Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரபல தமிழக வார இதழ் செய்தியாளர் இலங்கைப் படையினரால் கைது - குளோபல் தமிழ் செய்தியாளர்:-

Featured Replies

இவ்வாறு ஒரு செய்தியையும் முகநூலில் கண்டேன். :rolleyes::(

தோழர்களே ராணுவ பேச்சாளர் ஒருவரின் செய்தியை கொண்டே அவர் விடுதலை செய்யபட்டார் என்ற செய்தி வருகிறது ஆனால் அவர் விடுவிக்கபட்டார் என்பதற்கான எந்த அதிகாரமான அறிவிப்பும் கொழும்பு ஊடக வட்டாரங்களில் கிடைக்க பெற வில்லை தோழர்களே தோழர் பிரபாகரன் இன்னும் ராணுவ தடுப்பில் உள்ளார்.

பி.கு: விடுவிக்கப்பட்டால் யாராவது அந்த செய்தியை இங்கு இணையுங்கள். :rolleyes:
 

  • Replies 77
  • Views 4.5k
  • Created
  • Last Reply

இவர்கள் தங்களை இந்தியாவில் பிரபல்யபடுத்த இந்த படம் எடுத்திருக்களாம் அல்லது தேசியம் என்ற மகுடி ஊதி சிறிதரன் தரப்புக்குள் புலநாய்கள் ஊடுருவியிருக்கலாம்.

இவர்கள் தங்களை இந்தியாவில் பிரபல்யபடுத்த இந்த படம் எடுத்திருக்களாம் அல்லது தேசியம் என்ற மகுடி ஊதி சிறிதரன் தரப்புக்குள் புலநாய்கள் ஊடுருவியிருக்கலாம்.

 

புலநாய் என்ற சொல் உங்களுக்கு ரொம்ப பிடிக்கும் போலிருக்கு. :) அடிக்கடி பயன்படுத்துகிறீர்கள். :) எங்கிருந்து தான் வந்து இவ்வாறான திரிகளுக்குள் குறை பிடிக்கிறீர்களோ தெரியாது. <_<

இந்த செம்மறிகளால் தான் எங்கள் போரட்டாம் மழுங்கடிக்கபட்டது

இந்த செம்மறிகளால் தான் எங்கள் போரட்டாம் மழுங்கடிக்கபட்டது

 

அண்ணா, உங்கள் கோபத்தை நீங்கள் அனைத்து தமிழக உறவுகள் மேலும் காட்ட முடியாது. :)

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சிறிலங்கா கைதுசெய்துள்ள இந்திய குடிமகன் ஓர் ஊடகவியலாளர் - தமிழ்நாட்டு ஊடகவியலாளர் சங்கம் தெரிவிப்பு

 

சிறிலங்காவில் கைதுசெய்யப்பட்ட இந்தியக் குடிமகன் ஒருவரை விடுவிப்பதில் இந்திய மத்திய அரசாங்கம் தனது தலையீட்டை மேற்கொள்ள வேண்டும் என தமிழ்நாட்டில் உள்ள அரசியற் கட்சிகள் மற்றும் ஊடகவியலாளர் சங்கங்கள் போன்றன வெள்ளியன்று கோரிக்கை விடுத்துள்ளன. சிறிலங்காவில் வியாழனன்று கைதுசெய்யப்பட்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரபாகரன் பாதுகாப்பாக இந்தியாவுக்கு திரும்புவதை இந்திய மத்திய அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும் என ம.தி.மு.க தலைவர் திரு.வைகோ, இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கிடம் கடிதம் மூலம் கோரியுள்ளார். 

தற்போது கைதுசெய்யப்பட்டுள்ள பிரபாகரன் டிசம்பர் 25 அன்று சுற்றுலா நுழைவிசைவில் சிறிலங்காவுக்குச் சென்றிருந்தார் என வைகோ தனது கடிதத்தில் உறுதிப்படுத்தியுள்ளார். சிறிலங்காவைச் சேர்ந்த தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் மற்றும் வடக்கு மாகாண சபை உறுப்பினர் பசுபதிப் பிள்ளை ஆகியோருடன் தற்போது கைதுசெய்யப்பட்டுள்ள பிரபாகரன் தமிழ்க் கிராமமான பொன்னாவெளியைப் பார்வையிடச் சென்றிருந்தார் எனவும் வைகோ தனது கடிதத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளார். 

