Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் இந்துக் கல்லூரி மாணவன் யதுசனனின் கொலையும்

Featured Replies

கடந்த டிசம்பர் மாதம் 4ஆம் திகதி கொள்ளை என்ற போர்வையில் வீடு புகுந்தவர்களால் கோடரியால் வெட்டிக் கொல்லப்பட்ட யாழ் இந்துக் கல்லூரியின் மாணவன் சண்முகநாதன யதுசன்  திட்டமிடப்பட்டே கொல்லப்பட்டதாக குளோபல் தமிழ்ச் செய்திகளிற்குத் தெரிய வந்துள்ளது.
 
 
இவரது கொலை தொடர்பில் ஊடகங்களில் வெளிவந்த செய்தியின் சாராசம் பின்வருமாறு:
 
 
யாழ். உடுவில் பிரதேசத்தில் வீடொன்றினுள் புகுந்த கொள்ளையர்கள் வீட்டில் இருந்தவர்களைக் கோடரியினால் தாக்கி உள்ளனர். 4.12.13 அன்று  நள்ளிரவு கற்பக பிள்ளையார் கோவிலடி-உடுவில் கிழக்கைச் சேர்ந்த செல்லத்துரை சண்முகநாதன் என்பவரது வீட்டிலேயே இந்தச் சம்பவம் இடம் பெற்றுள்ளது. இத்தாக்குதலில் 50 வயதுடைய செல்லத்துரை சண்முகநாதன் அவரது மனைவியான 45 வயதுடைய நாகேஸ்வரி இவர்களது மகனான 20 வயதுடைய ஜதுசன் ஆகியோர் காய மடைந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.  பின்னர் யதுசன் மட்டும் சிகிச்சை பலனளிக்காமல் மரணமடைந்துள்ளார்.
 
இந்தச் சம்பவம் தொடர்பாக வீட்டு உரிமையாளர் சண்முகநாதன் பின்வருமாறு தெரிவித்திருந்தார் :  'நேற்று முன்தினம் (4.12.13)  நள்ளிரவு 12 மணியளவில் நாய் குரைக்கும் சத்தம் கேட்டது. அதனைத் தொடர்ந்து நான் வீட்டுக் கதவைத் திறந்து வெளியில் வந்து பார்த்த போது என் தலையில் கோடரியினால் கொத்தினார்கள். அதனால் நான் எழுப்பிய அவலக் குரலைக் கேட்டு ஓடிவந்த என் மகன் மீதும் அவர்கள் தலையில் கொத்தினர். அதனைத் தடுக்க முயன்ற எனது மனைவியையும் தாக்கினார்.
 
அதன் பின்னர் வீட்டுக்குள் புகுந்தவர்கள் வீட்டின் அனைத்து பொருட்களையும் கீழே தள்ளிவிழுத்தித் தேடுதல் நடத்தினார்கள். அதற்கிடையில் சத்தம் கேட்டு அயலவர்கள் மின் விளக்குகளை ஒளிர விட்டதும் கொள்ளையர்கள் எம் வீட்டில் இருந்து தப்பி சென்றனர். அந்தக் கொள்ளை குழுவில் ஐவர் இருந்தனர். அவர்கள் அனைவரும் முகத்திற்குத் துணி கட்டி இருந்தனர். சிங்களத்திலும் கொச்சை தமிழிலும் உரையாடினார்கள்'
 
குறித்த சம்பவம் குறித்த உடனடி விம்பம் அது ஒரு கொள்ளைச் சம்பவம் என்பது போலத்தோன்றினாலும் அது பற்றிப்பின்னர் கிடைக்கும் தகவல்கள் வேறு ஒரு காட்சியை விரிக்கின்றன.
 
