Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குருபரன் உண்மையில் கடத்தப்பட்டாரா? (ஓர் அலசல்? அலைச்சல்?)

Featured Replies

நன்றி தல,

இந்த மாட்டுக் கருத்துக்காரருடன் செலவிட்ட நேரத்தை களத்தில் பயனுள்ள விடயங்களை பகிர்ந்து கொள்ளப் பயன்படுத்துங்கள் களத்தில தொடர்ந்து சந்திப்போம்.

(சத்தியமாய்ச் சொல்கிறேன். தங்கள் வாதத் திறமையையும் விடய ஞானத்தையும் நான் மெச்சுகிறேன். அந்தத் திறமை விழலுக்கிறைத்த நீராகி வரகிறதே என்ற ஆதங்கத்தில் தான் அப்படி எழுதினேன்.)

  • Replies 84
  • Views 13k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இந்தக் களத்திலேயே, தன் முகம், முகவரியைக் கூட, துணிவாக வெளியிட்டுப்பவர் அஜீவன் மட்டும் தான். நானோ, அல்லது களத்தில் இருக்கின்ற வேறு யாருமோ, ஏன் நிர்வாகம் கூட, பெயர், முகவரி, சரியான இடத்தைக் கூடத் தெளிவாகக் காட்டவில்லை.

அதை விட, டாம் என்பவர், அவர் புளோட்டில் இருந்ததைப் பற்றிச் சொன்னார். அந்த உண்மையைக் கூட, அஜீவன் சொல்லித் தானே மற்றவர்களுக்குத் தெரியும். அப்படியிருக்க அவரைப் பற்றி எழுந்தமானமாக எழுத நினைப்பவர்கள், உண்மையில் யோசிக்க வேண்டும்.

அதிலும், குருபரன் பற்றி அஜீவன் எழுதியதன் உள்நோக்கத்தைப் பார்த்தாலே புரிந்து கொள்ளமுடியும். சிங்களத் பிபிசிக்கும், தமிழிற்கும், ஏன் மாறுபட்ட விதத்தில் கதைக்கவேண்டும் என்பது தான். ஆக குருபரன் ஏன் இரண்டு முகத்தில் கதைக்க வேண்டும் என்று!

அதைச் சந்தித்து பதிலளிக்கத் தெரியாதவர்கள், நீ போறியா, வாறியா என்று கேட்பது கூட, இயலாமையிலும், இயலாமை! நான் அறிந்தவரை, குருபரன், வானொலியில் தமிழ்தேசியத்திற்கு எதிராகக் கதைத்தில்லை. ஆனால், இப்படியான மாறுபட்ட, விளக்கத்தால் ஏன் தமிழ் தேசியத்தைக் கொச்சைப்படுத்துகின்றார். அதற்குப் பதிலளிக்கத் தெரிந்தால் அளியுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி தல,

இந்த மாட்டுக் கருத்துக்காரருடன் செலவிட்ட நேரத்தை களத்தில் பயனுள்ள விடயங்களை பகிர்ந்து கொள்ளப் பயன்படுத்துங்கள் களத்தில தொடர்ந்து சந்திப்போம்.

(சத்தியமாய்ச் சொல்கிறேன். தங்கள் வாதத் திறமையையும் விடய ஞானத்தையும் நான் மெச்சுகிறேன். அந்தத் திறமை விழலுக்கிறைத்த நீராகி வரகிறதே என்ற ஆதங்கத்தில் தான் அப்படி எழுதினேன்.)

உங்களின் கருத்துக்கு நன்றி. ஆனால் அதில் சரியானதாகத் தெரியவில்லை. இங்கு எந்த நோக்கத்திற்கு எவர் எழுதுகின்றார் என்ற பிரச்சனைக்கு அப்பால், அவர்களுக்குப் பதில் கூறவிட்டால், அதுவே ஒரு தீர்வாகப் போய்விடும் என்பதில் கவனமாக இருக்கவேண்டும்.

அதுவே தேவையாகவும் இருக்கின்றது. தங்களின் விதண்டாவாதஙகளுக்கு சரமாரியான கண்டணங்கள் வரும்போது, எனிமேல் அவரோடு கதைக்கமாட்டேன் என்று "டூ" போடுகின்ற வழக்கத்தையும் காணமுடிகின்றது. :wink: வேணுமென்றால் அப்படிப்பட்ட , இழிச்சவாய்த்தனமாக எழுதும்போது, அத்தோடு நிறுத்திக் கொள்ளலாம்! :wink:

தலா - சத்தியன் - தூயவன் - சோழியன் மற்றும் அனைத்து நண்பர்களது புரிதலுக்கும் நன்றி.

