Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ராஜ்நாத்சிங்குடன் வைகோ சந்திப்பு: பா.ஜ.க- ம.தி.மு.க. கூட்டணி உறுதி

Featured Replies

December 13, 2013

 

13-vaiko0234343-300-jpg.jpg

 

டெல்லி: மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, பாஜக தலைவர் ராஜ்நாத்சிங்கை டெல்லியில் சந்தித்து பேசியுள்ளார். இதன்மூலம் லோக்சபா தேர்தல் பாஜக-மதிமுக கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ளது.லோக்சபா தேர்தலுக்கு அனைத்துக் கட்சிகளும் தயார் ஆகிவருகின்றன.

 

கடந்த லோக்சபா தேர்தலில் கூட்டணி அமைத்த கட்சிகள் இந்த முறை அதே கூட்டணி அமைக்குமா? அல்லது கூட்டணிகள் இடம் மாறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

 

பாரதீய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளராக மோடி அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் நான்கு தேர்தலில் பாரதீய ஜனதா பெற்றுள்ள இமாலய வெற்றியும் பல அரசியல் கட்சிகளை யோசிக்கச் செய்துள்ளது. தமிழ் நாட்டிலும் பாரதீய ஜனதா முக்கிய அரசியல் கட்சிகளை தனது கூட்டணியில் சேர்க்கும் முயற்சியில் இறங்கி உள்ளது.

 

ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ பா.ஜனதாவுக்கு ஆதரவாக கருத்துக்களை தெரிவித்து வருகிறார். மோடி, பிரதமர் ஆவதற்குரிய ஒளிமயமான எதிர்காலம் தெரிகிறது என்று நான்கு மாநில தேர்தல் வெற்றி குறித்த அறிக்கையில் கூறி இருந்தார்.

 

வைகோ சந்திப்பு

 

இந்த நிலையில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ டெல்லி சென்றார். அங்கு பா.ஜனதா தேசிய தலைவர் ராஜ்நாத்சிங்கை அவரது வீட்டில் சந்தித்து பேசினார். அப்போது பா.ஜனதாவுடன் ம.தி.மு.க.கூட்டணி அமைப்பது குறித்து பேச்சுவார்த்தை நடந்தாக கூறப்படுகிறது.

 

தமிழ் நாட்டின் அரசியல் நிலைமை, எந்த எந்த கட்சிகளுடன் கூட்டணி அமைந்தால் தமிழ்நாட்டில் அதிக இடங்களை பிடிக்க முடியும் என்பது குறித்தும் இருவரும் பேசியதாக டெல்லி வட்டாரங்கள் கூறுகின்றன. இந்த சந்திப்பு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

 

வலுவான கூட்டணி

 

இதனிடையே தமிழ்நாட்டில் பாரதீயஜனதா கூட்டணியில் தே.மு.தி.க., ம.தி.மு.க., பா.ம.க. ஆகிய கட்சிகளை சேர்க்கும் முயற்சியில் தமிழருவி மணியன் இறங்கியுள்ளார். இதற்கான பேச்சுவார்த்தைகளும் நடந்து வருகின்றன. இந்த கூட்டணியில், ம.தி.மு.க. - பா.ம.க. சேர்வது உறுதியாகி விட்டது. தே.மு.தி.க தலைமையுடன் பேச்சு நடக்கிறது என்று தமிழருவி மணியன் கூறிஇருந்தார். அதே சமயம் பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி இதை மறுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

http://tamil.oneindia.in/news/india/vaiko-meets-rajnath-singh-189450.html

  • கருத்துக்கள உறவுகள்

வரும் இந்திய பொதுத் தேர்தலில் காங்கிரஸ் படு தோல்வியை சந்திக்கும்
பா.ஜ.க. வுக்கு வெற்றி வாய்ப்புகள் அதிகம்.
தமிழகத்திலிருந்து... தி.மு.க., அ.தி.மு.க. போன்ற கட்சிகள் பா.ஜ.க.வுடன் சேர முதல் வை.கோ. வின் ம.தி.மு.க. முந்திக் கொண்டது நல்லது.

