Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒட்டுசுட்டானில் சுடலையை ஆக்கிரமித்துள்ள இராணுவத்தினர்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
oddusuddan-seithy-2-20131228-150.jpg

ஒட்டுசுட்டான் மக்கள் தலைமுறை தலைமுறையாக பயன்படுத்திவரும் வெடுக்குநாறி சுடலை அமைந்த பகுதியில் தற்போது ராணுவத்தினர் முகாம் அமைத்துள்ளதால், அப்பகுதி மக்கள் தமது முக்கிய கடமையை ஆற்றுவதில் பெரும் இடையூறை எதிர்நோக்கியுள்ளனர். அப்பகுதி மக்களின் தகவலையடுத்து வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் நேரில் சென்று இவ்விடயத்தை உறுதிப்படுத்தினார். இது குறித்து அவர் கருத்து தெரிவிக்கையில், ஒட்டுசுட்டானில், குறித்த வெடுக்குநாறி சுடலையை அப்பகுதி மக்கள் நீண்டகாலமாக பயன்படுத்தி வருகின்றனர். இறுதிப்போரின் பின்னர் மக்கள் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட போது அப்பகுதியில் ராணுவத்தினர் முகாம் அமைக்கப்பட்டுள்ளதை அவதானித்துள்ளனர்.

  

அதன் பின் தாம் இது குறித்து பலரிடம் அறிவித்தும், இது வரை ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று என்னிடம் தெரிவித்தனர். தற்போதைய நிலையில் தமது சம்பிரதாயக் கடமைகளை ஆற்றுவதற்காக சுமார் எட்டு கிலோமீற்றர் தூரத்திலுள்ள பேராறு எனுமிடத்திற்கு செல்ல வேண்டியுள்ளதையும் கவலையுடன் எடுத்துக்கூறினர்.

மக்களின் அடிப்படை சம்பிரதாயக்கடமைகளில் ஒன்றை நிறைவேற்ற முடியாமல் அவர்கள் தவிக்கும் நிலை வருத்தமளிக்கிறது. இந்த இடத்தை விடுவிப்பதற்கு மாவட்ட, பிரதேச ரீதியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்வர வேண்டும். இவ்விடயத்தை உரியவர்களின் கவனத்திற்கு கொண்டு வருவதாக மக்களிடம் தெரிவித்தேன் என துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.

 

oddusuddan_sudalai_seithy-20131228.jpg

 

 

oddusuddan-seithy-1-20131228-453.jpg

 

 

oddusuddan-seithy-2-20131228-453.jpg

 

 

oddusuddan-seithy-3-20131228-453.jpg

 

http://www.seithy.com/breifNews.php?newsID=100143&category=TamilNews&language=tamil

இரகசிய கொலைகளை தடயமில்லாமல் எரிக்க இந்த சுடலை முகாம் உதவும்.

  • கருத்துக்கள உறவுகள்

சிறீலங்காவிலிருந்து எந்தச் செய்தி வந்தாலும் அதனை உள்வாங்கும் எல்லோரும் இன்று இலவங்காயாகவே மாறி உள்ளனர். தமிழர்கள் காத்திருப்பதில் எந்தவித பிரயோசனமும் இல்லை. :( 

இலங்கையில் நடாத்தப்படும் போராட்டங்கள் மூலம் எதுவும் நடக்க போவதில்லை! மார்ச் மாத ஐநா கூட்டத்தொடருக்கு வலுச்சேர்க்கும் வகையில் தரவுகள் கொண்டு போய் சேர்க்கணும்! வெளிநாட்டு பிரமுகர்களின் வருகையை த.தே.கூட்டமைப்பும் த.தே.ம.முன்னணியும் வினைத்திறனாக பயன்படுத்திக் கொள்ளணும்!

சிறீலங்காவிலிருந்து எந்தச் செய்தி வந்தாலும் அதனை உள்வாங்கும் எல்லோரும் இன்று இலவங்காயாகவே மாறி உள்ளனர். தமிழர்கள் காத்திருப்பதில் எந்தவித பிரயோசனமும் இல்லை. :(

புலியை காத்திருக்க, விலக வற்புறுத்தியவர்கள் தான் போராட்டத்தை முன்னெடுக்கவேண்டும்.

எங்களுக்கு தெரிந்தவரை கனடாவின் சிறி லங்கா பெரிய புள்ளி அர்ஜுன் அண்ணா தான்.

அவர் கேம்பிரியில் அரைசியல் பால் கறந்து புலிக்கு ஊட்டியவர்.

எல்லாம் தெரிந்தவர் ஆனால் ஒன்றுமே செய்கிறார் இல்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.