Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

‘இனப்படுகொலை பற்றிப் பேசுவதில் அர்த்தமில்லை’ – சுமந்திரன் அறிவிப்பு!

Featured Replies

இங்கு வந்திருந்த

அனந்தியை

ஒருவர் அரசியல்வாதி  போராளி என்றார்

அதற்கு அவர் நான் சொல்லமுடியாத சொல் இது

நான் ஊருக்கு போகணும் என்று உடனேயே  மறுத்தார்

அப்போ  அரசியல்வாதியா தாங்கள் என்பதற்கு புழுவாக நெளிந்தார்

இது தான் களநிலை.............. :(  :(  :(

 

தவறு அண்ணா. அரசியல்வாதி என்ற சொல்லை அனந்தி அக்கா தான் பயன்படுத்தியிருந்தார். (இது இத்திரிக்கு சம்பந்தமில்லாதது.)

 

அனந்தி அக்காவிடம் அங்கு கூடியிருந்தவர்களில் ஒருவர் இவ்வாறு கேள்வி கேட்டார்.

வடமாகாண சபையில் அதிகாரம் பெற்ற பின்னர் உங்களை (தமிழ்தேசிய கூட்டமைப்பு / வடமாகாண சபை) மன்மோகன் சிங் உத்தியோகபூர்வமாக அழைத்திருக்கிறாரா அல்லது தமிழக அரசு உங்களை அழைத்திருக்கிறதா? அப்படி அழைக்கும் பட்சத்தில் நீங்கள் தமிழகம் சென்றால் 2009 ஆம் ஆண்டு அழிவிற்கு ஆதரவான கலைஞருடைய கட்சியில் சேர்ந்தவர்களை நிச்சயம் சந்திப்பீர்களா? எம்மை பொறுத்தவரை அவர்கள் செய்தவற்றை நாம் இன்னும் மறக்கவில்லை.

இதற்கு அவர் பதில்

தமிழ்தேசிய கூட்டமைப்பின் நிலைப்பாடோ, மாகாண சபையின் நிலைப்பாடோ நான் தெரிவிக்க முடியாது.

விக்னேஸ்வரன் ஐயா பதவியேற்றால் நிச்சயம் செல்வேன் என கூறியுள்ளார் என அந்நபர் மீள கேட்டபோது..

அழைப்பு கிடைத்தால் நல்லிணக்க முயற்சியில் அவர் போகலாம் என அனந்தி அக்கா பதிலளித்தார்.

உங்களுக்கு அழைப்பு கிடைத்தால் நீங்கள் என்ன செய்வீர்கள் என கேட்டபோது

முதலமைச்சருடன் 4 அமைச்சர்கள் இருக்கிறார்கள். சபாநாயகர், உப சபாநாயகர் இருக்கிறார். எனவே அவர் யாரை அழைத்து போவார் என தெரியவில்லை. இந்தியாவில் இடம்பெறும் கலந்துரையாடல் காணாமல் போனோர், போரினால் பாதிக்கப்பட்டோர் தொடர்பான கலந்துரையாடலாக இருக்கும் பட்சத்தில் என்னை அழைப்பாராக இருந்தால்... நான் இப்பொழுது அரசியல்வாதி. அரசியலில் இறங்குவதற்கு முன் என்றால் நான் சென்றிருக்க மாட்டேன். சென்றாலும் சந்தித்திருக்க மாட்டேன். இப்பொழுது அரசியல்வாதி என்ற ரீதியில் யாரையும் பகைப்பது நல்லதல்ல என்ற ரீதியில் சந்திப்பேன். ஆனால் நெத்திக்கு நேரே அவர்கள் செய்ததை எடுத்து கூறுவேன் என குறிப்பிட்டார்.

அதற்கு நிகழ்வை ஒருங்கிணைத்தவர், நாம் அனந்தி அக்காவை அரசியல்வாதியாக பார்க்கவில்லை. அரசியல்வாதி என்ற சொல்லை கேட்டாலே எமக்கு ஒவ்வாமை வந்து விடுகிறது. எனவே அவரை அரசியல் போராளி என நாம் குறிப்பிடுகிறோம் என கூறினார்.

