Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

2014 ICC World Twenty20 துடுப்பாட்ட போட்டி………செய்திகளும் கருத்துப்பகிர்வுகளும்

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சாமியின் அதிரடியில் வெஸ்சின்டீஸ் வெற்றி....

  • Replies 212
  • Views 10.9k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கிட்ட தட்ட அவுஸ்ரேலியா வெளிய தான்...

ஆஸி.க்கு அதிரடி கொடுத்த சமி: 6 விக்கெட்டுகளால் அதிரடி வெற்றி

அவுஸ்ரேலியாக்கு எதிரான இருபது-20 உலக கிண்ணத் தொடரின் இன்றைய லீக் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது.
ஐந்தாவது இருபது-20 உலக கிண்ணத் தொடர் பங்களாதேஷில் இடம்பெற்று வருகிறது. இதன் 'பிரிவு-2' லீக் போட்டியில், அவுஸ்திரேலியா, மேற்கிந்திய தீவுகள அணிகள் மோதுதின. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற   அவுஸ்திரேலிய அணித் தலைவர் பெய்லி துடுப்பாட்டத்தை தேர்வு செய்தார்.

அவுஸ்திரேலிய அணிக்கு பின்ச் (16), வோர்னர் (20) நிலைக்கவில்லை. வொட்சன் (2) ஏமாற்றினார். மேக்ஸ்வெல் (45) அதிரடி காட்டினார். ஹொட்ஜ் 35 ஓட்டங்களை எடுத்தார். மற்றவர்கள் சொற்ப ஓட்டங்களுடன் வெளியேற, அவுஸ்திரேலிய அணி 20 ஓவுரில், 8 விக்கெட்டுக்கு 178 ஓட்டங்கள் எடுத்தது. ஹெடின் (15), முரிஹெத் (1) ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

மேற்கிந்திய தீவுகளுக்கு டுவைன் ஸ்மித் (17) ஏமாற்றினார். அரை சதம் கடந்த கெய்ல் 53 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். சிம்மன்ஸ் (22) ஓரளவு கைகொடுத்தார். இறுதிவரை ஓவரில் வெற்றிக்கு 12 ஓட்டங்கள் தேவைப்பட்டன. இதில் அணித் தலைவர் சமி இரண்டு சிக்சர் விளாச, மேற்கிந்திய தீவுகள் அணி 19.4 ஓவரில், 4 விக்கெட்டுக்கு 179 ஓட்டங்களை எடுத்து வெற்றி பெற்றது. பிராவோ (27), சமி (34) ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

மற்றுமொரு போட்டியில் பங்களாதேஷ் இந்தியா பலப்பரீட்சை நடத்துகின்றன. இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் களத்தடுப்பை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது.

 

http://www.virakesari.lk/?q=node/362515

அரையிறுதியில் இந்திய அணி: ஹாட்ரிக் வெற்றி பெற்று அசத்தல்
 

 