சத்தியன் சொன்னது போல தேவையில்லாம

நேரத்தை இதுக்காக செலவிட்டுட்டோம்.

புது அத்தியாயத்தை பார்த்துக் கொண்டு இருக்கிறேன்.

பதில் கொடுக்க இல்ல.

ரசிக்கிறதுக்கு :( :P :(

WITH MONEY YOU CAN BUY A CLOCK BUT NOT TIME

-CHINESE PROVERB

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நண்பனிடம் கடன் வாங்கி அண்றைய தினம் ஆசையாக பியர் சாப்பிட்டவர் பஸ்சுக்காக போனபோது கடத்தப்பட்டார்...!  திரும்பி வந்திருந்தாலும்... யாரும் ஒண்றும் சொல்லி இருக்க மாட்டார்கள்... காரணம் தாரகி அவர்கள் தமிழ் மக்கள் மத்தியில் சொற்களால் பேனா முனையால் பிரபலமானவர்... ஆனால் பணக்காறர் அல்ல...! கொல்லப்படுவார் என்பதும் எல்லாருக்கும் தெரிந்துதான் இருந்தது....! அப்படி வெளிப்படையான எழுத்தாளர்...!  

ஆனால் என்போண்றவர்களுக்கு குருபரன் என்பவரை இப்போதுதான் தெரியும்...! கொழும்புக்கு வெளியே  இருப்பவர்கள் எவருக்கும் அவர் அவ்வளவு அறியப்பட்டவர் கிடையாது.  அவ்வளவு மட்டுப்படுத்தி இருந்தது அவர் சேவை...!

குருபரனைத்தெரியா, சிறிலங்கா தமிழர்கள் குறைவு, அதே போல அவரை அறியாத, அரசியல் வாதிகளும் குறைவு.சிறிலங்காவுக்கு வெளியே, இருப்போருக்கு இது பற்றி தெரியாதிருப்பது வியப்புக்குரியதல்ல. சிவராம் அவர்கள், சர்வதேச இராணுவ ஆய்வாளர் என்ற வட்டகைக்குள் அடங்குபவர். குருபரன் தமிழ் செய்தியாளர் வட்டத்துக்குள், நின்றாளும் இணைய வழியே மாற்று பெயர்களுடே வரமுடிந்தது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கருத்தாடிய அனைவருக்கும், குறிப்பாக, அஜீவன்,ஜெயதேவன்,!

இங்கே, வதாடியது உங்களுக்கு எதிராக அல்ல! ஒரு திறமையான ஊடகவியலாளரை தமிழினம் இழந்து விடக்கூடாது என்பதற்காகவே! நாம் முன்னரும் சொல்லியிருக்கின்றோம்! சிவராம் மறைவால் ஏற்ப்பட்ட இடைவெளி இன்னும் நிரப்படாமல் இருக்கின்றது. அதை புகலிடத்திலிருப்போரோ, ஏன் தாயகத்திலிருப்பவர்களோ நிரப்பமுடியவில்லை. அதே துணிவோடு, தமிழில் செய்திகைள வெளியிடும் துணிவு குருபரனுக்கு உண்டு என்பதை அவரின் ஆய்வுகள், தொகுப்புக்கள், செய்திகளை கேட்பவர்களுக்கு நன்கு புரியும். அதை புரிந்தவர் என்ற வகையிலே நான் வாதாடினேன். குருபரனை எனக்கு நேரடிய பழக்கமில்லை. ஆனாலும், அவரின் துணிவுபற்றி, எனக்குள் பெருமைப்பட்டுக்கொள்ளும் ஒருவன்.

