Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சர்வதேச இந்துமதகுருமார் ஒன்றியம் ஏற்பாட்டினில் யாழில் பிரார்த்தனை ஊர்வலம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

hindu_mada.png

சைவதமிழ் கலாசாரம் அழிவடையாது பாதுகாக்கப்பட வேண்டும் என்னும் நோக்கில் சர்வதேச இந்துமதகுருமார் ஒன்றியம் நடாத்தும ஓம் நமசிவாய ஆன்மீகவங்கி பிரார்த்தனை ஊர்வலம் எதிர்வரும் 24ம் திகதி வெள்ளிக்கிழமை அன்று மு.ப. 11 மணிக்கு வண்ணை சிவாலயத்தில் இருந்து ஊர்வலமாக கீரிமலை சிவாலயத்திற்கு கொண்டு சென்று சிவ ஆராதனையுடன் சிவார்ப்பணமாக்கப்படவுள்ளதென சர்வதேச இந்துமத குருமார் ஒன்றியம் தெரிவித்துள்ளது.இது தொடர்பாக விடுக்கபட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது

காலத்தின் வேகத்திற்கு மக்களும் தமது வாழ்க்கை நடைமுறைகளையும் விரைவுபடுத்தியுள்ளர்கள். அதனால் சமூகத்தில் பல மாற்றங்களை அவதானிக்க முடிகின்றது. அதுவும் நடைபெற்ற யுத்தத்தின் பிற்பாடு எமது பிரதேசத்திலும் நாடளாவிய ரீதியிலும் கல்வி கலை கலாசாரம் பாரம்பரீயம் சமய அனுஸ்டானம் என அனைத்திலும் காலத்தின் மாற்றங்களைக் காணமுடிகின்றது. எமது பிரதேசம் காலதிகாலமாக பண்பாட்டு நெறிகளாலும் ஒழுக்கத்தினாலும் கல்வியினாலும், சைவசமய பற்றினலும் மிகவும் உயந்ததாக எல்லோராலும் பாராட்டத்தக்கவகையில் காணப்பட்டது. ஆனால் யாழ்ப்பாணத்தில் இன்று ஆலயவழிபாடுகள் அதன் அனுஸ்டானங்கள் பேணுதல் பெரியவர்களை மதித்தல், குருமார்களை கனம் பண்ணுதல் முதலிய அருகி வருகின்றன. ஆலயப்பிணக்குகள் அதிகரித்ததுடன் அவை நீதிமன்றங்களையும் நாடி நிற்கின்றன. நீதியின் உறைவிடமாகவும் தர்மத்தின் ஊற்றாகவும் இருக்க வேண்டிய ஆலயங்கள் நீதிமன்றங்களின் முற்றத்தில் வரிசையில் வருடக்கணக்கில் நிற்கின்றன. 

அளவுக்கதிகமான ஒலிபெருக்கிப்பாவனைகள், அடியார்கள் நாகரீக மோகத்தினால் ஆலயவழிபாடுகளுக்கு தமிழ் கலாசாரத்திற்கு விரும்பத்தகாக உடைகளுடன் வருதல், குருமார்கள், பரிபாலகர்கள் சந்தர்பத்திற்கேற்றவாறு சாஸ்திர சம்பிரதாயஙகளை கையாளுதல்,  என ஆலயத்தின் புனிதத்தன்மை குறைந்து வருகின்றன. இவ்வாறன செயற்பாடுகள் அற்றுப்போகவேண்டும் -  இந்து ஆலயங்களின் புனிதத்தன்மை பாதுகாக்கப்படவேண்டும் என்பதற்காகவும்  சமூகத்தில் பரவலாக கொலை, கொள்ளை, பாலியல் வல்லுறவு, சிறுவர் துஷ்பிரயோகம், பாலியல் வன்முறைகள், குடும்ப வன்முறைகள்,  என்பவற்றோடு பெண்கள் அளவுக்கதிகமாக தொலைகாட்சி பார்ப்பதலில் ஈடுபடுதல், ,ளைஞர் யுவதிகள் வேலையில்லா பிரச்சனைகள் என பல வகைகளிலும் துன்பங்கள் அதிகரித்துக் காணப்படுகின்றன. அத்துடன் இளையோர் மத்தியில் மது போதை பாவனைகள் ,ளவயது கர்ப்பங்கள், கருக்கலைப்புக்கள், அதிகரித்தும் காணப்படுகின்றன. இவைகளும் அற்றுப்போகவேண்டும். மக்களுக்கு அமைதியான சுபீட்சமான வாழ்வு உருவாக வேண்டும். எமது பிரதேசத்தில் அறநெறி வாழ்வு எங்கும் பரவவேண்டும் என்பதற்காகவும்.

