Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கார் சாம்பியன் மைக்கேல் ஷூமேக்கர் பனிச்சறுக்கு விபத்தில் படுகாயம்

Featured Replies

131229224406_sp_micheal_schumacher_464x2

 

உலகக் கார் பந்தய சாம்பியன் பட்டத்தை ஏழு முறை வென்றவரான, ஜெர்மன் வீரர், மைக்கேல் ஷுமேக்கர், பிரெஞ்சு ஆல்ப்ஸ் மலைப்பகுதியில் ஏற்பட்ட பனிச்சறுக்கு விளையாட்டு விபத்தில் தலையில் அடிபட்டு, ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

கோமா நிலையில் மருத்துவமனைக்குக் கொண்டுவரப்பட்ட ஷூமேக்கருக்கு உடனடியாக நரம்பியல் அறுவை சிகிச்சை தேவைப்பட்டது என்று க்ரெனோபிள் மருத்துவமனையின் மருத்துவர்கள் அறிக்கை ஒன்றில் கூறினர்.

மைக்கேல் ஷூமேக்கரின் மிக நெருங்கிய நண்பரும், பிரான்ஸின் முன்னோடி விபத்து சிகிச்சை வல்லுநருமான மருத்துவர்,பேராசிரியர் ஜெரார்ட் செய்லானும் மருத்துவமனைக்கு விமானம் மூலம் கொண்டு செல்லப்பட்டிருக்கிறார்.

ஷூமேக்கர், மெரிபெல் என்ற இடத்தில் பனிச்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டிருந்த போது, பாறை ஒன்றின் மீது விழுந்து தலையில் அடிபட்டது என்று செய்திகள் கூறுகின்றன. ஆனாலும் அவர் அப்போது ஹெல்மெட் அணிந்திருந்ததாகவும் கூறப்படுகிறது.

உடனடியாக அவர் ஹெலிகாப்டர் மூலம் மருத்துவமனைக்கு அப்புறப்படுத்தப்பட்டார்.

44 வயதான ஷுமேக்கர் ஏழு முறை பார்முலா-1 கார் சாம்பியன்ஷிப் போட்டிகளில் உலக சாம்பியன் பட்டத்தை வென்றிருக்கிறார்.

அவர் 2012ம் ஆண்டில் , இரண்டாவது முறையாக, பார்முலா-1 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

அவருடைய 19 ஆண்டு கார் பந்தய விளையாட்டு வாழ்க்கையில், ஷூமேக்கர் 91 பந்தய வெற்றிகளை ஈட்டியிருக்கிறார்.

1999ல் பிரிட்டிஷ் கிராண்ட் பிரி மோட்டார் பந்தயப் போட்டிகளின்போது, ஏற்பட்ட விபத்தொன்றில், ஷூமேக்கரின் கால் முறிந்தது.

2006ல் முதலில் ஓய்வு பெற்ற இந்த ஜெர்மன் நாட்டு வீரர், மூன்றாண்டுகளுக்குப் பின்னர், ஸ்பெயினில் நடந்த மோட்டார் சைக்கிள் விபத்தொன்றில், கழுத்து மற்றும் முதுகுத்தண்டு காயமடைந்து, பின்னர் நலமடைந்து , 2010ல் நடந்த பார்முலா-1 பந்தயத்தில் கலந்து கொண்டார்.

 
 

 

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு வீரர் ! நலமுடன் வீடு திரும்ப வேண்டும் !!

 

கரோட்டத்தில்  சறுக்கிக் கொண்டு போவதில் கில்லாடி ,

பனிச் சறுக்கில்  வழுக்கிட்டார் தள்ளாடி !!

போர்முலா 1. இன நாயகனே நீ நலமும் வீடு திரும்ப வேண்டும்.

ஆசிய நாடுகளை சூனாமி தாக்கியபொழுது, ஜெர்மன் ARD தொலைக்காட்சி நடத்திய நிதி சேகரிப்பு நிகழ்ச்சிக்கு 24 மில்லியன் ஓய்ரோக்களை வழங்கி உதவிய நல் மனம் கொண்ட மனிதர். இதேவேளை ஐக்கியநாடுகள் சபை சூனாமி மீள்கட்டுமான அபிவிருத்தி மாநாடு கூட்டி உலக நாடுகளை நிதி உதவி கோரியபோது, அனைத்து எண்ணெய்வள அரபு நாடுகள் கூட்டாக வெறும் 10 மில்லியன் ஓய்ரோக்களை உதவியாக வழங்கின.