"இதன்பின்னர் இவர்கள் வலைப்பாடுக் கிராமத்திற்குச் சென்றிருந்ததுடன் புனித அந்தோனியார் தேவாலயத்தின் வணக்கத்திற்குரிய கத்தோலிக்க மதகுருவுடன் கலந்துரையாடலை மேற்கொண்ட போது சிறிலங்கா இராணுவத்தினரால் மதியம் 1.30 மணியளவில் இவர்கள் சுற்றிவளைக்கப்பட்டு கைதுசெய்யப்பட்டனர். சிறிதரன் மற்றும் பசுபதிப் பிள்ளை ஆகியோர் மாலையில் விடுவிக்கப்பட்ட போதிலும், திரு.பிரபாகரன் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்" என மன்மோகன் சிங்கிற்கு எழுதிய கடிதத்தில் வைகோ குறிப்பிட்டுள்ளார். 

திரு.பிரபாகரன் ஓர் ஊடகவியலாளர் என்ற காரணத்தினாலேயே இவர் கைதுசெய்யப்பட்டார் எனக் கூறப்படுவதாகவும், ஊடகவியலாளர் ஒருவர் எந்தவொரு நாட்டுக்கும் சுற்றுலா நுழைவிசைவில் செல்வதற்கும் சுதந்திரமாக மக்களைச் சந்தித்துக் கலந்துரையாடுவதற்குமான உரிமையைக் கொண்டுள்ளதாக வைகோ தனது கடிதத்தில் மேலும் வலியுறுத்தியுள்ளார். 

தற்போது கைதுசெய்யப்பட்டுள்ள திரு.பிரபாகரன் மிகவும் பாதுகாப்பாக தமிழ்நாட்டுக்குத் திரும்புவதற்குத் தேவையான "அனைத்து பொருத்தமான நடவடிக்கைகளையும் வெளியுறவு அமைச்சின் ஊடாக உடனடியாக மேற்கொள்ளுமாறு" திரு.வைகோ, மன்மோகன் சிங்கிற்கு அனுப்பியுள்ள கடிதத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

பிரபாகரனின் கைது குறித்து ப.ம.க நிறுவுனர் எஸ்.இராமதாசும் கண்டனம் தெரிவித்துள்ளதுடன், சிறிலங்காவில் தொடர்ந்தும் மனித உரிமை மீறல்கள் இடம்பெறுகின்றன என்பதற்கான எடுத்துக்காட்டாக பிரபாகரனின் கைது உள்ளதாகவும் இராமதாஸ் தெரிவித்துள்ளார். 

ஈழத்தமிழர்கள் அனுபவிக்கும் துன்பங்கள் தொடர்பாக திரு.பிரபாகரன் வாரம் இரு தடவைகள் தமிழில் ஆக்கங்களை எழுதிவந்ததாகவும் இந்த ஆக்கங்கள் புத்தகமாக்கி வெளியிடப்பட்டுள்ளதாகவும் சென்னை ஊடகக் கழகம் மற்றும் சென்னை ஊடகவியலாளர் சங்கம் போன்றன இந்திய வெளியுறவு அமைச்சிற்கு அனுப்பியுள்ள மனுவில் குறிப்பிட்டுள்ளன. வெளியுறவு அமைச்சானது பிரபாகரனின் விடுதலையில் தலையீடு செய்து இவர் பாதுகாப்பாக நாடு திரும்புவதை உறுதிப்படுத்த வேண்டும் என தமிழ்நாட்டு ஊடக சங்கங்கள் வெளியுறவு அமைச்சிடம் மேலும் கோரியுள்ளன. 

புலிகளின் முன்னாள் கோட்டையாக விளங்கிய கிளிநொச்சியில் நிலைநிறுத்தப்பட்டுள்ள இராணுவத்தினரின் நடவடிக்கைகளைக் கண்காணித்ததன் குற்றச்சாட்டில் இந்தியக் குடிமகன் ஒருவர் கைதுசெய்யப்பட்டதாக சிறிலங்கா காவற்துறையினர் டிசம்பர் 26 அன்று அறிவித்திருந்தனர். 