மிர்புர்: ஐந்தாவது 'டுவென்டி-20' உலக கோப்பை தொடரின் அரையிறுதிக்கு முதல் அணியாக 'ஜோராக' முன்னேறியது இந்தியா. நேற்று நடந்த லீக் போட்டியில் வங்கதேசத்தை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி, 'ஹாட்ரிக்' வெற்றியை பதிவு செய்தது.
வங்கதேசத்தில் ஐந்தாவது 'டுவென்டி-20' உலக கோப்பை தொடர் நடக்கிறது. இதன் 'பிரிவு-2' லீக் போட்டியில் இந்தியா, வங்கதேச அணிகள் மோதின. இத்தொடரில் தொடர்ந்து மூன்றாவது முறையாக 'டாஸ்' வென்ற இந்திய அணி கேப்டன் தோனி, மீண்டும் 'பீல்டிங்' தேர்வு செய்தார்.
சபாஷ் அஷ்வின்: வங்கதேச அணியின் துவக்க வீரர் தமிம் இக்பால் (6), ஷம்சுர் ரஹ்மான் (0) என, இருவரும் அஷ்வின் சுழலில் வீழ்ந்தனர். புவனேஷ்வர் குமார் பந்தில் சாகிப்(1) போல்டாகினார்.
மிஸ்ரா மிரட்டல்: கேப்டன் முஷ்பிகுர் (24) நீடிக்கவில்லை. 9 ரன்னில் கண்டம் தப்பிய அனாமுல், 44 ரன்களுக்கு அமித் மிஸ்ரா 'சுழலில்' சிக்கினார்.பின் இணைந்த மகமதுல்லா, நாசிர் ஹொசைன் ஜோடி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அமித் மிஸ்ரா வீசிய கடைசி ஓவரில் நாசிர் ஹொசைன் (16), ஜியாவுர் (0) அவுட்டாக, வங்கதேச அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 138 ரன்கள் மட்டும் எடுத்தது. மகமதுல்லா (33) அவுட்டாகாமல் இருந்தார். இந்தியா சார்பில் அமித் மிஸ்ரா 3, அஷ்வின் 2 விக்கெட் சாய்த்தனர்.
தவான் ஏமாற்றம்: எளிய இலக்கை 'சேஸ்' செய்த இந்திய அணிக்கு ஷிகர் தவான், ரோகித் சர்மா ஜோடி துவக்கம் கொடுத்தது. கடந்த போட்டியில் 'டக்' அவுட்டான ஷிகர் தவான், இம்முறை 1 ரன் எடுத்து ஏமாற்றினார்.
சூப்பர் ஜோடி: அடுத்து ரோகித் சர்மாவுடன் இணைந்தார் விராத் கோஹ்லி. இந்த ஜோடி வங்கதேச பவுலர்களை எவ்வித சிரமும் இன்றி, எளிதாக சமாளித்தது. அல் அமின் பந்துகளை இருவரும் சிக்சர் அடித்து ரன் வேகத்தை உயர்த்தினர். சாகிப் ஓவரில் ரோகித்தும், சோகாக் காஜி ஓவரில் கோஹ்லியும் தலா இரு பவுண்டரி அடிக்க, வங்கதேச ரசிகர்கள் தோல்வி சோகத்தில் மைதானத்தை விட்டு கிளம்பினர்.
தொடர்ந்து அசத்திய ரோகித் சர்மா 7வது, கோஹ்லி 6வது அரைசதம் கடந்தனர். இரண்டாவது விக்கெட்டுக்கு 100 ரன்கள் சேர்த்த நிலையில், ரோகித் சர்மா 56 ரன்னுக்கு அவுட்டானார். இம்முறை முன்னதாக களமிறங்கிய தோனி, அல் அமின் ஓவரில் தலா ஒரு பவுண்டரி, சிக்சர் அடித்தார். தொடர்ந்து ஜியாவுர் பந்தில் தோனி 'சூப்பர்' சிக்சர் அடிக்க, இந்திய அணி 18.3 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 141 ரன்கள் எடுத்து, 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தோனி (22), கோஹ்லி (57) அவுட்டாகாமல் இருந்தனர்.
அரையிறுதியில் இந்தியா: 'பிரிவு 2' ல் இந்திய அணி தனது முதல் இரு போட்டிகளில் பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீசை வீழ்த்தியது. நேற்று 'ஹாட்ரிக்' வெற்றி பெற்ற இந்திய அணி, 6 புள்ளிகளுடன் முதல் அணியாக அரையிறுதிக்கு முன்னேறியது. இந்திய அணி தனது கடைசி மற்றும் நான்காவது லீக் போட்டியில், நாளை ஆஸ்திரேலியாவை சந்திக்கிறது.
இந்தியா 'நம்பர்-1'
நேற்று வங்கதேசத்தை வீழ்த்திய இந்திய அணி, சர்வதேச 'டுவென்டி-20' அரங்கில், இலங்கையை (128) பின்தள்ளி, 129 புள்ளிகளுடன் 'நம்பர்-1' இடத்துக்கு முன்னேறியது. அடுத்த மூன்று இடங்களில் பாகிஸ்தான் (121), தென் ஆப்ரிக்கா (118), வெஸ்ட் இண்டீஸ் (113) அணிகள் உள்ளன.

