Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தியாவும் அயல்நாடுகளான தென்னாசியாவிற்கான வெளியுறவுக்கொள்கையும் - நிருபமா ராவ்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Nirupama-Rao3.jpg

இந்தியாவானது தென்னாசியாவின் மையமாக விளங்குகிறது. இந்தியாவின் உள்ளகப் பாதுகாப்பிற்கு எழும் அச்சுறுத்தலானது இந்திய மாக்கடல் பிராந்தியத்திற்கே அச்சுறுத்தலாக எழும் என்கின்ற நியாயத்தை இந்தியா கவனத்திற் கொள்ள வேண்டும். 

இவ்வாறு இந்தியாவின் முன்நாள் வெளியுறவுச் செயலரான நிருபமா ராவ் தனது உரையொன்றில் தெரிவித்துள்ளார். 'த இந்து' ஆங்கில நாளேட்டில் வெளிவந்த அந்த உரையை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி. 

பொருளாதார விவகாரங்களைப் பொறுத்தளவில் பூகோள மூலோபாய விவகாரங்களில் ஏற்பட்டுள்ள துரித மாற்றங்கள் இந்தியாவிற்கும் பசுபிக் சமுத்திர நாடுகளுக்கும் முக்கியமானதாக உள்ளன. இந்த மாற்றங்கள் இந்தியாவின் தென்னாசியாவிலுள்ள அயல்நாடுகளும் வளைகுடாப் பிராந்திய நாடுகளும் தமக்கான கொள்கைகளை வகுப்பதில் செல்வாக்குச் செலுத்தியுள்ளன. பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள இவ்வாறான துரித மாற்றங்கள் இந்தியாவிற்குப் பெரும் அச்சுறுத்தலாக எழுந்துள்ளன. 

அதாவது இந்தியாவானது இவ்வாறான ஆபத்துக்களிலிருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்வதற்காக உலக நாடுகள் மற்றும் தனது அயல்நாடுகளின் பக்கம் தனது கவனத்தைச் செலுத்தியுள்ளது என்பதல்ல. நாங்கள் பொருளாதாரம், விஞ்ஞானம், தொழினுட்பம், இராணுவம் மற்றும் தொடர்பாடல் துறைகளில் சவால்களுக்கு முகங்கொடுக்கக் கூடிய வகையில் எமது முழுமையான தேசிய பலத்தைக் கட்டியெழுப்புவதற்கான மூலோபாயங்களை வகுத்துக் கொள்ள வேண்டும். 

இந்தியாவின் பூகோள அமைவிடம், பிராந்திய அளவு, பொருளாதாரம், அபிவிருத்தி, இராணுவத் திறன், மக்கள் தொகை போன்ற பல்வேறு சாதகமான காரணிகள் மூலம் இந்தியாவானது தென்னாசியாவில் ஒரு வல்லாதிக்க நாடாகவும் மத்திய பிரசன்னம் மிக்க ஒரு நாடாகவும் விளங்குகிறது. எமது ஒவ்வொரு அயல்நாடுகளும், மறைந்த சிறிலங்காவின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமர் கூறியதை நினைவிற் கொள்ளவேண்டும். அதாவது இந்தியாவின் பூகோள அமைவிடம், வரலாற்று அனுபவம், தேசிய அவாக்கள் போன்றன தொடர்பாக பிராந்திய நாடுகள் விளங்கிக் கொள்ள வேண்டிய தேவையுள்ளதாக லக்ஸ்மன் கதிர்காமர் குறிப்பிட்டிருந்தார். 

ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் தவிர இந்தியாவின் ஏனைய அயல்நாடுகள் தமக்கிடையில் தொடர்புகளையும் போக்குவரத்துக்களையும் மேற்கொள்வதற்கு இந்தியாவை நாடுகின்றன. அதாவது இந்த நாடுகள் இந்தியக் கடல், இந்தியாவின் வான் பிரதேசம், தரைப் பிரதேசம் ஆகிய மூன்று மார்க்கங்களையும் பயன்படுத்துகின்றன. இந்தியாவும் இதன் தென்னாசிய அயல்நாடுகளும் இனம், மொழி, கலாசாரம், பொதுவான வரலாற்று அனுபவங்கள் போன்றவற்றால் தமக்கிடையே கட்டுப்பட்டுள்ளன. 