  • தொடங்கியவர்

என்னை பொறுத்தவரை காங்கிரஸ், பா.ஜ.க இரண்டும் ஒன்று தான். மூன்றாவது கூட்டணி ஒன்று களமிறங்கியிருக்கலாம். :rolleyes:

Edited by துளசி

தி.மு.க., - அ.தி.மு.க.,வுக்கு மாற்றாக, பா.ஜ., தலைமையில், மூன்றாவது அணி அமைக்கும் முயற்சிக்கு, தமிழகத்தில் முழு ஆதரவு

 

தி.மு.க., - அ.தி.மு.க.,வுக்கு மாற்றாக, பா.ஜ., தலைமையில், மூன்றாவது அணி அமைக்கும் முயற்சிக்கு, தமிழகத்தில் முழு ஆதரவு கிடைத்துள்ளதால், பா.ஜ., மேலிடம் மகிழ்ச்சி அடைந்துள்ளது. தே.மு.தி.க., - பா.ம.க., - ம.தி.மு.க., -கொ.மு.க., அகில இந்திய முஸ்லிம் முன்னேற்றக் கழகம் ஆகிய கட்சிகளுடன், தலித் அமைப்பு ஒன்றும், இந்த கூட்டணியில் இடம் பெறலாம் எனத் தெரியவந்துள்ளது. மூன்றாவது அணி அமைப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ள, காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன், சென்னையில் நாளை, இதற்கான அறிவிப்பை வெளியிடுகிறார்.

 

வலுவான கூட்டணி:

தமிழகத்தில், பா.ஜ., தலைமையில், வலுவான ஒரு கூட்டணியை ஏற்படுத்த வேண்டும் என, பா.ஜ., மேலிடம் விரும்பியது. தி.மு.க., - அ.தி.மு.க.,வுக்கு மாற்றாக, அந்த அணியில் தே.மு.தி.க., - பா.ம.க., - ம.தி.மு.க., ஆகிய கட்சிகளை சேர்க்க வேண்டும் எனவும் திட்டமிடப்பட்டது. அதற்கான முயற்சி, கடந்த ஒரு மாதமாக, நடந்து வருகிறது. இதில், ம.தி.மு.க.,வுடன் நடந்த பேச்சு முடிவடைந்து, பா.ஜ., அணியில் சேருவது உறுதியாகி உள்ளது. அதையடுத்து, டில்லியில், பா.ஜ., தலைவர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து உறுதி செய்துள்ளார் வைகோ. தி.மு.க., - அ.தி.மு.க.,வுடன் கூட்டு சேரப் போவதில்லை என்ற தன் நிலையை, பா.ஜ., மேலிடம் தெரிவித்த பிறகு தான், வைகோ - ராஜ்நாத் சிங் சந்திப்பு நடந்துள்ளது.


 

வைகோ விளக்கம்:

'தமிழகத்தில், தி.மு.க.,வுடன் கூட்டு சேர்ந்தால், பா.ஜ.,வுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து, ராஜ்நாத் சிங்கிடம், வைகோ விளக்கமாக, எடுத்துக் கூறியுள்ளார்; எனவே பா.ஜ., முடிவில் மாற்றம் இருக்காது' என, ம.தி.மு.க., வட்டாரம் கூறுகிறது. இதற்கிடையில், சென்னை வந்துள்ள, பா.ஜ., முன்னாள் தலைவர் வெங்கையா நாயுடுவிடம், கூட்டணிக்கான வாய்ப்பு குறித்து, தி.மு.க., தரப்பில் பேசப்பட்டுள்ளதாக தெரிகிறது. அவர் அளித்த பதிலும், சாதகமாக இல்லை எனக் கூறப்படுகிறது.

அதேபோல், பா.ம.க., தலைமையுடனும், தமிழருவி மணியன் பேசி, கூட்டணியை உறுதி செய்துள்ளார். பா.ஜ., மேலிடத்துடன், அந்த கட்சி தலைமை, தொடர்ந்து பேசி வருகிறது. இதில் சிக்கல் வராது என, இரு கட்சி வட்டாரமும் நம்பிக்கை தெரிவிக்கின்றன. தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்துடன், இரண்டு முறை பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. டில்லி தேர்தலுக்கு முன், 'என் தலைமையை ஏற்கும் கட்சிகளுடன் தான் கூட்டணி' என, கூறிய விஜயகாந்தின் குரல், தோல்விக்கு பிறகு, தளர்வடைந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன், நடந்த தே.மு.தி.க., செயற்குழுவில் பேசியவர்களில் பெரும்பாலா னோர், பா.ஜ., கூட்டணிக்கே பச்சைக்கொடி காட்டியுள்ளனர்.