அதற்கு அனந்தி அக்கா தான் ஒரு யதார்த்தவாதியாக இருந்ததாகவும் தனது சூழ்நிலை தன்னை அரசியலுக்குள் கொண்டு வந்து விட்டது எனவும் குறிப்பிட்டார். அரசியலில் அனைவரையும் சமாளித்து செல்ல வேண்டும். எனினும் தான் சொல்ல முடியாத சொல்லை அவர் சொல்கிறார் எனவும் குறிப்பிட்டார்.

 

Edited by துளசி

  • கருத்துக்கள உறவுகள்

சுமத்திரன்,சம்பந்தர் எப்போதுமே உளறல் அரசியல் செய்பவர்கள்.ஏய் (உங்களுக்கு எதற்கு மரியாதை)அரசியல்வாதிகளே நாங்கள் உங்களை பாராளுமன்றத்திற்கு அனுப்பியது.இனப்படுகொலை செய்த சிங்கள அரசைக் காப்பாற்றுவதற்கு அல்ல.இனப்படுகொலைக்கான ஆதாரம் ஏராளமாக இருக்கிறது.அவற்றை சர்வதேசம் முன்பு எடுத்துரைப்பதற்காகத்தான் உங்களைத் தெரிவு செய்தோம்.ஆதாரங்களை நாங்கள் காட்டத்தயாராய் இருக்கிறோம் .ஏதோ ஆதாரமில்லாமல் தமிழர்கள் இனப்படுகொலை என்ற பதத்தைப் பாவிப்பதாக சொல்லும் சுமத்திரன் அவர்களே நீங்கள் இருக்க வேண்டியது மகிந்தவின் கூடாரம் அங்கு இருந்து கொண்டு இப்படிச் சொன்னால் யாரும் தடுக்க மாட்டார்கள்.சனல்4 ஐக்கேட்டாலே 1000 ஆதாரம் தருவார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

துளசி

அரசியல்வாதி  என்று  பலமுறை  அங்கு உபயோகிக்கப்பட்டபோதும்

அவரது முகத்தை கவனித்திருப்பீர்களானால்

அவர் சங்கடப்பட்டதை புரிந்து கொண்டிருப்பீர்கள்

அவருடைய  நிலையில்

நாங்கள் இருந்து பார்த்தால்

அந்த வார்த்தையின்(அரசியல்வாதி) வலி  தெரியும் :(  :(

கட்டாயம் லண்டன் வர ஒழுங்கு செய்யுங்கள் ,அவரது கோவணம் மிஞ்சினால் உங்களுக்கு பரிசாக வழங்குகிறோம்

தொட்டில் பழக்கம் சுடுகாடு  வரையிலும் என்பதைஉங்கள்  கருத்து நிரூபிக்கின்ரது .நாடுவிட்டு ஓடிவந்தும் வன்முறையை விடாத நீங்கள் எல்லாம் உருப்பட்ட மாதிரித்தான் .கருத்தை கருத்தால் எதிகொள்ள பழகுங்கள் .

 

மற்றவன் கோவணத்திட்கு ஆசைப்படாமல் உழைத்து வாங்க முயற்சி செய்யுங்கள் .நாங்கள் கோவணத்தை பரிசாக கொடுப்பதுமில்லை ,வாங்குவதுமில்லை .

இனப்படுகொலை, போர்க்குற்றம் என்பதை வலியுறுத்தி ஆதாரங்களை கொடுப்பது எந்த வகையில் பின்னடைவாகலாம் என்பதை அவர் விளக்கமாக கூறினால் எல்லோருக்கும் உதவியாக இருப்பதுடன் திரு சுமந்திரன் அவர்கள் மீதான தப்ப்பிராயங்களும் அகலும் என்பது எனது கருத்து. சர்வதேசம் இனப்படுகொலையை  ஏற்று கொள்ளாவிட்டாலும் எமக்கு நீதியான தீர்வு கிடைப்பதற்கு அத்தகைய ஆதாரங்களும் அதற்கு ஆதரவான விவாதங்களும் எந்த வகையிலும் தடையாக இருக்கபோவதில்லை.

