Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆம் ஆத்மி கட்சிக்கு தொண்டர்கள் சேர்க்கிறார்கள்

Featured Replies

ஜனவரி 2014, உறுப்பினர்/தொண்டர் சேர்க்கை நடைபெறும் இடங்கள்: காலை 10 மணிமுதல் மாலை 5 மணிவரை

சென்னை வடபழனி:
16/2, தெற்கு சிவன் கோவில் தெரு, வடபழனி, சென்னை - 600 026.
(J R K பள்ளி அருகில்)

சென்னை கீழ்பாக்கம்:
2வது மாடி, 68, டெய்லர்ஸ் சாலை, கீழ்பாக்கம், சென்னை - 600 010.
(க்ராகோடைல் விற்பனை அரங்கம் மேலே, டெய்லர்ஸ் சாலை சிக்னல் மற்றும் ஈகா அரங்கம் அருகில்)

*தொப்பி மற்றும் ஸ்வராஜ் புத்தகம் (தமிழிலும் ஆங்கிலத்திலும்) விற்பனைக்கு உள்ளது. தொண்டராக பதிவு செய்ய, உங்கள் passport size புகைப்படமும், அடையாள அட்டையின் நகலும் தேவை.

 

(facebook)


ஆம் ஆத்மி கட்சி - தூத்துக்குடி இல் உறுப்பினர் சேர்க்கை துவங்கி விட்டது. மக்களுக்கு ஆதரவாக ஊழலுக்கு எதிராக போராட நினைப்பவர்கள் கீழ்க்கண்ட எண்ணை தொடர்புகொள்ளவும்

8680004416, 8680004417, 8680004418.

 

(facebook)

  • கருத்துக்கள உறவுகள்

இவர்கள் ஊழலுக்கு மட்டுமே எதிரானவர்களா..???! அல்லது... மக்களின் சுதந்திர உணர்விற்கு மதிப்பளிப்பவர்களா..??! அப்படியாயின் ஈழத்தமிழர்கள் தொடர்பில் இவர்களின் கொள்கை என்ன..??! இவை தெரியாமல்.. இவர்களுக்கு நாங்க பிரச்சார முக்கியத்துவம் அளிப்பது.. அநாவசியமான ஒன்றாகவே இருக்கும். :icon_idea:

  • தொடங்கியவர்

இவர்கள் ஊழலுக்கு மட்டுமே எதிரானவர்களா..???! அல்லது... மக்களின் சுதந்திர உணர்விற்கு மதிப்பளிப்பவர்களா..??! அப்படியாயின் ஈழத்தமிழர்கள் தொடர்பில் இவர்களின் கொள்கை என்ன..??! இவை தெரியாமல்.. இவர்களுக்கு நாங்க பிரச்சார முக்கியத்துவம் அளிப்பது.. அநாவசியமான ஒன்றாகவே இருக்கும். :icon_idea:

 

எனக்கு தெரியாது. நான் முகநூலில் பார்ப்பவற்றை இணைக்கிறேன். :)

  • கருத்துக்கள உறவுகள்

சீமான் முடிஞ்சு பாப்ஸ் இப்ப ஆம் ஆத்மி கட்சிக்கு தாவிட்டா...முடியல்ல......:D

  • தொடங்கியவர்

சீமான் முடிஞ்சு பாப்ஸ் இப்ப ஆம் ஆத்மி கட்சிக்கு தாவிட்டா...முடியல்ல...... :D

 

நான் சீமான் அண்ணாவுக்கு தான் ஆதரவு. 2016 தேர்தலில் சீமான் அண்ணா வெல்ல வேண்டும் என்பதில் மாற்றமில்லை. :)

 

நாடாளுமன்ற தேர்தலில் சீமான் அண்ணா போட்டியிடவில்லை. :)