 

நலம்பெறப் பிரார்த்தனைகள்!!

  • கருத்துக்கள உறவுகள்
ஜெர்மன் வீரர், மைக்கேல் ஷுமேக்கர், நலமுடன் வீடு திரும்ப வேண்டிப் பிரார்த்திக்கின்றேன். அவர் ஒரு உலகசாதனை படைத்த வீரன் என்பதற்கப்பால் ஒரு மனிதநேயம் மிகுந்த மனிதராகவே அவரை ஊடகங்களும் வெளிப்படுத்திச் செயல்களையும் காணத்தந்தன.  
 

மிஹ்ஹேல் ஷூமாஹரின் உடல் நிலையில். சற்று முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக கடைசியாக கிடைத்த செய்திகள். தெரிவிக்கின்றன.

Edited by tulpen

  • கருத்துக்கள உறவுகள்

ஜெர்மன் வீரர், மைக்கேல் ஷுமேக்கர், நலமுடன் வீடு திரும்ப வேண்டிப் பிரார்த்திக்கின்றேன்.
அவர் ஒரு உலகசாதனை படைத்த வீரன் என்பதற்கப்பால் ஒரு மனிதநேயம் மிகுந்த மனிதராகவே அவரை ஊடகங்களும் வெளிப்படுத்திச் செயல்களையும் காணத்தந்தன.  
 

மிஹ்ஹேல் ஷூமாஹரின் உடல் நிலையில். சற்று முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக கடைசியாக கிடைத்த செய்திகள். தெரிவிக்கின்றன.

 

நன்றி  தகவலுக்கு

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டாவது சத்திரசிகிச்சையின் பின்பு அவர் ஆபத்தானகட்டத்தைத் தாண்டியுள்ளதாக செய்தி தெரிவித்துள்ளது.

Edited by Paanch

  • தொடங்கியவர்

ஷூமேக்கர் உடல் நிலையில் சிறிது முன்னேற்றம்.

ஜெர்மனியைச் சேர்ந்த பிரபல மோட்டார் கார் பந்தய வீரர் மைக்கேல் ஷூமேக்கருக்கு நேற்று திங்கட்கிழமை நள்ளிரவு நடைபெற்ற மேலும் ஒரு அறுவை சிகிச்சைக்குப் பிறகு அவரது உடல்நிலையில் சிறிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்று அவருக்கு சிகிச்சையளித்துவரும் மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

அவரது மூளையிலுள்ள அழுத்தத்தை குறைப்பதற்காக, இந்த அறுவை சிகிச்சை செய்யப்பட்ட பிறகு எடுக்கப்பட்ட ஒரு ஸ்கேனிலேயே, இந்த சிறிய முன்னேற்றம் காணப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

பிரான்ஸின் க்ரெநோபிலிலுள்ள மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளித்துவரும் வைத்தியர்கள் குழு, அவரது உடல் நிலை முன்னர் இருந்ததைவிட இப்போது மேம்பட்ட அளவுக்கு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது என்றாலும் அவர் அபாய கட்டத்தை இன்னும் தாண்டவில்லை என்று கூறியுள்ளனர்.

131231080429_ski_schumacher_304x171_ap_n

இந்த அறுவை சிகிச்சை அவரது குடுபத்தாரிடம் கலந்தாலோசிக்கப்பட்ட பிறகே நடைபெற்றுள்ளது. குடும்ப உறுப்பினர்கள் தொடர்ந்தும் அவருக்கு அருகிலேயே உள்ளனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை பிரெஞ்சு ஆல்ப்ஸ் மலைச் சிகரத்தில் பனிச்சறுக்கு விளையாட்டில் அவர் ஈடுபட்டிருந்தபோது, பாதையிலிருந்து விலகிச் சென்று வழுக்கி விழுந்த போது, ஒரு பாறையில் மோதி அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

இதையடுத்து அவர் உடல்நிலை முன்னேறுவதற்கு உதவியாக மருத்துவ ரீதியாக ஆழ்நிலை உறக்கத்துக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.

 

http://www.bbc.co.uk/tamil/sport/2013/12/131231_schumacher_improves.shtml

 

வேகம்-விவேகம் கொண்டவர் மைக்கேல் ஷுமேக்கர்

ஒலி வடிவில்

 

http://www.bbc.co.uk/tamil/sport/2013/12/131230_schumacher_analysis.shtml

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.