Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விசேட பிரமுகர்களின் மேடை சரிந்ததில் பலருக்கு காயம்

Featured Replies

_DSC0978.jpg
கொழும்பு ஹில்டன் ஐந்து நட்சத்திர ஹோட்டலில் விசேட பிரமுகர்களின் மேடை சரிந்து விழுந்ததுள்ளமையினால் பலர் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவத்தினால் ஹோட்டல் வளாகத்தில் எல்லா இடங்களிலும் இரத்தம் சிந்திக்கிடந்தது.

நேற்றிரவு நடத்தப்பட்ட புதுவருட விருந்துபசாரத்தின் போதே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது. 

ஜனாதிபதியின் மகனும் இன்னும் பல முக்கியஸ்தர்களும் அமர்ந்திருந்த மேடையே இவ்வாறு பொறிந்து வீழ்ந்துள்ளது.

இதனால் கேளிக்கைகளில் ஈடுபட்டிருந்த பலர் காயமடைந்தனர். இந்த  மேடையில் சுமார் 200 பேர் வரையிலும் இருந்ததாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 'முழு மேடையும் பொறிந்து விழுந்ததனால் எல்லா இடமும் இரத்தம் சிந்திக்கிடந்தது. நாம் அம்புலன்ஸ் இல்லாத நிலையில் காயப்பட்டவர்களை எமது வாகனத்தில் அவசரமாக ஏற்றிச்சென்றோம்' என சம்பவத்தை நேரில் கண்ட ஒருவர் தெரிவித்தார்.

இந்த இடம் கேளிக்கை விரும்பிகளுக்கு மிகவும் விருப்பமான இடமாக இருந்தது. எனினும் ,இந்த  சம்பவம் பற்றி கருத்துக்கூற ஹில்டன் மறுத்துவிட்டது.

இந்த சம்பவத்துக்கு நாம் பொறுப்பேற்றுள்ளோம். மேடை அமைப்பு வேலை, ஒப்பந்த அடிப்படையில் வேறு ஒரு தரப்பிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தாலும் நாமே இதற்கு பொறுப்பேற்கின்றோம் என இந்த நிகழ்வின் ஒழுங்கமைப்புக்கு பொறுப்பான பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

விருந்துபசாரத்தில் கலந்துகொள்வதற்காக சென்ற பலரும் ஹில்டன் ஹோட்டலையும் விருந்து ஏற்பாட்டாளர் கன்ரலோப் பிளே கிறவுண்டையும் குற்றங் கூறினர்.

' காயப்பட்டவர்களுக்கு உதவுவதை விடவும் உடைக்கப்படாத மதுபான போத்தல்களை சேகரிப்பதே அவர்களுக்கு முக்கியமானதாக இருந்தது' என இந்த நிகழ்வுக்கு பொறுப்பானவர்களில் ஒருவர் தனது முகநூலில் தெரிவித்துள்ளார்.

ஏற்பாட்டாளர்கள் காயப்பட்டவர்களை கவனிக்கவில்லை. பாதிக்கப்பட்டவர்கள் வருந்திக்கொண்டிருந்த போது அவர்கள், கேளிக்கையை தொடர்வதிலேயே அக்கறையாக இருந்தனர் என இன்னொருவர் கூறியிருந்தார்.

எங்கும் இரத்தம் காணப்பட்டது. மக்கள் உதவி கேட்டு கதறினர். எனது நண்பிக்கு கணுக்கால் உடைந்துவிட்டது. இன்னொருவருக்கு உடலில் எரிகாயம் காணப்பட்டது.

கை,கால்,நெஞ்செலும்பு உடைந்தவர்களாலும் கண்ணாடி வெட்டுக்காயங்களுடன் காணப்பட்டவர்களினாலும் நவலோக்க வைத்தியசாலை நிரம்பி வழிந்தது  என முகப்புத்தகத்தில் கூறப்பட்டிருந்தது.
_DSC0979.jpg
_DSC0989.jpg
_DSC0991.jpg
 
  • கருத்துக்கள உறவுகள்

Namal.jpg

கொழும்பில் ஹில்டன் விடுதியில் நேற்று நள்ளிரவு முக்கிய பிரமுகர்கள் பங்கேற்ற புத்தாண்டு இரவு விருந்து நடந்த தளம் இடிந்து விழுந்ததில், பலர் காயங்களுக்குள்ளானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

சிறிலங்கா அதிபரின் மகன் உள்ளிட்ட சுமார் 200 முக்கிய பிரமுகர்கள் இந்த இரவு விருந்தில் பங்கேற்றிருந்ததாகவும் ஆரம்ப கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

ஒட்டுமொத்த தளமும் இடிந்து விழுந்ததால், பலர் காயமடைந்தனர். 

காயமடைந்தவர்கள் உடனடியாக தனிப்பட்ட வாகனங்கள் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். 

இதுதொடர்பாக ஹில்டன் விடுதி எந்தக் கருத்தையும் வெளியிட மறுத்துள்ள அதேவேளை, விரைவில் இதுதொடர்பான அறிக்கை ஒன்று வெளியிடப்படும் என்று கூறியுள்ளது. 

இதற்கிடையே இந்தச் சம்பவத்தில் காயமடைந்தவர்களால் கொழும்பு நவலோகா மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவு நிரம்பியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

கால்கள் முறிந்த நிலையிலும், கைகள் உடைந்த நிலையிலும், கண்ணாடிகள் வெட்டிய நிலையிலும் பலர் காயங்களுடன் இங்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

எனினும், இந்த இரவு விருந்தில் சிறிலங்கா அதிபரின் மகனும் பங்கேற்றதாக தகவல்கள் வெளியான போதிலும் அவருக்கு காயமேற்பட்டதா அவரது நிலை என்ன என்பது இன்னமும் உறுதிப்படுத்தப்படவில்லை.

http://www.puthinappalakai.com/view.php?20140101109708

இந்த களியாட்ட காசில் போரால் பாதிக்கபட்ட பெண்களுக்கு உதவலாமே? புலம்பெயர் தமிழருக்கு தான் அட்வைஸ்.