அங்கு சென்ற முகமூடி அணிந்த  'கொள்ளையர்கள்' இலங்கைப் புலனாய்வுத் துறையினர்  என்றும் அவர்கள் குறித்த வீட்டுக்கு  கொள்ளையிடும் நோக்கத்தோடு செல்லவில்லை எனவும் அந்த வீட்டில் வசித்தவர்களைத் தாக்கும் நோக்கத்தோடேயே இரவு அங்கு சென்றதாகத் தகவல்கள் தெரிவிகின்றன.  சென்றவர்கள் முதலில் சண்முகநாதனைக் கோடரியால் தாக்கிப் பின் அவரது மனைவியைத் தாக்கிப் அதன்  பின்னர் யதுசனைத் தாக்கி உள்ளனர். ஏதோ களவுக்குப்  போனவர்கள் போல வீட்டுள் சென்று பொருட்களையும் தேடி உள்ளனர். அதேவேளை யதுசனின் அடையாள அட்டையைத் தேடி சரியும் பார்த்துள்ளனர்.  வீட்டில் ஓடிய இரத்தத்தை முழுமையாகக் கழுவிச் சுத்தம் செய்துள்ளனர். மேலும் தமது  கையடையாளங்களையும்  தாம் ஏற்படுத்திய தடையங்களையும் அழிக்கும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளனர். இதன் பின்னரே அவர்கள் வெளியேறியதாகத் தெரிய வருகிறது.
 
 
யாழ் இந்துக் கல்லூரி மாணவனான யதுசன் கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையில் மருத்துவ பீடத்திற்கு செல்லக் கூடிய பெறுபேறுகளை எடுத்திருந்தார். கடந்த மாவீரர் தின நிகழ்வுகளின் போது அதில் இவர் ஈடுபாடு காட்டியதான தகவல்கள் குறித்து இலங்கைப் புலனாய்வுப் படைப்பிரிவினர் உன்னிப்பாக அவதானித்துக் கொண்டிருந்தனர் எனவும் எனவும் அதன் தொடர்ச்சியே இந்தக் கொலை எனவும் சில தரப்பினர் குளோபல் தமிழ்ச் செய்திகளிற்கு தெரிவித்துள்ளனர்.
 
சில மாதங்களின் முன்பு இதையொத்த ஒரு சம்பவம் நிகழ்ந்தது உங்களுக்கு நினைவிருக்கலாம். கொழும்பில் ஊடகவியலாளர் மந்தனாஸ்மாயில் வீட்டிற்கும் இவ்வாறே ஒரு கொள்ளையர் குழு சென்றது. அங்கு சென்றவர்களும் புலனாய்வுப் பிரிவினரே என்பது ஊரறிந்த இரகசியம்.
 
குடாநாட்டில் தொடரும் இவ்வாறான மிலேச்சத்தனமான சம்பவங்கள் குறித்து அங்கு நிலவும் அடக்குமுறைகள் காரணமாக எவரும் வாய்திறந்து பேசுவதற்கு தயாரில்லாத நிலை காணப்படுகிறது.  பல தகவல்கள் எங்கள் உத்தியோக பூர்வ செய்தியாளர்களினூடாக அல்லாமல் மக்களால் நேரடியாக வேறு மார்க்கங்களின் மூலம் அனுப்பி வைக்கப்படுகின்றன. உத்தியோகபூர்வச் செய்தியாளர்கள் இலங்கையரசின் கண்காணிப்பினுள் செயப்படுவதனாலேயே மக்கள் இவ்வாறு தொழிற்பட நேர்கிறது.
 
 
யாழ் குடாநாட்டில் இயங்கும் ஊடகங்கள், படைப்புலனாய்வாளர்கள், பாதுகாப்பு அமைச்சு, அதன் செயலாளர், மற்றும் படைத்தரப்பினர் தொடர்பான செய்தகளை கண்டும் காணாது விடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. எமது செய்தியாளர்களும் அண்மைக்காலமாகப் பாதுகாப்பு தரப்போடு தொடர்புடைய செய்திகளை தவிர்க்கும் நிலையில் உள்ளனர்.
 
 
எனினும் வடக்கின் மக்கள் பல செய்திகளையும் ஆதாரங்களையும் அனுப்பியவண்ணமே உள்ளனர்.
 