 

http://www.dinamalar.com/iccworldt20/Newsdetails.php?id=943224

டுபிளசி, சண்டிமாலுக்கு தடை
மார்ச் 28, 2014.

 

சிட்டகாங்: ‘டுவென்டி–20’ உலக கோப்பை தொடரில், தாமதமாக பந்துவீசிய இலங்கை அணி கேப்டன் சண்டிமால், தென் ஆப்ரிக்க கேப்டன் டுபிளசிக்கு தலா ஒரு போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டது.

சிட்டகாங்கில் நடந்த ‘டுவென்டி–20’ உலக கோப்பை லீக் போட்டியில், இங்கிலாந்து அணி, இலங்கையை வீழ்த்தியது. இப்போட்டியில் இலங்கை அணியினர் தாமதமாக பந்துவீசியதாக, ஐ.சி.சி., ‘மேட்ச் ரெப்ரி’ டேவிட் பூன் கூறினார். இதனையடுத்து இலங்கை அணி கேப்டன் சண்டிமாலுக்கு போட்டி சம்பளத்தில் இருந்து 20 சதவீதமும், மற்ற வீரர்களுக்கு 10 சதவீதமும் அபராதம் விதிக்கப்பட்டது.

முன்னதாக, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பல்லேகெலேயில் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில், இலங்கை அணி ஒரு ஓவர் தாமதமாக பந்துவீசியது. ஐ.சி.சி., விதிமுறைப்படி, 12 மாதங்களுக்குள் ஒரு அணி, இரண்டு முறை தாமதமாக பந்துவீசுவது குற்றம். இதனையடுத்து இலங்கை அணி கேப்டன் சண்டிமாலுக்கு ஒரு போட்டியில் விளையாட ஐ.சி.சி., தடைவிதித்தது. இதனால் வரும் மார்ச் 30ம் தேதி சிட்டகாங்கில் நடக்கவுள்ள நியூசிலாந்துக்கு எதிராக கடைசி லீக் போட்டியில் சண்டிமால் விளையாடமாட்டார். இவருக்கு பதிலாக லசித் மலிங்கா கேப்டனாக செயல்படுவார் என இலங்கை அணியின் மானேஜர் மைக்கேல் டி சோய்சா கூறினார்.

இங்கிலாந்துக்கு அபராதம்:

இப்போட்டியில் இரண்டு ஓவர்கள் தாமதமாக பந்துவீசிய இங்கிலாந்து அணி கேப்டன் ஸ்டூவர்ட் பிராட்டுக்கு போட்டி சம்பளத்தில் இருந்து 40 சதவீதமும், மற்ற வீரர்களுக்கு 20 சதவீதமும் அபராதம் விதிக்கப்பட்டது. அடுத்த 12 மாதங்களுக்கு இதுபோல மீண்டும் நடந்தால், கேப்டன் ஸ்டூவர்ட் பிராட்டுக்கு ஒரு போட்டியில் விளையாட தடை விதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டது.

