Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இன்று மறைந்த முதல்வர் பொன்மனச்செம்மல்... M.G. இராமச்சந்திரன் அவர்களின் 26 ஆம் ஆண்டு நினைவு தினம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இன்று மறைந்த முதல்வர் பொன்மனச்செம்மல்... M.G. இராமச்சந்திரன் அவர்களின் 26 ஆம் ஆண்டு நினைவு தினம். அவர் இலங்கையின் கண்டிக்கு அருகேயுள்ள நாவலப்பிட்டியில் மருதூர் கோபாலமேனனுக்கும் சத்தியபாமாவுக்கும் மகனாகப் பிறந்தார். பிறப்பில் மலையாளியான இவர் இலங்கையில் இருந்தப் போது தமிழரிடத்தில் நெருங்கி பழகினார். அப்படி பழகி வந்த வேளையில் தமிழர்களுக்கு சிங்களவர்கள் செய்து வந்த கொடுமைகளை நேரில் கண்ணுற்றார். சிங்களவர்களின் அத்தனை அராஜகங்களையும் அவர் அறிந்திருந்தார். பிறகு வறுமையின் காரணமாக அவர் தனது தாயுடன் தமிழகம் வந்தார். சிலரைப் போல தாயையும் தந்தையையும் ஊரிலேயே விட்டு விட்டு ஓடி வந்தவர் அல்ல. பலவிடங்களில் பல வேலைகளை எடுத்து செய்து செய்தார். தன்னுடைய உணவையும் துக்கத்தையும் தன் தாயுடன் ஒவ்வொரு வேளையும் பகிர்ந்துக் கொண்டார். சென்னை பெருந்தெருவில் 14 மாடி LIC கட்டடத்தின் வாசலில் கூட பல இரவுகளில் இவர் படுத்து உறங்கி இருக்கிறார். மெல்ல நாடகங்களில் நடிக்கத் தொடங்கினார். தனது 44 வயது வயதில் சதிலீலாவதி என்னும் திரைப்படத்தில் ஒரு கவனிக்கப்படாத காட்சில் நடித்தார். இதுபோல 20 திரைப்படங்களில் நடித்து இருக்கிறார். பிறகு பெரிய வேடங்களில் நடிக்கத் தொடங்கி கதாநாயகனாக உருவெடுத்தார். மக்களின் மனங்களை வெல்ல ஆரம்பித்தார். இவர் தனது தனிப்பட்ட வாழ்க்கையிலோ அல்லது திரைப்படங்களிலோ எந்த விதமான கெட்டபழக்கங்களையோ வழக்கங்களையோ மேற்கொண்டவரில்லை. புகைப் பிடிக்கும் காட்சிகளோ, போதைப் பொருள் உண்ணும் காட்சிகளோ, மதுவருந்தும் காட்சிகளோ, கற்பழிக்கும் காட்சிகளோ, வில்லனை கொல்லும் காட்சிகளையோ மேற்கொண்டவர் இல்லை. இவரது படத்தின் கதைகள் தனிப்பட்ட மனிதனின் நல்ல வாழ்வியலையும், தாய்மையையும், காதலையும், அநீதிக்கு எதிரான கோபத்தையும், சட்டத்தை மீறாத வீரத்தையும் காட்டுவதாக அமைந்தன. திரையுலகில் மகத்தான சாதனைகளை படைத்த இராமச்சந்திரன் அரசியலிலும் பெரும்சக்தியாக உருவெடுத்தார். மூன்று முறை முதலமைச்சராக இருந்தார். சுமார் 11 ஆண்டுகள் தமிழகத்தை ஆண்டார். மக்களின் பசி அறிந்த இவர் நியாயவிலைக் கடைகளை நெறிபடுத்தி மக்களுக்கு தடையில்லாமல் உணவுப் பொருட்கள் கிடைக்க வழிகளை செய்தார். பசியால் மக்களின் வயிறு சூம்பிவிடாமல் ஒரு தாயினை போல பார்த்துக் கொண்டார். சத்துணவுத் திட்டத்தை மேம்படுத்தி கல்வியை ஊக்குவித்தார். தமிழ்நாடு பூராவிலும் இத்திட்டத்தை விரிவுப்படுத்தினார். இவரது ஆட்சியில் பெரிய அளவில் போராட்டங்கள் எதுவுமில்லை. ஒரு கடவுளின் ஆட்சி நடைபெற்றது என மக்கள் மகிந்தனர் இலங்கையின் ஈழத்தில் தமிழர்கள் சொல்லொணாத் துயருக்கு ஆட்பட்டபோது, சரியாக போராளி பிரபாகரனை தனது தம்பியாக தேர்ந்து எடுத்து அவரை வளர்த்து உதவிகளை செய்து அவரை ஒரு நல்ல தலைவனாக இனம் காட்டினார். தனது சிறுவயதிலேயே சிங்களவனின் கொடூரங்களை நேரிடையாக அறிந்திருந்த இராமச்சந்திரன் பிராபகரன் மூலமாக தான் அங்கே உள்ள தமிழர்களுக்கு விடிவு ஏற்படும் என்பதை உணர்ந்து பிரபாகரனை சகலவழிகளிலும் ஒரு விடுதலைப் போருக்கு ஆயத்தப்படுத்தி வளர்த்து எடுத்து வந்தார். அவர் மனம் போலவே தம்பி பிரபாகரனும் உருவெடுத்து வந்தார். இடையில் உடல் நலிவடைந்து இன்றைய நாளில் தமிழகத்தை சோகத்தில் ஆழ்த்திவிட்டு மீளா தூக்கத்தில் ஆழ்ந்து விட்டார். இராமச்சந்திரன் மட்டும் இன்னும் ஒரு ஐந்தாண்டுகாலம் உயிரோடு இருந்திருந்தால் ஈழம் கிடைத்து இந்நேரம் 20 ஆண்டுகள் ஆகி இருக்கும். காலம் தமிழனை வஞ்சித்து விட்டது எப்போதும் போல. மற்ற நடிகர்களைப் போல... 'மாபெரும் சபையினில் நீ நடந்தால் உனக்கு மாலைகள் விழவேண்டும்' என்ற பாடல்வரிகளுக்கு வாயசைத்தவர் இல்லை இவர், அப்படி வாழ்ந்துக் காட்டிய பெருமகன். அவர் மறைந்தாலும் இன்றைக்கும் அவரது கட்சி உயிரோடு இருந்து பல தீய சக்திகளை நாட்டில் இருந்து அகற்றிக் கொண்டு இருக்கிறது. அவர்தம் புகழை தொடர்ந்து பரப்பிக் கொண்டு இருக்கிறது. அவரது 26 ஆம் ஆண்டு நினைவுத் தினத்தை போற்றுவோமாக !