2014 நல்ல சகுனம்.

விசேட பிரமுகர்களின் மேடை சரிந்ததில் பலருக்கு காயம்

கொழும்பு ஹில்டன் ஐந்து நட்சத்திர ஹோட்டலில் விசேட பிரமுகர்களின் மேடை சரிந்து விழுந்ததுள்ளமையினால் பலர் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவத்தினால் ஹோட்டல் வளாகத்தில் எல்லா இடங்களிலும் இரத்தம் சிந்திக்கிடந்தது.

நேற்றிரவு நடத்தப்பட்ட புதுவருட விருந்துபசாரத்தின் போதே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது. 

ஜனாதிபதியின் மகனும் இன்னும் பல முக்கியஸ்தர்களும் அமர்ந்திருந்த மேடையே இவ்வாறு பொறிந்து வீழ்ந்துள்ளது.

இதனால் கேளிக்கைகளில் ஈடுபட்டிருந்த பலர் காயமடைந்தனர். இந்த  மேடையில் சுமார் 200 பேர் வரையிலும் இருந்ததாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 'முழு மேடையும் பொறிந்து விழுந்ததனால் எல்லா இடமும் இரத்தம் சிந்திக்கிடந்தது. நாம் அம்புலன்ஸ் இல்லாத நிலையில் காயப்பட்டவர்களை எமது வாகனத்தில் அவசரமாக ஏற்றிச்சென்றோம்' என சம்பவத்தை நேரில் கண்ட ஒருவர் தெரிவித்தார்.

இந்த இடம் கேளிக்கை விரும்பிகளுக்கு மிகவும் விருப்பமான இடமாக இருந்தது. எனினும் ,இந்த  சம்பவம் பற்றி கருத்துக்கூற ஹில்டன் மறுத்துவிட்டது.

இந்த சம்பவத்துக்கு நாம் பொறுப்பேற்றுள்ளோம். மேடை அமைப்பு வேலை, ஒப்பந்த அடிப்படையில் வேறு ஒரு தரப்பிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தாலும் நாமே இதற்கு பொறுப்பேற்கின்றோம் என இந்த நிகழ்வின் ஒழுங்கமைப்புக்கு பொறுப்பான பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

விருந்துபசாரத்தில் கலந்துகொள்வதற்காக சென்ற பலரும் ஹில்டன் ஹோட்டலையும் விருந்து ஏற்பாட்டாளர் கன்ரலோப் பிளே கிறவுண்டையும் குற்றங் கூறினர்.

' காயப்பட்டவர்களுக்கு உதவுவதை விடவும் உடைக்கப்படாத மதுபான போத்தல்களை சேகரிப்பதே அவர்களுக்கு முக்கியமானதாக இருந்தது' என இந்த நிகழ்வுக்கு பொறுப்பானவர்களில் ஒருவர் தனது முகநூலில் தெரிவித்துள்ளார்.

ஏற்பாட்டாளர்கள் காயப்பட்டவர்களை கவனிக்கவில்லை. பாதிக்கப்பட்டவர்கள் வருந்திக்கொண்டிருந்த போது அவர்கள், கேளிக்கையை தொடர்வதிலேயே அக்கறையாக இருந்தனர் என இன்னொருவர் கூறியிருந்தார்.

எங்கும் இரத்தம் காணப்பட்டது. மக்கள் உதவி கேட்டு கதறினர். எனது நண்பிக்கு கணுக்கால் உடைந்துவிட்டது. இன்னொருவருக்கு உடலில் எரிகாயம் காணப்பட்டது.

கை,கால்,நெஞ்செலும்பு உடைந்தவர்களாலும் கண்ணாடி வெட்டுக்காயங்களுடன் காணப்பட்டவர்களினாலும் நவலோக்க வைத்தியசாலை நிரம்பி வழிந்தது  என முகப்புத்தகத்தில் கூறப்பட்டிருந்தது.

_DSC0979.jpg

_DSC0989.jpg

_DSC0991.jpg

http://tamil.dailymirror.lk/pirasitta-seithi/95240-2014-01-01-07-34-19.html

குடியும் கூத்தும் குழம்பினது சந்தோசம். அதற்கு எதோ முள்ளி வாய்க்கால் குண்டு மழை அவலம் மாதிரி இந்த பந்த ஊடகங்கள் பீலா காட்டுக்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

_DSC0989.jpg

"சூப்பர் கால்டா உனக்கு.. "

"இருடி.. நானும் ஒரு கால் போட்டுட்டு வந்து பாத்துக்கிறன்.." :lol:

"காயப்பட்டவர்களுக்கு உதவுவதை விடவும் உடைக்கப்படாத மதுபான போத்தல்களை சேகரிப்பதே அவர்களுக்கு முக்கியமானதாக இருந்தது' என இந்த நிகழ்வுக்கு பொறுப்பானவர்களில் ஒருவர் தனது முகநூலில் தெரிவித்துள்ளார்."

எங்கட சிறி லங்கன் மாட்டு கருத்தாளர்களும் போயிருக்கிறார்கள் போலிருக்கு.

சொந்த இனம் அழியும்போதும் கைப்பிடிக்காக எதிரிக்கு அடிவருடினார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.