 

வெள்ளை மனம்:

பேட்டி ஒன்றில், 'விஜயகாந்துக்கு வெள்ளை மனம்' என, கருணாநிதி பாராட்டியிருந்ததை கூட, விஜயகாந்த் விமர்சனம் செய்துள்ளார். 'என் கல்யாண மண்டபத்தை இடித்தபோது, எனக்கு வெள்ளை மனம் இருப்பது தெரியாமல் போய் விட்டதா?' என, பாராட்டுக்கு பதிலடி கொடுத்து, தி.மு.க.,வை திணறடித்து விட்டார் என்கின்றனர். எனவே, தே.மு.தி.க.,வும் இந்த கூட்டணிக்கு வருவது உறுதியாகி இருப்பதாகவும், ஜனவரியில் நடத்தப்படும் அக்கட்சி மாநாட்டில் அதை அறிவிக்க, விஜயகாந்த் முடிவு செய்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


 

மதச்சார்பற்ற அணி:

மேலும், பா.ஜ., தலைமையிலான மூன்றாவது அணிக்கு, 'மதச்சார்பற்ற அணி' என்ற

தோற்றத்தை ஏற்படுத்தவும் திட்டமிட்டுள்ளனர். அதற்காக, முஸ்லிம் அமைப்பு, தலித் அமைப்புகளை சேர்க்கவும் முயற்சி எடுக்கப்பட்டது. அதன் பலனாக, அகில இந்திய முஸ்லிம் முன்னேற்றக் கழகம் என்ற அமைப்பு, பா.ஜ., கூட்டணியில் சேர்ந்துள்ளது. தென் மாவட்டங்களில் பிரபலமான, தலித் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. விரைவில், அந்த கட்சியும், மேற்கு மாவட்டங்களில், செல்வாக்கு பெற்ற, கொ.மு.க.,வும் இந்த கூட்டணியில் சேர்வது உறுதியாகி உள்ளது. இதுகுறித்து, தமிழருவி மணியன் கூறுகையில், ''எதிர்பார்க்கிற சீட் உள்ளிட்ட சில விஷயங்கள் நிறைவேறுகிற வரையில், சில கட்சிகள் வெளிப்படையாக, கூட்டணி முடிவை அறிவிக்கப் போவதில்லை. ஆனால், இந்த அணி அமைவது உறுதி. அதற்காக எடுக்கப்பட்ட முயற்சிகளை, நான் நாளை, வெளியிட உள்ளேன்,'' என்றார்.

 

http://www.dinamalar.com/news_detail.asp?id=872794

  • தொடங்கியவர்

தமிழ்நாடு, ஆந்திரா, பீகார், உத்திரபிரதேசம், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் பாஜக ஒரு தொகுதி வெல்வதே இயலாத காரியம் என்று தெரிந்தும்..

17 வருட கூட்டணியை மோடிக்கு பிரதமராவதற்கு தகுதியில்லை என்றுணர்ந்து நிதிஷ்குமார் தைரியமாக பிரிந்த பின்னும்..

கம்யூனிஸ்ட்கள் மூன்றாவது அணிக்கு முயல்கிறார்கள் அதில் பலமான பிராந்திய கட்சிகள் சேரும் என்று தெரிந்த பின்னும்..

மோடி அலை என்றேதுவுமில்லை அப்படியே இருந்தாலும் அதில் உருவாகும் அதிர்வலை சிறுபாண்மையினருக்கு அச்சத்தை தரக்கூடியது என்று தெரிந்தும்...

ஆம் ஆத்மி கட்சி தனியே நின்று வெல்லமுடியுமென்று நிருபித்து காட்டிய பிறகும்..

தமிழ்நாட்டின் திராவிட இயக்கங்கள், முற்போக்கு இயக்கங்கள் மற்ற திராவிட கட்சிகளை மேல் நம்பிக்கையிழந்து அவைகளை விட தங்களை உயர்வாக அணுகுகிறது என்று தெரிந்தும்...

ஏற்கனவே மதவாத கட்சி என்று பெயரெடுத்த பாஜகவோடு அனைத்து சமுதாயப் பேரியக்கம்' என்ற பெயரில் அனைத்து சாதிய இயக்கங்களை ஒன்றிணைத்த பாமகவையும் இணைக்க போவதாக செய்திகள் வருகிறது, ஆக அது மதவாத சாதியவாத கூட்டணி என்று தெரிந்தும்.

கூட்டணி அரசியல் என்ற பதமே மக்களின் வெறுப்பை சம்பாத்திருக்கிறது.. அது பச்சை சந்தர்ப்பவாதம் என்று மக்கள் உணர்ந்திருக்கிறார்கள் என்று புரிந்திருந்தும்..

2009க்கு பிறகு ஆண்ட ஆளும் அரசியல் கட்சிகளை வெறுத்து அதிலிருந்து மாற்று தேவை என்ற அரசியல் எண்ணம் தமிழகத்தில் அதிகமாகிருக்கிறது என்று அறிந்திருந்தும்..

தனியாக நின்றால் தமிழுணர்வாளர்களும், தமிழ் இயக்கங்களும், நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட தமிழர் கட்சிகள் தங்களை தான் ஆதரிப்பார்கள் என்று தெரிந்தும்..