 
இதேவேளை ஒரு சில இணையங்கள் விரும்பியும் விரும்பாமலும், தெரிந்தும் தெரியாமலும் படைப் புலனாய்வளர்களின், அரசாங்க தரப்பினரின் நோக்கங்களை நிறைவேற்றும் வேலையை வாழைப்பழத்தில் ஊசியேற்றுவது போலச் செய்து கொண்டிருப்பதாகவும் குளோபல் தமிழ்ச் செய்திகளிற்கு தெரிய வந்துள்ளது.  ஒரு புறத்தில் தமிழ் மக்களிடத்தில் அச்சவுணர்வைக்கிளப்பி விடும் நோக்கத்தில் செயற்படும் அரசு மறுபுறத்தில் குறித்த இணையங்கள் மூலம் தமிழ் மக்கள் மத்தியில் குழப்பங்களை உண்டுபண்ணித் தமிழ் மக்களின் நியாயமான  அரசியல் அபிலாசைகளைச் சிதறடிக்கும்  வேலையையும் செய்து வருவதாக அரசியல் அவதானிகள் குறிப்பிடுகின்றனர்.  சில இணையங்கள்  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களிடையே முரண்பாடுகளை தோற்றுவிக்கும் செய்திகளையும், புலம்பெயர் நாடுகளில் சிதறுண்டு  இயங்கும்  விடுதலைப் புலிகளின் பலதரப்பட்ட அமைப்புக்கள் குறித்து முரண்பட்ட செய்திகளையும், பழையஃபுதிய புலிகளின் மீள் இயக்கம் குறித்த செய்திகளையும்  சரியான அரசியல் நோக்கம் இன்றி மக்களை குழப்பும் நோக்கத்துடன் வெளியிட்டு வருவதாக நம்பகரமான தகவல்கள் கிடைத்துள்ளன.
 
தமிழ் இணையங்கள் மட்டுமல்ல சில் ஆங்கில, சிங்கள இணையங்களும் அரசின் இந்த வேலைத்திட்த்திற்கு உடந்தையாக இருந்து வருகின்றன. திட்டமிடப்பட்ட செய்திகளை மக்கள் மத்தியில் உலவ விடுவதன் மூலம் அரசாங்கம் தமிழ் மக்களின் அரசியல் சிந்தனையைக் குழப்ப முயற்சித்து வருகிறது.  உதாரணமாக  கூட்டமைப்பின் முக்கியஸ்த்தர்களான சம்பந்தன், விக்னேஸ்வரன், சுமந்திரன், மாவை சேனாதிராஜா, சுரேஸ் பிறேமச் சந்திரன் உள்ளிட்டவர்களிடம் செவ்விகளை பெற்ற பின்னர் அவர்கள் வழங்கிய முழுமையான செவ்வியை வெளியிடாமல் அரசாங்கத்திற்கு சார்பாக அல்லது புலிகளுக்கு எதிராக அவர்கள் தெரிவிக்கும் எதிர்க்கருத்துகளை மட்டுமே முதன்மைப்படுத்தித் தலைப்புச் செய்திகளாக வெளியிடுவதன் மூலம்  தமிழ் தேசிய ஆதரவளர்கள் மத்தியில் இவர்கள் குறித்த தப்பான அபிப்பிராயங்களை தோற்றுவிக்க முயற்சிப்பதாகக் கருதப்படுகிறது.
 
எதிர்வரும் மார்ச் மாத ஐக்கியநாடுகள் மனித உரிமைக் கூட்டத்தை சந்திக்கும் பொறுப்பை உள்நாட்டிலும் புலம்பெயர் நாடுகளிலும் தனது பொறுப்பின் கீழ் கொண்டுவந்துள்ள பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஸ அதற்கான காய்நகர்த்தல்களை மிக நுணுக்கமாகச் செய்து வருவதாக அறிய முடிகிறது.
 
இதற்கமைவாக வடக்கில் மெல்லிதாகத் திறக்கும் சிலரது வாய்களையும் அடைக்கும் நடவடிக்கை தற்போது முடுக்கிவிடப்பட்டுள்ளது.
 
அண்மையில் நள்ளிரவில் ஒருவரது வீட்டிற்கு சென்ற புலனாய்வுப் பிரிவினர் (அவர்  யார் ) என்பது இங்கு தவிர்க்கப்பட்டுள்ளது) அவரை கட்டி வைத்து தாக்கியதோடு அவரது செயற்பாடுகளை நிறுத்தும்படியும் எச்சரித்துள்ளனர். தமது எச்சரிக்கையையும் மீறித் தொழிற்பட்டால்; கொல்லப்படுவீர் என பகிரங்க கொலை மிரட்டலை விடுத்துச் சென்றுள்ளனர்.
 
