Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கு, கிழக்கு இணைப்பை முஸ்லிம்கள் விரும்பவில்லை-முஸம்மில் தெரிவிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கு, கிழக்கு இணைப்பை முஸ்லிம்கள் விரும்பவில்லை-முஸம்மில் தெரிவிப்பு


கிழக்கு மக்கள் விரும்பினால் வடக்கு, கிழக்கு இணைப்பு நிச்சயம் இடம்பெறும். அதைத் தடுக்க முடியாது என வடமாகாண முதல்வர் க.வி.விக்னேஸ்வரன் அறிவிப்பு விடுத்துள்ள நிலையில், வடக்குக் கிழக்கை மீண்டும் இணைக்கும் தேவை முஸ்லிம் மக்களுக்கு இல்லை என்று முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பு தெரிவித்துள்ளது.

கொழும்பில் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அவ்வமைப்பின் இணைப்பாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மொஹமட் முஸமில் இவ்வாறு குறிப்பிட்டார்.

வடக்கு, கிழக்கு இணைப்பு தொடர்பில் தற்போது வெகுவாகப் பேசப்பட்டு வருகின்றது. கிழக்கு மாகாண சபையில் பிரேரணையும் நிறைவேற்றப்பட்டுள்ளது. எனினும் மக்கள், வடக்கு கிழக்கு இணைப்பைக் கோரவில்லை. ஒன்றாக இணைந்து வாழவே அவர்கள் விரும்புகின்றனர். இதேவேளை, வேலுப்பிள்ளை பிரபாகரன், கெப்பிட்டிப் பொலவைப் போன்றவர் என்று விக்னேஸ்வரன் குறிப்பிட்டிருந்தார். எனினும் கெப்பிட்டிப்பொல நாட்டுக்கு துரோகம் செய்த வெளிநாட்டவர்களால் கொல்லப்பட்டார் என்றும் முஸமில் குறிப்பிட்டுள்ளார்.

- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=642042409431717205#sthash.T4X94QGP.dpuf

இதேவேளை, வேலுப்பிள்ளை பிரபாகரன், கெப்பிட்டிப் பொலவைப் போன்றவர் என்று விக்னேஸ்வரன் குறிப்பிட்டிருந்தார். எனினும் கெப்பிட்டிப்பொல நாட்டுக்கு துரோகம் செய்த வெளிநாட்டவர்களால் கொல்லப்பட்டார் என்றும் முஸமில் குறிப்பிட்டுள்ளார்.

 

அதையேதான் முதல் அமைச்சரும் சொன்னார்.

  • கருத்துக்கள உறவுகள்

யாரப்பா நீ?

 

ஆடான ஆடெல்லாம் குலைக்கு அழ, சொத்தி ஆடு, எதுக்கோ அழுததாம் கதையாய், எல்லா பள்ளிவாசல்களும் இடிக்கப்பட்டு, முஸிலிம் கிராமங்கள் எல்லாம் சிங்கள மயமாக்கப் பட்டு, முஸ்லிம்கள் எல்லாம், பொது பல சேன உறுப்பினர்கள் ஆகும் வரை இந்த, முன்னாள் , பின்னாள், அல்லக்கைகள் ஓயமாட்டார்கள் போல கிடக்குது.

 

 

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கு கிழக்கிற்கு அப்பாலேயே அதிக முஸ்லிம்கள் வாழ்வதாக தெரிகிறது. அவர்கள் தான் தங்களுக்கு வடக்கு கிழக்கு இணைப்பு தேவை இல்லை என அறிக்கை விடுபவர்கள்.

கஞ்சா வைத்திருந்ததாக ஊடவியலாளர் கைது - காத்தான்குடியில் சம்பவம்
[Thursday, 2013-10-31 15:45:21]
News Service
காத்தான்குடியிலுள்ள வார உரைகல் எனப்படும் பத்திரிகையின் பிரதம ஆசிரியரான எம்.ஐ.எம்.றஹ்மத்துல்லா (புவி) என்பவரை அவரின் வீட்டில் கஞ்சா வைத்திருந்ததாக கூறி காத்தான்குடி பொலிசார் சந்தேகத்தின் பேரில் இன்று காலை கைது செய்துள்ளனர். காலை 7 மணியளவில் குறித்த பத்திரிகையின் ஆசியரின் வீட்டுக்கு சென்ற பொலிஸ் குழு ஒன்று அவரின் வீட்டுக்குள் பொலிஸ் நாய் மூலம் தேடுதல் நடத்திய போது கஞ்சா கட்டு ஒன்றை கைப்பற்றியுள்ளனர். இது அவரின் வீட்டு வளாகத்தில் வைத்து கைப்பற்றப்பட்டுள்ளது. இதையடுத்து பத்திரிகையின் ஆசிரியரை பொலிசார் சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர். என்னுடைய வீட்டில் கஞ்சா இருக்கவில்லை இது என்ன அநியாயம்' என குறித்த ஆசிரியர், அவரை கைது செய்த போது பொலிசாரிடம் கூறியதாக தெரிய வருகின்றது.

 
கைப்பற்றப்பட்ட கஞ்சா 198 கிராம் எனவும் இவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர். இந்த சம்பவத்தையடுத்து ஆசிரியரின் மனைவி மற்றும் மகன் ஆகிய இருவரும் சட்டத்தரணி எம்.றிஸ்வி என்பவரின் ஊடாக காத்தான்குடி பொலிஸ் நிலையத்திற்கு சென்று இது திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட செயல் எனவும் இவருக்கு தொடாந்து அச்சுறுத்தல் இருந்து வந்ததாகவும் கஞ்சா எதுவும் வீட்டில் வைத்திருக்கவில்லையெனவும் தெரிவித்துள்ளனர்.

'எனது வீட்டில் கஞ்சா வைத்திருந்ததாக கூறி என்னை வேண்டுமென்று கைது செய்துள்ளனர்' என வார உரைகல் பத்திரிகையின் ஆசிரியர் தெரிவித்துள்ளதுடன் 'திட்டமிட்டு எனது வீட்டில் கஞ்சாவை வைத்து என்னை கைது செய்துள்ளனர்' எனவும் தெரிவித்துள்ளார். எம்.ஐ.எம்.றஹ்மத்துல்லா (புவி) பல முறை தாக்கப்பட்டுள்ளதுடம் இவருக்கு தொடர்ந்து அச்சுறுத்தல் இருந்துவருவதும் குறிப்பிடத்தக்கது.

 

http://www.seithy.com/breifNews.php?newsID=96142&category=TamilNews&language=tamil

 

முசாமிலை உள்ளே போடும் வரை அவர் நிறுத்த வேண்டியதில்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.