Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் தலைவர் பதவியிலிருந்து விலகினார் பில்கேட்ஸ்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

உலகின் முதனிலை கணனி மென்பொருள் நிறுவனங்களில் ஒன்றான மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் தலைவர் பதவியிலிருந்து பில்கேட்ஸ் விலகிக்கொண்டார்.

உலகச் செல்வந்தர்களில் முன்னணி வகித்து வரும் பில் கேட்ஸ் மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் ஸ்தாபகர் என்பது குறிப்பிடத்தக்கது.

பணிப்பாளர்களில் ஒருவரான ஜோன் தொம்பசன் நிறுவனத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பணிப்பாளர் பதவியிலிருந்து விலகிக் கொண்ட பில் கேட்ஸ், நிறுவனத்தின் தொழில்நுட்ப ஆலோசகராக தொடர்ந்தும் பணியாற்றுவார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

மேலும் நிறுவனத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினராகவும் கடமையாற்றுவார் என குறிப்பிடப்படுகிறது.

இதேவேளை, இந்தியாவைப் பிறப்பிடமாகக் கொண்ட சத்யா நடெல்லா மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் க்ளவுட் மற்றும் என்டர்பிரைஸ் பிரிவின் பணிப்பாளராக நடெல்லா கடமையாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இது வரை காலமும் நிறைவேற்றுப் பணி;ப்பாளராக கடமையாற்றி வந்த ஸ்டீவ் பால்மர், பதவி விலகுவதாக கடந்த ஆண்டே அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

'தொழில்நுட்பம் ஊடாக உலகை மாற்றியமைத்த ஒருசில உலக நிறுவனங்களில் மைக்ரோசொப்ட் நிறுவனம் முன்னணி வகிக்கின்றது', 'நிறுவனத்தை வழிநடத்த தெரிவு செய்யப்பட்டுள்ளதனை விடவும் வாழ்க்கையில் அதிகபடியான கௌரவம் எப்போதும் கிடைக்கும் என நம்பவில்லை' என நடெல்லா தெரிவித்துள்ளார்.

பாவனையாளர்களுக்கு துரித கதியில் புத்தாக்க விடயங்களை அறிமுகப்படுத்துவதே தமது பிரதான இலக்கு என அவர் குறிப்பிட்டுள்ளார்.

46 வயதான நடெல்லா நிறுவனத்தின் மூன்றாவது நிறைவேற்றுப் பணிப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஹைட்ராபாத்தை பிறப்பிடமாகக் கொண்ட நடெல்லா 1992ம் ஆண்டு மைக்ரோசொப்ட் நிறுவனத்தில் இணைந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இலத்திரனியல், கணனி மற்றும் வியாபார நிர்வாகம் ஆகிய துறைகளில் நடெல்லா பட்டங்களைப் பெற்றுக்கொண்டுள்ளார்.

சத்யா நடெல்லாவை விடவும் சிறந்த ஒருவர் மைக்ரோசொப்ட் நிறுவனத்தை வழிநடத்த முடியாது என பில்கேட்ஸ் புகழாரம் சூட்டியுள்ளார்.

சத்யா மிகச் சிறந்த தலைவர் என்பதனை தமது திறமைகளினால் நிரூபித்துக் காட்டியுள்ளார் என அவர் தெரிவித்துள்ளார்.

 

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/102643/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறவுகள்
ஜெர்மனியின் டௌட்ச் பாங்கின் நிறைவேற்றுப் பணிப்பாளராக  இந்தியாவைப் பிறப்பிடமாகக் கொண்ட ஜெயின் 
 
பெப்சியின் நிறைவேற்றுப் பணிப்பாளராக  இந்தியாவைப் பிறப்பிடமாகக் கொண்ட இந்திரா நூஜி
 
மைக்ரோசாப்ட் நிறைவேற்றுப் பணிப்பாளராக  இந்தியாவைப் பிறப்பிடமாகக் கொண்ட சத்யா நடெல்லா
 
வோடாபோன் நிறைவேற்றுப் பணிப்பாளராக  இந்தியாவைப் பிறப்பிடமாகக் கொண்ட அருண்......
  • கருத்துக்கள உறவுகள்

இதே மைக்ரொசாஃப்ட் நிறுவனத்தை ஒரு இந்தியர் ஆரம்பித்திருந்தார் என்றால் இப்ப அவரது மகன்களும், மகள்களும் board of directors இல் இருப்பார்கள்.. :wub:

நாதமுனி அவர்கள் எல்லாம் தங்களை இந்தியனாக கணிப்பதில்லை... (அவர்களது வெற்றிக்கும் இந்தியாவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை...படிப்பிலிருந்தே)

இதே மைக்ரொசாஃப்ட் நிறுவனத்தை ஒரு இந்தியர் ஆரம்பித்திருந்தார் என்றால் இப்ப அவரது மகன்களும், மகள்களும் board of directors இல் இருப்பார்கள்.. :wub:

Tata,Hindu,Congress party etc. :)

  • கருத்துக்கள உறவுகள்

நாதமுனி அவர்கள் எல்லாம் தங்களை இந்தியனாக கணிப்பதில்லை... (அவர்களது வெற்றிக்கும் இந்தியாவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை...படிப்பிலிருந்தே)

 

என்ன சொல்கிறீர்கள்?
 
