Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Websteroids கணணி வைரஸுடனான 48 மணி நேரப் போராட்டம்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இணைய உலாவி (Firefox) gadget ஒன்றுக்கான புதுப்பித்தல் அழைப்பு வர அதனை அழுத்தவும் கணக்குச் சரியாக இருந்தது. ஒரு புரோகிரோம் தன்னிச்சையாக தரவிறங்கி.. தன்னை கணணியில் ஏற்றிக் கொண்டது. கிட்டத்தட்ட 35/40 பைல்கள் வரை ஏற.. சுமார் 20 நிமிடங்கள் வரை எடுத்தது. அதன் பின்னர் இணைய உலாவியை திறந்தால்.. அதில் ஏலியன் விண்கலங்களும்.. விண்கற்களும் பறந்து திரிகின்றன. அதுமட்டுமன்றி நிறைய குட்டிக் குட்டி விளம்பரங்களும் தோன்றி மறைந்தன.

இந்தக் கால இடைவெளியில் இதென்னடா அநியாயம் என்று தேடிப்பார்த்தால்... அது websteroids அப்பிளிகேசன் என்று வந்தது. இன்னொரு பக்கம்.. அது ஒரு professional virus என்று வேற போட்டிருந்தார்கள். சரி.. firefox இல் தானே பிரச்சனை என்றுவிட்டு.. கூகிள் குரோமுக்குச் சென்றால் அங்கும்.. விண்கற்கள் பறக்கின்றன. சரி குரோமும் வேண்டாம்.. எக்ஸ்புளோரருக்குப் போவம் என்றால்... அங்கும் விண்கற்கள் பறக்கின்றன. விண்ணியல் விநோதங்களில் ஒரு ஈர்ப்பும் ஈடுபாடும் இருந்தாலும்.. websteroids தந்த தொல்லை குறிப்பாக உலாவியின் வேகத்தை விழுங்கியமை தாங்கொனா மனப் பொறுமை இழப்புக்கு கொண்டு சென்றது. இதில் இருந்து எப்படி விடுபடுவது என்று இணையத்தில் தேடினால்..

websteroids காரங்கள் என்று சொல்லுகிறவர்கள் சொன்னார்கள்.. பூமிக்கு ஆபத்து தராத asteroids போல..இது உங்கள் கணணிக்கு ஆபத்தை தராது அல்லது தர விரும்பாது என்று ஆனாலும் அதன் வரவை விரும்பாதவர்கள்.. கீழ் வரும் வழிமுறையில் சென்று அதற்குரிய கோப்பை கணணியில் இருந்து அகற்றி விடுங்கள் அது கணணியை விட்டுப் போய்விடும் என்று.

step: 1 control panel -> uninstall a program -> select (websteroids) -> click uninstall

இதனை செய்த போது.. websteroids கணணியில் இருந்து போனது போலத் தோன்றியது. அப்பாடா தொல்லை தீர்த்திச்சு என்று போட்டு மீண்டும் கணணியை restart செய்து இணைய உலாவிக்குப் போனால் ஏலியன் விண்கலங்களும்.. விண்கற்களும் பறக்கின்றன. இதென்னடா கொடுமை என்றுவிட்டு.. மீண்டும் அதே இணையத்தளத்தில் சொல்லப்பட்ட பிற வழிமுறைகளையும் கையாண்டு பார்த்தோம். அதற்கிடையில் இந்த தொற்றுக்குக் காரணமான.. இணைய உலாவியான.. நெருப்புநரியை முற்றாக கணணியில் இருந்து விரட்டி அடித்துவிட்டிருந்தோம். மீண்டும் குரோமில் சென்று..

