Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மனித உரிமை மீறல்கள் குறித்து ராதிகாவிற்கு தெளிவுபடுத்தப்பட்டது - அனந்தி சசிதரன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
ananthy-seithy-20131002.jpg

மனித உரிமை பிரச்சினைகள் உட்பட வடக்கின் நிலைமைகள் குறித்து கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபேசனிடம் தெளிவுப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கையில் பிறந்த ராதிகா கனடாவின் ஸ்கார்பரே ரூஜ் ரிவர் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராவார். வடக்கில் இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களை சந்தித்த அவர் அங்குள்ள தற்போதைய நிலைமைகள் குறித்து கேட்டறிந்து கொண்டார். இந்த சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரனும் கலந்து கொண்டார். இது குறித்து கருத்து வெளியிட்ட அனந்தி சசிதரன், வடக்கில் பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சினை, மனித உரிமை மீறல்கள் குறித்து கனேடிய நாடாளுமன்ற உறுப்பினருக்கு தெளிவுப்படுத்தப்பட்டது.

  

அத்துடன் வடக்கில் காணாமல்போனவர்கள் தொடர்பான விடயங்கள் தொடர்பாகவும் விளக்கப்பட்டது. வடக்கில் அவர் திரட்டிய தகவல்கள் தொடர்பில் கனடா திரும்பிய பின்னர் என்ன செய்ய போகிறார் என்ற உத்தரவாதங்களை ராதிகா சிற்சபேசன் வழங்கவில்லை என்றார்.

 

http://www.seithy.com/breifNews.php?newsID=100302&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

ஏனம்மா அவசரப் படுறீங்க...அவ வந்தா கேட்டா..பார்த்தா ...அண்டை நாடான சொறிலங்லாவில் யாரையும் பார்த்தாவா பேசினாவா......அதைவிட கனாடாவில் உள்ள சொறிலங்கா...கூட்டளிகள் யாரும் கூட வந்தார்களா...என்பதையும் அவதானியுங்கள்...அப்புறம் அம்மணி இங்கை கொடுக்கிற அறிக்கையின் ...தராதரத்தை பார்த்து புரிந்து கொள்வோம்......அம்மணி இன்றுவரை..னம்மவர் பக்கம்தான்.....நாடு கடந்தால் என்னமும் நடக்கலாம்தானே...

சுற்றுலா நுழைவிசைவில் வந்த ராதிகாவை நாடுகடத்த சிறிலங்கா தயக்கம்

 

rathika-jaffna-visit.jpg
[ செவ்வாய்க்கிழமை, 31 டிசெம்பர் 2013, 01:24 GMT ] [ கொழும்புச் செய்தியாளர் ]
சுற்றுலா நுழைவிசைவில் சிறிலங்கா வந்துள்ள கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபேசனை நாடுகடத்தும் நடவடிக்கைகள், சிறிலங்காவுக்கே பாதிப்பை ஏற்படுத்தும் என்று சிறிலங்கா அதிகாரிகள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

சுற்றுலா நுழைவிசைவில் சிறிலங்கா வந்து, அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும், செய்தி சேகரிப்பில் ஈடுபட்டதாகவும் கூறி, நியூசிலாந்தின் கிறீன் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவர், அவுஸ்ரேலியாவை சேர்ந்த அனைத்துலக ஊடக அமைப்பு பிரதிநிதிகள், கவிஞர் ஜெயபாலன், தமிழ்நாட்டைச் சேர்ந்த ஊடகவியலாளர் மகா தமிழ் பிரபாகரன் போன்ற பலர் அண்மையில் சிறிலங்கா அரசாங்கத்தினால் கட்டாயமாக திருப்பி அனுப்பப்பட்டனர்.

இந்தநிலையில் கடந்த 28ம் நாள் சுற்றுலா நுழைவிசைவில் கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபேசன் சிறிலங்கா வந்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் ரில்கோ விடுதியில் தங்கியுள்ள அவர், அங்கு பல்வேறு தரப்பினரையும் சந்தித்துப் பேசி வருகிறார்.

அவரது நடவடிக்கைகளை சிறிலங்கா புலனாய்வுத் துறையினர் உன்னிப்பாக அவதானித்து வருகின்ற போதிலும், சுற்றுலா நுழைவிசைவில் வந்து அரசியல் நவடிக்கைகளில் ஈடுபடுவதாக குற்றம்சாட்டி நாட்டைவிட்டு அவரை வெளியேற்ற சிறிலங்கா அரசாங்கம் தயக்கம் காட்டுவதாக தெரியவருகிறது.

அவ்வாறு அவர் நாடுகடத்தப்படுவதை  , புலம்பெயர்  தமிழ் சமூகத்தினர் விரும்புவதாகவும், அதனை சிறிலங்காவுக்கு எதிரான பரப்புரைக்கு அவர்கள் பயன்படுத்திக் கொள்வர் என்றும் சிறிலங்கா அரசாங்க அதிகாரிகள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

அதேவேளை, ராதிகா சிற்சபேசன் போன்று, புலம்பெயர் தமிழர்களுக்கு நெருக்கமான வெளிநாட்டு அரசியல்வாதிகள், மற்றும் அரசாங்கப் பிரதிநிதிகள் ஜெனிவா கூட்டத்தொடருக்கு முன்னர் வடக்கிற்கு பயணம் மேற்கொள்ளலாம் என்றும் சிறிலங்கா அரசாங்கம் எதிர்பார்க்கிறது.

 

http://www.puthinappalakai.com/view.php?20131231109701

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.