அண்மையில் வடமராட்சி கிழக்கில் வயலுக்குச் சென்ற இளைஞன் ஒருவர் தனது உழவு யந்திரத்தினாலேயே நசியுண்டு இறந்த நிலையில் மீட்கப்பட்டு இருந்தார். இவர் வடமாகாண சபைத் தேர்தலில் கூட்டமைப்பிற்கு ஆதரவாகத் தொழிற்பட்டு இருந்தார்.
 
 
இலங்கையில் நபர்கள்  கடத்தப்படுவதில்லை  சுட்டுக் கொல்லப்படுவதில்லை, அரசியல் பழிவாங்கல்கள்  நிகழ்த்தப்படுவதில்லை  என்ற தோற்றத்தை சர்வதேசத்திற்கு தரவும் வேண்டும் அதேவேளை அரசியல் எதிரிகளை அடக்கவும் வேண்டும் இந்த நோக்கத்தை அடைவதற்காக   இலங்கையின் புலனாய்வுப்பிரிவு புதிய தொரு முகமூடியை  அணிந்துள்ளது. கொள்ளையர்கள் முகமூடி அணிவதே வழக்கம். ஆனால் இலங்கை அரசாங்கம் கொள்ளையர் என்னும் முகமூடியை அணியத் தொடங்கியுள்ளது. இலங்கையின் வளங்களை ஊழல் செய்து கொள்ளையடிக்கும் அரசாங்கத்திற்கு இந்த முகமூடி நன்றாகப்பொருந்தும்தான். தமிழர்கள் இலங்கைக்குத் திரும்பலாம் எனப் பாதுகாப்புச் செயலர் அறிக்கைகளை வெளியிட்டாலும் மனிதர்கள் கொள்ளை முயற்சியின் போது கொல்லப்படுவது, வீதி விபத்துக்களில் தாக்கப்படுவது அல்லது கொல்லப்படுவது, மனிதர்கள் அவர்களாகவே தற்கொலைசெய்வது  போன்ற தமிழ்பட வில்லத்தனங்களைச் செய்யக் கோத்தபாயவுக்கு எமது தமிழ் இணையத் தளங்கள்தான் சொல்லிக் கொடுத்தனவோ என்று நீங்கள் சந்தேகிப்பது தெரிகிறது. அவர்கள் இன்னும்  அந்தளவுக்குத் தாழ்ந்து போகவில்லை என நம்புகிறேன்.  சரி அதை விடுங்கள் அரசு என்பது  ஒரு கொள்ளையிடும் நிறுவனம் என்று யாராவது சொனால் அதற்கு உதாரணாமாக இலங்கை அரசையும் கூறலாம்.
 

மாணவர்களை, பெற்றோர்களை இராணுவத்திற்கெதிராக, அதன் தலைமை பயிற்சிக்கு எதிராக தூண்சிவிட்டு தம்மை சிலர் விளமபரம் செய்கிறார்கள். மாணர்வர்கள் கடத்தப்பட்டால் கொலை செய்யப்பட்டால் எதிர்ப்பு எழுதுவதில்லை. 

 

 

 

http://www.yarl.com/forum3/index.php?showtopic=133882

  • கருத்துக்கள உறவுகள்

//யாழ் இந்துக் கல்லூரி மாணவனான யதுசன் கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையில் மருத்துவ பீடத்திற்கு செல்லக் கூடிய பெறுபேறுகளை எடுத்திருந்தார்.//

 

அநியாயமாக... ஒரு மருத்துவ பல்கலைக்கழகத்துக்கு தேர்ந்தெடுக்கப் பட இருந்த மாணவனை... சிங்கள புலனாய்வுத்துறை கொலை செய்து விட்டது. :(

இந்து கல்லூரி பழைய மாணவர்கள் சுழகு டான்ஸ் களியாட்ட நிகழ்வுகளில் இருந்து ஓய்வு எடுத்து யதுசனின் குடும்பத்திற்கு உதவ வேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.