டுபிளசி ‘அவுட்’:

நியூசிலாந்துக்கு எதிராக மார்ச் 24ம் தேதி நடந்த லீக் போட்டியில், தென் ஆப்ரிக்க அணி 2 ஓவர்கள் தாமதமாக பந்துவீசியது. பின், நெதர்லாந்துக்கு எதிராக மார்ச் 27ல் நடந்த போட்டியில் தென் ஆப்ரிக்க அணி ஒரு ஓவர் தாமதமாக பந்துவீசியது. 12 மாத காலத்துக்குள் இரண்டு முறை தாமதமாக பந்துவீசிய குற்றத்துக்காக, தென் ஆப்ரிக்க கேப்டன் டுபிளசிக்கு ஒரு போட்டியில் விளையாட தடைவிதிக்கப்பட்டது. இதனையடுத்து இவர், இங்கிலாந்துக்கு எதிரான இன்றைய போட்டியில் விளையாடமாட்டார். இவருக்கு பதிலாக டிவிலியர்ஸ் கேப்டனாக செயல்படுவார்.

 

http://sports.dinamalar.com/2014/03/1396028190/chandimalcricket.html

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அவுஸ்ரேலியாவின் விளையாட்டு ஏமாற்றம் அளிக்கிறது....மட்டை அடியில் பலம்..பந்து வீச்சு சுத்தமாய் நல்லாவே இல்லை....அடுத்த விளையாடில் இந்தியனுக்கு அடிச்சு மானத்தை காப்பற்றட்டும்

நியூசிலாந்து அணி வெற்றி

 

மார்ச் 29, 2014.சிட்டகாங்: நெதர்லாந்துக்கு எதிரான ‘டுவென்டி–20’ உலக கோப்பை லீக் போட்டியில் நியூசிலாந்து அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஐந்தாவது  ‘டுவென்டி–20’ உலக கோப்பை தொடர் வங்கதேசத்தில் நடக்கிறது. இதன்  ‘குரூப்–1’ லீக் போட்டியில், நியூசிலாந்து, நெதர்லாந்து அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் பிரண்டன் மெக்கலம் பவுலிங் தேர்வு செய்தார்.

 

 

நெதர்லாந்து அணிக்கு மைபர்க் (16), சுவார்ட் (26) ஓரளவு கைகொடுத்தனர். பரேசி (4) ஏமாற்றினார். கேப்டன் பீட்டர் போரன் (49) அரை சத வாய்ப்பை இழந்தார். நெதர்லாந்து அணி 20 ஓவரில், 4 விக்கெட்டுக்கு 151 ரன்கள் எடுத்தது.

 

நியூசிலாந்து அணி்ககு கப்டில் (9) சொதப்பினாலும், வில்லியம்சன் (29) வலுசேர்த்தார். அரை சதம் கடந்த பிரண்டன் மெக்கலம் 65 ரன்கள் குவித்தார். டெய்லர் 18, கோரி ஆண்டர்சன் 20 ரன்களில் கிளம்பினர். நியூசிலாந்து அணி 19 ஓவரில், 4 விக்கெட்டுக்கு 152 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

 

http://sports.dinamalar.com/2014/03/1396091650/BrendonMcCullumcricket.html

அரையிறுதியில் தென் ஆப்ரிக்கா: இங்கிலாந்து பரிதாபம்
மார்ச் 29, 2014.

 

சிட்டகாங்: ‘டுவென்டி–20’ உலக கோப்பை தொடரின் அரையிறுதிக்கு தென் ஆப்ரிக்க அணி முன்னேறியது. நேற்று நடந்த லீக் போட்டியில் இங்கிலாந்தை 3 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

 

வங்கதேசத்தில் ஐந்தாவது ‘டுவென்டி–20’ உலக கோப்பை தொடர் நடக்கிறது. இதன் ‘பிரிவு–1’ல் நடந்த லீக் போட்டியில் தென் ஆப்ரிக்கா, இங்கிலாந்து அணிகள் மோதின.

‘டாஸ்’ வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் ஸ்டூவர்ட் பிராட் ‘பீல்டிங்’ தேர்வு செய்தார். தென் ஆப்ரிக்க அணிக்கு ஆம்லா (56), குயின்டன் டி காக் (29) ஜோடி ‘சூப்பர்’ துவக்கம் கொடுத்தது. டுமினி (5), மில்லர் (19), மார்கல் (3) ஏமாற்றினர்.

