Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பொதுநலவாய மாநாட்டு செலவையும் கடன்வாங்கியுள்ளதாக குற்றச்சாட்டு!

Featured Replies

Commonwealth-CHOGM.jpgகொழும்பில் நடைபெறும் பொதுநலவாய மாநாட்டின் செலவுகளுக்கான முழுமையான பணத்தையும் அரசாங்கம் கடன் வாங்கியிருப்பதாக ஜே.வி.பி கட்சி குற்றஞ்சுமத்தியுள்ளது.

அத்துடன், பொதுநலவாய மாநாட்டிற்கான முழுமையான நிதி கணக்கின் விபரங்களை அரசாங்கம் வெளியிட வேண்டும் எனவும் அந்தக் கட்சி கோரியுள்ளது.

கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்க இதனைத் தெரிவித்தார்.

''உறுதியான செலவீனங்கள் என்ன என்று அரசாங்கத்திற்கு தெரியாது. உறுதியான திட்டம் ஒன்று இல்லாததே இதற்குக் காரணமாகும்'' என அநுரகுமார திஸாநாயக்க குற்றஞ்சுமத்தியுள்ளார்.

http://tamilworldtoday.com/home

யாழில் மாபெரும் அறவழிப் போராட்டம்.

பொதுநலவாய மாநாட்டினை முன்னிட்டு எதிர்வரும் 15ஆம் திகதி முதல் யாழில் மாபெரும் அறவழிப் போராட்டத்தினை முன்னெடுக்கவுள்ளதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்தார்.

வலி. வடக்கு காணி அபகரிப்பு மற்றும் வீடழிப்பு, இசைப்பிரியா, பாலச்சந்திரன் கொலைகள் மற்றும் காணாமல் போனவர்கள் தொடர்பாக கண்டனம் தெரிவித்தல் ஆகியவற்றை உள்ளடக்கியதாக இந்த அறவழிப் போராட்டம் இடம்பெறவுள்ளது என அவர் குறிப்பிட்டார்.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்துரையாடிய பின்னர் வடக்கு மற்றும் கிழக்கு மாகணங்களின் பல்வேறு பிரதேசங்களில் பல்வேறு வழிகளில் இந்த அறவழி போராட்டத்தினை முன்னெடுக்கவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் மேலும் தெரிவித்தார்.

tamilmirror

 

 

பிரதமர் இலங்கைக்கு போகக்கூடாது: ஜெயந்தி நடராஜன்.

பொதுநலவாய மாநாட்டில் பிரதமர் கலந்து கொள்வது பற்றி நல்ல முடிவு எடுப்பார். அவர் கலந்து கொள்ள கூடாது என்று தொடர்ந்து நான் வலியுறுத்தி வருகிறேன். கடிதம் மூலமாகவும் தெரிவித்துள்ளேன். தமிழ் மக்களின் உணர்வுகளை அறிந்து பிரதமர் நல்ல முடிவு எடுப்பார் என்று மத்திய அமைச்சர் ஜெயந்தி நடராஜன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் இந்திய செய்திகளில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

டில்லி செல்வதற்காக சென்னை விமான நிலையம் வந்த ஜெயந்தி நடராஜன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது பொதுநலவாய மாநாட்டில் பிரதமர் பங்கேற்கவிருப்பதாக வந்துள்ள செய்திகள் குறித்து அவரிடம் செய்தியாளர்கள் கேட்டபோது,

பொதுநலவாய மாநாட்டில் பிரதமர் கலந்து கொள்வது பற்றி நல்ல முடிவு எடுப்பார். அவர் கலந்து கொள்ள கூடாது என்று தொடர்ந்து நான் வலியுறுத்தி வருகிறேன். கடிதம் மூலமாகவும் தெரிவித்துள்ளேன். தமிழ் மக்களின் உணர்வுகளை அறிந்து பிரதமர் நல்ல முடிவு எடுப்பார் என்றார்.

இசைப்பிரியா கொல்லப்பட்ட ஆவணப் படம் குறித்த கேள்விக்கு, ஆவண படத்தை ஊடகங்கள் மூலமும் பத்திரிகை மூலமும் அறிந்து கொண்டேன். அந்த காட்சிகளை பார்க்கவே முடியாது. அந்த அளவுக்கு பயங்கரமாக உள்ளது. இதை வன்மையாக கண்டிக்கிறேன் என்றார்.

பிரதமர் வெளிநாடு சுற்றுப்பயணம் மூலம் ரூ.650 கோடி செலவாகி உள்ளது. இது வீணாக செலவிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறதே என்ற கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், வெளிநாடுகளுடன் நல்லுறவு ஏற்படுத்துவதற்குத்தான் பிரதமர் மன்மோகன்சிங் அயல்நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இந்த சுற்றுப்பயணத்தின் மூலம் தான் ஏற்றுமதி, இறக்குமதியை மேம்படுத்த முடியும்.

இதனால் தொழில்கள் வளர்ச்சி அடையும். நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கான அன்னிய செலாவணியை உயர்த்த வெளி நாட்டு சுற்றுப்பயணம் அவசியமாகிறது. இது மக்களின் நலன் கருதி நாட்டின் வளர்ச்சிக்காக மேற்கொள்ளப்படுகிற பயணம். இதை வீணான செலவு என்று கூறுவது தவறு என்றார் அவர்.

tamilmirror

பொதுநலவாய உச்சிமாநாடு - ஒத்திகை நிகழ்வு

இம்மாதம் நடைபெறவுள்ள பொதுநலவாய உச்சிமாநாட்டின் ஆரம்ப நிகழ்வுக்கான ஒத்திகை கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ உட்பட அமைச்சர்கள், முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

11.jpg

 

09_0.jpg

10.jpg

13_0.jpg

01_1.jpg

20.jpg

21.jpg

24.jpg

06_1.jpg

எது சுவாசிலாந்து மன்னருக்கான ஆட்டம்? அது போவேக்கை ஒரு தடவை நமக்கும் சொல்லிடுங்கா :D

  • கருத்துக்கள உறவுகள்

அவர்த்ஹன் ஸ்பான்சர் போலகிடக்கு...அவருக்கு உடுப்பு போட்டு ஆடினால் பிடிக்காதே..அப்ப இரவு அவ்ருக்கு ஆடி காட்டுவினமோ...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
பொதுநலவாய மாநாட்டு செலவையும் கடன்வாங்கியுள்ளதாக குற்றச்சாட்டு!

 

 

சிறீலங்கா கடன் வாங்காமல் செய்த ஒருவிசயத்தையாவது சொல்லுங்கோ பாப்பம்? 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிங்களவனுக்கு இனி தன்ரை வாயை வயித்தை கழுவ தமிழன்ரை சொத்துக்கள் காணும்.கேக்கப்பார்க்க ஆக்களுமில்லை.அவங்களோடை ஒட்டியிருக்கிற ஒட்டுண்ணியளுக்கும் ஜாலி வாழ்க்கைதான்......

  • கருத்துக்கள உறவுகள்

ஆடும்  பிள்ளைகளைப்இபார்த்தால்

எல்லோரும்  சிறுபிள்ளைகளாக  இருக்கிறார்கள்

 

இதை ஒழுங்கு செய்பவர்களும்

பார்த்து ரசிக்க  இருப்பவர்களுக்கும்

UNICEF ஒன்றும் சொல்லாதோ... :(  :(  :(

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.