Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மண்டேலா தூக்கிலிடப்பட்டார் -சபா நாவலன் .

Featured Replies

நெல்சன் மண்டேலா தூக்கிலிடப்பட்டார் : சபா நாவலன்

டிசம்பர் மாதம் 5 ஆம்திகதி 2013 அன்று தென்னாபிரிக்க நேரம் இரவு 8 மணி 20 நிமிடமளவில் நெல்சன் மண்டேலா இந்த உலகத்தை விட்டு பிரிந்தார். தென்னாபிரிகாவின் இன்றைய ஜனாதிபதி ஜகோப் சூமா மரணச் செய்தியை உலகிற்கு அறிவித்தார்.

தென்னாபிரிக்க நிற வெறி அரசுக்கு எதிராகப் போராடிய மண்டேலாவின் வரலாற்றில் ஆயிரம் சுவடுகள் எம்மக்குப் பாடம் சொல்லித் தருகின்றன. அவர் தென்னாபிரிக்க மக்களின் விடுதலைப் போராட்டத்தைத் தலைமை தாங்கினார் என்பதையும் அதனை சரியான திசைவழியில் தான் ஆரம்பித்தார் என்பதையும் அதனால் தான் அது வெற்றிக்கான வழிகளைத் திறந்துவிட்டது என்பதையும் பலர் சாட்சியாகச் சொல்கிறார்கள்.

அமரிக்க ஜனதிபதி ரொனால்ட் ரீகனும் பிரித்தானியப் பிரதமர் மாக்ரட் தட்சரும் மண்டேலாவைப் பயங்கரவாதி என்று அழைத்தமை அவரது போராட்டம் மக்கள் சார்ந்த ஆரம்பத்தைக் கொண்டிருந்தது என்பதற்கு அதிஉயர் சாட்சிகளில் ஒன்று.

mandela.jpg

டேவிட் கமரனின் டோரிக் கட்சியின் சுவரொட்டி

பழமைவாதக் கட்சி என்று அழைக்கப்படும் ரோரிக் கட்சி மண்டேலாவிற்க்கு எதிரான சுவரொட்டிகளால் பிரித்தானியச் சுவர்களை அசிங்கப்படுத்தியது. ரொரிக் கட்சியின் மாணவர் அமைப்பின் உயர் மட்ட உறுப்பினர்களாகவிருந்த இன்றைய பிரதமர் டேவிட் கமரனும், இன்றைய லண்டன் மேயர் பொரிஸ் ஜோன்சனும் மண்டேலாவைத் தூக்கிலிடுங்கள் என்ற பிரச்சாரத்தை பிரித்தானியா முழுவதும் மேற்கொண்டனர்.

அன்று மண்டேலா உறுதிமிக்க போராளியாகவிருந்தார் என்பதற்கு இதைவிடச் சான்றுகள் தேவையில்லை.

இன்று மண்டேலாவிற்காகக் கண்ணீர்வடிக்கும் கூட்டம் அன்று மண்டேலாவைக் கொன்றுபோடத் துடித்தவர்கள் என்பது மக்களிடமிருந்து மறைக்கப்படுகின்ற உண்மை.

இலங்கையில் பொது நலவாய நாடுகளின் மாநாட்டிற்குச் சென்று திரும்பிய டேவிட் கமரன் 1989 ஆம் ஆண்டு 23 வயது இளைஞனாக தென்னாபிரிக்க சென்றார். மண்டேலா சிறையிலிருந்தார். உண்மை கண்டறியும் குழு என்ற அமைப்பின் உறுப்பினராக நிறவெறி அரசின் எல்லைக்குள் சென்றார். உண்மை கண்டறியும் குழுவை அமைத்து அதற்கு நிதியுதவி செய்த நிறுவனத்தின் பெயர் சர்வதேச வியூக வலையமைப்பு -Strategy Network International (SNI) -என்பதாகும். தென்னாபிரிக்க நிறவெறி அரசின் மீது விதிக்கப்பட்டிருந்த பொருளாதாரத் தடையை நீக்குவதற்கான பிரச்சாரத்தை மேற்கொள்வதே அந்த அமைப்பினதும் உண்மை கண்டறியும் குழுவினதும் நோக்கமாகவிருந்தது.

தென்னாபிரிக்க விடுதலைக்கான மக்களின் போராட்டத்தைச் சிதைப்பதற்கும் நிற வெறி சிறுபான்மை அரசைப் பாதுகாப்பதற்கும் போராடிய அதே மனிதர்கள் இன்று நெல்சன் மண்டேலாவிற்காகக் கண்ணீர் வடிக்கும் அவமானம் நிகழ்ந்துகொண்டிருக்கின்றது.