FB

  • கருத்துக்கள உறவுகள்

http://www.youtube.com/watch?v=Fi_I4UgfOAA

 

எனக்கு... எம்.ஜீ. ஆர். உயிருடன் இருக்கும் போது... அவரின் அருமை தெரியவில்லை.
அவர் ஈழத்துக்கும், தமிழக மக்களிடமும் வைத்த அன்பை.. இலேசில் மறக்க முடியாது.
பொன்மனச் செம்மலை, அன்புடன் நினைவு கூருகின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்

மறைந்த மக்கள் திலகத்துக்கு நினைவு அகவணக்கம்..!

 1526263_414611148642470_192919597_n.png1980-ம வருடம் 31-ந் தேதி சென்னையில் உள்ள ஜவகர்லால் நேரு ஸ்டேடியத்தில் சுமார் இருபதாயிரம் சென்னைவாசிகள் திரண்டிருந்தனர். 

அரங்கம் முழுவதும் கரகோஷங்களால் நிரம்பியது அவர் உள்ளே நுழைந்த போது. 

அப்படிபட்ட சந்தோஷத்திற்கு சொந்தகாரர் "விளையாட்டுத் துறையில் 'The Greatest' என்ற தகுதியைப் பெற்ற ஒரே வீரர் குத்துச் சண்டை உலகின் முடிசூடா மன்னன் முகமது அலி. 

ஜவகர்லால் நேரு ஸ்டேடியத்தில் நடந்த ஒரு காட்சி குத்து சண்டை போட்டிக்காக முகமது அலி சென்னை வந்திருந்தார். அவருடன் வந்திருந்த மற்றொரு குத்துசண்டை வீரர் ஜிம்மி எல்லிஸ்-சுடன் மோதினார். 

ஆனால் அதற்க்கு முன்னதாக தமிழ்நாட்டின் அப்போதய மாநில குத்து சண்டை சேம்பியன் - திருவள்ளூரை சேர்ந்த Rocky Brass என்பவருடன் மோதினார் முகமது அலி.

எட்டாவது வகுப்பு கூட முடிக்காத Rocky Brass-க்கு அதன் பின் தெற்கு ரயில்வேயில் கலாசி வேலை கிடைத்தது. முகமது அலியுடன் மோதினார் என்கிற ஒரே காரணத்திற்க்காக. 


எக்மோர் ரயில்வே நிலையத்தில் கலாசியாக வேலை பார்த்து பின் பயணிகளுக்கு வழிகாட்டுபவராக உயர்ந்த Rocky Brass - டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிகைகு அளித்த பேட்டி ஒன்றில் இதை கூறியுள்ளார். 

ஜவகர்லால் நேரு ஸ்டேடியத்தில் நடந்த இந்த போட்டியின் முடிவில் "உலகின் முடிசூடா மன்னன் முகமது அலி"க்கு மாலை அணிவித்து மரியாதை சூடியவர் அப்போதைய முதலமைச்சர் எம்.ஜி.ஆர். 


எம்.ஜி.ஆரும் .... முகமது அலியும் ஒன்றாக உள்ள அந்த அரிய புகைப்படம் உங்களுக்காக இங்கே. 

 

 

படத்தை மட்டும் இணைத்தற்கு மன்னிக்கவும்,வேலையால் வந்து கணணியை திறந்தால் மகன் கணணியில் நான் பாவிக்கும் firefox ஐ அழித்து தொலைத்துவிட்டான் ,safari இற் கூடாக யாழுக்கு வந்தால் வெட்டி ஓட்ட முடியவில்லை ,கோவத்தில் இழுத்து கொண்டுவந்து விட்டுவிட்டேன் .இப்ப வெட்டி ஓட்டுது எதற்கும் ஆள் வரட்டும் தமிழ்சிறியின் கணக்கில் ஒன்று கொடுக்கின்றேன் .

Edited by arjun

  • கருத்துக்கள உறவுகள்

அர்ஜூன், நீங்கள் இணைத்த படத்தின் கீழ்,
கருத்தையும்... எழுதுவது தான் நாகரீகம். :)

யாழ்ப்பாணத்தில் அன்னாரின் நினைவுநாளில் ஒலித்த ''அதோ அந்த பறவை போல வாழ வேண்டும்..." பாடல் மூலம் அறிமுகமானவர்! தமிழீழ போராட்டத்துக்கு ஆற்றிய பங்கு மூலம் அபிமானத்தை பெற்றவர்!  வாழ்நாளிலும் வரலாற்றிலும் புகழ் பெற்றவர்! _/|\_

  • கருத்துக்கள உறவுகள்

புரட்சி நடிகருக்கு   நினைவு வணக்கங்கள் !!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.