Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐ.நாவில் இலங்கைக்கு ஆதரவாக செயற்பட்டவர்களின் பெயர் விபரங்களை வெளியிட்டால் அவர்களின் உயிருக்கு ஆபத்து - பீரிஸ்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
peries-seithy-2-150.jpg

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் சபையில் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட இரு பிரேரணைகளின் போதும், இலங்கைக்கு ஆதரவாகச் செயற்பட்டவர்களின் பெயர் விபரங்களை வெளியிட்டால் அவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று இலங்கை அரசு தெரிவித்துள்ளது. இந்த ஆதரவுச் செயற்பாட்டுக்காக 59 மில்லியன் ரூபா செலவு செய்யப்பட்டுள்ளது என்றும் அரசு கூறியுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் கடந்த இரு மனித உரிமைகள் கூட்டத் தொடர்களின் போதும், அமெரிக்க அரசினால் இலங்கைக்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட பிரேரணைகள் நிறைவேற்றப்பட்டிருந்தன. இந்தப் பிரேரணையை எதிர்த்து இலங்கையைக் காப்பாற்றுவதற்காக 59 மில்லியன் ரூபா செலவு செய்யப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ் நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.

  

இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது:

தேசிய பாதுகாப்புக் கருதி இலங்கையை ஜெனிவாவில் காப்பாற்றும் குழுவில் இருந்து உறுப்பினர்களின் விவரங்களை வெளியிட முடியவில்லை. எமது முயற்சிக்குப் பல தனிநபர்கள் ஆதரவளித்தனர், இப்போதும் ஆதரவளிக்கின்றனர். அந்தக் குழுக்களின் எண்ணிக்கை மற்றும் அவர்களின் பெயர் விவரங்களை வெளியிடுவது அவர்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கலாம். இலங்கைக்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட தீர்மானம் நியாயமற்றது என்பதை ஐ.நா. மனித உரிமைகள் சபை உறுப்பு நாடுகளுக்கு விளக்கக் கடுமையான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

பல நாடுகளுக்கு நானே நேரில் சென்று வெளிவிவிகார அமைச்சர்களைச் சந்தித்தேன். குறிப்பிட்ட நாடுகளின் தூதரகங்களுக்கும் விளக்கமளிக்கப்பட்டன. ஜனாதிபதியின் சிறப்புத் தூதுவர்கள் குறிப்பிட்ட நாடுகளின் தலைவர்களைச் சந்தித்து வேண்டுகோள் விடுத்தனர் - என்றார்.

 

http://www.seithy.com/breifNews.php?newsID=98765&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

யாராக இருக்கும்??! சில சிங்களவர்களும், மாட்டுக்கருத்துவாதிகளும்தான்.. :D

யாராக இருக்கும்??! சில சிங்களவர்களும், மாட்டுக்கருத்துவாதிகளும்தான்.. :D

மாட்டு கருத்தாளர் என்று அழைத்து மாட்டினத்தை அவமதிப்பதை மாடுகளுக்காக பேசவல்ல விவசாயி நான் கண்டிக்கிறேன்.

வேண்டுமென்றால் மாசுகருத்தாளர்கள் என்று அழைக்கலாம்.

யாராக இருக்கும்??! சில சிங்களவர்களும், மாட்டுக்கருத்துவாதிகளும்தான்.. :D

 

மாற்றுகருத்தாளர்களை பயங்கரவாதிகள் மட்டுமே கொல்லுவார்கள் :) :)

 

உ+ம்: இலங்கை, சிரியா :)

  • கருத்துக்கள உறவுகள்

மாற்றுகருத்தாளர்களை பயங்கரவாதிகள் மட்டுமே கொல்லுவார்கள் :) :)

 

உ+ம்: இலங்கை, சிரியா :)

 

சிரியாவிலும் புலியா ???
செய்திகளில் இருட்டடிப்பு செய்துவிட்டார்கள்.

மாற்றுகருத்தாளர்களை பயங்கரவாதிகள் மட்டுமே கொல்லுவார்கள் :) :)

உ+ம்: இலங்கை, சிரியா :)

என்றாலும் உங்கள் வெண்தாடி வேந்தரை பயங்கரவாதி என்று அழைக்ககூடாது.

கள்ளகூட்டுக்கு சகோதர கொலை செய்வது சரியா?

இந்த அநியாயத்தை கேட்க செக்குவாரா கிழம்புவாரா? அல்லது ஓசி சோத்தை அடைந்துவிட்டு படுத்து கொட்டாவி புரட்சி செய்வாரா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.