step: 2 setting -> extension -> websteroids அழுத்தி அழித்துவிட்டு.. மீண்டும்.. உலாவியை திறந்தால்.. அப்பாடா.. ஏலியன்களும்.. இல்லை. விண்கற்களும் இல்லை. நிம்மதிப் பெருமூச்சு வந்து போன வேகத்தில்.. பேரேக்கம் ஒன்று பொப் அப் வடிவில்.. இடியாக வந்து நின்றது. திடீரென திறந்த ஒரு பொப் அப்.. கணணி அட்மினி ஸ்ரேரரின் அனுமதியைக் கேட்டுக் கொண்டிருந்தது.. ஒரு புரோகிராமை ஓட விட. ஆனால்.. அனுமதி கொடுக்கமுதலே அதுவாக அனுமதி பெற்றுக் கொண்டு ஓட ஆரம்பிக்க.. மீண்டும்.. websteroids கணணியில் புகுந்து கொண்டது.

இதுக்கு என்ன தான் முடிவு என்று இணையத்தில் மீண்டும் தேடினால்.. எக்கச்சக்கமான படிமுறைகளோடு விளக்கங்கள் கொடுக்க.. இதோட கணணியின் கதை முடிஞ்சுது என்ற எண்ணமே மனதில் ஓடத்தொடங்கியது. இருந்தாலும் வைரஸை விரட்டி அடிக்கும் முயற்சியை கைவிடவில்லை. வைரஸின் பைல்கள் ஒளிச்சு வைக்கப்பட்டிருந்த கோப்பிடத்தை கண்டுபிடித்து அழிக்க முற்பட்டால் அது மீண்டும் மீண்டும் தரவிறங்கிக் கொண்டிருந்தது.

C:\\------ AppData ->local ->temp இங்கு தான் ஒளிச்சு வைப்பு பிரதானமாக இருந்தது. அங்கும்.. அதனை தேடி அழித்தோம். ஆனால்.. அவை மீண்டும் மீண்டும் தன்னிச்சையாக தரவிறக்கிக் கொண்டிருக்க அதற்கான.. .exe கோப்புக்களை தேடும் பணி ஆரம்பமானது. ஆனால் அவற்றைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

ஆகவே மீண்டும்.. anti-malware மென்பொருட்களின் உதவியை நாட வேண்டியதாக.. spyhunter4 இறக்கி கணணியை ஸ்கான் செய்தால்.. அது சுமார் 60 வரையான கிருமிகளைக் கண்டுபிடிச்சிருந்தது. எல்லாம் இதோட தொலைஞ்சுது என்று போட்டு.. full ஸ்கான் முடிஞ்சதும்.. (ஸ்கான் செய்ய மட்டும் 2 மணி நேரம் தேவைப்பட்டது) கிருமிகளை அழிக்க கட்டளை இடும் பொத்தானை அமுக்கினால்.. அது அதனைச் செய்ய காசு கட்டு.. இல்லை என்றால் வேற ஆளைப் பார் என்று கொண்டது. அடப்பாவிகளா.. இதனை ஆரம்பத்திலேயே சொல்லித் தொலைச்சிருக்கலாமே என்று போட்டு.. spyhunter4 ஐ கணணியில் இருந்து அப்புறப்படுத்த வேண்டியதானது. அதனை அப்புறப்படுத்த மட்டும்.. 1 மணித்தியாலங்களை தேவைப்பட்டது. எல்லா கோப்புக்களை தேடி அழிக்க.

அதன் பின் என்ன செய்வது என்று யோசிச்சுக் கொண்டே கட்டிலில் வீழ்ந்தால்.. நித்திராதேவி தன்னோட காதல் லீலைகளை கண்ணில் காட்ட.. மூளை தானே சட்டவுன் ஆகிக் கொண்டது.

மீண்டும் அடுத்த நாள் காலையில் இருந்து.. முன்னர் கையாண்ட எல்லா வழிமுறைகளையும் மீண்டும் செய்து பார்த்தால்.. websteroids எங்கள் மீது கொண்ட காதல் தீர்வதாக இல்லை. குறிப்பாக spyhunter4 தந்த அறிக்கையின் பிரகாரம் websteroids கணணியில் பதியப்படும் passwords உள்ளிட்ட ரகசியங்கள் மற்றும் கோப்புக்களை திருடி.. அதன் மெயின் சேவருக்கு அனுப்புவதாகவும் 80% ஆபத்தானது என்று சொல்லிக் கொண்டிருந்தது.

