Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகத்தில் ஒரு மாற்று அணி உருவாகுமா?

Featured Replies

தமிழகத்தில் ஒரு மாற்று அணி உருவாகுமா?

 

 

கடந்த பல மாதங்களாக தமிழகத்தின் தேர்தல் களத்தில் ஒரு மாற்று அணி உருவாகவேண்டுமென்று முயன்ற பலரில் நாங்களும் ஒருவர். ஆனால் இன்று அந்த கனவு கனவாகவே போய்விடுமோ என்கிற நிலைதான் இருக்கிறது. தேசிய கட்சிகள் காங்கிரஸ்-பாஜக-மார்க்சிஸ்ட் போன்றவை, மற்றும் மாநில அளவில் தமிழர்கள் நலனை பின்னுக்குத் தள்ளி மக்களின் வாழ்வுரிமைப் பிரச்சனைகளில் கூட நேர்மையான நிலைப்பாட்டினை எடுக்காத அதிமுக , திமுக, தேமுதிக போன்றவைகள் அல்லாத ஒரு கூட்டமைப்பு ஏற்படுத்துதல் அவசியம் என்று பலரும் விரும்பினோம். தேர்தல் பாதை திருடர் பாதை என்று ஒதுக்குவதை காட்டிலும், அதில் செயல்படும் கட்சிகள் மூலமாக தமிழர்களின் வாழ்வுரிமை, சமூக கோரிக்கைகளை பிற தளத்தில் பிரதிபலிப்பது அவசியம் என்பதை நாம் மறுக்க முடியாது. இவை அனைத்தும் பிரச்சாரங்களுக்கான இடமாக, இந்திய தேசியத்தினை-போலி ஜனநாயகத்தினை அம்பலப்படுத்தலுக்கான இடமாக பயன்படுத்த முடியும்.

கடந்த வருடங்களில் தமிழர்கள் பிரச்சனைகளில் இந்தியாவின் கொள்கையை விமர்சித்தும் அதை எதிர்த்தும் போராடி களத்தில் துணையாகவும், முன்னனியாகவும் நின்ற தேர்தல் கட்சிகள் ஒன்றாக நிற்பது காலத்தின் தேவை. இதைத் தவிர்த்து இந்தியதேசிய- தமிழகத்தின் துரோக கட்சிகளுடன் கூட்டனி வைப்பது நமக்கான பின்னடைவாகவே பார்க்கிறேன்.
மக்கள் மாற்று தேர்தல் அணியை விரும்பவே செய்கிறார்கள். இதனையே நாம் கடந்த தேர்தல்களில் களத்தில் கண்டோம். மக்கள் காங்கிரஸ்-பாஜக-மார்க்சிஸ்ட்-திமுக-அதிமுக-தேமுதிக போன்ற அதிகாரத்தில் மையம் கொண்ட கட்சிகளின் மீது வெறுப்பினையே உமிழ்ந்தார்கள். இந்தக்குரலை எந்த கட்சியும் கணக்கில் எடுத்துக்கொள்ளாமல் போவது வருத்தமே. மீண்டும் மீண்டும் கூட்டணி என்று இந்த கொள்ளைக் கும்பலிடத்தில், வன்ம அரசியல்வாதிகளிடத்தில் மாட்டிக்கொள்வது என்பது இக்கட்சிகள் தமது ஆதரவினையும், ஆன்மாவினையும் இழப்பதாகவே சென்று முடிகிறது.

மேற்சொன்ன பெரிய கட்சிகளிடத்தில் மக்களுக்கு மரியாதையோ, நம்பிக்கையோ கிடையாது. சிறிய ஆனால் மக்கள் பிரச்சனையில் நின்ற/நிற்கிற கட்சிகளிடத்தில் மக்களுக்கு உருவான நம்பிக்கைகளை இந்த பெரிய கட்சிகள் ஒட்டுண்ணிகளாக உறிஞ்சுகின்றன. இக்கட்சிகளின் ஒட்டுமொத்த ஆதரவு தளத்தினையும், வாக்குவங்கியினையும் சுரண்டிய பின்னர் விட்டு வெளியேற்றுவது இவர்களின் வாடிக்கையாக இருப்பதை நாம் அறிவோம்.