செய்தி வழிமூலம் : PTI

 

http://www.puthinappalakai.com/view.php?20131228109687

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் பிரபாகரனின் விடுதலைக்கு.... கவிஞரும், நடிகரும், எழுத்தாளரும், யாழ்கள உறுப்பினருமாகிய...
ஜெயபாலன் அவர்கள், தனது நண்பர்களாகிய... சேவு தாவூத், ஹக்கீம் போன்றவர்களின் நட்பை பாவித்து, விரைவில் விடுதலை செய்ய முன்வர வேண்டும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
தமிழ் பிரபாகரன் கைது, இலங்கை அரசின் அத்துமீறல்களுக்கு உதாரணம் - கருணாநிதி 
 
Karunanidhi-2022013-150.jpg

இலங்கை அரசின் அத்துமீறல்களுக்கு - பத்திரிகை சுதந்திரம் உட்பட எல்லா சுதந்திரங்களையும் அடக்குவதற்கு இது ஓர் உதாரணம். இவ்வாறு தமிழக முன்னாள் முதலமைச்சரும் திமுக தலைவருமான கருணாநிதி தெரிவித்தார். தி.மு.க. தலைவர் கருணாநிதியை வெள்ளிக்கிழமை மாலை செய்தியாளர்கள் சந்தித்தனர். அப்போது அவர்களின் கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்கள் வருமாறு:

  

கேள்வி: இலங்கையில் தமிழ் பிரபாகரன் என்ற பத்திரிகையாளரை அந்த நாட்டு அரசு கைது செய்திருக்கிறது. பத்திரிகைச் சுதந்திரத்தை அந்த நாடு தன் கைக்குள் வைத்துக் கொள்வதாக நினைக்கிறீர்களா?

பதில்: இலங்கை அரசின் அத்துமீறல்களுக்கு - பத்திரிகை சுதந்திரம் உட்பட எல்லா சுதந்திரங்களையும் அடக்குவதற்கு இது ஓர் உதாரணம். இவ்வாறு கூறினார்.

 

http://www.seithy.com/breifNews.php?newsID=100086&category=TamilNews&language=tamil

தமிழக மாணவன் ஒருவர் முகநூலில் இவ்வாறு செய்தி பகிர்ந்துள்ளார். ஆனாலும் வந்து சேர்ந்த செய்தி கிடைத்தால் தான் இத்தகவல் சரியானதா என தெரியும். :unsure:

Maga Tamil Prabakaran deported from Lanka.
He is expected to reach chennai by today evening

Edited by துளசி

  • கருத்துக்கள உறவுகள்

தமிழக மாணவன் ஒருவர் முகநூலில் இவ்வாறு செய்தி பகிர்ந்துள்ளார். ஆனாலும் வந்து சேர்ந்த செய்தி கிடைத்தால் தான் இத்தகவல் சரியானதா என தெரியும். :unsure:

Maga Tamil Prabakaran deported from Lanka.

He is expected to reach chennai by today evening

 

இந்தச் செய்தி உண்மையாக... இருக்க வேண்டுகின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தச் செய்தி உண்மையாக... இருக்க வேண்டுகின்றேன்.

 
நன்றி  துளசி  பதிவுக்கும் நேரத்திற்கும்.....

பத்திரிகையாள் மகா பிரபாகரன் இன்று இரவு 7.55 க்கு சென்னை விமான நிலையம் வந்து இறங்குவார்.

 

(facebook)

Edited by துளசி

  • கருத்துக்கள உறவுகள்

பத்திரிகையாள் மகா பிரபாகரன் இன்று இரவு 7.55 க்கு சென்னை விமான நிலையம் வந்து இறங்குவார்.

 

(facebook)

 

மகா பிரபாகரன் சென்னையில்... கால் வைத்த செய்தியை, அறிய ஆவலாக இருக்கின்றோம் துளசி.

மகா. தமிழ் பிரபாகரன் இன்று 8 மணி அளவில் சென்னை வானூர்தி நிலையம் வந்து சேர்கிறார் என்ற செய்தி மகிழ்ச்சி அளிக்கிறது.

தமிழ் பிரபாகரன் இலங்கையில் கைது செய்யப்பட்டார் என்ற செய்தி வந்ததும் தமிழ் இன உணர்வாளர்கள் கட்சி, இயக்கம், சாதி, மத பேதமின்றி அவரின் விடுதலைக்காக குரல் கொடுத்தனர். தமிழர்கள் என்ற ஒற்றை கோட்டுக்குள் வந்து நின்றனர். தங்களால் முடிந்த அளவில் குறுஞ்செய்தி அனுப்பியும், மின்னஞ்சல் அனுப்பியும், தொலைப்பேசி மூலம் தொடர்பு கொண்டும் தமிழ் பிரபாகரனை விடுதலை செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இது தமிழர்களின் இன ஒற்றுமையை காட்டுகிறது. இது போன்ற இன ஒற்றுமையை 2009 க்கு முன்பு நாம் பார்த்ததில்லை. ஈழத்தில் ஏற்பட்ட வீழ்ச்சி தமிழர்களை இனமாக கட்டமைத்து உள்ளது என்று சொன்னால் அது மிகையல்ல.