இத்தனை.. நிகழ்வுகளும் நடந்து கொண்டிருக்க.. கணணியில் நிறுவப்பட்டிருந்த.. கிருமி எதிர்ப்பு.. மக்காவி(f)யும்.. மைக்குராசாவ்ட் செக்குரிட்டி இஸன்சலும்.. குறட்டை விட்டுக் கொண்டிருந்தன.

websteroids மீதான இறுதி தாக்குதலுக்கு தயாரான வேளை அதாவது கணணியில் உள்ள எல்லாவற்றை அழித்துப் போட்டு.. மீண்டும் இயங்குதளத்தை நிறுவுதல்.. என்ற நிலைக்கு போக இருந்த தருணத்தில்.. மூளை ஒரு செய் அல்லது செத்துமடி என்ற கரந்தடி தாக்குதலுக்கு வழி சொன்னது.

அதன்படி.. முன்னர் மேற்கொள்ளப்பட்ட எல்லா வழிமுறைகளையும் மீண்டும் செய்து சரிபார்த்துக் கொண்டு.. malwarebytes free trial version ஐ இறக்கி.. கணணியில் நிறுவி.. கணணியை full ஸ்கான் செய்து கொண்டால்.. மகிழ்ச்சிகரமான விடயங்கள் நடக்க ஆரம்பித்தன. அது.. நாங்கள் தேடிக் கொண்டிருந்த கோப்புக்களை எல்லாம் வரிசையா கண்டுபிடித்து பட்டியல் இட்டுக் கொண்டிருந்ததும் இல்லாமல்.. ஸ்கானின் முடிவில் அவற்றை அழிக்க வழியும் இருந்தது. அதன்படி.. 5 மணி நேரத்துக்கும் அதிகம் நீடித்த full ஸ்கானின் பின்.. தொற்றிக் கொண்ட கோப்புக்களை எல்லாம் அழித்து முடிக்க.. மீண்டும் நித்திராதேவி தன் கூடலைக் கண்ணில் காட்ட.. மூளை மீண்டும் சட்டவுன் ஆனது.

மீண்டும்.. அடுத்த நாள் காலையில் இருந்து அதாவது இன்று காலையில் இருந்து ஆரம்பித்த செய் அல்லது செத்துமடி.. சுத்திகரிப்பு நடவடிக்கையின் பின்னர்.. websteroids முற்றாக கணணியில் இருந்து விரட்டி அடிக்கப்பட்டிருக்கிறது. malwarebytes இம் அதன் தேவைகள் முடிய அழிக்கப்பட்டிருக்கிறது. இருந்தாலும்.. கணணி இன்னும் 100% பாதுகாப்பில் இருக்கா என்பதில் சந்தேகம் இருந்தது. அதனை உறுதிப்படுத்த..ccleaner எல்லாம் பாவிச்சு சேதாரங்களை எல்லாம் கூட்டி அள்ளி குப்பையில் போட்டு அழிச்சிட்டு.. மீண்டும் கணணியை கிருமி எதிர்ப்பு மென்பொருட்களைக் கொண்டு ஸ்கான் செய்தால்... கணணி நல்ல நிலையில் இருப்பதாகச் செய்து வந்திருக்கிறது.

48 மணி நேரம் நீடித்த.. கணணி வைரஸ் எதிர்ப்பு போராட்டம்.. பெரும் போர்.. கரந்தடி நடவடிக்கைகளின் பின் முடிவுக்கு வந்துள்ளது. ஆனால்.. பாவிக்கப்பட்ட ஆயுதங்களின் பின்விளைவுகள்.. ரகசிய விளைவுகள் குறித்தும்.. தாக்கிய கிருமியின் ரகசிய பாதிப்புக்கள் குறித்தும் கவலை உள்ளது. இது தொடர்பில்.. யாழ் களத்தில் உள்ள கணணி விற்பன்ன உறவுகள்.. ஏதேனும் ஆலோசனைகளை வழங்கினால் எமக்கும்.. இதுபோன்ற வைரஸ் பாதிப்புக்களை எதிர்கொள்ள வாய்ப்புள்ள உறவுகளுக்கும் நன்மையாக இருக்கும்.