இமயமலை மற்றும் இந்திய மாக்கடல் போன்றன இந்தியாவின் பௌதீக எல்லைகளாக உள்ளன. இதேபோன்று இவையிரண்டும் தென்னாசியாவுக்கும் இதன் பிராந்தியத்திற்கும் எல்லைகளாக உள்ளன. இந்தியாவானது தென்னாசியாவின் மையமாக விளங்குகிறது. இந்தியாவின் உள்ளகப் பாதுகாப்பிற்கு எழும் அச்சுறுத்தலானது இந்திய மாக்கடல் பிராந்தியத்திற்கே அச்சுறுத்தலாக எழும் என்கின்ற நியாயத்தை இந்தியா கவனத்திற் கொள்ள வேண்டும். இதனால் இந்தியாவானது தனது உள்நாட்டில் மேற்கொள்கின்ற பாதுகாப்பு ஏற்பாடுகள் தென்னாசியாவின் பாதுகாப்பு ஏற்பாடுகளில் செல்வாக்குச் செலுத்துவது தவிர்க்க முடியாததாகும். 

இந்தியாவானது தனது பாதுகாப்பில் எவ்வித இடைவெளியும் இல்லை என்பதை உறுதிப்படுத்துவதற்காகவே தனது தென்னாசிய நாடுகளுடன் மிகச் சிறந்த அயல்நாட்டு கொள்கையைக் கடைப்பிடித்துவருகிறது. இந்தியாவானது தனது உறவுநிலையைத் தொடர்வதில் மூலோபாயக் கணிப்பீட்டைப் பயன்படுத்திவருகிறது. இதனால் இந்தியாவானது தனது பாதுகாப்பில் மிகத் தீவிர ஏற்பாட்டை மேற்கொண்டுள்ளது. பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள தீவிரவாதக் கிளர்ச்சிகள் மற்றும் இந்தியாவிற்குள்ளே அதிகரித்துள்ள பயங்கரவாத நடவடிக்கைகள் போன்றன இந்தியாவின் பாதுகாப்பிற்கு சவாலாக உள்ளன. இதனால் இந்தியாவானது தனது பாதுகாப்பைத் தானே மீளாய்வு செய்துகொள்ள வேண்டும். 

இந்தியாவனது தனக்கு எதிராக எழுந்துள்ள இராணுவ அச்சுறுத்தல்கள், இராணுவ ஊடுருவல்கள் மற்றும் ஏனைய நாடுகளின் இராணுவப் பலங்களுக்கு ஈடுகொடுக்க வேண்டியுள்ளது. இந்தியாவின் எல்லைகளில் போரை மேற்கொண்டு வரும் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் போன்றவற்றில் செயற்படும் பயங்கரவாதக் குழுக்கள் மூலம் அங்கு வாழும் மக்களுக்கு சமாதானத்தைக் கொண்டுவர முடியாது என்பதை நாம் அறிகிறோம். 

ஆப்கானிய மக்களைப் பாதுகாக்க வேண்டிய தேவை இந்தியாவுக்கு உண்டு. ஆப்கானுக்கு இந்தியாவின் உதவி தேவை. இதனால் இந்தியா ஒருபோதும் ஆப்கான் மக்களைக் கைவிடமாட்டாது. இதனால் இந்தியாவானது தொடர்ந்தும் ஆப்கானில் சுமுகமான நிலையைத் தோற்றுவிப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்கிறது. 

இதேபோன்று பாகிஸ்தானில் ஜனநாயக ஆட்சி சீர்குலைந்துள்ளது. இந்நிலையில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மோதல்கள், முரண்பாடுகள் போன்றன களையப்பட்டு இவ்விரு நாடுகளும் தாமாகவே தமது பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ள வேண்டும். மிகப் பெரிய அனைத்துலக அரங்கில் இந்தியாவானது பாகிஸ்தானுடன் நல்லுறவை ஏற்படுத்துவதற்கான நகர்வுகளை முன்னெடுக்க வேண்டும். 

இந்தியாவானது அமெரிக்காவுடன் நல்லுறவைப் பேணிவருகிறது. 2014ல் அமெரிக்காவும் இதன் கூட்டணிப் படைகளும் ஆப்கானிலிருந்து முற்றுமுழுதாக வெளியேறுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில் ஆப்கான் விவகாரம் தொடர்பில் இந்தியாவானது தனக்குச் சாதகமான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். இந்தியாவின் மூலோபாயக் கொள்கைத் திட்டமிடலாளர்கள் இதனைத் தமது கருத்திற் கொள்ள வேண்டிய தேவையுள்ளது. ஆப்கானில் நிலைகொண்டுள்ள தலிபான் தீவிரவாதிகள் தமது நடவடிக்கைகளை நிறுத்திக் கொள்வதற்கான எவ்வித அறிவிப்புக்களையும் மேற்கொள்ளவில்லை. ஆப்கானில் இந்தியா தனது தலையீடுகளை மேற்கொள்ளாவிட்டால், இது இந்தியாவின் பாதுகாப்பிற்கு பெரும் தலையிடியாக அமையும். 

