Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விடுப்பு மூலை: தப்பியோடும் தலைவர்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

விடுப்பு மூலை: தப்பியோடும் தலைவர்கள்
நந்திமுனி

யாழ்.நூலக வாசலில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மத்தியில் நின்றிருந்தேன். சம்பந்தர், பின் வாசலால் தப்பியோடியபின் நிராசையோடும், ஆற்றமையோடும் கலைந்துசென்ற மக்களில் ஒருவனாக பஸ் ஸ்ரான்டை நோக்கி நடந்துகொண்டிருந்த போது எனக்கு முன் இரண்டு முதியவர்கள் கதைத்தது கேட்டது. அவர்கள் இருவரும் ஓய்வூதியர்கள். ஒருவர் போஸ்ற் மாஸ்டர் மற்றவர் கிளார்க். அரசியலை அலசியபடி நடந்து பஸ் ஸ்ரான்டில் போய் நின்றார்கள். அவர்கள் கதைத்ததை அப்படியே தருகிறேன் பாருங்கள்...

போ.மா: என்ன இருந்தாலும், சம்பந்தன் உப்பிடி பின் கதவாலை ஓடியிருக்கக் கூடாது.

கிளார்க் : ஓடாமல் என்ன செய்யிறது. சனங்களின்ர கோபத்தை உவையலாள தாங்கேலாது.

போ.மா : மெய்தான்.... நல்ல தலைவர்கள் சனத்தின்ர கோபத்துக்கு தலைமை தாங்குவார்கள். சனங்களின்ர கோபத்தை ஒரு அரசியல் சக்தியாக மாத்துவார்கள்.

கிளார்க் : அல்லது தனக்கு எதிராக வாற கோபத்தை தன்ர எதிரிகளுக்கு எதிராக திருப்பிவிடுவார்கள்... சீனாவில கலாசார புரட்சியில மாவோ அதைத்தானே செய்தவர்.

போ.மா. சரியா சொன்னியள்! நல்ல தலைவர்கள் தங்கட சொந்த சனத்தின்ர கோபத்திற்கு பயந்து ஓடுறதில்ல.

கிளார்க்: ஓடினது மட்டுமில்ல, பொலிஸ் காவலில் ஓடினது அதைவிடக் கேவலம். இரண்டு மாசத்துக்கு முன்னம் மாபெரும் வெற்றியக் கொடுத்த தங்கட சனத்துக்குப் பயந்து பொலிஸின்ர பாதுகாப்பில, அதுவும் யாரை எதிரியா காட்டி வாக்குக் கேட்டினமோ அந்த பொலிஸின்ர பாதுகாப்பில சனத்திட்டையிருந்து தப்பியோடினது எண்டது தலைமைக்கு அழகில்லத்தான்.

போ.மா. அவர் ஒண்டு செய்திருக்கலாம். இறங்கிக் கதைச்சிருக்கலாம். சனம் ஒண்டும் செய்திருக்காது. அவையின்ட உடுப்பு சனத்தின்ர கண்ணீரில நனைஞ்சிருக்கும் அவ்வளவுதான். குறைஞ்சது ஒரு நடிப்புக்காவது சனத்திட்ட இறங்கி ஆறுதல் சொல்லியிருக்கலாம்.

கிளார்க் :ஆனா அது அவயளுக்கு ஏலாது. தேர்தல் காலத்தைத் தவிர வேற எப்பவும் வாகனத்த விட்டு இறங்கிற பழக்கம் அவயளுக்கில்ல.

போ.மா. அப்ப மக்களாணை?

கிளார்க் : றீவேசிலதான் போகும்போல.

போ.மா. அப்ப மாவீரர் நாளும் கொண்டாட மாட்டினமே.

கிளார்க் : ஓம்! செய்ய மாட்டினாம்போல தான் தெரியுது.

போ.மா. அப்ப தேர்தல் வாக்குறுதி?

கிளார்க்: தேர்தல் வீரம் வேற, நிஜ வீரம் வேற

போ.மா.: அப்ப இன்னுமின்னும் நாறப்போயினமே.