சுமந்திரன் சிலவற்றை பேசியிருக்கலாம். அதில் சில குழப்பகரமான நோக்கங்கள் கூட இருக்கலாம். மேலும் கூட்டமைப்பு விமர்சனைக்கு அப்பல் பட்டதாக இருக்க வேண்டும் என்பதல்ல. ஆனால் ஒட்டு மொத்த கூட்டமைப்பையும் கழித்துவைக்க தூண்டும் முயற்சிகள் வலுவடைவது அவதானிக்கபட வேண்டும். தனது கருத்துக்களுக்கு ஆதரவாக சுமந்திரன் கூறியிருந்திருக்க கூடிய ஆதரங்களை இந்த பத்திர்கைகள் வேண்டுமென்றேதான் பிரசுரிக்காமல் விட்டுவிட்டு, தமது நலத்துக்கேற்றமாதிரி தலைப்பை போட்டு மொக்கை எழுதுகின்றன.

 

காலை தொடக்கம் மாலை வரை நடந்த கூட்டத்தில் சுமந்திரன் இனவழிப்பு சொல்லை எதிர்த்து வெற்றி கண்டதாக பத்திரிகை சோடிக்கிறது.சுமந்திரன் வெளிநாடுகளை அணுகி பயன் இல்லை; பேசுவதுதான் வழி என்கிறார் என்று பத்திரிகை சொல்கிறது. உண்மையாக அதுதான்  சுமந்திரனின் நிலைபாடாக இருந்தால் அப்போ "போர்குற்ற" சொல்லிற்கும், "இனவழிப்பு" சொல்லுக்கும் வெளிநாடுகள் என்ன முக்கியத்துவத்தை கொடுத்தாலும் நமக்கு அது முக்கியமானதல்ல. போர்க்குற்றம் ஐக்கிய இலங்கையும்ம், இனவழிப்பு தனிநாட்டு சூழ்நிலைக்கும் வழி வகுக்கும் என்று சிலர் நினைபத்தால் இந்த சொற்களை மிகைப்படுத்துவதும், இவற்றை வைத்து குற்றம் காண்பதும் சொந்த அரசியல் நனமைகளுக்க பயன் படுத்தபடுகிறது(இன வழிப்பு பெரிய குற்றம் ஆனாலும் அதில் உண்மை கிடையாது). எனவே சுமந்திரன் இப்படி பேசுவதாகவும், இதனால் கூட்டமைப்பு மகிந்தாவின் ஐக்கிய இலங்கை நிலைப்பாட்டுக்கு ஒத்தூதுவதாகவும் இந்த பத்திரிகைகள் சித்திரம் வரைகின்றன. 

 

ஆனால் சில பதிரிகைகள் வருணிப்பது போல இல்லாமல் இந்த கூட்டத்தில் இரண்டு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

1.) அரசுடன் தீர்வு குழுவில் சேர்ந்து பேச்சுவார்த்தைகளில் இறங்காமை. 

2). அரசு போர்க்கால நடவடிக்கைகளை திரிக்கத்தக்கதாக எடுக்கும் புள்ளிவிபரதை நிராகரித்து கூட்டமைப்பு தனது புள்ளி விபரத்தை எடுத்தல்.

 

சுமந்திரன் உள்ளே, "கூட்டமைப்பு இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தைகளை நடத்த வேண்டும்" என்று பேசியிருந்தாலும், வெளியே ஊடகவியலாருக்கு கூட்டமைப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தாது என்ற அறிக்கையை வாசித்து காடியவர் அவரேதான். இந்த நேரம் சம்பந்தர் அகாசியிடம் அரசுக்கு எதிராக போராட்டங்களை தான் முன்னெடுக்க போவதாக கூறியிருந்த பதிலையும் நாம் கவனிக்க வேண்டும். கூட்டமைப்பு எடுக்கவிருக்கும் புள்ளிவிபரம் கூட அரசுக்கு சவாலனது என்பதை அந்த ஊடகங்கள் இருட்டடிப்பு செய்கின்ற்ன. 