தமிழகத்தில் திராவிடத்தின் ஆட்சியை வீழ்த்தி தமிழர் அரசை இன உணர்வுள்ள தமிழர்களே கைப்பற்றும் நிலையை தமிழர்கள் நாமே உருவாக்க வேண்டும். தமிழர்க்கு இன்னல் நேர்ந்தால் ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகம் ஓங்கி குரல் கொடுப்பதால் மட்டுமே நம்மை நாம் பாதுகாக்க இயலும், நம் உரிமைகளை மீட்க இயலும்.

 

தமிழ் பிரபாகரன் விடுதலையில் கண்ட இன ஒற்றுமை இனி எக்காலத்தும் நாம் காண வேண்டும். ஓங்குக தமிழர் ஒற்றுமை!

 

இராச்குமார் பழனிசாமி

(facebook)

Edited by துளசி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் பிரபாகரனை நாடு கடத்தியது இலங்கை 

 

 

tamizh-prabhakaran-seithy-2-150.jpg

விசா விதிமுறை மீறல்களுக்காக விகடன் குழும நிருபர் மகா தமிழ் பிரபாகரனை இலங்கை அரசு நாடு கடத்தியுள்ளது. அவர் விரைவில் சென்னை திரும்புகிறார். வன்னிக்கு சுற்றுலா விசாவில் பயணம் மேற்கொண்ட தமிழ் பிரபாகரனை, விசா விதிமுறை மீறல் காரணம் காட்டி கைது செய்தது இலங்கை அரசு. அவரை தீவிரவாதிகளை விசாரிக்கும் கொழும்பின் நான்காம் மாடி கட்டடத்தில் அடைத்தது. ஆனால் இந்தக் கைதுக்கு உலகமெங்கும் கிளம்பிய எதிர்ப்பு மற்றும் கண்டனங்களைத் தொடர்ந்து அவரை குடிவரவுத் துறையிடம் நேற்று ஒப்படைத்தது. இந்த நிலையில் கொழும்பில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் தமிழ் பிரபாகரனை இன்று சந்தித்தனர். அவர்கள் தமிழ் பிரபாகரன் நலமுடன் உள்ளதாகவும், அவருக்கு எந்த துன்புறுத்தலும் இல்லை என்றும் தெரிவித்தனர். இலங்கை காவல்துறையின் செய்தித் தொடர்பாளர் அஜீத் ரோஹன இதுகுறித்து பேசுகையில், "தமிழ் பிரபாகரன் வன்னியில் ராணுவ நிலைகளைப் படமெடுத்தார்.

  

இதுதான் பிரதான குற்றச்சாட்டு. சுற்றுலா விசாவில் வந்த அவர் இப்படி படமெடுத்திருந்தால் அது குற்றமே. அதற்கு இலங்கை சட்டப்படி தண்டனை உண்டு. ஆனால் அவர் சுற்றுலா விசா விதிகளை மீறி, செய்தியாளராக செயல்பட்டிருந்தால் அவரை நாடுகடத்துவோம்," என்றார். இப்போது தமிழ் பிரபாகரன் விசா விதிகளை மீறியதாகக் கூறி நாடுகடத்துவதாக இலங்கை அறிவித்துள்ளது. இன்று தமிழ் பிரபாகரன் சென்னை திரும்புவார் எனத் தெரிகிறது.

 

http://www.seithy.com/breifNews.php?newsID=100126&category=TamilNews&language=tamil

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் கைதான தமிழக பத்திரிகையாளர் விடுதலை: கடும் மன உளைச்சல் என சென்னையில் பேட்டி

 

சென்னையைச் சேர்ந்தவர் மகா தமிழ் பிரபாகரன். பத்திரிகையாளரான இவர் இலங்கைக்கு சுற்றுலா விசாவில் சென்று அங்குள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன், வடக்கு மாகாண சபை உறுப்பினரான பசுபதி பிள்ளை மற்றும் கரைச்சி பிரதேச சபையின் உறுப்பினர் எஸ்.தயாபரன் ஆகியோருடன் சேர்ந்து பொன்னவெளியிலுள்ள தேவாலயத்தின் பங்குத்தந்தையுடன் உரையாடிக்கொண்டிருந்தார். 