கிளார்க்: ஓம் நாறத்தான் வேண்டியிருக்கும். ஆனா ஒண்டு செய்யலாம். மாகாண சபையில ஒரு தீர்மானத்தை கொண்டு வரலாம். அதையொரு அரசியல் நிகழ்வா அனுஷ்டிக்காமல் வழிபாட்டு நிகழ்வா மாத்தலாம். மத நிறுவனங்களையும் பொது நிறுவனங்களையும் கூட்டுச் சேர்க்கலாம். தனியத்தனிய வீடுகளில விளக்குக் கொழுத்தினாத்தானே பிரச்சினை. அதுக்குப் பதிலா பொது இடங்களில கொழுத்தலாம். கூட்டமைப்பில எத்தினை எம்.பி.மார் இருக்கினம்? எத்தின மாகாணசபை உறுப்பினர் இருக்கினம்? எத்தின பிரதேச சபை உறுப்பினர் இருக்கினம்? இவை எல்லாரும் தங்கட அலுவலகங்களில கொழுத்தலாம். ஆயர்மார், மதகுருமார்களயும் கொழுத்தச் சொல்லிக் கேட்கலாம். சிவில் சமூகத்தையும் கேட்கலாம்.

போ.மா: நல்ல ஐடியா...அதை ஒரு குறிப்பிட்ட நாளில செய்யாமல் ரண்டு மூண்டு நாளைக்கு தொடர்ந்து செய்யலாம். எல்லா தியாகிகளுக்கும் எண்டு சொல்லிச் செய்யலாம்.

கிளார்க்: ஓமோம்! தனித்தனியாச் செய்தாத்தான் பிரச்சின. பரந்தளவில செய்தா எத்தன பேர பிடிக்கிறது. கூட்டமைப்புப் பிரமுகர் எல்லாரும் செய்யலாம். அப்படிச் செய்தால் எல்லாரையும் பிடிக்கேலுமே. போனமுறை கம்பஸ் பொடியள் சிலபேர் செய்தாங்கள். அதுதான் பிரச்சனையா வந்தது. இந்த முறை கூட்டமைப்பு தன்ர வாக்குறுதியைக் காப்பாத்த அதையொரு கூட்டு வழிபாடாச் செய்யலாம்.

போ.மா. உண்மைதான். போனமுறை கம்பஸில குழம்பினபடியால் இந்த முறை கம்பஸை மூடிட்டாங்கள்.

கிளார்க்: அதுக்கு வேற ஒரு காரணமும் இருக்கு. போனமுறை பொடியள் செய்ததைப் பாத்திட்டு கல்விசார் ஊழியர்களும், கல்விசாரா ஊழியர்களும் இந்த முறை தாங்களும் செய்யப்போறம் எண்டு முன்னுக்கே அறிவிச்சவ. அதுதான் கம்பஸை அவன் முன்னுக்கே பூட்டிட்டான்.

போ.மா. அப்ப... கூட்டமைப்பு நினைச்சா அதை செய்யலாம் எண்டுறியள்.

கிளார்க்: ஓம். தலைவர்கள்தானே முன்னுக்குப்போக வேணும்?

போ.மா. ஆனா சனங்களின்ர கோபத்துக்கு பயப்படுகிற, தப்பியோடுற தலைவர்கள் எப்பிடி சனங்கள வழி நடத்திறது?

கிளார்க்: ஓம் அதுதான் இப்ப பிரச்சனை... சனங்களின்ர கோபத்துக்கும் வெறுப்புக்கும் தலைமை தாங்க ஒருவருமில்லையெண்டது.

போ.மா. ஏன்? ஜி.ஜியின்ர பேரன் செய்ய மாட்டாரே!

கிளார்க்: பொடியன் எல்லா போராட்டங்களிலையும் முன்னுக்கு நிக்குதுதான். ஆனா அதுக்கு அடுத்த கட்டமெண்டு ஒண்டு இருக்கே.

போ.மா. அதுவும் சரிதான்... சனங்களின்ர கோபத்துக்கு தலைமை தாங்கிற ஒருவர் வாற வரைக்கும் கூட்டமைப்போட குப்பைகொட்ட வேண்டியதுதான்.....