  • கருத்துக்கள உறவுகள்

ஜி அவுஸில நீங்க திறக்கிறியலா,நான் லண்டனில திறக்கிறன் கிளையை

  • தொடங்கியவர்

பிரசாந்த் பூஷன் தெரிவித்த காஷ்மீர் மக்களுக்கு பொதுவாக்கெடுப்பு தொடர்பில் கெஜ்ரிவால் மறுத்து கருத்து கூறியுள்ளார். உண்மையாகவே மறுத்தாரா அல்லது அதனால் கிளம்பும் எதிர்ப்புகளை தடுத்து நிறுத்துவதற்காக மறுத்தாரா தெரியாது. ஆம் ஆத்மி கட்சி பற்றி போகப்போக தான் தெரியும். உண்மையாக மறுத்திருப்பின் ஈழக்கொள்கைக்கும் எதிரான நிலைப்பாட்டை அவர் கொண்டிருக்கலாம். மறுப்பதற்கில்லை.

ஆம் ஆத்மி கட்சி செய்பவற்றை அவதானிப்பதில் ஆர்வம் உள்ளதால் என் கண்ணில் படுபவற்றை இணைக்கிறேன். காங்கிரஸ், பா.ஜ.க போன்ற தமிழின விரோதிகளுடன் ஒப்பிடுகையில் இதுவும் தமிழின விரோதியாக வந்தால் எமக்கு எந்த ஒரு ஏமாற்றமும் இல்லை. :)

 

ஜி அவுஸில நீங்க திறக்கிறியலா,நான் லண்டனில திறக்கிறன் கிளையை

 

நீங்கள் கிளை திறப்பதாக இருந்தால் நாம் தமிழர் கட்சிக்கு கிளை திறவுங்கள். :D

  • கருத்துக்கள உறவுகள்

மோடி யின் புகழை குறைக்க காங்கிரசால் வளர்க்கபடுவது தான் இந்த ஆம் ஆத்மி.....தேவை முடிந்ததும் ஒரு சிபிஐ விசாரணையை போட்டு எப்பிடி கேஜ்ரிவால் போன்றவர்களை உள்ளே தள்ள வேண்டும் என்று அவர்களுக்கு தெரியும்

  • தொடங்கியவர்

மோடி யின் புகழை குறைக்க காங்கிரசால் வளர்க்கபடுவது தான் இந்த ஆம் ஆத்மி.....தேவை முடிந்ததும் ஒரு சிபிஐ விசாரணையை போட்டு எப்பிடி கேஜ்ரிவால் போன்றவர்களை உள்ளே தள்ள வேண்டும் என்று அவர்களுக்கு தெரியும்

 

பா.ஜ.க வினர் முகநூலில் இப்படி எழுதி ஆம் ஆத்மிக்கு எதிராக பரப்புரை செய்வதை ஏற்கனவே வாசித்ததால் நீங்கள் எழுதியதில் புதுமையை காணவில்லை.

டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி தனித்து தான் போட்டியிட்டது. பின்னர் கெஜ்ரிவால் ஆட்சியமைப்பதற்கு காங்கிரஸ் தாமாகவே நிபந்தனையற்ற ஆதரவு வழங்கியிருந்தார்கள்.

இப்பொழுது நாடாளுமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி தனித்து தான் போட்டியிடுகிறது. அதில் அவர்கள் வென்று விட்டால் காங்கிரசின் ஆதரவு தேவைப்படாது. சிலவேளை போதிய வெற்றி கிடைக்காவிட்டால் காங்கிரசுடன் மீண்டும் கூட்டணி வைக்கக்கூடும். இல்லை என்று உறுதியாக கூறுவதற்கில்லை. ஆனால் கெஜ்ரிவால் (அல்லது ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த ஒருவர்) பிரதமரானால் அவரின் கைகளிலேயே அதிகாரம் இருக்கும்.