ஆரம்பத்தில் ஆபிரிக்க தேசிய காங்கிரசின் உறுப்பினராக இணைந்துகொண்ட மண்டேலா, 1948 ஆம் ஆண்டு காங்க்ரசின் இளைஞர் அணியைத் தோற்றுவிக்கிறார். ஏகாதிபத்தியங்களுக்கும் காலனி ஆதிக்கத்திற்கும் எதிரான மக்கள் எழுச்சிகள் பலவற்றைத் தலைமை தாங்கினார். ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் நாடுமுழுவதும் போராட்டங்களை நடத்திய வேளையில் 1961 ஆம் ஆண்டு கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினராகும் மண்டேலா, அதே ஆண்டில் தென்னாபிரிக்கக் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆயுதப் போராட்டக் குழுவில் இணைந்து அதன் முக்கிய உறுப்பினராகினார்.

cameron-bullingdon-club-300x200.jpg

மண்டேலாவைத் தூக்கிலிடுமாறு பிரச்சாரம் மேற்கொண்ட குழுவில் இன்றைய பிரித்தானியப் பிரதமர் கமரனுடன் லண்டன் மேயர் பொரிஸ் ஜோன்சன்

1962 ஆம் ஆண்டு மண்டேலா நிறவெறி அரசிற்கு எதிரான வன்முறைக் கிளர்ச்சிகளில் ஈடுபட்டதாகக் குற்றம் சுமத்தப்பட்டு கைது செய்யப்படுகிறார். அதன் பின்னதாக வாழ் நாள் முழுவது சிறையிலடைக்கப்பட வேண்டும் என்ற தீர்ப்பின் அடிப்படையில் சிறை செல்கிறார்.

27 வருடங்கள் சிறையில் அடைக்கப்பட்ட மண்டேலா, 1990 ஆம் ஆண்டு விடுதலை செய்யப்படுகிறார்.

விடுதலையான பின் தனது சுயசரிதத்தை எழுதிய மண்டேலா, தென்னாபிரிக்க நிறவெறி அரசுடன் பேச்சுவார்த்தைக்குச் செல்கிறார். சுதந்திரமான தேர்தல் ஜனநாயகம் ஒன்றின் ஊடாக அனைத்து நிற மக்களுக்கும் வாக்குரிமை கேட்கிறார். 1994 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் அறுதிப் பெரும்பான்மையைப் பெற்றுக்கொள்ள மண்டேலா தென்னாபிரிக்காவின் முதல் கறுப்பின ஜனாதிபதியாகின்றார்.

சிறையிலிருந்த மண்டேலா தென்னாபிரிக்க உழைக்கும் மக்களின் கதாநாயகனாகக் கருதப்ப்பட்டார். ஏழைகளின் தோழனாக மதிக்கப்பட்டார். அதிகாரவர்க்கத்தின் முதல் எதிரியாகக் கணிக்கப்பட்டார். சிறையிலிருந்து வெளிவரும் சில காலங்களின் முன்னரே தென்னாபிரிக்கா முழுவதும் தொழிற்சங்கம் போராட்டங்கள் ஆரம்பித்திருந்தன.   வெள்ளையின சிறுபான்மை நிறவெறி அரசிற்கு முடிவுகட்ட மக்கள் துணிந்திருந்தார்கள்.

மண்டேலா சிறையிலிருந்த வேளையில் தென்னாபிரிக்க கம்யூனிஸ்ட் கட்சியின் எழுச்சிகளும் போராட்டங்களுமே நிற வெறி அரசை நிலைகுலையச் செய்தது. ஆபிரிக்க தேசிய காங்கிரசின் பெரும்பாலான நடவடிக்கைகளை கம்யூனிஸ்ட் கட்சியே வழி நட்த்தியது. ஆபிரிக்க தேசிய காங்கிரசின் தத்துவார்த வழிகாட்டலை கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினரான ரூத் பெர்ஸ்ட் என்பவரே மேற்கொண்டார் என்ற தகவல்களால் அதிகாரவர்கம் அதிர்ச்சிக்கு உள்ளானது.