இங்கே வேண்டப்படாதா சில கேள்விகளுக்கு காரணம் வேண்டுமென்றே, குறிப்பாக "மாற்றுக்கருத்தாளர்கள்" என்ற தொனியில் குருபரன் மீது அபாண்டமான, குற்றச்சாட்டுக்கள் எழுப்பட்டமையே! புளொட் அமைப்பில் அவர் இணைந்திருக்கலாம். ஆனால் அதற்காக, அவர் துரோகியாகிவிட முடியாது. அப்படி பார்த்தால் நிறையபேர் துரோகியாகியிருக்க வேண்டும். புளொட் அமைப்பின், அன்றைய உறுப்பினர்கள், அது அஜீவனாக இருக்கலாம், சிவராமாக இருக்கலாம், அல்லது குரபரனாக கூட இருக்கலாம் அவர்கள் தங்கள் கொள்கைக்கு முரணாக புளொட் செயற்ப்பட தொடங்கிய பின்னே அதிலிருந்து முற்றாக விடுபட்டு விட்டனர். இன்று புளொட்டில் துரொக செயலுக்காக, அன்றைய புளொட் விடுதலைக்காக, போடவில்லை என்றோ, அங்கே தமிழீழ விடுதலையை நோக்கி தமிழர்கள், போராடவில்லை என்றோ, நாம் சொல்லிவிட முடியாது. இதை தலைவர் கூட எங்கோ குறிப்பிட்டு சென்னதை பார்த்திருக்கிறேன் (வீடியோவில்தான் பிறகு அதுக்கு வேற கதை கட்டிடாதீங்க) அந்த ஒரு காரணத்தை மையமாக, வைத்து நிதர்சனம் செய்த ஆய்வையே நான் சாட விளைந்தேன். ஏதோ புலனாய்வு புடுங்கிறம் என்று, சொல்லும் இவர்களின் ஆய்வு புலனாய்வுக்கு " ஒரு சிறந்த சமூக நோக்கம் கொண்ட ஊடகவியலாளர் தான் கிடைத்தாரா"? என்ற கேள்வியை என்னை அவர்களுக்கு பதிலளிக்க வைத்தது.

ஜெயதேவன் அவர்கள் சொன்னது போல, எந்த ஊடக போட்டியிலும் நான் நிதர்சனத்தை விமர்சிக்கவில்லை. விமர்சனம், ஆய்வு என்பது தனிப்பட்ட ரீதியிலிருந்து செய்யப்பட வேண்டியதில்லை. அதற்கான ஒரு வரை முறையுள்ளது. அதைத்தாண்டி சென்றால் அதன் பெயர் ஊடகமல்ல. பாடசாலை சென்றவனுக்கும் அதற்க்கு செல்லாதவனுக்கும் ஒரு வித்தியாசமிருக்கிறது. அந்த வித்தியாசத்தை நிதர்சனத்திடம் எதிர்பார்த்தேன்! ஏன்? ஒரு நிதர்சனத்தின் வாசகனாய்! ஒரு வாசகனாய் அவர்களுக்கு பல முறை மின்னஞ்சல் கூடச் செய்தேன் அதற்க்கு பதிலே வரவில்லை. அதன் பின்னரே நான் நேரடியாக நிதர்சனத்துக்கு எதிராக கருத்தை முன்வைத்தேன். இதை புரிந்து கொள்ள கூடியவராக நீங்கள் இருந்தால் நிச்சயம் புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகின்றேன்.

கடந்த சில தினங்களாக யாழ் இணையத்தில் மனித நாகரீகமோ மனிதாபிமானமோ அற்றவகையில் சிலர் கருத்து தெரிவித்து வருவதாக என்னுடைய சக ஊடகத்துறை நண்பர் ஒருவர் தெரிவித்ததையடுத்து அதை பார்த்தேன்.

ஐரோப்பிய நாடுகளில் இப்படியும் சில மனிதர்களா என்று எண்ணத்தோற்றியது.

உண்மையாக எங்கள் நெருக்கடிகளையும் துன்பங்களையும் புரிந்து கொண்டு கருத்து கூறியவர்களுக்கு ஊடகவியலாளர்கள் சார்ப்பில் நன்றியை கூறிக்கொள்கிறேன்.

வலிகளும் வேதனைகளும் நெருக்கடிகளுக்குள் இருந்து வேலை செய்பவர்களுக்குதான் புரியும்.

மிகவும் நெருக்கடிக்குள்ளும் உயிராபத்தின் மத்தியிலும் பணியாற்றிவரும் எங்களைப்பற்றி பேசுவதாக இருந்தால் முதலில் கொழும்பிலோ யாழ்ப்பாணத்திலோ மட்டக்களப்பிலோ வந்திருந்து பணியாற்றிபார்த்தால் அதன் கஸ்டங்கள் புரியும். ஐரோப்பிய நாடுகளில் இருந்து கொண்டு எதையும் பேசலாம்.