# பாரதிய ஜனதாவோடு கூட்டணி போட அச்சாரம் போடும் மதிமுக.. "மறுமலர்ச்சி" திமுக இல்லை "மறுபடியும்" திமுக தான்...

 

பாக்கியராசன் சே

(facebook)


நாடாளுமன்ற தேர்தலில் ம.தி.மு.க தனியாக நின்றால் தாம் அவர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வோம் என முன்னர் சீமான் அண்ணா கூறிய போது.

 

1488810_10152482591729128_953756373_n.jp

 

(facebook)

பா.ஜ., அணியில் ம.தி.மு.க., - பா.ம.க., - தே.மு.தி.க., :தமிழருவி மணியன் நம்பிக்கை பேட்டி

 

 

சென்னை : "லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க., - தி.மு.க.,வுக்கு மாற்று அணி அமைக்கும் வகையில், பா.ஜ., - ம.தி.மு.க., - பா.ம.க., - தே.மு.தி.க., கட்சிகள், ஒரு அணியில் இடம் பெறும் வாய்ப்பு உள்ளது,'' என, காந்திய மக்கள் பேரவை தலைவர், தமிழருவி மணியன் கூறினார்.

அவரது பேட்டி: பா.ஜ., தலைமையில் வலுவான ஒரு அணி அமைக்க, வைகோ, ராமதாஸ், விஜயகாந்தை சந்தித்து, தமிழகத்தில் மாற்று அணியை அமைக்க வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தினேன். தமிழகத்தில், ம.தி.மு.க.,வுக்கு, 8; பா.ம.க.,வுக்கு, 8; தே.மு.தி.க.,வுக்கு, 8; பா.ஜ.,வுக்கு 10 சதவீதம் ஓட்டு வங்கி உள்ளது. இந்த, நான்கு கட்சிகளும் சேர்ந்து, 30 சதவீதம் ஓட்டுகளை பெறும் வகையில் மாற்று அணியை உருவாக்க முடியும். கூட்டணி தொடர்பாக, வைகோ, பா.ஜ., தலைவர், ராஜ்நாத் சிங்கை சந்தித்து பேசியுள்ளார். "பா.ஜ., அணியில் தி.மு.க., - அ.தி.மு.க., இடம் பெற்றால், நாங்கள் இடம் பெற மாட்டோம்' என, வைகோ கூறியுள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்கு நான் செல்லும் முன், ராமதாசை சந்தித்து பேசினேன். ""இந்த முறை நாங்கள் தனித்து போட்டியிடுகிறோம். ஆனால், பிரதமர் வேட்பாளர் யார் என்று கேட்டால், நாங்கள், மோடியை ஆதரிப்போம்,'' என, ராமதாஸ் தெரிவித்தார்.""தனியாக நிற்க வேண்டாம்,'' என, அவரிடம் வலியுறுத்தி விட்டு, ஆஸ்திரேலியாவுக்கு சென்று விட்டு திரும்பினேன். தற்போது ஏற்பட்ட மாற்றத்தினால், பா.ஜ., அணியில் சேருவதற்கான வாய்ப்பு, பா.ம.க.,வில் கனிந்துள்ளது. மீண்டும் ராமதாசை சந்தித்து பேசுவேன். தே,மு.தி.க.,வுக்கு தமிழகம் முழுவதும், 234 சட்டசபை தொகுதிகளிலும் ஓட்டு வங்கி உள்ளது. மாற்று அணி அமைப்தற்காக, விஜயகாந்தை ஒரு மணி நேரம் சந்தித்து பேசினேன்.

""தி.மு.க.,வுடன் தே.மு.தி.க., கூட்டணி சேர்ந்தால், '2ஜி' ஊழல் மூட்டையை, தே.மு.தி.க., முதுகில் சுமக்க வேண்டிய நிலை ஏற்படும். 2016ல் தே.மு.தி.க., தலைமையி"ல் ஆட்சி பிடிக்க வேண்டும் என்றால், ஊழலை எப்படி எதிர்த்து பேச முடியும்.காங்கிரசிடம் நிர்வாகத் திறமை இல்லை, இலங்கை தமிழர்களுக்கு துரோகம் விளைவித்து விட்டது. காங்கிரசுடன் கூட்டணி வைத்து கொண்டால், தே.மு.தி.க.,வுக்கு நஷ்டம். தேசிய ஜனநாயக முன்னணியில், பெரியண்ணன் முறையில் செயல்பட யாரும் இல்லை.அனைவரும் சமம் என்ற அடிப்படையில், தொகுதி பங்கீடு, ஒதுக்கீடு செய்து தேர்தலை சந்திக்கலாம். சட்டசபை தேர்தலில் குறைந்தபட்ச செயல் திட்டம் வகுத்து, கூட்டணி அரசு அமைக்கலாம்,'' என்று அவரிடம் கூறினேன்.