மூன்றாவதாக ஒரு கூட்டணி என்பது எங்களைப் போன்றவர்கள் மட்டுமே சாதித்துவிடக்கூடிய செயல் அல்ல. தோழர். பண்ருட்டி வேல்முருகன், தோழர். உதயக்குமார், பூவுலகின் நண்பர்கள் இன்னும் பலர் முயன்றார்கள். ஆனால் இந்தக் கூட்டணி என்பது இவர்கள் யாரின் நலனுக்காக்வும் அல்ல. மாறாக இக்கூட்டணி என்பது கூட்டணி அமைக்கும் கட்சிகளின் நன்மைக்காகவும், வேறு ஒரு தளம் நமக்கு போராட கிடைக்கிறது என்கிற விருப்பத்திற்காகவும் உருவாக்க வேண்டப்பட்டது. ஒரு ஊடகத்தினை, ஒரு நீதிமன்றத்தினை எவ்வாறு பயன்படுத்துகிறோமோ அதைப் போலவே சட்டசபையையும், பாராளுமன்றத்தினையும் பயன்படுத்த இயலும் என்கிற எண்ணமே இதன் அடிப்படை. இவற்றினால் ஒட்டுமொத்த மாற்றத்தினை கொண்டு வர இயலாது, மாறாக சிக்கலான காலகட்டத்தில் அரசிற்கு நெருக்கடி கொடுக்க இந்த களம் பயன்படலாம்.

உதாரணமாக கூடன்குள மக்கள்கொடுமையான தாக்குதலுக்கும், பொருளாதார முற்றுகைக்கும் உள்ளாக்கப்பட்ட பொழுது பாராளுமன்றத்திலும், சட்டசபையிலும் வலிமையான குரல் கொடுக்கக் கூட நம்மிடத்தில் குறிப்பிடதக்க எண்ணிக்கையிலான நபர்கள் இல்லாது போயிற்று. மிகச்சிலரால் மட்டுமே இது போன்ற தருணங்களில் குரல் எழுப்ப இயன்றது. ஜவாஹிருல்லா, ஜிகே மணி, கிருஷ்ணசாமி, தனியரசு, திருமாவளவன், கணேசமூர்த்தி, து.ராஜா இன்னும் சிலர் மட்டுமே பேசினார்கள். இந்த எண்ணிக்கை ஒருபொழுதும் வலிமையான எதிர்ப்பினை பதிவு செய்ய போதுமானதாக இருக்காது என்பதை நாம் அறிவோம்.

இச்சமயத்தில் வரும் தேர்தலில் இக்கட்சிகள் பிரிந்து நின்று தேர்தலை சந்திப்பது துயரம்.
பல்வேறு மக்கள் விரோத மசோதாக்கள் நிறைவேற இருக்கும் (வரப்போகும்)ஆட்சிக் காலத்தில் மாபெரும் போராட்டங்களையும், அடக்குமுறைகளையும் சந்திக்கப் போகும் காலத்தில் இவர்கள் ஒன்றாக களம் காணவில்லையெனில் மிகப்பெரும் பின்னடைவினை தமிழ்ச் சமூகம் சந்திக்கும்..

இவர்கள் ஒன்றாக வருவதற்கு மீண்டும் நாம் முயற்சி எடுக்கவேண்டும். நான் நம்பிக்கை இழக்கவில்லை. இறுதிவரை முயற்சி எடுக்கவே விரும்புகிறேன். ஏனெனில் விமர்சனம் செய்துவிட்டு ஒதுங்கிப் போய்விட இது வேறொருவர் பிரச்சனை அல்ல. முயற்சிப்போம் இறுதிவரை.