அந்த மக்கள் எழுச்சியை இனிமேலும் எதிர்கொள்வது சாத்தியமற்றது என முடிவு செய்த அதிகாரவர்க்கம், தமக்குள் முரண்பட்டுக்கொண்டது. இரண்டு பிரதான பிரிவுகளாக உடைந்து போனது, முதலாவது பிரிவு முன்னை நாள் நிறவெறி ஜனாதிபதி பி.டபிள்யூ போத்தாவின் தலைமையில் இயங்கியது. இரண்டாவது பிரிவு மிகவும் தந்திரமாகச் செயற்பட்டது. இரண்டாவது பிரிவைப் பொறுத்தவரை பேச்சுவார்த்தைக்குச் சென்று கறுப்பின மக்களின் அரசாங்கத்தை நிறுவினாலும் அதன் ஊடாகவும் தமது அதிகாரத்தைப் பாதுகாத்துக்கொள்ளலாம் எனக் கணக்குப் போட்டது.

ஆபிரிக்க தேசிய காங்கிரசிலிருந்து போராட்டத்தை வழி நடத்திய கம்யூனிஸ்ட் கட்சியைத் தனிமைப்படுத்திய அதிகாரவர்க்கம் நெல்சன் மண்டேலாவுடன் சமரசத்திற்கு வந்தது. இதில் வேடிக்கை என்னவென்றால் இதுவரை மண்டேலா கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினராக இருந்தார் என்பதையே மறுத்துவந்த ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் அவரது மரணத்தின் பின்னர் மண்டேலா கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினராகவிருந்தார் என்று அறிக்கைவிடுத்திருக்கிறது.(http://www.anc.org.za/nelson/show.php?id=10658)

அதன் அடிப்படையில், விடுதலையான, மக்கள் ஆதரவு பெற்ற மண்டேலாவுடன் நெருக்கமான உறவுகளை வளர்த்துக்கொண்டது. ஆட்சியின் அடிப்படையில் எந்த மாற்றமும் ஏற்படுதாமல் முன்பிருந்த அதே ஆட்சி ஆபிரிக்க தேசிய காங்கிரசால் பிரதியீடு செய்யப்பட்டது.

பொன்கொழிக்கும் செல்வந்த நாடான தென்னாபிரிக்காவின் பொற் சுரங்கங்களை வெள்ளையின அதிகாரவர்க்கம் சூறையாடியது, அதே வெள்ளையின அதிகாரவர்க்கத்துடன் கறுப்பு முதலாளிகள் இணைந்து தனது தேசத்தின் வளங்களைச் சூறையாடுவார்கள் என்று மண்டேலா சிறையிலிருந்த போது எண்ணிப்பார்க்கவில்லை.

cameron_mandela-300x201.jpg

வர்க்க சமரசம்

‘பொற்சுரங்கங்களும் வங்கிகளும், தனியார் நிலங்களும் தேசிய மயமாக்கப்பட வேண்டும். நாட்டின் வளங்களும் சொத்துக்களும் தேசிய மயமாக்கப்பட்டு மக்களின் கைகளில் வழங்க்கப்படும் வரை தென்னாபிரிக்கா சுதந்திர நாடாக முடியாது’ – சிறையிலிருந்து மண்டேலா கூறியது இதுதான்.

புரட்சி பேச்சுவார்த்தையாகி, தேர்தல் அரசியலாகி ஆபிரிக்க காங்கிரஸ் வெற்றிபெற்ற பின்னர், அதே வெள்ளையினக் கொள்ளைக்காரர்கள் மக்களின் சொத்துக்களை முன்னைப் போலவே சூறையாடினர்.

இவை அனைத்தினதும் உச்சகட்டமாக,கடந்தவருடம் தங்கச் சுரங்கத்தில் கூலியுயர்வு கோரிப் போராடிய நிராயுத பாணிகளான தொழிலாளர்கள் ஆபிரிக்க தேசிய காங்கிரசின் அரச படைகளால் சாரிசாரியாகச் சூட்டுக்கொல்லப்பட்டார்கள்.

பெரும்பான்மை தென்னாபிரிக்க மக்களான உழைக்கும் மக்களுக்கும், வறுமையை அணைத்துக்கொண்டு வாழும் மத்தியதரவர்க்கத்த்கிற்கும் இன்று போராடுவதைத் தவிர வேறு வழிகள் கிடையாது. அதிகாரவர்க்கத்தோடு சமரசத்திற்குச் சென்ற போதே நெல்சன் மண்டேலா அவர்களால் துக்கிலிடப்பட்டுக் கொலை செய்யப்பட்டுவிட்டார் என்று போராடும் மக்கள் புரிந்துகொள்வார்கள். விடுதலையாவதற்கு முன்பிருந்த ‘பயங்கரவாதி’ நெல்சன் மண்டேலா இவர்களின் வழிகாட்டிகளில் ஒருவாராக இருப்பார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

தொடர்புடையவை :

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி அர்ஜுன் பகிர்வுக்கு

யுத்தத்தின் பின் மண்டேலா மன்னிப்பு கோரினார் ஆனால் இங்கு வெற்றி விழா கொண்டாடப்பட்டது : கிரியெல்ல.