கணணிகளுக்கு முன்னால் இருந்து பிழையாக தமிழை எழுதிக்கொண்டு கருத்துக்களத்தையே கொச்சைப்படுத்திக்கொண்டிருப

கௌசிகன்

உங்கள் வேதனைகளை உணர்ந்தவர்கள் நிறையப்பேர் இங்கேயும் உள்ளார்கள். உணராதவர்களுக்கு உணர வைக்கவும் பலர் முயன்றுமுள்ளனர். சிலரின் வாதங்கள் தப்பான புரிந்துணர்வுகளால் ஏற்பட்டிருக்கலாம். அவர்களும் இனி நிச்சயம் புரிந்து கொள்வார்கள் என்று நம்புகின்றேன். தற்போதைய நிலையில் உங்களைப் போன்ற ஊடகவியலாளர்களின் தன்னிகரில்லா சேவையே அங்குள்ள எம் மக்களுக்கத் தேவை. எந்த வேதனைகளையும் நெஞ்சில் சுமக்காமல் தொடரட்டும் உங்கள் சுயநலமில்லா சேவை.

கௌசிகன்

உங்கள் வேதனைகளை உணர்ந்தவர்கள் நிறையப்பேர் இங்கேயும் உள்ளார்கள். உணராதவர்களுக்கு உணர வைக்கவும் பலர் முயன்றுமுள்ளனர். சிலரின் வாதங்கள் தப்பான புரிந்துணர்வுகளால் ஏற்பட்டிருக்கலாம். அவர்களும் இனி நிச்சயம் புரிந்து கொள்வார்கள் என்று நம்புகின்றேன். தற்போதைய நிலையில் உங்களைப் போன்ற ஊடகவியலாளர்களின் தன்னிகரில்லா சேவையே அங்குள்ள எம் மக்களுக்கத் தேவை. எந்த வேதனைகளையும் நெஞ்சில் சுமக்காமல் தொடரட்டும் உங்கள் சுயநலமில்லா சேவை.

இதேதான் எங்கள் கருத்தும். அதுமட்டுமன்றி..எப் எம் 99 சக்தி சூரியன் என்று போட்டி போட்டு வந்த காலத்திலேயே சூரியனை விரும்பிய நேயர்களில் நாங்களும் எங்கள் பல்கலைக்கழக நண்பர்களும் அடங்குவோம்..அந்த வகையில் சூரியன் எங்களை செய்திகளால் கவர்ந்திருந்தது. இலங்கை வானொலிச் செய்தியைக் கேட்டு வெறுத்துப் போன எங்களுக்கு சூரியன் தந்த தெம்பை உயிருள்ள வரை மறவோம் நண்பரே..! நீங்கள் தனித்தவர்கள் அல்ல..உங்களோடு நாம் என்றும் இணைந்திருப்போம்..எங்கிருப்பி

[ஃஉஒடெ="ஆJஏவன்"]

தவிரவும் இவரது மனைவியின் பேட்டியை 29ம் திகதி கேட்கக் கூடியதாக இருந்தது.

அவர் பேச்சில் கணவரை பறி கொடுத்த எவ்வித கலக்கமும் இருக்கவில்லை. பேசும் போது "அவரை கடத்தியவர்கள் விட்டு விடுவார்கள் என்று நம்புகிறேன்" என்றார்.

இவற்றை வைத்தே அவரை யாரும் கடத்தவில்லை.

அவரே அவரால் கடத்தப்பட்டார் என்று எண்ண வைத்தது.

இவற்றைப் பார்க்கும் போது தற்போதைய சூழ்நிலையை வைத்து வெளிநாடு ஒன்றுக்குள் புகுவதற்கான ஒரு அத்தாட்சியை பெற இவர் நடத்திய நாடகம் போலவே எண்ணத் தோன்றுகிறது. இதில் யாரும் சம்பந்தப் பட்டதாகவே தெரியவில்லை.

எதிர்காலத்தில் இவர் புலம் பெயர் நாடொன்றில் இருப்பார் என்பதை நம்புவோம்.

வாழ்த்துக்கள்!

ஏமாற்றாதே ஏமாற்றதே

ஏமாறாதே ஏமாறாதே என்ற

மக்கள் திலகத்தின் அடிமைப் பெண் பாடல்தான்

நினைவுக்கு வருகிறது............... :லொல்:

முடிந்தால் அவரது வானோலியில் ஒலிக்க வைத்து

ஒரு முறை கேட்கட்டும்............... :லொல்:

[/ஃஉஒடெ]

அஜீவனது சந்தேகம் (ஒரு வேளை) நியாயமாக இருந்தாலும் அவரது ஊகங்கள் அருவருப்பையே தருகின்றன. உண்மை எதுவாக இருப்பினும் களத்தில் நிற்கும் ஒரு ஊடகவியலாளனை விமர்சிக்கும் போது கண்ணியமாக நடந்து கொள்வது நல்லது.

களத்தில் நிற்கும் தமிழ்த் தேசிய ஊடகவியலாளர்களுக்கு எனது வாழ்துக்கள்!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.