Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விரைவில் அமைச்சரவை மாற்றம் – பீரிசின் பதவி பறிபோகிறது!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
Mahinda-Samarasinghe-160114-150.jpg

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தின் அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படவுள்ளதாக கொழும்பு தகவல்கள் கூறுகின்றன. பிரதமர் உள்ளிட்ட முக்கிய அமைச்சு பதவிகளில் மாற்றங்கள் இடம்பெறும் எனவும் வெளியுறவு அமைச்சராக,மஹிந்த சமரசிங்க நியமிக்கப்படுவார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது. ஜெனீவா மனித உரிமை பேரவை, மற்றும் தென், மேல் மாகாணசபைத் தேர்தல்கள் நடைபெறுவதற்கு முன்னர் அமைச்சரவை மாற்றம் நடைபெறலாம் என தகவல்கள் கூறுகின்றன.

  

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர் அமைச்சர் மைத்திபால சிறிசேன, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலாளர் அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த ஆகியோருடன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இதுபற்றிக் கலந்துரையாடியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. புதிய பிரதமர் தொடர்பாக இன்னமும் முடிவு எடுக்கப்படவில்லை என்றும் அதற்கான தீர்மானம் எடுக்கப்பட்ட பின்னர் அமைச்சரவை மாற்றம் குறித்து அறிவிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

 

http://www.seithy.com/breifNews.php?newsID=101515&category=TamilNews&language=tamil

ஆதாரம் அரிதாரம் இல்லாமல் பீரிசின் மீது தனி மனித தாக்குதல் நடத்துவதை யாழ் நிர்வாகம் கண்டிக்கவில்லையா?

Edited by விவசாயி விக்

ஒரு பீரிஸ் போனால் இன்னொரு தொடங்கோடவோ அல்லது தர்மசிறியோ வருவர் 

 

இதில எல்லாம் சிற்றின்பம் கனுமளவுக்கு மோசமா நீங்கள்?

கதிர்காமரை பிரதியிடத்தான் பேராசிரியர் பீரிசை போட்டது. போட்டுவிட்டு பின்னர் அவரையும் பேயாசிரியர் ஆக்கினார்கள். மனிசனும் பணம் வந்தால் காணும் என்று மாறிவிட்டது.

ஐ.நா. மனித உரிமை ஆணைக்­கு­ழுவின் கூட்டத் தொடரைப் பயன்­ப­டுத்தி மேல், தென் மாகாண சபை­க­ளுக்­கான தேர்­தல்­களை வெற்றி கொள்ள அர­சாங்கம் திட்­ட­மிட்­டுள்­ளது. இதனை இலக்கு வைத்தே அர­சாங்கம் செயற்­ப­டு­கின்­றது என்று ஜே.வி.பி. குற்றம் சாட்­டு­கின்­றது.
நாட்டை பாது­காக்­கவோ, மேற்­கு­லக நாடு­களின் அச்­சு­றுத்­தல்­க­ளி­லி­ருந்து விடு­படும் நோக்கமோ அர­சுக்­கில்லை. மாறாக ஆட்­சி­ய­தி­கா­ரத்தைதக்க வைத்­துக்­கொள்ளும் முயற்­சி­களே முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றது என்றும் அக்­கட்சி தெரி­வித்­தது.

பெல­வத்­தை­யி­லுள்ள ஜே.வி.பி. யின் தலைமை அலு­வ­ல­கத்தில் நேற்று வியா­ழக்­கி­ழமை இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் மாநாட்டில் உரை­யாற்றும் போதே பாரா­ளு­மன்ற உறுப்­பினர் அநுர திஸா­நா­யக்க இதனைத் தெரி­வித்தார்.

இவர் இங்கு தொடர்ந்து உரை­யாற்­று­கையில்,

ஐ.நா. மனித உரி­மைகள் மாநாட்டில் அமெ­ரிக்கா - இலங்­கைக்கு எதி­ரான பிரே­ர­ணையை எப்­போது முன்­வைக்­கப்­போ­கின்­றது என்­பதை தெரிந்து கொள்ளும் வரை அர­சாங்கம் மேல்­மா­காணம், தென் மாகாண சபை­களை கலைக்­க­வில்லை. அப்­பி­ரே­ரணை மார்ச் 28ஆம் திகதி முன்­வைக்­கப்­ப­டு­மென்­பதை தெரிந்து கொண்டே அர­சாங்கம் அதற்கு அடுத்த நாள் மார்ச் 29ஆம் திகதி தேர்­தலை நடத்தும் விதத்தில் மேல் மாகாணம் மற்றும் தென் மாகாண சபை­களை கலைத்­தது.