தென்னாபிரிக்காவில் யுத்தம் முடிந்த பின்னர் நெல்சன் மண்டேலா உயிரிழப்புக்களாக மக்களிடம் மன்னிப்புக் கோரினார். ஆனால் நீங்கள் என்ன செய்தீர்கள்? உயிரிழப்புக்காக பாற்சோறு உண்டு வெற்றி விழா கொண்டாடினீர்கள் என ஐ.தே.கட்சி எம்.பி. லக்ஷ்மன் கிரியெல்ல இன்று சபையில் தெரிவித்தார்.

அடுத்த மார்ச் மாதம் மனித உரிமை மீறல்கள் குற்றச்சாட்டுக்களுக்கு அரசு எவ்வாறு முகம் கொடுக்கப் போகின்றது என்றும் அவர் கேள்வியெழுப்பினார்.
 
பாராளுமன்றத்தில் இன்று சனிக்கிழமை இடம்பெற்ற வெளிவிவகார அமைச்சர் (வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் நலனோம்புகை அமைச்சர்) மற்றும் குழுநிலை விவாதத்தில் உரையாற்றும் போதே லக்ஷ்மன் கிரியெல்ல எம்.பி. இதனைத் தெரிவித்தார்.
 
சபையில் அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
 
சிறுபான்மை இனத்தவர்களையும் விமர்சிக்கின்றீர்கள். வெளிநாடுகளையும் விமர்சிக்கின்றீர்கள் ஏன் தேர்தலுக்காக. ஆபிரிக்க நாடுகளில் 19இல் 7 நாடுகளே மாநாட்டுக்கு வந்தன. அரசின் முயற்சி வெற்றி பெறவில்லை. 
 
அமெரிக்கா இலங்கைக்கு எதிராக செயற்படுகின்றது என கூறுகின்றீர்கள். கியூபா அமெரிக்காவிற்கு எதிராக ஐ.நா.வில் பிரேரணை கொண்டு வருகிறது. இதன் போது கியூபாவுக்கு 108 வாக்குகள் ஆதரவாக கிடைத்தது. அமெரிக்காவிற்கு 2 வாக்குகளே கிடைத்தது.
 
எனவே ஐ.நா.வை அமெரிக்கா ஆட்டுவிக்கின்றதென்ற உங்கள் கருத்தை ஏற்க முடியும். இலங்கைக்கு எதிராக கடுமையான விமர்சனங்கள் உள்ளன.
இதனை கவனத்தில் கொள்ளவில்லை. சூடானுக்கும் கிழக்கு திமோருக்கும் எதிராக ஐ.நா.வில் பிரேரணைகள் கொண்டு வரப்பட்டன. இறுதியில் அந்நாடுகள் நெருக்கடிக்குள் தள்ளப்பட்டன.
 
இந்தியா எமக்கு ஒத்துழைப்பு வழங்கும். எமக்கு எதிராக பிரேணைகள் முன் வைக்கப்படமாட்டாது எனகிறீர்கள். ஆனால் அனைத்தும் இடம்பெற்றன.
 
கமரூனின் கருத்தை இலகுவாக எண்ண வேண்டாம். எமக்கெதிரான பிரேரணை நிறைவேற்றப்பட்டால் சர்வதேச விசாரணைக்கு முகம் கொடுக்க நேரிடும்.
 
பராக் ஒபாமாவின் அலுவலகத்தில் 20 மேற்பட்ட தமிழர்கள் தொழில் புரிகின்றனர். நெல்சன் மண்டேலா யுத்தம் முடிந்தவுடன் மன்னிப்பு கேட்டார். சிறையிலிருந்து மண்டேலா விடுதலையாகி ஜனாதிபதி பதவியேற்ற போது சிறைச்சாலை அதிகாரிகளுக்கும் அழைப்பு விடுத்தார்.
 
ஆனால் யுத்தத்திற்கு பின்னர் நீங்கள் என்ன செய்தீர்கள்? பாற்சோறு உட்கொண்டு வெற்றி விழா கொண்டாடினீர்கள். உயிரிழப்புக்களுக்காக மன்னிப்பு கோராது விழா கொண்டாடினீர்கள்.
 
மனித உரிமை மீறல் கேள்விகளுக்கு அதிவேக பாதை நிர்மாணித்துள்ளோம். விமான நிலையம் துறைமுகம் நிர்மாணித்துள்ளோம் என சர்வதேச விசாரணைகளின் போது கூற முடியாது.
 
