சகோ­த­ரத்­துவ அமைப்பின் உறுப்­பினர் மெள­லவி எம். எப். பாரூக் தெரி­விக்­கையில்,

 

இன்று வடக்கில் வாழும் தமி­ழர்கள் முஸ்லிம் மக்­களை ஆத­ரித்து அவர்­களின் இடங்­களை ஒப்­ப­டைக்க அர­சாங்கம் உதவி செய்ய வேண்டும். தமிழர் சிங்­க­ள­வர்­களைப் போல் முஸ்லிம் மக்கள் யுத்­தத்­தினை விரும்­பு­வ­தில்லை

 

வடக்கு, கிழக்கு இணைப்­பினை விடவும் முஸ்லிம் மக்­களின் உரி­மை­களே முக்­கி­ய­மா­னது. அதை புரிந்து கொண்டு அர­சாங்­கமும்

 

 

 

தேசிய சுதந்திர முன்னணியில் சேர்ந்திருக்கும் முசாமிலிற்கு தான் எங்கே இருக்கிறேன், என்ன பேசுகிறேன், யார் அருகில் இருக்கிறார்கள் என்பது எப்போதுமே புரிந்திருந்ததில்லை. ஆனால் இப்போது முகமட் முசாமிலுக்கு தேசிய சுதந்திர முன்னனி புளிக்கிற்தா அல்லது தேசிய சுதந்திர முன்னணிகே அரசு புளிக்கிறதா? 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீதியான பதில் வேண்டும். இலங்கை குடிமக்கள் நாட்டின் அனைத்து பகுதிகளிலும் வாழ உரிமையுண்டு. இது தான் முதலமைசர் விக்னேஷ்வரனின்  கொள்கை :-)


இது எனது கொள்கை இல்லை. என்னோட சண்டைக்கு வர வேண்டாம் :wub:

  • கருத்துக்கள உறவுகள்
 
எனினும் தற்­போது வட மாகாண சபைத் தேர்­தலின் பின்னர் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்­பினர் முஸ்லிம் மக்­களை ஆத­ரிப்­ப­தாக வாக்­கு­று­தி­ய­ளித்­துள்­ளனர்.
 

 

வேலியில் போகும் ஓணானை மடியில் பிடித்துக் கட்டுவேன் என அடம்பிடிக்கும் அங்கத்தவர்களையும் தமிழர் கூட்டமைப்பு கொண்டுள்ளது. அதற்குள் பெரிய மடிபோட்டு பட்டுவேட்டியைத் தான் கட்டியிருப்பதாக சுமந்திரன் ஏற்கெனவே அறிவித்தும் விட்டார். :o  

எனக்கு புரியவில்லை. கடந்த பதினெட்டு வருடங்களாக யாழ் குடாநாடு அரச கட்டுப்பாட்டு பகுதியில் உள்ளது. ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட இராணுவத்தினரின் அடக்குமுறையும் உள்ளது.  பதினெட்டு வருட எல்லா அரசாங்க்களிலும் முஸ்லீம் கட்சிககள் பங்காளிகளாக முக்கிய அமைச்சுப்பதவிகளில் உள்ளனர். ஏன் தற்போதும் தமிழ் மக்களை குற்றம் சாட்டுகி்ன்றனர். தங்கள் பிரச்சனைகளை  சிங்கள அரசுடன்  பேசி தீர்க்க இவ்வளவு தாமதன் ஏன்? புலிகள் அவர்களை விரட்டினார்கள் என்றால் பதிலுக்கு பல கிழக்கு மாகாண கிராமங்களில் இருந்து தமிழ் மக்களை இராணுவ ஊர்காவற்படை உதவியுடன் விரட்டி இன்னும் தமிழ் மக்கள் அங்கு குடியேறவில்லை. என்ன முஸ்லீம்கள் மனச்சாட்சியே இல்லாதவர்களா?

 

தமிழ் மக்கள் யுத்தத்தினாலும் அரச அடக்கு முறையினாலும் கஷ்ரப்படும் போது தாங்கள் முஸ்லீம்கள் எமக்கும் உரிமைப்போரிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று விலகி செல்லும் முஸ்லீம் தலைவர்கள் பேச்சுவார்த்தை என்று எப்போது வருகிறதோ அப்போதெல்லாம் தமது உரிமைகள். கிழக்கில் தனி முஸ்லீம் அலகு என்று உரிமை போர் நிகழ்த்த தொடங்கிவிடுவார்கள். பின்னர் பேச்சுவார்த்தை முறிந்து யுத்தம் ஆரம்பித்தால் முஸ்லீம் அலகு, முஸ்லிம் மக்கள் உரிமை பற்றி வாயும் திறக்காமல் சிங்கள அரசுடன் ஒட்டி உறவாடுவார்கள்.தமிழரின் உரிமை போரில் இருந்து இயலுமான அளவிற்கு விலகி இருப்பார்கள்.  அடுத்த முறை பேச்சுவார்தை ஆரம்பித்தால் மீண்டும் பழைய பல்லவி. முஸ்லீம் மக்கள் உரிமை முழக்கம்.

 

சுதந்திர காலம் தொட்டு சிங்கள அரசாங்களுடன் ஒட்டி உறவாடி நட்பு பாராட்டிவரும் சிங்கள அரசாங்களுடன் முஸ்லீம் மக்களின் உரிமைகளை கேட்டு பெற முஸ்லீம் அரசியல் வாதிகள் போராடவேண்டும். அதைவிட்டு காலா காலமாக கஷ்ரப்படும்  தமிழ் மக்களுக்கு சிறிய நன்மை கிடைத்துவிட்டால் அதை தட்டிப்பறிக்க அதில் பங்கு கேட்க முயலக்கூடாது.  தமக்கான உரிமைக்குரலை தமிழ்மக்களை பார்த்து எழுப்புவதற்கு எந்த தார்மீக உரிமையும் முஸ்லீம்களுக்கு கிடையாது. புலிகள் முஸ்லீம்கள் வெளியேற்றியதை தமிழ் மக்களில் பலர் ஆதரிக்கவில்லை. கண்டித்தும் உள்ளார்கள். ஆனால் கிழக்கில் தமிழ் மக்களை முஸ்லீம் ஊர்காவற்படை கொலை செய்ததுபற்றி எந்த முஸ்லீம் தலைவரும் கண்டனம் செய்த்தாக நான் அறியவில்லை. பதிலுக்கு பல அநியாயங்களை கிழக்கில் தமிழ் மக்களிற்கு இழைத்துவிட்டு தற்போதும் 23 வருடங்களுக்கு முன் நடந்த முஸ்லீம்கள் வெளியேற்றத்தை சொல்லி ஆதாயம் தேடுவதை நிறுத்த வேண்டும்.

 

இனவாதம் பேசுவதாக கள உறவுகள் நினைக்க வேண்டாம். என் கருத்தில் தவறு இருந்தால் தயங்காமல் சுட்டிக்காட்டலாம்.

Edited by tulpen

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வேலியில் போகும் ஓணானை மடியில் பிடித்துக் கட்டுவேன் என அடம்பிடிக்கும் அங்கத்தவர்களையும் தமிழர் கூட்டமைப்பு கொண்டுள்ளது. அதற்குள் பெரிய மடிபோட்டு பட்டுவேட்டியைத் தான் கட்டியிருப்பதாக சுமந்திரன் ஏற்கெனவே அறிவித்தும் விட்டார். :o  

என்ன வடபகுதியில் தமிழரை சிறுபான்மை இனமாக்கிற கொள்கை தான் இந்த கிழட்டு அரசியல்வாதிகளின் நோக்கம் :(

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.