Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை போர்குற்ற ஆதாரங்களை ஏற்றுக்கொள்ளும் வரை தொடர்ந்து வெளியிடுவேன்: - கெலம் மக்ரே அறிவிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Callum_Macrae_150-seithy.jpg

எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனிவாவில் நடைபெறும் மனித உரிமை மாநாட்டில் போர்க்குற்ற ஆதாரங்களை வெளியிடுவேன் என வழங்கிய செவ்வியில் சனல் 4இன் ஊடகவியலாளர் கெலும் மக்ரே தெரிவித்துள்ளார். மற்றும் இலங்கையின் கடந்த கால நிகழ் கால இலங்கை அரசாங்கம் நியாயமான விசாரணைகளை நடத்துவதற்கு தயாரான நிலையில் இல்லை விசாரணை நடைபெற்றால் அங்கு நடந்த போர்குற்றம் தெரியவந்து விடும் என அஞ்சுகின்றது இலங்கை அரசாங்கம் எனவும் அத்தோடு பல திடுக்கிடும் தகவல்களை தெரிவித்துள்ளார்.

 

http://www.seithy.com/breifNews.php?newsID=100402&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

கட்டமைக்கப்பட்ட இனவழிப்புக்கு பக்கச் சார்பற்ற சர்வதேச விசாரணை அவசியம் !!!

யாழ். ஊடக அமையத்தில் இடம்பெற்ற தமிழ்த் தேசிய மக்கள் முண்ணணியின் ஊடகவியியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு பேசிய கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள்.. 

இலங்கையில் இடம்பெற்று வருகின்ற இன அழிப்பு நடவடிக்கைகளுக்கு உண்மைக்கும், நல்லிணக்கத்திற்குமான ஆணைக்குழுவின் பொறிமுறை சாத்தியமற்றது. இங்கு இடம்பெற்றுவருகின்ற இன அழிப்பிற்கு பக்கச்சார்பற்ற சர்வதேச விசாரணையே அவசியம்.

இன அழிப்பிற்கு உண்மைக்கும், நல்லிணக்கத்திற்மான பொறிமுறை பொருத்தப்பாடற்றது. இன அழிப்பு நடைபெற்றுள்ள நிலையில் உண்மைக்கும் நல்லிணக்கத்திற்குமான ஆணைக்குழுவினை (TRC) ஏற்றுக்கொள்ளமுடியாது. இதனை இங்குள்ள தமிழ்க் கட்சிகள் ஏற்றுக் கொள்ளுமாயின், ஒட்டுமொத்த தமிழ் மக்களுக்கும் செய்யும் துரோகமாகவே அமையும். 

இங்கு போர் முடிவடைந்து நான்கு வருடங்கள் கடந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டு வருகின்ற நிலையிலும், தமிழ்த் தேசியத்தை அழிக்கும் நடவடிக்கைகள் தான் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இங்கு ஜனநாயகமும் இல்லாத நிலையில், அராஜக இராணுவ ஆட்சியே நடக்கின்றது.

இந்நிலையில், இங்கு இடம்பெற்ற இன அழிப்பு நடவடிக்கைகளுக்கு உண்மைக்கும், நல்லிணக்கத்திற்குமான ஆணைக்குழு பொறிமுறை கொண்டு வருவதற்குரிய நடவடிக்கைகள் தென்னாபிரிக்கா அரசின் ஆதரவுடன் மேற்கொளப்பட்டு வருகின்றது. ஆனால், அவ்வாறான பொறிமுறை கொண்டு வருவதாயின், இன அழிப்பிற்கு ஒருபோதும் சாத்தியப்பாடற்றது என்றும், அதனால் அதனை அடியோடு நிராகரிக்கின்ற அதே வேளையில், தமிழ்த் தரப்பு சார்பாக இதனை ஏற்றுக்கொள்கின்றவர்கள் எவராயினும், ஒட்டுமொத்த தமிழ் மக்களுக்கும் செய்கின்ற மாபெரும் துரோகம்.

இங்கு இடம்பெற்றது இன அழிப்பு என்றே நாம் தெரிவித்து வருகின்ற நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் அவ்வாறில்லை என தெரிவித்து வருகின்றனர்.

இவ்வாறு இங்கு இன அழிப்பு நடைபெறவில்லை என அரசிற்கு வக்காலத்து வாங்குகின்ற தரப்பினர்கள் யாருக்கு பாதிப்பை ஏற்படுத்துமென இவ்வாறு செயற்படுவதாகவும், யாருடைய நிகழ்ச்சி நிரலில் செய்றபடுகின்றனர்?

ஆகவே, இந்த விடயத்தில் மக்கள் தெளிவானதொரு நிலையை மண்ணிலும், புலத்திலுமுள்ளவர்கள் எடுக்க வேண்டும். அதாவது, வெற்றுக் கோசங்களுக்கு எடுபடாமல் சிறந்ததொரு தீர்மானத்தை எடுக்க வேண்டும்.

இந்தச் சந்திப்பின் போது கட்சியன் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் மற்றும் கட்சியின் இளைஞரணித் தலைவர் மணிவண்ணன் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.

01.01.2014

1477800_250308815132136_1491041025_n.jpg
 
 

 

https://www.facebook.com/

எதுக்கும் எங்கட புலம்பெயர் சிறி லண்கன்சிடம் வீசா எடுத்து செல்லுங்கள்.

அவை தான் இங்க கடத்தப்பட்டாலும் வீசா விதி முறை ஆராய்ச்சி செய்யிறவை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.