அடுத்த தேர்தலில் போட்டியிடும்போது மேடைக்கு மேடை ஸ்ரீலங்கா அரசு இனக்கொலை புரியவில்லை, போர்குற்றம் எதுவும் புரியவில்லை அதை ஏற்றுக்கொண்டு எனக்கு வாக்களியுங்கள் என்று மக்களை கோரவேண்டும். அதைவிட்டு மேடையில் சாந்தனின் தமிழ் எழுச்சிபாடலை ஒலிக்கவிட்டு வாக்கு கேட்க கூடாது.

 

நீங்கள் நேரடியாக அவர் சொன்னதை கேட்டீங்களா ?இந்ததிரியில் சுமந்திரனின் பேட்டியை கேளுங்கள் பல கேள்விகளுக்கு தெளிவான பதிலை வழங்கியுள்ளார் .அதே போல் இந்த சம்பவமும் அவரிடம் நேரடியாக கேட்கப்பட்டு அவரின் பத்தில்  இணைக்கப்படும் .

 

 

இங்கு சிலரைப்போல உணர்ச்சி வசப்பட்டு எதையும் சொல்லவும் முடியாது /செய்யவும் முடியாது .

 

 

சாந்தன் புலிகளில் இருந்த பொது பாடின பாடலையா போட்டாவாக்கு கேட்டார்கள் ,மற்றவர்கள் லைக் போடவேண்டும் என்பதற்காக முட்டாள் தனமாக எழுதாதீர்கள் .

 

இதில் பகிரங்கமாக கேட்கின்றேன் 1983இல் இருந்து இன்றுவரை ஸ்ரீலங்கா அரசு தமிழருக்கு எதிராக செய்த அட்டுழியங்களை நீங்கள் யாராவது சேகரித்து வெளிநாட்டு தூதுவராலயம் ,ஐ.நா அமைப்பு போன்றவற்றிட்கு அனுப்பியிருக்கின்றீர்களா  ?

http://www.youtube.com/watch?v=O2NlJvrTcD4

 

மேலுள்ள இணைப்பை கேளுங்கள் .

 

Edited by nunavilan

நன்றிகள் நுனாவிலான்.

1915இல் நடந்த அர்மேனியன் இனப்படுகொலையை இன்றுவரை ஐ .நா.அங்கீகரிக்கவில்லை .மேலேயுள்ள கானொளியில் இனப்படுகொலையைபற்றி சுமந்திரன் சில விளக்கங்களை சொல்லியுள்ளார் .

http://en.wikipedia.org/wiki/Armenian_Genocide

நீங்கள் நேரடியாக அவர் சொன்னதை கேட்டீங்களா ?இந்ததிரியில் சுமந்திரனின் பேட்டியை கேளுங்கள் பல கேள்விகளுக்கு தெளிவான பதிலை வழங்கியுள்ளார் .அதே போல் இந்த சம்பவமும் அவரிடம் நேரடியாக கேட்கப்பட்டு அவரின் பத்தில்  இணைக்கப்படும் .

 

 

இங்கு சிலரைப்போல உணர்ச்சி வசப்பட்டு எதையும் சொல்லவும் முடியாது /செய்யவும் முடியாது .

 

 

சாந்தன் புலிகளில் இருந்த பொது பாடின பாடலையா போட்டாவாக்கு கேட்டார்கள் ,மற்றவர்கள் லைக் போடவேண்டும் என்பதற்காக முட்டாள் தனமாக எழுதாதீர்கள் .

 

நான் நேரடியாக கேட்கவில்லை என்பது உண்மை. சில வேளை ஊடகங்களில் வந்த செய்திகள் தவறாக கூட இருக்கலாம். ஆனால் சாந்தனின் பாடல் மூலம்மக்களை கூட்டமைப்பு உணர்ச்சி வசப்படுத்தியது உண்மை. உணர்ச்சி  வசப்படுத்துபவர்கள் புலிகள் மட்டுமல்ல தேர்தல் காலங்களில் தமிழ் தேசிய கூட்டமைமைப்பிரனரும் தான்.  இப்போது மட்டுமல்ல ஐம்பதுகளில் இருந்து ஆரம்பித்துவிட்டார்கள்.