2001லிருந்து இந்தியாவானது இவ்வாறானதொரு சூழலுக்கு முகங்கொடுத்து வருகிறது. ஆப்கானின் ஆட்சியை தலிபான்கள் கைப்பற்றிக் கொள்வார்கள் என்கின்ற நிலை உருவானால் கூட இந்தியாவானது தனது நடவடிக்கைகளிலிருந்து தளர்ந்து விடக்கூடாது. தொடர்ந்தும் அனைத்துலக மற்றும் பிராந்தியக் கூட்டணி நாடுகளின் உதவியுடனும் பலத்துடனும் ஆப்கானில் ஜனநாயக ஆட்சியை நிலைநிறுத்துவதில் இந்தியா தயக்கம் காண்பிக்கக் கூடாது. இதன்மூலம் ஆப்கானில் தேர்தல் மூலம் தெரிவு செய்யப்பட்ட ஜனநாயக அரசாங்கமானது தனது நாட்டில் செயற்படும் தீவிரவாதிகளுக்கு எதிராக யுத்தத்தை மேற்கொள்வதில் தளர்வடையக் கூடாது என்பதை இந்தியா நிச்சயப்படுத்திக் கொள்ள வேண்டும். 

இந்தியாவின் வடகிழக்கில் அமைந்துள்ள நாடுகள் பங்களாதேசின் ஊடாக இந்தியாவுடன் தொடர்புகளைப் பேணுவதால் இவை பல நலன்களை அடைந்துகொள்கின்றன. இது வடகிழக்கில் குறிப்பிடத்தக்க ஒரு அபிவிருத்தி ஏற்பட்டுள்ளது என்பதைச் சுட்டிநிற்கிறது. இந்திய மத்திய அரசாங்கத்தின் ஆதிக்க சக்தியாக இதன் வெளியுறவுக் கொள்கையே அமைந்துள்ளது. பங்களாதேசின் அனைத்து மாநிலங்களும் அதன் மத்திய அரசாங்கத்தின் கீழ் ஒன்றிணைந்து செயற்படுகின்ற நிலையை இந்திய மத்திய அரசாங்கம் தோற்றுவிக்க வேண்டும். இதன்மூலம் தேசிய நலனைத் தியாகம் செய்யாது மிக முக்கியமான மூலோபாயச் சமநிலையை இந்தியா தனது எல்லை நாடுகளில் தோற்றுவிக்க முடியும். 

இதேபோன்று நேபாளத்துடன் உறவைப் பேணவேண்டியது இந்தியாவுக்கு மிகமுக்கியமானதாகும். நேபாளமானது இந்தியாவின் ஆதரவுடன் தனது நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான மூலோபாயத்தை இந்தியா வகுத்துக் கொள்ள வேண்டும். நேபாளம், பங்களாதேஸ் போன்ற அயல்நாடுகளின் தேவைகளைக் கவனத்திற் கொண்டு அவற்றை இந்தியா பெருந்தன்மையுடன் வழங்குவதன் மூலம் பிராந்தியத்தில் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் அதேவேளையில், இந்தியாவின் தேசிய பாதுகாப்பையும் இது வலுப்படுத்தும். 

தென்கிழக்காசியாவின் பிரதான நுழைவாயிலாக மியான்மார் உள்ளது. இதன் வடக்குப் பகுதியானது இந்திய-சீன-மியான்மார் முக்கோணத் தரைத்தோற்றத்துடன் தொடர்புபட்டதாகும். மியான்மாரில் எழுந்துள்ள தீவிரவாதக் கிளர்ச்சிகளை முறியடிப்பதற்கு இந்தியாவால் வழங்கப்படும் பாதுகாப்பு ஒத்துழைப்பானது மிகவும் முக்கியமானதாகும். இதனால் மியான்மாருடன் மிகவும் நெருக்கமான உறவை இந்தியா பேணிக்கொள்ள வேண்டும். 