பஸ் வந்துவிட்டது. இரண்டு பேரும் எறிச் செய்துவிட்டார்கள். அவர்கள் ஓய்வூதியர்கள் என்பதால் தமிழரசுக் கட்சிக்காரரோ என்று முதலில் யோசித்தேன். அப்படியல்ல. அவர்கள் யாரும் காணாமற்போனவர்களின் உறவினர்களாக இருக்கக்கூடும். எவ்வளவு தெளிவாகச் சிந்திக்கின்றார்கள்?


http://www.ponguthamil.com/shownewscontent.aspx?sectionid=11&contentid=14b8824f-06e5-47dc-ba8b-08dab14f51b7

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்கள் தெளிவாக  இருக்கிறார்கள் என்பது உண்மை

ஆனால் இது 

எவருக்கோ வேட்டுவைக்க  எழுதியது போலிருக்கு

அதுக்குள் ஜி.ஜியின்ர பேரன் பற்றியும் ( பொடியன் எல்லா போராட்டங்களிலையும் முன்னுக்கு நிக்குதுதான். ஆனா அதுக்கு அடுத்த கட்டமெண்டு ஒண்டு இருக்கே.) என்று அள்ளிப்போடுவதைப்பார்த்தால்..... :icon_idea: 

 

  • கருத்துக்கள உறவுகள்

கூத்தமைப்பினர் திருடர்கள் என்பதை நான் பலமுறை யாழ்களத்தில் தெரிவித்திருந்தேன். கெட்டிக்காரன் புழுகு இப்போது எட்டு நாட்களுக்கு முன்பே வெளிப்பட்டுப்போச்சு. விக்கு வினாயகம் தனது நிர்வாகத்துக்குட்பட்ட வவுனியாவுக்குப் போறதையே மிகப்பெரிய அளவில் விளம்பரப்படுத்துகிறார். கமரோனது சந்திப்பில் இவர்கள் சர்வதேச போர்ர்குற்ற விசாரணையையும் இராணுவ அடாவடி நிலப்பறிப்பையும் எடுத்துரைக்கவில்லை என தற்போது செய்திகள் கசிகின்றது. தவிர சம்பந்தர் இனிமேல் யாழ் குடாநாட்டுப்பக்கம் மக்கள்முன் தோன்றுவரோ தெரியாது. அதைவிட இருந்துபாருங்கள் விடுதலைப்புலிகளை ஒழித்துக்கட்ட சம்பந்தர் பின்கதவு வேலைகளைச் செய்ததுபோல், சர்வதேச போர்க்குற்ற விசாரணையை செய்வதிலிருந்து சிங்களம் தப்பிப்பதற்கு பின்கதவுவேலைகளை செய்வார்.

  • கருத்துக்கள உறவுகள்

வட மாகாணசபை இயங்குவதில் முட்டுக்கடைகள் – விக்னேஸ்வரன்

 

 

 

வட மாகாணசபை உருவாகி இரு மாதங்களாகியுள்ள போதும், வடமாகாண சபையில் தாங்கள் செயற்பட முடியாத வகையில் பல்வேறு முட்டுக்கட்டைகள் போடப்பட்டு வருவதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வட மாகாணசபையின் அலுவலகத்தில் பணியாற்றுகின்ற அதிகாரிகளினாலேயே தங்களுக்கு முட்டுக்கட்டைகள் போடப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வவுனியா பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் கிராமிய வங்கிக் கிளையைத் திறந்து வைத்து உரையாற்றும் போதே இவ்வாறு அவர் தெரிவித்தார்.

முதலமைச்சராகப் பதவியேற்றதன் பின்னர் முதற்தடவையாக வவுனியா வருகை தந்த முதலமைச்சருக்கு வவுனியா பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தினராலும், வவுனியா வர்த்தகர்கள் மற்றும் முஸ்லிம் சமூகத்தினராலும் வரவேற்பளிக்கப்பட்டிருந்தது.

