Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தனுஷ்கோடி புதிய சாலை நிர்மாணம் பற்றி...

 

1964ம் ஆண்டு புயலால் அழிக்கப்பட்ட முகுந்தராயர் சத்திரத்திலிருந்து தனுஷ்கோடி வரைக்குமான 6 கி.மீ சாலையை மீளமைக்கும் பணி தொடங்கியுள்ளது.

 

குவிந்து கிடக்கும் மணல் திட்டுகளை JCB இயந்திரங்கள் மூலம் நீக்கி சமதளப்படுத்தி, சாலையின் இரு புறமும் 1 x 1 மீட்டர் ஆழத்திற்கு குழி வெட்டி அதன்மீது "ஜியோ டெக்ஸ்டைல் க்ரிட்" (Geotextile  grid) எனப்படும் வடிவமைப்பை (Gabion Box) பாறைகளால் சீராக அடுக்கி, அவற்றை ஒருமித்து பாலி ப்ரோப்பலைன் பாலிமர் (polypropylene polymer) எனப்படும் நைலான் கயிறுகளால் கட்டி, நீள் வாக்கில் சாலை நெடுக அடுக்கப்பட்டுள்ளது.

 

இதன் மூலம் கடல் நீர் புகுந்தாலும் நீர் தானாக வடிந்து கடலரிப்பிலிருந்து தார் சாலையை பாதுகாக்க முடியும். இதன் விரிவான வடிவமைப்பு விபரங்களை கீழேயுள்ள படங்களில் பார்த்தால் புரியும்.

 

 

v2vay1.jpg

 

 

olr48.jpg

 

 

fkuu4n.jpg

 

 

 

x2mpma.jpg

 

 

2ed1rug.jpg

 

 

 

 

தகவல்கள் உதவி: நெடுஞ்சாலைத் துறை, இராமநாதபுரம் பிரிவு.

Edited by ராசவன்னியன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

2whkrcy.jpg

 

 

ws2vsz.jpg

 

 

2u6it1k.jpg

Edited by ராசவன்னியன்

  • 2 years later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

தற்பொழுது தனுஷ்கோடி நகரம் மேம்பாட்டை நோக்கி..

 

image.png

தனுஷ்கோடி நகரம் நோக்கி பழைய வழி..

 

image.png

தனுஷ்கோடி தாண்டி 'அரிச்சல்முனை' நோக்கி தார் சாலை..

 

image.jpg

'அரிச்சல்முனை' கடல் விளிம்பில் இந்திய எல்லையை குறிக்கும் தூண்..

 

image.jpg

'அரிச்சல்முனை' நொக்கி செல்லும் வழியில் தனுஷ்கோடி நகரத்தின் சிதைந்த சர்ச்..

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அரிச்சல்முனை

 

2jfb5h.jpg

 

1964 ல் புயலால் அழிக்கப்பட்ட தமிழ் நாட்டின் கடைக்கோடி நிலப்பரப்பான அரிச்சல் முனை மணல்திட்டு பகுதி வரை தார் சாலை போடப்பட்டு சில நாட்களுக்கு முன் பிரதமர் மோடி அவர்களால் மக்கள் பாவனைக்கு திறந்து வைக்கப்பட்டது.

ராமேஸ்வரத்திலிருந்து 25கி.மீ தொலைவிலுள்ள அரிச்சல் முனையும்  இனிமேல் முக்கிய இடம் பெறும் என நம்பப்படுகிறது. புண்ணிய பயணம் மேற்கொள்ளும் பக்தர்கள், அரிச்சல்முனைப் பகுதிக்கு இனிமேல் எந்த பயமும் இல்லாமல் குடும்பத்துடன் சென்று வரலாம்.

 

2dqkrr5.jpg

கடைக்கோடி நிலப்பரப்பான அரிச்சல் முனை.

  • கருத்துக்கள உறவுகள்

புராண காலத்தில்... இருந்ததாக  கூறப்படும்,  "ராமர் பாலம்"  என்பது இதுவா..... ராஜவன்னியன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, தமிழ் சிறி said:

புராண காலத்தில்... இருந்ததாக  கூறப்படும்,  "ராமர் பாலம்"  என்பது இதுவா..... ராஜவன்னியன்.