அவர்கள் அனைவரும் இந்தியாவில் படித்து மேல் படிப்புக்காக அமெரிக்கா சென்றவர்கள்.
 
INDIAN INSTITUTE OF TECHNOLOGY (IIT) குறித்து கேள்விப் பட்டு இருகிறீர்களா?
 
பாம்பே, பூனே போன்ற இடங்களில் இருக்கும் IIT கள்  உலகப் புகழ் மிக்க. இங்கே இடம் கிடைத்த மறு கணமே, உலக பெரும் நிறுவனங்கள்  படிக்கும் போதே, படிப்பு முடித்து, தமது நிறுவனத்தில் வேலை தொடங்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் அவர்களை உடனடியாக சம்பளம் கொடுத்து வேலைக்கு, எடுக்கின்றன.
 
இந்த வகையில் அமேசன் 10 கோடி சம்பளத்தில் போன ஆண்டு ஒருவரை பிடித்து அசர வைத்து உள்ளது.
 
அனேகமாக கூகிள் நிறுவனத்தில் ஒரு இந்தியர் உயர் பதவிக்கு வர கூடும். 
 
அங்கே Talent இருக்கிறது. காலனித்துவ பாரம்பரிய ஆங்கில பின்புலம் கை கொடுக்கிறது.
 
இம், அவர்கள் முன்னேற, நம் நாட்டில், புத்தரும், துப்பாக்கியும், கிபிரும், செல்லும் தான்.... 

Edited by Nathamuni

IIT/IIM கள் ஒன்றுமே உலகின் முன்னணி 100 பல்கலைக்கழகங்களில் இல்லை....(அவர்களின் தர வரிசை

 

இந்தியாவிலிருந்து நேரடியாக நியமிக்கப்பட்டால் சொல்லலாம் அவர்கள் இந்தியர்கள் என்ரு..ஆனால் நீங்கள் கூறியவர்கள் எல்லோரும் வெளிநாடுகளில் படித்தே வந்தார்கள்... ஆகவே தான் சொன்னேன் அவர்களின் முன்னேற்றத்துக்கும் இந்தியாவுக்கும் சம்பந்தம் இல்லை.. (ஈழ தமிழர்கள் வெளிநாடுகளின் பிரஜைகள் ஆனது மாதிரி...)

 

IIT யை பற்றி நீங்கள் கூறியது சரி..ஆனால் IIT இல் உள்ளவர்களை எடுப்பது இந்தியாவில் உள்ள MNC கம்பனிகள்.... (இந்தியாவில் உள்ள சாதரண கல்லூரிகளின் நிலை தெரியும் தானே.....)

Edited by naanthaan

  • கருத்துக்கள உறவுகள்

IIT/IIM கள் ஒன்றுமே உலகின் முன்னணி 100 பல்கலைக்கழகங்களில் இல்லை....(அவர்களின் தர வரிசை)

 

 

 

 

அவர்களின் தரவரிசை என்று நீங்களே சொல்லி விட்டீர்கள்.

 
மேல் நாட்டவர்கள் ஒரு போதும் கீழைத்தேய பல்கலைக் கழகங்களை தமது தரவரிசைக்குள் சேர்க்கப போவது இல்லை.
 
காரணம்,  கல்வி எனும் அவர்களது பெரு வியாபாரம் பாதிக்கப் படும்.
 
எனினும் இந்தியாவில் கல்வி கற்க, கொமன்வெல்த் நாடுகளிடையே, நியாயமான ஆர்வம் உள்ளது.
 
இலங்கை மட்டும் அல்லாது, அபிரிக்க மத்திய கிழக்கு மாணவர்கள் பலர் அங்கு செல்கின்றனர். 
 
IT , மருத்துவ, வியாபார துறைகளில் இந்தியர் பெரும் பாய்ச்சல் பாய்கிறார்கள்.  <_<
  • கருத்துக்கள உறவுகள்

இந்த பதவிக்கு கடும் போட்டியாக இருந்தவரும் இந்தியர் தான் அதிலும் நம் தமிழர் என்பதில் நாம் கர்வம் அடைய வேண்டும். அவர் பெயர் திரு. சுந்தர் பிச்சை, இவர் தமிழகத்தின் தலைநகரான சென்னையை சேர்ந்தவர் என்பது குறிப்பிடதக்கது.

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.