விஜயகாந்த் என்னிடம் ஒரு கேள்வி கேட்டார். ""அ.தி.மு.க., அணியில், ஐந்து தொகுதிகளை, பா.ஜ., வுக்கு ஒதுக்கீடு செய்து, கூட்டணிக்கு அழைத்தால், பா.ஜ., ஏற்றுக் கொள்ளாது என்பது என்ன நிச்சயம்?'' என்று கேள்வி எழுப்பினார். இதற்கு நான், "" பா.ஜ., தான் பதில் தர வேண்டும்,'' என்றேன். ""ஜனவரி மாதம், கட்சி மாநாட்டில் தொண்டர்களின் கருத்தை கேட்டு முடிவு அறிவிப்பேன்,'' என, விஜயகாந்த் பதிலாக கூறியுள்ளார். எனவே, ஒரு அணியில் பா.ஜ., -ம.தி.மு.க., - பா.ம.க., - தே.மு.தி.க., இடம் பெறும் வாய்ப்பு இருப்பதாக நான் நம்புகிறேன். இவ்வாறு, தமிழருவி மணியன் கூறினார்.
 

முடிவு என்ன:



தமிழகத்தின் இரண்டு பிரதான கட்சிகளான, அ.தி.மு.க.,வும், தி.மு.க.,வும், லோக்சபா தேர்தலுக்கான கூட்டணி குறித்து, தங்களுடைய எண்ணங்களை வெளிப்படுத்திவிட்ட சூழ்நிலையில், மற்ற கட்சிகளும் தங்களுடைய நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டிய கட்டாயம் உருவாகி இருக்கிறது. குறிப்பாக ஓட்டு சதவீத அடிப்படையில், தமிழகத்தில் மூன்றாவது இடத்தில் இருக்கும் தே.மு.தி.க., லோக்சபா தேர்தல் கூட்டணி குறித்து, காங்கிரஸ், பா.ஜ., என, இரண்டு தரப்பிலும் பேசிக் கொண்டிருக்கிறது. "விரைவிலேயே கட்சியின் முடிவு குறித்து, தலைவர் விஜயகாந்த் அறிவிப்பு வெளியிடுவார்,' என, அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

http://www.dinamalar.com/news_detail.asp?id=874530

 

Tamil_News_large_874530.jpg

 

 


தி.மு.க., என்ற அழுக்கு மூட்டையை பா.ஜ., சுமக்காது: இளங்கோவன்.

 

ன்னை: தி.மு.க., என்ற அழுக்கு மூட்டையை, பா.ஜ., சுமக்காது,'' என, முன்னாள் மத்திய அமைச்சர் இளங்கோவன் கூறினார்.

அவரது பேட்டி: "காங்கிரசுடன் கூட்டணி இல்லை' என, கருணாநிதி கூறியுள்ளார். அவரது அறிவிப்பு, எங்களுக்கான, கிறிஸ்துமஸ், புத்தாண்டு பரிசாக காங்கிரஸ் கருதுகிறது. "கூண்டிலிருந்து விடுபட்டுள்ளோம்' என, வாசன் கூறியுள்ளார். "கூட்டணி கிடையாது' என்ற, கருணாநிதியின் அறிவிப்பால், பெரிய சுமை நீங்கி விட்டதாகக் கருதுகிறோம்; அவர்களால், எங்களுக்கு ஏற்பட்ட கறை நீக்கப்பட்டதாக உணருகிறோம். மறுபடி சமரசம் கிடையாது. காங்கிரசுக்கு சுயமரியாதை இருக்கிறது. தி.மு.க., தான் எங்களுக்கு துரோகம் இழைத்து விட்டது. காங்கிரஸ் ஆதரவுடன் மைனாரிட்டி தி.மு.க., அரசு, ஐந்து ஆண்டு காலம் ஆட்சி நடத்தியது.
சி.பி.ஐ.,யை தவறாக பயன்படுத்தவில்லை. சி.பி.ஐ., என்பது தனி ஆளுமை நிறுவனம். காங்கிரசை குற்றம் சொல்வது, பா.ஜ.,வுக்கு ஒத்து ஊதுவது போல் உள்ளது. இந்த அழுக்கு மூட்டையை, முதுகில் சுமக்க, பா.ஜ., தயாராக இருக்காது. ஊழல் கறை படிந்த, தி.மு.க.,வை, பா.ஜ., சேர்ப்பது சந்தேகம் தான். இவ்வாறு, இளங்கோவன் கூறினார்.