அமைச்சர் டக்ளஸுடன் அபிவிருத்தி இணைத் தலைமை நிர்வாகச் செயற்பாடுகளில் இராணுவத் தலையீடு இருப்பதாகக் குறிப்பிட்டு, முன்னாள் இராணுவ அதிகாரியாகிய ஆளுநர் சந்திரசிறிக்குப் பதிலாக சிவில் ஆளுனர் ஒருவரை நியமிக்க வேண்டும் என்று வடமாகாண சபையினால் ஏற்கனவே கோரிக்கை முன்வைக்கப்பட்டிருக்கின்றது. இது தொடர்பாக ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்கவிடம் தாங்கள் பேச்சுக்கள் நடத்தியிருப்பதாகவும், அவர் ஜனாதிபதியிடம் பேசி ஒரு தீர்வு காண்பதாக உறுதியளித்திருப்பதாகவும் முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம், கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களின் ஒருங்கிணைப்பு அபிவிருத்தி குழுக் கூட்டத்தை தமிழ்; தேசியக் கூட்டமைப்பும் வட மாகாணசபையினரும் புறக்கணித்திருந்த நிலையில் அந்தக் குழுவின் இணைத் தலைவராக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் முதலமைச்சரையும் ஜனாதிபதி நியமித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதற்கான கடிதம் ஒன்று தமக்கு ஜனாதிபதி செயலகத்திலிருந்து வந்து கிடைத்திருக்கின்றது என்பதை முதலமைச்சர் விக்னேஸ்வரன் உறுதிப்படுத்தியுள்ளார்.

இருப்பினும் ஒருங்கிணப்பு குழுக் கூட்டம் முதலமைச்சரின் தலைமையில் நடைபெற வேண்டிய நிலையில், மகிந்த சிந்தனை என்ற அரசியல் நோக்கங்களுக்காக இந்த இணைத் தலைமையை ஏற்றுச் செயற்பட முடியாது என்றும் விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டினார்.

http://thesamnet.co.uk/?p=49395

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கூத்தமைப்பினர் திருடர்கள் என்பதை நான் பலமுறை யாழ்களத்தில் தெரிவித்திருந்தேன். கெட்டிக்காரன் புழுகு இப்போது எட்டு நாட்களுக்கு முன்பே வெளிப்பட்டுப்போச்சு. விக்கு வினாயகம் தனது நிர்வாகத்துக்குட்பட்ட வவுனியாவுக்குப் போறதையே மிகப்பெரிய அளவில் விளம்பரப்படுத்துகிறார். கமரோனது சந்திப்பில் இவர்கள் சர்வதேச போர்ர்குற்ற விசாரணையையும் இராணுவ அடாவடி நிலப்பறிப்பையும் எடுத்துரைக்கவில்லை என தற்போது செய்திகள் கசிகின்றது. தவிர சம்பந்தர் இனிமேல் யாழ் குடாநாட்டுப்பக்கம் மக்கள்முன் தோன்றுவரோ தெரியாது. அதைவிட இருந்துபாருங்கள் விடுதலைப்புலிகளை ஒழித்துக்கட்ட சம்பந்தர் பின்கதவு வேலைகளைச் செய்ததுபோல், சர்வதேச போர்க்குற்ற விசாரணையை செய்வதிலிருந்து சிங்களம் தப்பிப்பதற்கு பின்கதவுவேலைகளை செய்வார்.

வேற சொய்ஸ் இருக்கா?

  • கருத்துக்கள உறவுகள்

எண்பதிகளில் முடிவில் சப்றா யுனிகோ எனும்பெயரில் நிதி நிறுவனம் தொடங்கி குடாநாட்டுமக்களது சேமிப்புப் பணத்தை கையாடல்செய்த,  எனும் இந்திய நிகழ்ச்சிநிரலுக்குத் தக்கதாக சேவைசெய்யும்,  செய்யும்  சரவணபவன் தலைமையிலான உதையன் பத்திரிகையை ஒழிச்சால் வேறு மாற்று வரும்.

 

 

ஈழநாடு எனும் பத்திரிகை யாழ் மக்கள் ஒவ்வொருவரது பணத்திலும் பங்குகள் விநியோகிக்கப்பட்டு உருவாக்கப்பட்டு குடாநாட்டின் அடையாளமாக இருந்தது அதை மறுசீரமைப்புச் செய்திடல்வேண்டும். காரணம் பல பாரம்பரியங்களையும் அப்போதைய யாழ் குடாநாட்டுமக்களது உழைப்பையும் தாங்கிநின்ற பத்திரிகை நிறுவனமது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.