Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையில் சுயாதீன விசாரணை தேவை' - ஸ்டீஃபன் ஜே ரப்

Featured Replies

இலங்கையில் கடந்த 2009 ஆம் ஆண்டு மே மாதம் முடிவுக்கு வந்த யுத்தத்தின் இறுதிப் பகுதியில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் சர்வதேசச் சட்டமீறல்கள் தொடர்பாக எழுந்துள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக, சுயாதீனமான மற்றும் நம்பகமான விசாரணை தேவை என்று அமெரிக்கா மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

இலங்கைக்கான தமது பயணத்தை மேற்கொண்டிருந்த அமெரிக்காவின் சிறப்புத் தூதர் ஸ்டீஃபன் ஜே ரப், தனது விஜயத்தின் முடிவில் வெளியிட்ட அறிக்கையிலேயே இதைத் தெரிவித்துள்ளார்.

நம்பகத்தன்மையுடன் கூடிய சுயாதீனமான விசாரணைகள் மூலமே உண்மையைக் கண்டறிய முடியும் எனவும், தேவையேற்படும் சந்தர்ப்பத்தில் குற்றமிழைத்தவர்களை சட்டத்தின் முன் நிறுத்துமாறும் இலங்கை அரசை அமெரிக்கா ஊக்குவிக்கிறது எனவும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

இலங்கையில் அனைத்து மக்களும் சுபீட்சம் மற்றும் சமாதானத்துடன் வாழ இலங்கை அரசுடன் இணைந்து பணியாற்றுவதற்கு அமெரிக்கா தொடர்ந்து அர்ப்பணிப்புடன் உள்ளது எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

இறுதிப் போரின்போது இடம்பெற்ற சம்பவங்கள், அவற்றுக்கான தீர்வுகள் தொடர்பாக அனைத்து தரப்பினரும் இணக்கப்பாட்டுக்கு வருவது அவசியம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அப்படியான ஒரு நடவடிக்கையின் மூலமே இலங்கை ஜனநாயகத்தின் ஆட்சியை நிலைநிறுத்த முடியும் எனவும், ஒன்றிணைந்த ஒரு நாடாக இலங்கை முன்னேறிச் செல்வதும் மிகவும் முக்கியமானது எனவும் அமெரிக்காவின் சிறப்புத் தூதர் ஸ்டீஃபன் ஜே ரப் கூறியுள்ளார்.

http://www.bbc.co.uk/tamil/sri_lanka/2014/01/140112_raplankavisit.shtml

  • கருத்துக்கள உறவுகள்
சர்வதேச விசாரணையை வலியுறுத்துவதை கடுமையாக எதிர்க்கின்றேன்: வாசுதேவ

vasudeva.jpgஇலங்கை தொடர்­பி­லான சர்­வ­தேச விசா­ரணை தேவை­யென்ற வலி­யு­றுத்­தலை கடு­ மை­யாக எதிர்க்­கின்றேன். இது அவ­சி­ய­மற்­றது மட்­டு­மல்ல எமது நாட்டின் இறை­யாண்­மையை மீறும் செய­லாகும் என அமைச்சர் வாசு­தேவ நாண­யக்­கார தெரி­வித்தார்.எமக்கு எதி­ராக பொரு­ளா­தா­ரத்­தடை விதிக்­கப்­ப­டு­மானால் அது எமது பொரு­ளா­தா­ரத்தை பாதிக்கும் என்றும் அமைச்சர் தெரி­வித்தார்.எமக்கு மறைப்­ப­தற்கு எது­வுமே இல்லை. எவரும் இங்கு வந்து அனைத்­தையும் பார்­வை­யி­டலாம். அதற்­கான கத­வுகள் திறந்தே உள்­ளன என்­பதே ஜனா­தி­ப­தியின் கொள்­கை­யாகும். அதற்­க­மை­யவே அமெ­ரிக்­காவின் விசேட பிர­தி­நிதி ஸ்டீபன் ரெப்­புக்கும் அனு­மதி வழங்­கப்­பட்­டது. அவ்­வாறு வந்­த­வர்கள் குற்­றச்­சாட்­டுக்­களை சுமத்­தலாம் எனக் குறிப்பிட்டார்.

ஐ.நா மனித உரிமை ஆணைக்­குழு மாநாட்டில் எமக்­கெ­தி­ராக அமெ­ரிக்க பிரே­ர­ணை­களை சமர்ப்­பிக்­கலாம். ஆனால், அதற்கு எம்மால் பதில்­களை வழங்க முடியும். அதற்குத் தயா­ரா­கவே இருக்­கின்றோம் எனவும் தெரிவித்தார்.