Tamil_News_large_874337.jpg

http://www.dinamalar.com/news_detail.asp?id=874337

 

ELARGE_20131217164028892445.jpeg

தமிழகத்தின் கெஜ்ரிவால் சகாயம்?:
நேர்மைமிகு அதிகாரியாக இருந்து இன்று அரசியல்வாதியாக மாறியுள்ள கெஜ்ரிவால் டில்லியை ஒரு கலக்கு கலக்கி வருவது போல தமிழகத்தில் லஞ்சம் தவிர் நெஞ்சம் நிமிர் என்ற வார்த்தையின் இலக்கணமாக திகழும் கோ-ஆப்டெக்ஸ் இயக்குனர் சகாயம் ஐ.ஏ.எஸ் மாறுவாரா ? என்ற எதிர்பார்ப்பு பலருக்கு கிளம்பியுள்ளது.அதை வலுவாக்கும் வகையில் கிளம்பியுள்ள பேனர் இது.

நான் சகாயம் பேசுகிறேன்....

 

நாட்டில் எத்தனையோ அதிகாரிகள் இருக்கிறார்கள் ஆனால் நேர்மைக்கு எடுத்துக்காட்டாக சில அதிகாரிகள்தான் இருக்கிறார்கள் அவர்களில் முதன்மையானவராக தெரிபவர் சகாயம்தான்.
காரணம் மிகவும் எளிது.,
லஞ்சம் தவிர் நெஞ்சம் நிமிர் என்ற வார்த்தையின் வடிவமாக
நேர்மைக்கு மிகவும் நெருக்கமானவராக
துணிவுக்கு கொஞ்சமும் பஞ்சமில்லாதவராக
நியாயத்தின் பக்கமே எப்போது நிற்பவராக
உண்மையைச் சொல்ல தயங்காதவராக
பொய்யான புகழுக்கு மயங்காதவராக
தவறுக்கு எப்போதும் துணை போகாதவாரக இருப்பவர் இன்றைய தேதிக்கு இவர் ஒருவர்தான் நீண்ட தொலைவிற்கு தட்டுப்படுகிறார்.

கோ- ஆப்டெக்ஸ் மேலாண் இயக்குனராக தற்போது இருந்துவரும் சகாயம் கடந்த வாரம் சென்னையில் நடைபெற்ற சட்ட பஞ்சாயத்து இயக்கத்தின் தொலைபேசி மையத்தினை துவக்கிவைத்து பேசினார்.
வார்த்தைக்கு வார்த்தை என் தேசம் என் தமிழ் மக்கள் என்று உணர்ச்சி பெருக்கோடு எளிய தமிழில் அவர் பேசிய பேச்சில் இருந்த பல "நிஜக்கதைகள்தான்' இங்கே அவரைப்பற்றிய பதிவுக்கு காரணம்.
இதோ சகாயம் உங்களுடன் இதயம் திறந்து பேசுகிறார்... உங்கள் இதயத்தோடு பேசுகிறார்.
என்னைப் பற்றி சமீபத்தில் பத்திரிகையில் ஒரு செய்தி வந்திருந்தது. அந்த செய்தியில் நானும் (கெஜ்ரிவால் போல) ஒரு அரசியல் இயக்கம் தொடங்குவேனா? என்று கேட்டு எழுதியிருந்தது.
நிச்சயமாக இல்லை காரணம் நான் விரும்புவது வெறும் அரசியல் மாற்றம் அல்ல, லஞ்சமும், நேர்மையும் அற்ற, முழு சமுதாயமும் நேர்மையாக மாறக்கூடிய மனமாற்றமே.