தேர்தல் நடை­பெறும் தினத்தை ஆணை­யா­ளரே அறி­விப்பார். ஆனால் தற்­போது அத்­தி­னத்தை அமைச்சர் மகிந்த யாப்பா தெரி­வித்­துள்ளார். மார்ச் 29 தேர்தல் எனக் கூறி­யுள்ளார்.

மார்ச் 28ஆம் திகதி அமெ­ரிக்கா இலங்­கைக்கு எதி­ரான பிரே­ர­ணையை முன்­வைக்கும். அதன் பின்னர் அன்­றைய தினம் இரவே ஜனா­தி­பதி டி.வி, வானொ­லிகள் ஊடாக மக்­க­ளுக்கு விசேட உரை­யாற்­றுவார்.

இவ் உரையில் என்னை மின்­சாரக் கதி­ரையில் அமர வைக்கப் போகின்­றார்கள் சர்­வ­தேச போர்க் குற்ற விசா­ரணை மேற்­கொள்­ளப்­படும். எனவே வெற்­றி­லைக்கு வாக்­க­ளித்து அரசின் ஸ்திரத்­தன்­மையை அரசு உறு­திப்­ப­டுத்த வேண்டும் என புலம்­புவார்.

இவ்­வாறு மக்­களை ஏமாற்றி மாகாண சபை தேர்­தல்­களில் வெற்றி பெற்று ஆட்­சி­ய­தி­கா­ரத்தை தொடர்­வதே அர­சாங்­கத்தின் நோக்­கமே தவிர இலங்­கைக்கு எதி­ரான அமெ­ரிக்கா மற்றும் மேற்­கு­லக நாடு­களின் அச்­சு­றுத்­தல்கள் அழுத்­தங்­க­ளி­லி­ருந்து நாட்­டையும் மக்­க­ளையும் பாது­காக்கும் திட்டம் கிடை­யாது.

தேர்­தல்கள் நடத்­தப்­ப­ட­வுள்ள மாகாண சபை­களின் ஆட்­சி­ய­தி­காரம் செப்­டெம்பர் மாதம் வரை உள்­ளது. இதனை கலைத்து தேர்தல் நடத்த வேண்­டு­மென மக்கள் கேட்­க­வில்லை ஊட­கங்கள் எழு­த­வில்லை.

ஆனால் அர­சாங்கம் தனது ஆட்­சி­ய­தி­கா­ரத்தை தக்­க­வைத்துக் கொள்­வ­தற்­காக ஐ.நா. மாநாட்டை பயன்­ப­டுத்தி மக்­களை ஏமாற்றி வாக்­கு­களை கொள்­ளை­ய­டித்து வெற்றி பெறும் நோக்­கி­லேயே தேர்­தலை நடத்­து­கின்­றது.

சர்­வ­தேச நீதி­மன்றம்

யுத்தக் குற்றச் சாட்­டுக்கள் தொடர்­பாக இலங்­கைக்கு எதி­ராக சர்­வ­தேச நீதி­மன்­றத்தில் விசா­ர­ணைகள் நடத்த முடி­யாது. ஏனென்றால் இது தொடர்­பான சர்­வ­தேச பிர­க­ட­னத்தில் அமெ­ரிக்கா மற்றும் இலங்கை கையெ­ழுத்­தி­ட­வில்லை.

இந்தப் பிர­சாரம் மக்­களை ஏமாற்றும் பொய் பிர­சா­ர­மாகும். அர­சாங்கம் தமது சுய­வி­ருப்பின் பேரி­லேயே இவ்­வி­சா­ர­ணைக்கு போக முனை­கி­றது. இதன் உண்­மையை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

ஐ.நா.வில், ஐ.நா. மனித உரிமை ஆணைக்­குழு மாநாட்டில் அமெ­ரிக்கா இலங்­கைக்கு எதி­ரான பிரே­ர­ணையை கொண்டு வந்து அது நிறை­வேற்­றப்­ப­டு­வது உறு­தி­யாகும்.