நல்­லி­ணக்க ஆணைக்­கு­ழுவின் பரிந்­து­ரைகள் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றதா உட்­பட வேறு பல விட­யங்­களை வெளி­நா­டு­களால் கண்­கா­ணிக்க முடியும். ஆனால், எங்கள் விட­யங்­களை சர்­வ­தேச ரீதியில் விசா­ரணை செய்ய முடி­யாது. அதற்கு இட­ம­ளிக்க முடி­யாது. சர்­வ­தேச விசா­ரணை என்ற பேச்­சுக்கே இங்கு இட­மில்லை என்றார்.

அதனைக் கடு­மை­யாக எதிர்க்­கின்றேன். இது எமது நாட்டின் இறை­யாண்­மையை மீறும் செய­லாகும். ஐ.நா சபையால் பொரு­ளா­தா­ரத்­தடை விதிக்க முடி­யாது. மாறாக அமெ­ரிக்கா உட்­பட வேறு நாடுகள் தாம் நினைத்தால் பொரு­ளா­தாரத் தடைகள் விதிக்­கலாம் எனக் குறிப்பிட்டார்.

அவ்­வா­றான தடைகள் விதிக்­கப்­ப­டு­மானால் எமது பொரு­ளா­தாரம் பாதிக்கும். யாழ்.மன்னார் ஆயர்­க­ளுக்கு அவர்­க­ளது நிலைப்பாட்டை தெரிவிக்கும் உரிமையுண்டு. அதேவேளை, ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை நிராகரிக்கும் உரிமை எமக்கு உள்ளது என்றும் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/101551/language/ta-IN/---.aspx

எத்தனை வருடங்களாக

சிவப்பு புத்தகங்களையும்

அதன் தலைவர்களையும்  

பயின்ற

பழகிய

இந்த சிவப்பு போராளி

தனது இனம் என்று வந்ததும் எப்படி விசத்தை கக்குகிறது :(  :(

எத்தனை வருடங்களாக

சிவப்பு புத்தகங்களையும்

அதன் தலைவர்களையும்  

பயின்ற

பழகிய

இந்த சிவப்பு போராளி

தனது இனம் என்று வந்ததும் எப்படி விசத்தை கக்குகிறது :(  :(

பாம்பில நல்லது கெட்டது இருக்கிறதா அது போலத்தான் சிங்களவனும்  

  • கருத்துக்கள உறவுகள்

எத்தனை வருடங்களாக

சிவப்பு புத்தகங்களையும்

அதன் தலைவர்களையும்  

பயின்ற

பழகிய

இந்த சிவப்பு போராளி

தனது இனம் என்று வந்ததும் எப்படி விசத்தை கக்குகிறது :(  :(

படிப்பது தேவாரம். இடிப்பது சிவன் கோவில். இது தான் சிவப்பு புத்தககாரரின் நிலை. இவரும் சரி.டக்ளசும் சரி.இவர்கள் சிறந்த உதாரணங்கள்.

எத்தனை வருடங்களாக

சிவப்பு புத்தகங்களையும்

அதன் தலைவர்களையும்

பயின்ற

பழகிய

இந்த சிவப்பு போராளி

தனது இனம் என்று வந்ததும் எப்படி விசத்தை கக்குகிறது :(:(

சிவப்பு புத்தகம் இலண்டனில் எழுத பட்டது. எழுத காசு போட்ட முதலாளி என்கல், இண்டஸ்ட்ரியல் உகத்திற்கு கூலி பிடிக்க எழுதுவித்தார்.

உலக போர் ஒன்றின் முன் 80% மக்கள் விவசாயத்தில் தங்கி இருந்தார்கள்.

அவர்களை ஊரில் இருந்து கிழப்பி நகர குப்பங்களுக்கு வரவைப்பது, மிடில் கிளாஸ் ஆளும் வர்க்கத்தை அழித்து செஞ்சேனை தலைவரின் அடிவருடி ஆக்குவது தான் திட்டம்.

இந்திய, சீன, ஆப்பிரிக்க, கிழக்கு ரசிய, மத்திய, தென் அமெரிக்காவில் பரப்பி ஆதாயம் தேடினார்கள்.

காஸ்ட்ரோ சகோதரர்கள் கூபாவில் செய்யும் கொடுமையை பார்த்தால் சிவப்பு புத்தகத்தின் அருமை தெரியும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.