லஞ்சத்தையும், ஊழலையும் கூட ஒழித்து விடலாம் ஆனால் மதுவை ஒழிக்கமுடியுமா என்பதுதான் எனது இன்றைய சந்தேகம். காரணம் நான் மதுரையில் ஆட்சித்தலைவராக இருந்த போது நள்ளிரவு பனிரெண்டு மணிக்கு ஒரு போன் வந்தது போன் செய்தவர் "ஐயா கலெக்டரா' என்று கேட்டு உறுதி செய்து கொண்டார். ஏதோ ஒரு முக்கியமான விஷயம் சொல்லப் போகிறார் என்ற ஆர்வத்துடன் எதிர்முனையின் குரலை எதிர்பார்த்தபோது " உசிலம்பட்டி பஸ் நிலையம் பக்கத்துல இருக்கிற டாஸ்மாக் கடையில் விற்கப்படும் ரம்மில் முன்பு போல கிக்கே இல்லை, ஏதோ தப்பு நடக்கிறது நடவடிக்கை எடுங்கள்' என்றார்.
பகலில் கூட குடிநீர் பிரச்னையை சொல்ல முன்வராத என் தமிழ் சமூகம் "குடிப்பதில்' ஒரு பிரச்னை என்றதும் நள்ளிரவு என்று கூட பாராது பேசுகிறதே என வேதனைப்பட்டேன்.
இதே போல தனியார் வசம் மதுக்கடைகள் இருந்த காலத்தில் நான் கோவையில் பணியாற்றினேன். அப்போது குறிப்பிட்ட இலக்கை எட்டமுடியாத கடைக்காரரிடம் விசாரணை செய்த போது அடுத்த மாதம் நீங்கள் எதிர்பார்த்ததைவிட அதிகம் விற்றுவிடுவோம் என்றார் எப்படி என்று கேட்டபோது அடுத்த மாதம் இந்த பகுதியில் உள்ள பொறியியல் கல்லூரியை திறந்து விடுவார்கள் பிறகு விற்பனை சூடு பிடித்துவிடும் என்றார். அவர் இதை சாதாரணமாகவே சொன்னார், ஆனால் நான் பெரிதும் நம்பிக்கை வைத்துள்ள என் தேசத்தின் எதிர்கால லட்சியத்தை அல்லவா அவர் அசைத்து பார்த்து விட்டார், கனத்த இதயத்தோடு அங்கு இருந்து அகன்றேன்.
ஜெயங்கொண்டம் என்ற ஊரில் சிவக்கொழுந்து என்று ஒரு 90 வயது நெசவாளர் இருக்கிறார். ஒரு நாளைக்கு 19 ஆயிரம் முறை அவரது அங்கங்களை அசைத்து, அசைத்து நாள் முழுவதும் வேலை செய்து ஒரு சேலை நெய்தால் அவருக்கு கிடைக்கும் ஊதியம் 75 ரூபாய்தான். நெசவாளர்கள் முன்னேற்றத்திற்காக உள்ள அலுவலகத்தின் கடைநிலை ஊழியரின் ஊதியம் கூட 500 ரூபாயாகும். இந்த ஊதியம் ஆளாளுக்கு மாறுபட்டு 3000வரை உள்ளது. யாருக்காக இந்த துறை இயங்குகிறதோ அவருக்கு ஊதியம் வெறும் 75 ரூபாய் ஆனால் அவரை வைத்து பிழைக்கும் அலுவலர்களுக்கு, அதிகாரிகளுக்கு மூவாயிரம் ரூபாய் வரை நாள்தோறும் சம்பளம் என்றால் இதைவிட சமூக அவலம், சமூக மோசடி வேறு ஏதாவது இருக்க முடியுமா, வெட்கித் தலை குனிந்தேன்.