ஆனால் அர­சாங்கம் இந்­தச்­ச­வா­லுக்கு முகம்­கொ­டுப்­ப­தற்கு தயா­ரா­கின்­றதா என்றால் இல்­லை­யென்றே கூற வேண்டும்.

இலங்­கைக்­காக வெளி­நா­டு­களில் 64 தூத­ர­கங்கள் மற்றும் கொன்­சி­யூலர் பிரி­வுகள் உள்­ளன. இவற்றில் 42இல் தூது­வர்­க­ளா­கவும் கொன்­சி­யூ­லர்­க­ளாக நிய­மிக்­கப்­பட்­டி­ருப்­ப­வர்கள். ராஜ­தந்­திர கல்வி அறிவில் லாத அர­சி­யலில் தோல்வி கண்ட அரசு சார்­பா­ன­வர்­களும் உற­வி­னர்­க­ளுமே அவர்­க­ளாவர்.

உதா­ர­ண­மாக இத்­தாலி நாட்டின் தூது­வ­ராக அர­சி­யலில் மக்­களால் நிரா­க­ரிக்­கப்­பட்ட தாவலகே பெனட் குரே நிய­மிக்­கப்­பட்­டுள்ளார். ஜெர்­ம­னியில் சரத் கோங்கா கே ஐக்­கிய அரபு ராஜ்­ஜி­யத்தின் தூது­வ­ராக கட்­டு­நா­யக்­காவில் இடம்­பெற்ற தொழி­லாளர் ஆர்ப்­பாட்­டத்தில் பொலி­ஸாரின் துப்­பாக்கிச் சூட்டில் பலி­யான தொழி­லா­ளியின் மரணம் தொடர்பில் பிழையை ஏற்று பொலிஸ் மா அதிபர் பத­வியை ராஜி­னாமாச் செய்த மகிந்த பால­சூ­ரிய நிய­மிக்­கப்­பட்­டுள்ளார்.

இவ்­வாறு ரஷ்யா, அமெ­ரிக்கா, புரூணை உட்­பட 42 நாடு­களில் இவ்­வா­றா­ன­வர்­களே நிய­மிக்­கப்­பட்­டுள்­ளனர். ராஜ­தந்­திர அறி­வில்­லாத இவ்­வா­றா­ன­வர்­களால் எப்­படி ஐ.நா.வினதும் அமெ­ரிக்கா உட்­பட மேற்­குல நாடு­க­ளி­னதும் இலங்கைக்கு எதிரான நடவடிக்கைகளை நிறுத்த முடியும்.

உள்நாட்டில் மனித உரிமைகளை பாதுகாக்கவோ ஜனநாயகத்தை உறுதிப்படுத்தும் நடவடி க்கைகளோ எடுக்கப்படவில்லை.

எனவே அமெரிக்கா உட்பட மேற்குலக நாடுகளுக்கு இலங்கையில் தலையி டுவதற்கும் எதிராக பிரேரணையை முன்வை ப்பதற்கும் அரசாங்கமே கதவுகளை திறந்து விட்டுள்ளது. இதனால் இந்த அரசின் நடவடிக்கை களுக்கு எதிராகவும் சர்வதேசத்தின் தலையீட்டுக்கு எதிராகவும் மக்கள் அணி திரள வேண்டும் என்றார்.

 

http://www.virakesari.lk/?q=node/360720


பதவி மாற்றங்கள் இராஜ குடும்பம் உள்புகவே.

கதிர்காமரை பிரதியிடத்தான் பேராசிரியர் பீரிசை போட்டது. போட்டுவிட்டு பின்னர் அவரையும் பேயாசிரியர் ஆக்கினார்கள். மனிசனும் பணம் வந்தால் காணும் என்று மாறிவிட்டது.

பதவி போனால் வெளிநாடு வந்து உழைத்த காசை எல்லாம் போட்டு மயிர் நடுவது தானாம் திட்டம்.

அவருக்கும் இரண்டாம் உலக ஆர்யா போல் கூந்தலை சிலிர்த்து கொண்டு திரிவது தான் கடைசி ஆசை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.