ராமர் கட்டுனதாக புராணத்தில் சொல்லப்படுகிறது.. இப்பொழுதும் வட இந்தியர்களால் நம்பப்படுகிறது.. இது இயற்கையாக புவி மாற்றத்தினால் தோன்றியதாகவே இருக்கும்..!

தலைமன்னாருக்கும், 'அரிச்சல்முனை'க்கும் இடையேயான திட்டுத்திட்டாக சுண்ணாம்பு பாறைகளாலான 'ராமர் பாலம்' ஏறக்குறைய 30 மைல்கள் தூரம் வரையுள்ளது.. இப்பகுதியில் கடலின் ஆழம் 1மீ முதல் 30 மீட்டர்கள் மட்டுமே இருக்கிறதாம்.

ஒரு வருடத்திற்கு முன் நான் தனுஷ்கோடி சென்றபொழுது, சாலை அமைக்கும் பணிகள் துரிதமான கதியில் நடைபெற்று வந்தது..

தனுஷ்கோடியில் வசிக்கும் மீனவர்களிடம் விசாரித்தபோது, இலங்கையின் 'ஏர்டெல் மொபைல் நெட்வொர்க்' தனுஷ்கோடியிலும் வேலை செய்யுமென தெரிவித்தனர்.

தனுஷ்கோடி சென்றால், பலரும் ஈழப்பகுதியை நெருங்கியதை உணர்வதாக சொல்லக் கேட்டுள்ளேன். நானும் உணர்ந்தேன்..! vil-hooo.gif

 

1443095483-adams-bridge-rama-setu.jpg

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

Tgv.jpg

இது 'அரிச்சல்முனை'யில் அமைக்கப்பட்டுள்ள கடலோரக் காவல் படையின்(Coast Guard) கண்காணிப்பு கோபுரம்!

 

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

தகவல்களுக்கு நன்றி ராஜவன்னியன் அண்ணன்.

இந்த திடீர் முனைப்புக்கு காரணம் என்ன? சீனர்கள் இலங்கையில் குடி புகுந்துவிட்டார்கள் என்பதா? :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

படங்களுடன் கூடிய தகவல்களுக்கு நன்றி ராஜவன்னியன்......!  tw_blush:

 

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்க ஆராய்ச்சியாளர்களே.... அதிர்ந்து போன,  
இராமேஸ்வரம் பாலம் பற்றிய,  வியக்க வைக்கும் உண்மை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

'அரிச்சல்முனை'யில் அமைந்துள்ள கண்காணிப்பு கோபுரத்தின் மீது ஏறி எடுத்துள்ள இந்தக் காணொளி, தனுஷ்கோடியின் மிக குறுகிய நிலப்பரப்பையும், புதிதாக அமைக்கப்பட்ட தார் சாலையையும் காட்டுகிறது..

Must watch..!

 

 

On 8/8/2017 at 5:43 PM, இசைக்கலைஞன் said:

தகவல்களுக்கு நன்றி ராஜவன்னியன் அண்ணன்.

இந்த திடீர் முனைப்புக்கு காரணம் என்ன? சீனர்கள் இலங்கையில் குடி புகுந்துவிட்டார்கள் என்பதா? :unsure:

கிந்தியாவின் ராசதந்திரத்திற்கு(?) தமிழ்நாடு பலிகடாவாகி கொண்டிருக்கிறது..! :unsure:

On 8/8/2017 at 7:47 PM, suvy said:

படங்களுடன் கூடிய தகவல்களுக்கு நன்றி ராஜவன்னியன்......!  tw_blush:

கருத்திற்கும், வருகைக்கும் நன்றி, டங்கு, சுவி மற்றும் தமிழ் சிறி..! :100_pray:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

52 வருடங்களுக்குப் பின் புதிதாக திறக்கப்பட்ட சாலை மூலம் சிதைந்த தனுஷ்கோடி நகரையும் தாண்டி, அரிச்சல்முனை வரை பொதுமக்கள் தங்கள் சொந்த வாகனத்திலேயே சென்றுவர தற்பொழுது வசதியேற்பட்டுள்ளது..

இந்துக்களுக்கு இனி காசி-ராமேஸ்வரம் என்றிருந்த நிலை மாறி, காசி-தனுஷ்கோடி என மாறும் நாள் வெகுதொலைவில் இல்லை.

 

 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.