Tamil_News_large_878788.jpg
இந்த நாட்டில் உள்ள ஏழைமக்களின் கடைசி நம்பிக்கை என்பதாலும், என் இனிய தமிழை வளர்க்கும் ஒரு காரணியாக விளங்குவதாலும் அரசு பள்ளிகள் என்றால் எனக்கு அதிகம் பிரியம் அடிக்கடி அங்கு சென்று படிக்கும் குழந்தைகளிடம் பேசுவேன் காரணம் பெரியவர்களைப் போல அவர்களிடம் பொய் இருக்காது, பொறாமை இருக்காது, சூழ்ச்சி புரியாது.அந்த குழந்தைகளில் ஒன்று பேசும்போது நிறைய சம்பாதிக்க வேண்டும் என்றது உனக்கு எதற்கம்மா நிறைய பணம் என்றபோது அரிசி சோறு சாப்பிட ஆசையாக இருக்கிறது ஆகவே அதற்கு நிறைய சம்பாதிக்க விரும்புகிறேன் என்றது, அப்படியே ஆடிப்போய்விட்டேன். சுதந்திரத்தின் பலனை யார்தான் அனுபவிக்கிறார்கள் என்ற கேள்வி என்முன் பூதாகரமாக எழுந்து நின்றது.
சென்னைக்கு அருகில் உள்ள பன்னாட்டு குளிர்பான நிறுவனமான பெப்சி தயாரிப்பு நிறுவனத்தின் தயாரிப்புகள் பருக அருகதையற்ற பானத்தை தயாரித்தது என்பது தெரிந்ததும் எட்டு பூட்டுகளை போட்டு அந்த நிறுவனத்தை பூட்டினேன், இவ்வளவு துணிச்சல் எங்கு இருந்து வந்தது என்று கேட்டவர்கள் பலர், என் பதில் நேர்மையாய் இருந்து பாருங்கள் இதைவிட அதிக துணிச்சல் வரும் என்பதாகவே இருந்தது.
லஞ்சம் அதிகம் புழங்கும் இடத்தில் ஒன்றான காவல்துறையின் கதை இது. லஞ்சம் வாங்கிக் கொண்டு ஒரு கிராமத்தில் கள்ள சாராயம் விற்பதைக் கண்டு கொள்ளாமல் இருந்தார்கள். பாதிக்கப்பட்டவர்கள் என்னிடம் புகார் செய்தனர். நான் கள ஆய்வு செய்து எனக்கு கீழ் உள்ளவர்களை கண்டித்தேன் அவர்களுக்கும் லஞ்சத்தில் பங்கு உண்டு போலும் காவல்துறைக்கு துணை போக என் மீது எப்ஐஆர் போட்டனர். தப்பை தட்டிக் கேட்பதே தப்பா என்று நினைத்த நான் இதைக்கண்டு பயப்படவில்லை நானும் சட்டம் படித்தவன் என்ற முறையில் துணை கண்காணிப்பாளர் வரை ஒரு சம்மன் அனுப்பினேன் மறுநாள் காலை ஐந்து மணிக்கெல்லாம் தெரியாமல் நடந்துவிட்டது மன்னியுங்கள் என்றனர், மன்னிக்கவேண்டியது நான் அல்ல உங்களால் பாழ்பட்டு கிடக்கும் கிராமமக்கள் என்றேன்.
ஒரு அதிகாரி நினைத்தால் மனசாட்சிப்படி நடந்தால் அவரால் எவ்வளவோ இந்த தேசத்திற்கு இந்த மக்களுக்கு நல்லது செய்யமுடியும் ஒரு ஊனமுற்ற இளைஞர் ஒருவர் மூன்று சக்கர சைக்கிள் கேட்டு மனு கொடுத்தார். மனு கொடுத்த அன்று மாலையே அவருக்கு அவர் கேட்ட மூன்று சக்கர சைக்கிளை பெறச்செய்தேன் இது என்னால் மட்டும் முடிந்தது என்று சொல்ல வரவில்லை முயன்றால் எல்லேராலும் முடியும் என்றே சொல்ல வருகிறேன்.
ஊழலின் மொத்த உருவமாக இருந்த என் கீழ் உள்ள அதிகாரியை அசைத்து கூட பார்க்க முடியாது என்று என்னை அச்சுறுத்தினார்கள் காரணம் லஞ்சம் கொடுத்து, கொடுத்து சகலரையும் கெடுத்து வைத்திருந்தார். அவரை அசைத்து மட்டுமல்ல செய்த குற்றத்திற்காக சிறைத்தண்டனையும் பெறவைத்தேன்.
இப்படி சொல்லிக் கொண்டே போகலாம் தப்பு செய்தவர்களின் பெயர், ஊர், காலம் என அனைத்தையும் என்னால் சொல்லமுடியும் ஆனால் இப்போது நான் சொல்லமுடியாது பிறகு ஒரு காலம் வரும்போது சொல்கிறேன் சொல்வதென்ன புத்தகமாகவே போடுகிறேன்.எனது நேர்மைக்கு பரிசாக இதுவரை 22 முறை இட மாற்றம் செய்யப்பட்டு உள்ளேன் என்றார்கள் அதனால் என்ன நான் போகும் ஒவ்வொரு இடத்திலும் லஞ்சம் தவிர்த்து நெஞ்சம் நிமிர்த்துபவர்களின் எண்ணிக்கை என்னோடு சேர்ந்து கூடிக்கொண்டே போகிறதே அதை நினைத்து சந்தோஷம்தான்.
ஒன்று மட்டும் நிச்சயம் லஞ்சத்திற்கும், ஊழலுக்கும் எதிராக என்னைப் போல உள்ளிருந்து போராடுவதை விட உங்களைப்போல வெளியே இருந்து போராடுவது எளிது ஆகவே மகாகவி பாரதி சொன்னபடி துணிச்சலை சூடி எதிரிகளை பந்தாட உன் எதிரே இருக்கும் லஞ்சத்தை, ஊழலை ஒளித்திட முன்வாருங்கள் உங்கள் முயற்சியால் தேசம் வலுப்படும்.
எவ்வித குறிப்புகளும் வைத்துக் கொள்ளாமல், தங்குதடங்கலின்றி பாரதியின் கவிதை வரிகளுடன் தெளிவான தமிழில் தேவைப்பட்ட இடத்தில் ஆங்கிலத்தில் சட்ட நுணுக்கங்களை சொல்லியடி இன்னும் இன்னும் பேசமாட்டாரா என்று எதிர்பார்க்கும் விதமாக சகாயம் பேசி முடித்த போது யாருமே சொல்லாமல் அரங்கத்தில் இருந்த அனைவரும் எழுந்து நின்று நீண்டநேரம் கைதட்டி நல்லதொரு வீரியமிக்க உரைவீச்சை கேட்ட மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.

லஞ்சம் தராமல் அரசு சலுகைகளை பெற எண்:7667100100

http://www.dinamalar.com/news_detail.asp?id=878788
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.