இந்த கட்சிகளை சேர்ந்த தோழர்களுக்கு ஒரு வேண்டுகோள். நீங்கள் பலமுறை சக தோழமைக் கட்சிகளுடன் விமர்சன விவாதத்தினை வைத்திருக்கிறீர்கள். விமர்சனம் என்பது தம்மை சரி செய்துகொள்வதற்கான ஒரு சிறப்பான ஜனநாயக வழிமுறை என்பதில் மாற்றுக்கருத்து கிடையாது. ஆனால் விமரசனம்-மட்டுமே நிறைந்த களம் என்பது வலிமையான எதிரியை எதிர்கொள்ளும் ஒரு வலுவான கூட்டணியை உருவாக்கும் அடித்தளத்தினை தகர்த்தது என்பது உண்மையே.

விமர்சனத்திற்கு நீங்கள் எடுத்துக்கொள்ளும் அதே முயற்சியினை, ஒற்றுமையை வலுப்படுத்தவும் நீங்கள் முயன்றிருக்கவேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பு. தொண்டர்களோ, தோழர்களோ ஒற்றுமையை வலியுறுத்திப் பேசும் பொழுது, செயல்படும் பொழுது அது தலைமையின் மீது அளப்பறிய தாக்கத்தினை ஏற்படுத்தும். நீங்கள் ஒருவர் மீது மற்றவர் கடுமையான விமர்சனங்களை மட்டுமே வைத்துவிட்டு நகர்ந்திருக்கிறீர்கள்.

மூவர் தூக்கு, முல்லைப்பெரியாறு, மீனவர் பிரச்சனை, காவிரிப் பிரச்சனை, கூடன்குளம் போராட்டம், தமிழீழ விடுதலை என்று பலகளத்தில் நீங்கள் அனைவரும் ஒன்றாக நின்றிருக்கிறீர்கள்.
பின்பு ”ஒன்றாக நிற்கவேண்டும், தேர்தல் களம் காணவேண்டுமென்கிற” வாதத்தினை வலிமையாக நீங்கள் ஏன் முன்வைக்கவில்லை என்பதை சிந்தித்துப்பாருங்கள்.

நேர்மையாக வெளிப்படையாகச் சொல்லுங்கள். அதிமுக-திமுக-காங்கிரஸ்-பாஜகவிடம் இல்லாத முரணையும், நேர்மையற்ற தன்மையையா சக தோழமை கட்சிகளிடம் கண்டிருக்கிறீர்கள்?..இவர்களை விமர்சிக்க முன்வராத நீங்கள், இத்தோழமைக் கட்சிகளுடன் ஒரு நட்புணர்வினை ஏற்படுத்தி பெரிய கட்சிகளை தனிமைப்படுத்தி நீங்கள் வலிமையாக மாறுவதற்கு ஏன் முயலமறுக்கிறீர்கள்.?...

நம் அனைவரின் முயற்சியும் கைமீறி சென்று ஒருவேளை சுப்ரமணிய சாமியும், ப.சிதம்பரமும், ஏனைய தமிழின விரோதிகளும் தேர்தல் களம் காண நேர்ந்தால் ’கூட்டணியில் நீங்கள் இருக்கிறீர்கள்’ என்று தயக்கம் காட்டுவோம் என்று நம்ப மாட்டீர்கள் என நம்புகிறோம். இவர்களுக்காக ஆதரவு தேடி வந்தீர்கள் என்றால் மூர்க்கமான எதிர்ப்பினையே எங்களிடத்தில் சந்திப்பீர்கள் என்பது நீங்கள் அறியாதது அல்ல.

தலைமையின் தவறான-பிழையான முடிவுகளை நியாயப்படுத்துவது ஒட்டுமொத்த பின்னடைவிற்கும் வழிவகுக்கும். இதுவே கடந்த காலப்பாடம். நீங்கள் அனைவரும் ஒன்றாக நிற்பீர்கள் எனில் எங்களைப் போன்ற பலரும் துணையாக நின்று பெரிய கட்சிகளின் பாசிசபோக்கினை வலிமை இழக்கச் செய்ய முயலலாம். அவ்வாறாக ஒன்றாக நிற்காமல் கூட்டணியில் செல்லும் பட்சத்தில், ’தேர்தலில் பங்கேற்காத’ எங்களால் விலகி நின்றே பார்க்கமுடிகிறது.