சிறிலங்காவைப் பொறுத்தளவில், இந்தியா மட்டுமே இதன் அயல்நாடாகும். சிறிலங்காவில் முப்பது ஆண்டுகளாகத் தொடரப்பட்ட உள்நாட்டு யுத்தமானது அங்கு வாழும் பல சமூகங்களின் வாழ்வைச் சின்னாபின்னமாக்கியுள்ளது. ஆனால் வடக்கிழக்கில் வாழும் தமிழ் மக்களை விட வேறெந்த சமூகத்தவரும் மிகமோசமான பாதிப்பைச் சந்திக்கவில்லை. ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டதானது இந்தியாவுக்கு மிகப் பெரும் துன்பியல் சம்பவமாக உள்ளது. 

சிறிலங்காவில் நீண்ட காலமாகத் தொடரப்பட்ட உள்நாட்டு யுத்தமானது தற்போது முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதானது சிறிலங்காவில் மீளிணக்கப்பாட்டை ஏற்படுத்துவதற்கும் போரின் காயங்களை ஆற்றுவதற்கும் கிடைத்துள்ள மிகவும் அற்புதமான வாய்ப்பாகும். இதன்மூலம் சிறிலங்காவில் வாழும் சமூகங்கங்களுக்கிடையில் ஏற்பட்டுள்ள கசப்புக்கள் தீர்க்கப்பட முடியும். சிறிலங்காவில் வாழும் தமிழ் மக்கள் சுய மரியாதையுடன், சம உரிமை வழங்கப்பட்ட மதிக்கப்பட வேண்டும். இதற்கு இந்தியாவானது தனது உதவியை வழங்க வேண்டும். 

இந்தியா, சிறிலங்கா மற்றும் மாலைதீவு போன்றன கடற்பாதுகாப்பு விவகாரங்கள் தொடர்பில் தமக்கிடையே முத்தரப்பு உடன்படிக்கையைக் கொண்டுள்ளன. இதன்மூலம் எமது பிராந்தியத்தில் பயனுள்ள வினைத்திறனான அபிவிருத்தியை மேற்கொண்டு பிராந்தியப் பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். 

சீனா எம்முடைய மிகப் பெரிய அயல்நாடாக உள்ளது. சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவுநிலையில் விரிசல் ஏற்பட்டாலும் கூட அதனை சீர்செய்து கொள்ள வேண்டும். இதற்கான சவால்களை இந்தியா ஏற்றுக்கொள்ள வேண்டும். சீனா என்கின்ற காரணி எமது பாதுகாப்பு ஏற்பாட்டில் செல்வாக்குச் செலுத்துகின்றது. சீனாவின் பிராந்தியச் செல்வாக்கு மற்றும் இராணுவ ஆற்றல்கள் போன்றன இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையில் முரண்பாட்டைத் தோற்றுவிக்கின்றன. கடந்த 50 ஆண்டுகளாக பிராந்திய எல்லைப் பிரச்சினை தொடர்ந்தாலும் கூட, இந்தியாவானது எல்லாவற்றையும் சமாளித்து சீனாவுடன் நல்லுறவைப் பேணவேண்டும். 

பூகோள அரசியலைப் பயன்படுத்தி அதனைச் சரியான முறையில் கையாள்வதன் மூலம் எல்லா நாடுகளுடனும் குறிப்பாக சீனா போன்ற செல்வாக்கு மிக்க நாடுகளுடன் சுமுகமான உறவை இந்தியா பேணிக் கொள்ள முடியும். இதுவே தற்போதைய தேவையாகவும் உள்ளது. 

பயங்கரவாதத்திற்கு எதிரான போரை முன்னெடுப்பதில் இந்தியாவுக்கு மேற்கு ஆசியா மிகவும் முக்கியமானதாகும். மேற்கு ஆசியாவில் வாழும் 6.5 மில்லியன் வரையான இந்தியர்களின் நலன்கருதி அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக இந்தியாவானது மேற்காசியாவில் பயங்கரவாதத்தைத் தோற்கடித்து கடற்கொள்ளையர்களை முற்றாக ஒழிக்க வேண்டிய கடப்பாட்டைக் கொண்டுள்ளது. பாலஸ்தீனிய விவகாரமோ அல்லது ஈரானின் அணுவாயுதப் பிரச்சினையோ எதுவானாலும் இந்தியா மிகவும் விழிப்புடனும் ஆர்வத்துடனும் தலையீடு செய்து பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ளவேண்டும். 