பிரசாந்த் பூஷன் என்பவர் இப்பொழுது மட்டுமல்ல முன்னரே காஷ்மீர் மக்களுக்கு ஆதரவாக கதைத்திருக்கிறார். காஷ்மீர் மக்களுக்காக மட்டுமல்ல பொதுவாக காஷ்மீர் மக்கள் போன்ற நிலையில் இருப்பவர்களுக்காக கதைத்துள்ளார். எனவே ஆம் ஆத்மி கட்சி காங்கிரசால் வளர்க்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டை ஏற்க முடியாது. சிலவேளை கெஜ்ரிவால் காங்கிரசின் வலைக்குள் வீழக்கூடும். அல்லது இப்பொழுது அமைதியாக இருந்து விட்டு நாடாளுமன்ற தேர்தல் முடிந்ததும் காங்கிரஸ் மீது அதிரடி நடவடிக்கைகளை எடுக்கக்கூடும்.

எதையும் இப்பொழுது உறுதியாக கூற முடியாது. பொறுத்திருந்து பார்ப்போம்.

 

காங்கிரஸ் வந்தாலோ பா.ஜ.க வந்தாலோ எந்த ஒரு மாற்றமும் வரப்போவதில்லை. ஆம் ஆத்மி கட்சி வந்தால் சிலவேளை ஏதும் மாற்றம் வரலாம். அல்லது காங்கிரஸ், பா.ஜ.க போலவே ஒன்றாக அமையலாம்.

Edited by துளசி

ஆம் ஆத்மிஇடம் வெளிநாட்டு கொள்கைகள் இருப்பதாக தெரியவில்லை...அவர்கள் இப்போதைய கொள்கையை ஊழல் இல்லாத அதிகாரிகளால் செய்ய முற்படலாம்.... (உ+ம்:  காஸ்மீரில் தேர்தல் நடத்த மறுப்பு - உட்கட்சி முடிவு)

  • தொடங்கியவர்

05.01.2014

 

மதுரையை சேர்ந்த 71 வயது ப.கிருஷ்ணன் எனும் கற்குடைவு தொழிலாளி ஆம் ஆத்மி கட்சி உறுப்பினர் படிவம் பெற்றுக்கொண்டார். அவர் கூறிய கருத்து:

"இதற்கு முன் திமுகவிலும், அவர்களிடம் நம்பிக்கை இழந்த பிறகு அதிமுகவிலும் உறுப்பினராக இருந்தேன். இரண்டுமே ஊழல் நிறைந்த கட்ச்சிகள் தான். ஊழலை ஒழிக்கும் கொள்கையோடு ஒரு கட்சி வருமா என்ற எதிர்ப்பார்ப்புடன் இருந்தேன்... "

மதுரையில் மட்டும் கிட்டத்தட்ட தற்போதைக்கு 3500 பேர் கட்சி உறுப்பினர்களாக இணைந்துள்ளார்கள் என தெரியவருகிறது.

 

1546456_10152247371065579_1619397750_n.j

 

(facebook)

  • கருத்துக்கள உறவுகள்

ஆம் -தலையாட்டுதல் 

 

ஆத்மி -???? :D

  • தொடங்கியவர்

ஆம் -தலையாட்டுதல் 

 

ஆத்மி -???? :D

 

ஆம் ஆத்மி என்பது ஹிந்தி பெயர். :)

 

Aam Aadmi Party (translation: Common Man Party; abbreviated AAP) is an Indian political party, formally launched on 26 November 2012.

 

http://en.wikipedia.org/wiki/Aam_Aadmi_Party

  • கருத்துக்கள உறவுகள்

ஆம் ஆத்மி என்பது ஹிந்தி பெயர். :)

 

Aam Aadmi Party (translation: Common Man Party; abbreviated AAP) is an Indian political party, formally launched on 26 November 2012.

 

http://en.wikipedia.org/wiki/Aam_Aadmi_Party

அப்ப இதுக்கு தமிழில் என்ன அர்த்தம் ,இந்தி தெரிஞ்ச நீங்க போடலாமே  <_<

  • தொடங்கியவர்

அப்ப இதுக்கு தமிழில் என்ன அர்த்தம் ,இந்தி தெரிஞ்ச நீங்க போடலாமே  <_<

 

அண்ணா. அதுதான் உங்களுக்காக google இல் தேடி ஆங்கில translation தந்திருக்கிறேன். கவனிக்கவில்லை போலிருக்கு. :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.