அப்போது அவரை ராணுவத்தினரும், காவல்துறையினரும் இடைமறித்து கைது செய்தனர். தமிழ் பிரபாகரனிடம் இருந்த கேமராவும் பறிமுதல் செய்யப்பட்டது. 

சுற்றுலா விசாவை மீறி கிளிநொச்சியில் உள்ள ராணுவ முகாமை தமிழ் பிரபாகரன் படம் பிடித்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. விசாரணைக்குப்பின் தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். மகா தமிழ் பிரபாகரனிடம் இலங்கை புலனாய்வுத் துறை போலீசார் தொடர்ந்து விசாரித்து வந்தனர். 

இந்த விசாரணை முடிவடைந்ததையடுத்து அவரை சனிக்கிழமை விடுவித்த ராணுவம், குடியேற்றத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தது. அவர்கள் ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து, தமிழ் பிரபாகரன் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். 

இதுகுறித்து இலங்கை காவல்துறை செய்தித் தொடர்பாளர் அஜித் ரோஹானா கூறுகையில், “தமிழ்நாட்டைச் சேர்ந்த 24 வயதான தமிழ் பிரபாகரன், காவல்துறையின் பயங்கரவாத விசாரணைப் பிரிவில் விசாரிக்கப்பட்டு குடியேற்ற அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார். அவரை கைது செய்ததன்மூலம் நாட்டிற்கு எதிராக தவறான தகவலை பரப்பும் முயற்சியை தடுக்க முடிந்தது” என்றார்.

சென்னை வந்த அவர் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசும்போது, ராணுவத்தால் தடை செய்யப்பட்ட எந்தப் பகுதிக்கும் தான் செல்லவில்லை. அனுமதிக்கப்பட்ட இடங்களுக்குச் சென்றே புகைப்படம் எடுத்ததாகவும், இலங்கை ராணுவத்தினரால் துப்பாக்கி முனையில் தான் கைதுசெய்யப்பட்டு, இரவில் கைவிலங்கிட்டு அடைத்து வைக்கப்பட்டிருந்தாகவும், இலங்கை ராணுவத்தின் விசாரணையால் கடும் மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது என்றும் கூறினார்.

 

http://www.nakkheeran.in/Users/frmNews.aspx?N=113787

சென்னை வந்த அவர் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசும்போது, ராணுவத்தால் தடை செய்யப்பட்ட எந்தப் பகுதிக்கும் தான் செல்லவில்லை. அனுமதிக்கப்பட்ட இடங்களுக்குச் சென்றே புகைப்படம் எடுத்ததாகவும், இலங்கை ராணுவத்தினரால் துப்பாக்கி முனையில் தான் கைதுசெய்யப்பட்டு, இரவில் கைவிலங்கிட்டு அடைத்து வைக்கப்பட்டிருந்தாகவும், இலங்கை ராணுவத்தின் விசாரணையால் கடும் மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது என்றும் கூறினார்.

 

இலங்கையை விட்டு வெளியே வந்து அதன் பின் உண்மையை சொல்லியிருக்கும் ஒரே ஒரு நபர்.

மகா தமிழ் பிரபாகரன் என்ற அந்த உறவு சென்னை வந்தடைந்த செய்தியை இணைத்தமைக்கு நன்றி தமிழரசு அண்ணா. :)

 

சென்னை வந்த பின்னர் தனக்கு நேர்ந்த அநியாயத்தை கூறியமைக்கு அவருக்கும் நன்றி. ஜெயபாலன் ஐயா போன்றவர்கள் இவரிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும்.
 

Edited by துளசி

என்னை கைது செய்து இவ்வாறு நடத்தியதற்கு ஜெனீவாவில் பதில் சொல்ல வேண்டி வரும் - தமிழ் பிரபாகரன்

 

maha_tamil_pirabaharan_2.jpg

 

என்னை கைது செய்து இவ்வாறு நடத்தியதற்கு ஜெனீவாவில் இலங்கை அரசாங்கம் பதில் சொல்ல வேண்டி இருக்கும் என இலங்கையில் இருந்து தமிழகத்திற்கு நாடுகடத்தப்பட்ட ஊடகவியலாளர் மகா. தமிழ் பிரபாகரன் கூறியுள்ளார். சென்னை வானனூர்த்தி நிலையத்தில் வைத்து கருத்துரைக்கும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்:

என்னை உறங்க விடாமல் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டனர். நான் எந்த விதிமுறைகளையும் மீறவில்லை. அது விதி முறையே இல்லாத நாடு. ஜனநாயகம் இல்லாத நாடு. நான் ராணுவத்தினர் முன்னர்தான் புகைப்படம் எடுத்தேன். மறைந்து நின்று எடுக்கவில்லை. பயங்கரவாத எதிர்ப்பு புலனாய்வு படையினர் நான்காவது மாடியில் இன்னமும் விடுதலை புலிகளை சேர்ந்தவர்களை அடைத்து வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். என்னை கைது செய்து இவ்வாறு நடத்தியதற்கு ஜெனீவாவில் இலங்கை அரசாங்கம் பதில் சொல்ல வேண்டி இருக்கும். அத்துடன் தனது விடுதலைக்கு குரல் கொடுத்த பத்திரிகையாளர்கள் மற்றும் கட்சிகள் அனைத்திற்கும் அவர் நன்றி கூறுவதாகவும் மகா. தமிழ் பிரபாகரன் மேலும் கூறியுள்ளார்.

 

http://www.pathivu.com/news/28805/57/d,article_full.aspx

 

----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------


Maga Tamizh Prabhagaran தம்பியை வரவேற்க சென்றிருந்தேன். தம்பியை மூன்று நாட்கள் தூங்கவிடாமல் விசரணை என்ற பெயரில் துன்புறுத்தியிருக்கின்றனர். குடிக்க கெட்டுப் போன தண்ணியையும், பெட்ரோலையும் கொடுத்திருக்கிறார்கள் சுட்டிக் காட்டியபொழுது தவறுதலாக நடந்து விட்டது என்று வருத்தம் தெரிவித்துள்ளனர்.

4 நாட்கள் மனரீதியாக துன்புறுத்திவிட்டு எல்லாவற்றையும் மறந்துவிடுங்கள் என்று சொல்லியிருக்கிறார்கள். தடை செய்யப்பட்ட பகுதிகள் எதையும் படமெடுக்கவில்லை, என்பது தெளிவாக தெரிந்தாலும் வேண்டுமென்றே துன்புறுத்தியுள்ளனர். உடல்ரீதியாக எந்த தொந்தரவும் கொடுக்கவில்லை..

தம்பி நலமாக வந்து சேர்ந்தார்... ஆனால் இலங்கை அரசின் ஊடக சுதந்திரமும், மக்கள் அங்கு நலமாக சுதந்திரமாக இருக்கிறார்கள் என்ற பொய் பித்தலாட்டங்களும் அம்பலம் ஆகியுள்ளது....

 

Hari Haran

(facebook)

Edited by துளசி

  • கருத்துக்கள உறவுகள்

மகா தமிழ் பிரபாகரன் மீண்டு வந்தது மிகுந்த மனமகிழ்வைத் தருகிறது..!

கொஞ்ச நாட்களாக நான் twitter பக்கம் போகவில்லை. இன்று தான் சென்றேன். மகா தமிழ் பிரபாகரன் கைது செய்யப்பட்ட தகவலை callum macrae உம் பகிர்ந்திருக்கிறார். :)

 

Callum Macrae ‏@Callum_Macrae 17h

And still they keep on arresting journalists. http://timesofindia.indiatimes.com/india/Tamil-Nadu-journalist-held-in-Sri-Lanka-for-video-taping-army-camp/articleshow/27989778.cms #ReleasejournalistTamilPrabhakaran

 

பி.கு: விடுவிக்கப்பட்ட செய்தி இன்னும் பகிரவில்லை.
 

Edited by துளசி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மகா தமிழ் பிரபாகரன் சிங்கள அரக்கர்களிடம் இருந்து மீண்டு வந்தது மிக மகிழ்ச்சியளிக்கின்றது !

அதே போல் Frances Harrison உம் committee to protect journalists (CPJ) இன் செய்தியை retweet பண்ணியுள்ளார். :)

 

CPJ Asia Desk ‏@cpjasia 23h

Indian journalist Tamil Prabhakaran arrested by #SriLanka's security forces. http://cpj.org/2013/12/indian-journalist-arrested-in-sri-lanka.php
Retweeted by Frances Harrison
 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தொடர்ச்சியாக மகா தமிழ் பிரபாகரன் பற்றிய தகவல்களை உடனுக்குடன் இணைத்துவரும் துளசிக்கு நன்றிகள். 

  • கருத்துக்கள உறவுகள்

மகா தமிழ் பிரபாகரன் மீண்டு வந்தது மிகுந்த மனமகிழ்வைத் தருகிறது..! 

நன்றி  துளசி தகவலுக்கு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.