ஆலயங்களில் திருட்டுச்சம்பவங்களும் அதிகரித்து காணப்படுகின்றன. ஆலய தெய்வ விக்கிரகங்கள் முதல் பெரியளவிலான தெய்வங்களை சுமக்கும் வாகனங்கள்,  ஆலய பொருட்கள் என அனைத்தும் களவாடப்பட்டு வருகின்றன. அத்துடன் சில பகுதிகளில் ஆலயங்கள் சேதமாக்கப்பட்டும் உடைக்கப்பட்டும் உள்ளன. இதனால் ,றைசான்னித்தியம் குறைந்து வருவதுடன் மக்கள் மத்தியில் கடவுள் நம்பிக்கையும் குறைந்து வருகின்றது. இந்து ஆலயங்களின் திருட்டுச் சம்பவங்கள் அற்றுப்போக வேண்டும் என்பதற்காகவும்.

எமது இந்து சமயம் தமிழர்களின் தமிழர் வரலாற்றின் அடையாளச்சின்னம் ஆகும். தமிழர்கள் வாழ்ந்த பிரதேசத்தினை அடையாளப்படுத்தும் சின்னங்களாகவும் ஆலயங்கள் தான் திகழ்கின்றன. ,வற்றின் புனிதத்தன்மை  அற்றுப்போகும் போது எமது சமூகத்தில் ஒழுக்கநெறிகள் சமூக கட்டமைப்புக்கள், பாரம்பரீயங்கள் வரலாற்று சுவடுகளும் அற்றுப்போகும் என்பதை ஒவ்வொருவதரும் உணர்ந்து கொள்ள வேண்டும். எம்மிடம் கிடைத்த அருமையும் பெருமையும் மிக்க சைவத்தினை அடுத்த தலைமுறையினருக்கு கையளிக்க வேண்டியவர்கள் நாம். இதனை நாம் செய்யாது விடால் சைவத்தமிழர் தம் வரலாற்றில் நாம் இருண்டவர்களாவோம்.

 இவற்றினை எல்லாம் கருத்திற் கொண்டு எமது சர்வதேச இந்துமதகுருமார் ஒன்றியம் சைவதமிழ் கலாசாரம் அழிவடையாது பாதுகாக்கப்பட வேண்டும் என்னும் நோக்கில்

கடந்த 04.12.2013 அன்று ஓம் நமசிவாய என்னும் ஆன்மீக வங்கி ஆரம்பிக்கப்பட்டு மக்களால் லிகித ஜபம் செய்து (ஓம் நமசிவாய மந்திரத்தினை ஆயிரக்கணக்கில் எழுதுதல்) வருகின்றார்கள். அவ்வாறு முதலீடாக கிடைக்கப்பெறும் கோடிக்கணக்காண மந்திரங்களை மந்திரச் சுவடிகளை எதிர்வரும் 24.01.2014 வெள்ளிக்கிழமை அன்று மு.ப. 11 மணிக்கு வண்ணை சிவாலயத்தில் இருந்து ஊhவலமாக கீரிமலை சிவாலயத்திற்கு கொண்டு சென்று சிவ ஆராதனையுடன் சிவார்ப்பணமாக்கப்படவுள்ளது.

இப்புனிதமான ஊர்வலத்திற்கு இந்துமக்களை வலுச்சேர்க்குமாறு வேண்டுகின்றோம். அதாவது

1)   ஊர்வலத்திற்கு இந்து மத குருமார்களை ஒன்று திரண்டு வருகைதருமாறு அழைக்கின்றோம்.

2)   மாவட்டத்தின் வடமராட்சி, தென்மராட்சி வலிகாமம், தீவகம் என பெரும்பாலான ஆலயங்களில் இருந்து ஊர்த்திகள் வருவதற்கு ஆலயத்தினரை ஏற்பாடுகள் செய்யுமாறு வேண்டுகின்றோம்.