உங்கள் அனைவரின் பங்களிப்பின் மீதும், கடந்த- நிகழ்கால போராட்ட வரலாற்றின் மீதும் எங்களுக்கு மரியாதை உண்டு. நீங்கள் ஒன்றாக நிற்கவேண்டும் என்று விரும்புவது இதன் அடிப்படையிலேயே.

மூன்றாவது அணி என்பது கனவாகக் கூட மாறிப்போகலாம். ஆனால் முயற்சி தவறு கிடையாது. அதிகாரத்தினை கையில் வைத்து தமிழ்ச் சமூகத்தின் மீது சுரண்டலை நடத்தும் அதிமுக-திமுக-தேமுதிக-காங்கிரஸ்-பாஜக-மார்க்ஸிஸ்ட் போன்ற கட்சிகளை வீழ்த்துவதே முதன்மை குறிக்கோள். எதிரிகள் எளிதாக ஒன்றாக இணையும் பொழுது நீங்கள் ஒன்றாவதில் என்ன பிரச்சனை?...

இதற்கான களத்தினை வலிமைப்படுத்த முயற்சிப்போம். இது சாத்தியமல்ல என்று ஒட்டுமொத்தமாக நிராகரித்துச் செல்வது சுலபம். முயன்றுதான் பார்ப்போமே, இறுதிவரை. முடியாது போகும் பட்சத்தில் வேறொரு மாற்றினை உருவாக்க முயற்சிப்போம். பலவற்றில் தேர்தலும் ஒரு தளம். அனைத்து தளத்திலும் எதிர்ப்பினை உருவாக்க முயலுவோம்.
சக கட்சி தோழர்கள் நினைத்தால் இது முடியாததல்ல. நம்மாலான முயற்சியை எடுப்போம். ஏனெனில் இது அடுத்தவர் பிரச்சனை கிடையாது.

( இந்தக் கூட்டணி உருவாக கடுமையாக உழைத்தவர்களில் முக்கியமானவர்கள் - தோழர்.பண்ருட்டி வேல்முருகன், தோழர்.உதயக்குமார், தோழர்.சுந்தராஜன், ஆகியோர் உழைப்பு வீண் போகக்கூடாது. இவர்கள் உழைப்பினை சக கட்சி தோழர்கள் புரிந்து கொண்டார்களா எனத் தெரியவில்லை என்கிற வருத்தம் உண்டு........ தொடர்ந்து பேசுவோம்…)
1464638_10202890596369463_33487253_n.jpg
1533878_10202890609769798_1523390934_n.j
1497513_10202890624490166_175195941_n.jp
1520741_10202890624650170_1245720350_n.j

 

திருமுருகன் காந்தி = முகநூலில்  //

Thirumurugan Gandhi
  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்தில் ஒரு மாற்று அணி உருவாகுமா?

 

ஒரு போதுமில்லை. முதலில் மக்களுக்குப் படங்காட்டுவார்கள். பின்னர் கருணாநிதி அல்லது ஜெயலலிதா கால்களில் விழுந்துவிடுவார்கள்.

மாற்று அணி என்றவுடன் நான் ஏதோ புதிய உதைபந்தாட்ட அணி என்று நினைத்து விட்டேன். பூ இது தானா

புதிய ஒரு அணி உருவாகலாம் என நான் நினைத்திருந்தேன். ஆனால் வைகோ ஐயா பா.ஜ.க வுடன் கூட்டு என்றதும் அந்த நினைப்பு போய் விட்டது. இப்பொழுதும் முயற்சித்துக்கொண்டிருக்கிறார்கள். :rolleyes: இவர்கள் கூட்டணி அமையாத பட்சத்தில்,

இவ்வருடம் ஆம் ஆத்மி கட்சி தமிழகத்திலும் போட்டியிட முயற்சிக்கிறது. அவ்வாறு போட்டியிட்டால் காங்கிரஸ், பா.ஜ.க வை விட ஆம் ஆத்மி கட்சிக்கு ஆதரவு வழங்குவது நல்லது என நினைக்கிறேன். :unsure::rolleyes:

தமிழகத்தில் பணம்..! பணம்...!! பணம்...!!! அதுதான் அணிகளைத் தீர்மானிக்கிறது!!  :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.