நான் நேரடியாக கேட்கவில்லை என்பது உண்மை. சில வேளை ஊடகங்களில் வந்த செய்திகள் தவறாக கூட இருக்கலாம். ஆனால் சாந்தனின் பாடல் மூலம்மக்களை கூட்டமைப்பு உணர்ச்சி வசப்படுத்தியது உண்மை. உணர்ச்சி  வசப்படுத்துபவர்கள் புலிகள் மட்டுமல்ல தேர்தல் காலங்களில் தமிழ் தேசிய கூட்டமைமைப்பிரனரும் தான்.  இப்போது மட்டுமல்ல ஐம்பதுகளில் இருந்து ஆரம்பித்துவிட்டார்கள்.

 மேலுள்ள காணொளியை கேட்டீர்களா ?

மேலுள்ள காணொளியை கேட்டீர்களா ?

காணொளி கேட்டேன். எனது கருத்து மக்களை உணர்ச்சிவசப்படுத்துவதில் தமிழரசுக்கட்சியினரின் பங்கு மிக அதிகமானது என்பதே. புலிகள் தாங்களும் உணர்ச்சி வசப்பட்டார்கள். தமிழரசுக்கட்சுயினரோ மக்களைமட்டும் தேர்தல் காலங்களில் உணர்ச்சி வசப்படுத்துவார்கள். ஐம்பதுகளில் தமிழர் இன ஒதுக்குதலுக்கு உள்ளாக தொடங்கிய போது தமிழரசுக்கட்சியில் இருந்தவர்கள் அனைவரும் அதிகம் படித்த சட்டவாளர்கள். தமது சாதுரியத்தையும் ராஜதந்திரத்தையும் பாவித்து இலகுவாக பிரச்சனையை தீர்த்திருக்கலாம். அவ்வாறு செய்ய விரும்பாமலோ அதற்கான அறிவு இல்லாமலோ உணர்ச்சி அரசியலை தமிழ் மக்களுக்கு அறிமுகப்படுத்தினார்கள். தேர்தல். மேடைகளில். இரத்த திலகமிட்டு இளைஞர்களை உசுப்பேற்றி ஆயுதப் போராட்டத்தை கருக்கொள்ள வைத்தவர் களே இந்த தமிழரசு கட்சியினர்தான் இப்போது தங்கள் தவறுகளை மறைத்து பழி முழுவதையும் இளைஞர்கள் மீது போட்டு ராஜதந்திர வேடம் போடும் இவர்கள் தேர்தல் வந்தவுடன் தமிழரசு தமிழரசே என்ற சாந்தனின் பாடலை ஒலிக்க்கவிட்டு வாக்கு சேர்த்ததே குறிப்பிட்டேன். ஆஙிகிலத்தில் federal party என்று பெயர் வைத்து விட்டு தமிழில் தமிழரசு என்று மக்களை உசுப்பேற்றி விட்டு இன்று காணாமற்போன தமது கணவனை அல்லது பிள்ளைகளை தேடி ஆர்ப்பாட்டம் கவனயீர்ப்பு போராட்டம். செய்யும். மக்களின் போராட்டங்களையும். கொச்சைப்படுத்துகிறார்கள்.

நான் பழைய விடயங்களைக் கிளறுவதாக சிலர் நினைக்கலாம். பழைய அரசியலே தற்போதும் தொடர்கிறது. தேர்தல்க் காலங்களில் உச்சப்பேற்றுதலும் வீர வசனங்களும் கொழும்பிலோ பிற நாடுகளில் கருத்தரங்குகளில் ராஜதந்திர வேடமும் தற்போது தொடர்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

அதே தான் திருமலை புலம்பெயர்நாட்டில் சாமியே சரணம்,சிறிலங்காவில் புத்தம் சரணம்

.நெடுக்குக்கு யாராவது வரலாற்றை சொல்லிக்கொடுங்கோ தப்புத்தப்பாக பொழிப்புரை எழுதுகிறார் .TNA யை உருவாக்கினது கிழக்கிலக்கை பத்திரிகையாளர் அமைப்பு (2001)புலிகள் அங்கீகாரம் கொடுத்தார்கள்

படுகொலையில் தமிழர் தரப்புதான் முதன்மையான இடத்தில் உள்ளது அந்த அறிக்கையை நீங்கள் வாசிக்கவில்லையா அதற்காகதான் அவர்கள் அறிவுபூர்வமாக சொல்லுகிறார்கள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.