இப்போது எல்லா உலாவிகளும் பிரச்சனை இன்றி இயங்குகின்றன. வேகமும் தரமாக உள்ளது. இதில் மகிழ்ச்சிக்குரிய ஒரு விடயம்.. அப்பிள் சவாரி (Safari) மட்டும் websteroids தொற்றுக் தாக்குதலுக்கு இலக்காகி இருக்கவில்லை. அதன் மூலமே.. இணையத்தில் தேடல் செய்யவும் வாய்ப்புக்கள் இருந்தது. யாழிற்கும் வந்து போகக் கூடியதாகவும் இருந்தது. சவாரி மூலமே.. இந்த போராட்டம் வெற்றியில் முடிய வாய்ப்பும் பிறந்தது. எங்கள் கணணியில் எல்லா இணைய உலாவிகளும் நிறுவப்பட்டிருந்தமை.. இந்தப் போராட்டத்தில் வெல்ல.. ஒரு பக்க பலமாக இருந்தது. அதேவேளை கூடிய வேலைப் பளுவாகவும் இருந்தது. இருந்தாலும்.. நெருப்புநரி தான் பாவம். அதனை மீண்டும் கணணிக்கு கொண்டு வரும் நடவடிக்கைகளை மேற்கொள்ள இருக்கிறோம்.

நன்றி: Websteroids எதிர்ப்பு நடவடிக்கைத் தளபதி நெடுக்ஸ். :)

Edited by nedukkalapoovan

கடந்த வாரம் ஒரு வீடியோ பிளேயரை தரவிறக்கம் செய்யப் போய் இதே போன்றுதான் எனக்கும் நடந்தது. ஆனால் என்னிடம் இருக்கும் Symantec endpoint ஒருவாறு தேடி அழித்து இல்லாமல் செய்து விட்டது.

 

வைரஸ் அழிப்பது என்றால், Symantec endpoint தான் சிறந்தது. ஆனால் Mal-ware என்றால் நீங்கள் பாவித்த Malwarebytes தான் மிகச் சிறந்தது. AVG free யும் நல்லதொரு இலவசமாகக் கிடைக்கக் கூடிய (Pro version என்றால் காசு கொடுக்க வேண்டும்) ஒரு மென்பொருள். முக்கியமாக Warms களை அழிக்க வல்லது.

  • கருத்துக்கள உறவுகள்

நான் நெருப்புநரியை பாவிப்பதை நிறுத்திவிட்டேன்.. கணினியில் இருந்தே அகற்றிவிட்டேன்..!

நான் நெருப்புநரியை பாவிப்பதை நிறுத்திவிட்டேன்.. கணினியில் இருந்தே அகற்றிவிட்டேன்..!

 

பாதுகாப்பு ஏற்பாடுகளில் IE இனை விட Firefox மிகச் சிறந்தது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி நிழலி உங்கள் அனுபவப் பகிர்விற்கு. இசைக்கும் நன்றி.  :)

உங்கள் அனுபவத்தினை பயனுள்ள தகவல்களாக தந்ததிற்க்கு நன்றி நெடுக்ஸ். 
 
இந்த அனுபவத்தினை வைத்து பிசி டொக்டராக (PC doctor) வந்தால், பிசியாகி (busy) விடுவீர்கள்.

Edited by Small Point

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கும் இதே போல் சில தடவை கொல்லுப்பாடு நடந்திருக்கு யோசிக்காமல் System Restore அமத்துவதுதான் வழி நல்லா ஆழஊடுருவல் நடைபெற முன்னமே செய்திடவேணும் .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.