அடுத்த மார்ச் மாதம் நாட்டுக்கு பாரிய நெருக்கடியான மாதமாகும். சர்வதேச மனித உரிமைகள் தொடர்பாக பேசும் போது துரோகிகளாக முத்திரை குத்துகிறீர்கள்.
 
சனல் 4 இலங்கைக்கு வரச்சொல்லி எங்கும் போடவில்லை. யுத்தத்தை பதிவு செய்ய அரசு ஊடகங்களே நேரடியாக அங்கு சென்றன. தனியார் ஊடகங்கள் செல்லவில்லை. அப்படியானால் அரச ஊடகங்களே சாட்சியங்களை வெளிநாடுகளுக்கு வழங்கின.
 

தென் ஆப்ரிக்காவின் ஜோகன்னஸ்பர்க நகரில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்ட முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலாவின் பேரன் நிடாபா மண்டேலா.

 

ELARGE_20131207233943047842.jpeg

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புக்கு நன்றிகள் அர்ஜீன். பிரித்தானியாவில் முன்பு பயங்கரவாதியாகக் கருதப்பட்ட மண்டேல்லாவின் சிலை பிரித்தானியாவில் இலண்டனில் இருக்கும் பாராளுமன்றத்துக்கு முன்னால் இருக்கும் பூங்காவில் தற்பொழுது இருக்கிறது.

நெல்சன் மண்டேலாவின் அஞ்சலி நிகழ்வில் சுய புகைப்படமெடுத்த ஜாலியாக இருந்த உலகத் தலைவர்கள்
தென் ஆபிரிக்க முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலாவுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு ஜொஹன்னஸ் பேர்க் நகரிலுள்ள எப்.என்.பி.மைதானத்தில் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற போது பல்லாயிரக்கணக்கானவர்கள் மறைந்த மாபெரும் தலைவருக்கு தமது மரியாதையை செலுத்தும் நோக்கில் அங்கு கூடியிருந்தனர்.
525344891.jpg
இதன் போது சில உலகத் தலைவர்கள் மறைந்த மாபெரும் தலைவர் ஒருவருக்கு தாம் அஞ்சலி செலுத்துவதற்கு தாம் வந்துள்ளதை மறந்தது போன்று சக தலைவர்களுடன் இணைந்து தம்மை கையடக்கத் தொலைபேசி மூலம் புகைப்படமெடுப்பதற்காக வாய்ப்பாக அந்நிகழ்வைப் பயன்படுத்திக் கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
525345057-1.jpg
அஞ்சலி நிகழ்வின் போது மைதானத்தில் அருகருகே அமர்ந்திருந்த அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவும் பிரித்தானிய பிரதமர் டேவிட் கமெரோனும் டென்மார்க் தலைவர் ஹெல்லி தோர்னிங் ஸ்கமிட்டும் சிரித்தவாறு கையடக்கத் தொலைபேசி மூலம் புகைப்பட எடுத்துக் கொண்டமையானது கடும் கண்டனத்துக்கு உள்ளாகியுள்ளது.
5253448911.jpg
மேற்படி 3 தலைவர்களும் கையடக்கத் தொலைபேசி புகைப்படத்தை எடுத்துக் கொண்ட போது தமது கணவரின் அருகில் அமர்ந்திருந்த மிசெல் ஒபாமா, அவர்களது செயலால் ஈர்க்கப்படாதவர் போன்று மைதானத்தை நோக்கி தனது பார்வையை திருப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
 
அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவும் பிரித்தானிய பிரதமரும் டென்மார்க் பெண் தலைவருமான ஹெல்லியும் சிரித்தவாறு தம்மைத் தாமே புகைப்படமெடுத்துக் கொள்வதையும் பராக் ஒபாமாவும் ஹெல்லியும் நிலைமைக்கு சிறிதும் பொருந்தாத வகையில் சிரித்தவாறு உரையாடுவதையும் வெளிப்படுத்தும் புகைப்படங்கள் இணையத்தளங்களில் வெளியிடப்பட்டதையடுத்து பலரும் அவர்களது செயலுக்கு கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.
5253448912.jpg
இன ஒடுக்கு முறைக்காக போராடி மரணமான மாபெரும் தலைவரின் வாழ்க்கையை நினைவுகூரும் நிகழ்வில் மேற்படி 3 தலைவர்களும் முறையற்ற விதத்தில் நடந்து கொண்டுள்ளதாக குற்றஞ்சாட்டப்படுகிறது.
obama-danish.jpgobamas.jpgsouth_africa_mandela_memorial-16.jpg

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.