3)   வண்ணை வைத்தீஸ்வரர் ஆலயத்தில் இருந்து காங்கேசன்துறை வீதியூடாக கீரிமலை நகுலேஸ்வரம் வரையில் உள்ள ஊர்வல பாதையில் உள்ள அனைத்து இல்லங்கள், ஆலயங்கள், வர்த்தக நிலையங்கள், பாடசாலைகள், அரச அரசசார்பற்ற திணைக்களங்கள், பிரதேச செயலகங்கள், பிரதேச சபைகள், தனியார்கல்வி நிறுவனங்கள், வங்கிகள் என அனைவரும் தங்கள் தங்கள் வாயில்களை மாவிலை தோரணத்தினால் அலங்கரித்து பூரணகும்பத்துடன் வரவேற்று பிரார்த்திக்குமாறு வேண்டுகின்றோம்.

4)   ஊர்வல பாதையில் வரும் பொழுது உங்களது கைகளிலும் கிடைக்கப்பட்ட சிவலிங்க திருவுருவ மந்திர லிகித பத்திரத்தினை மலர்களோடு சிவலிங்கப்பொருமானுக்கு  அர்ப்பணித்து தங்கள் சார்பான பிரார்த்தனையை சமர்ப்பிக்குமாறு வேண்டுகின்றோம்.

5)   ஊர்வலத்திற்கு விசேட போக்குவரத்து வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

6)   பிரார்தனை ஊர்வலத்திற்கு வலுசேர்க்கும் வகையில் வவுனியா நகரிலிருந்தும் ஓம் நமசிவாய  மந்திரச் சுவடி ஊர்தி வரவுள்ளது.

7)   அன்னதானம், தாகசாந்தி நிவர்த்தி ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

8)   வண்ணை வைத்தீஸ்வர ஆலயத்தில் ,ருந்து  சிறிய தூரம் பாத யாத்திரையாக சென்று பின்பு வாகனங்கள் ஊடாக யாத்திரை நடைபெறும்.

9)   பிரார்த்தனைக்கு வலுச்சேர்க்கும் வகையில் வவுனியா மற்றம் கிளிநொச்சி மாவட்டங்களில் ,ருந்தும் அடியார்கள் திருக்கூட்டத்தினர் வர இருப்பதும் சிறப்பம்சமாகும்.

ஊர்வல பிரார்த்தனை தினத்தன்று அனைத்து ஆலயங்களிலும் அதிகாலை 05.00 மணிக்கு மணியோலை எழுப்பி காலை 08.00 மணி வரைக்கும் ஓம் நமசிவாய என்னும் ஜந்தெழுத்து மந்திரத்தினை (மக்களுக்கு ,டையூறுகள் விளைவிக்காத வகையில் அளவோடு) ஒலிபெருக்கிகள் மூலமாக ஒலிக்கவிட்டு பிராதுத்தனைக்கு வலுச்சேர்க்கவும் மக்களுக்கு விழிப்பூட்டவும் ஆலயங்களை அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம் என்றுள்ளது.

 

 

http://www.pathivu.com/news/29008/57//d,article_full.aspx

சைவ மத போதகர்கள் சேர்ந்து திறம்பட செயல்படும் செய்தி மிக்க மகிழ்ச்சி.

.

எல்லோரும் இளைய சைவ மத போதகர்களாக இருக்கிறார்கள். வருங்கால சமுதாயத்திற்காக சிந்தித்து செயல்படும் ஆன்மீக போதகர்கள் இருப்பதையிட்டு மிக்க மகிழ்ச்சி.

இந்த இளையோருக்காக சில காலத்தின் முன் சைவ மத போதகர்களை தாக்கி போட்ட கருத்திற்கு மன்னிப்பு கேட்கிறேன்.

அவ்வாறே சாதியையும் வளர்த்து அடுத்த தலைமுறைக்கும் கோண்டுபோய் சேர்க்கவேண்டும் என்றும் விரும்புகிறோம்

அரசால் தொடக்கிவிடப்பட்டிருக்கும் கூட்டமா இல்லஈயா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.