இவ்வாறான அனைத்துப் பிரச்சினைகளையும் இந்தியா முகங்கொடுத்து மிகவும் உறுதியான, தெளிவான மூலோபாயக் கணிப்பீட்டை கடைப்பிடித்து, பாதுகாப்பு நலன்களை உறுதிப்படுத்திக் கொள்வதற்கான நகர்வுகளை இந்தியா மேற்கொள்ள வேண்டும். நீண்ட காலமாக நாடுகளில் நீடித்திருக்கும் பிரச்சினைகளைத் தீர்வுக்குக் கொண்டுவருவதற்கான கலந்துரையாடல்கள் மற்றும் சமரசங்களில் ஈடுபடுவதற்கேற்ற வெளியுறவுக் கொள்கையை இந்தியா வகுத்துக் கொள்ள வேண்டும். 

தற்போதைய பிரச்சினைகளையும் அதற்கான சாத்தியங்களையும் தெளிவாக விளங்கிக் கொண்டு அனைத்துலக அரங்கில் ஒரு சுமூகமான சூழலை ஏற்படுத்துவதற்கான வழிவகைகளை இந்தியா ஆராய்ந்து செயற்பட வேண்டும். 

[The writer is a former Foreign Secretary. These are edited excerpts from the 22nd Sree Chithira Thirunal Memorial Lecture in Thiruvananthapuram on December 14]

 

 

http://www.puthinappalakai.com/view.php?20131228109688

  • கருத்துக்கள உறவுகள்

பதவிகளில் இருக்கும் போது

சலுகைகளுக்காக ஆமாப்போட்டு  வாய் மூடி  இருக்கவேண்டியது

பதவி  முடிந்ததும்

வாந்தி  எடுக்கவேண்டியது

இந்தியாவானது தென்னாசியாவின் மையமாக விளங்குகிறது. இந்தியர்களின் மலசல கூடங்களும் தெருவின் மையப்பகுதியிலேயே திறந்த வெளியில் அமைந்துள்ளது. இந்தியாவின் உள்ளக அசுத்ததால்  எழும் அச்சுறுத்தலானது இந்திய மாக்கடல் பிராந்தியத்தையே அசுத்தமாக்கும்  என்கின்ற நியாயத்தை இந்தியா கவனத்திற் கொள்ள வேண்டும்.நோய்கிருமிகள் அண்டைய நாடுகளுக்கு பரவாமல் இந்தியா எதிர்காலத்தில் ஆவன செய்ய்யவேண்டும்.   ஆகவே கழிவறைகளை அமைப்பதில் இந்திய கவனத்தில் கொள்ளுவதுடன் அதை பாவிப்பதற்கும்இந்திய மேல்தட்டு  பண்டாரங்களுக்கும் கற்று கொடுக்க வேண்டும். அத்துடன் ஐரோப்பிய நாடுகளுக்கு வரும் போது ஹொட்டல்களை அசுத்தபடுத்தாமல் மனிதர்களாக வாழவும் இந்திய மேற்தட்டு வர்க்கத்திரனருக்கு விளக்கம் அளிக்க வேண்டும். மேல்தட்டு மக்கள் என்று தம்மை தாமே அழைத்துக்கொண்டு இந்தியாவில் இருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுலா வந்து இங்கு உள்ள சாதாரண மக்களை விட கேவலமாக நடந்து கொள்ளாமல்  இருக்க இந்திய வெளியுறவுத்துறை எதிர்காலத்தில் ஆவன செய்யும்.

Edited by tulpen

  • கருத்துக்கள உறவுகள்

//ஆப்கானிய மக்களைப் பாதுகாக்க வேண்டிய தேவை இந்தியாவுக்கு உண்டு. ஆப்கானுக்கு இந்தியாவின் உதவி தேவை. இதனால் இந்தியா ஒருபோதும் ஆப்கான் மக்களைக் கைவிடமாட்டாது. இதனால் இந்தியாவானது தொடர்ந்தும் ஆப்கானில் சுமுகமான நிலையைத் தோற்றுவிப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்கிறது. //

 

இந்தியாவின் அயலுறவுக் கொள்கையால்.... இந்தியாவே நாறிப் போய் கிடக்குது.
முதலில்... அயல் மாநிலங்களுக்கு இடையில் உள்ள.. சர்ச்சையை தீர்க்கப் பாருங்கள்.

அரசியல் அறிவு, ஒரு கொஞ்சமேனும் இல்லாத... முண்டங்கள்.
போய்... சினிமாவையும், கிரிக்கெட்டையும் பாருங்கள்.
கூரை ஏறி... கோழி பிடிக்காதவன், வான மேறி... வைகுண்டம் போவதைப் பற்றி, பிறகு யோசிக்கலாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.