 

 

கேப்டன் டிவிலியர்ஸ் (69*) கைகொடுக்க, தென் ஆப்ரிக்க அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 196 ரன்கள் குவித்தது. விளக்குகள் முழுமையாக எரியாததால், தென் ஆப்ரிக்க அணி ‘பேட்’ செய்த போது, இருமுறை ஆட்டம் தடை பட்டது.

 

கடின இலக்கைத் துரத்திய இங்கிலாந்து அணியின் லம்ப் (18), ஹேல்ஸ் (38), மொயீன் அலி (10), மார்கன் (14), பட்லர் (34), ஜோர்டான் (16) சீரான இடைவெளியில் அவுட்டாகினர். போராடிய போபரா (31) நிலைக்கவில்லை. இங்கிலாந்து அணி 20 ஓவரில், 7 விக்கெட்டுக்கு, 193 ரன்கள் எடுத்து, 3 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்ந்தது. பிரஸ்னன் (17), பிராட் (1) அவுட்டாகாமல் இருந்தனர்.

 

இந்த வெற்றியை அடுத்து, ‘பிரிவு–1’ல் 6 புள்ளிகள் பெற்ற தென் ஆப்ரிக்க அணி, இத்தொடரில் 2009க்குப் பின், மீண்டும் அரையிறுதிக்கு முன்னேறியது. இரண்டு தோல்விகள் பெற்ற இங்கிலாந்து அணி அரையிறுதி வாய்ப்பை இழந்தது.

 

http://sports.dinamalar.com/2014/03/1396114838/ABdeVillierscricket.html

 

  • கருத்துக்கள உறவுகள்

At least today Aus should win India for the sake of cricket :P

பாக்., அணி வெற்றி
 

 

மிர்புர்: வங்கதேசத்துக்கு எதிரான 'டுவென்டி-20' உலக கோப்பை தொடரின் லீக் போட்டியில் அகமது ஷேசாத் சதம் அடித்து கைகொடுக்க, பாகிஸ்தான் அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

 

வங்கதேசத்தில் ஐந்தாவது 'டுவென்டி-20' உலக கோப்பை தொடர் நடக்கிறது. மிர்புரில் இன்று நடக்கும் 'குரூப்-2' லீக் போட்டியில், பாகிஸ்தான், வங்கதேசம் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி கேப்டன் ஹபீஸ், பேட்டிங் தேர்வு செய்தார்.

 

பாகிஸ்தான் அணிக்கு ஷேசாத் சிறப்பான துவக்கம் தந்தார். இவரின் அதிரடி ஆட்டத்தால், சதம் கடந்தார். கம்ரான் அக்மல் (9), ஹபீஸ் (8), உமர் அக்மல் (0) நிலைக்கவில்லை. மாலிக் (26), அப்ரிதி (22) ஓரளவு கைகொடுத்தனர். பாகிஸ்தான் அணி 20 ஓவரில், 5 விக்கெட்டுக்கு 190 ரன்கள் எடுத்தது.

கடின இலக்கை துரத்திய வங்கசேத அணிக்கு தமிம் (16), அனாமுல் (18) அதிர்ச்சி தந்தனர். குல் வேகத்தில் சாகிப் (38), ஜியார் (0) வெளியேறினர். மற்றவர்கள் விரைவில் கிளம்ப, வங்கதேச அணி 20 ஓவரில், 7 விக்கெட்டுக்கு 140 ரன்கள் மட்டும் எடுத்தது.

 

http://www.dinamalar.com/iccworldt20/Newsdetails.php?id=944591

  • கருத்துக்கள உறவுகள்

If Aus wins I have promised to shave my head

இந்திய அணி எளிதான வெற்றி
மார்ச் 29, 2014.
 

மிர்புர்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 'டுவென்டி-20' உலக கோப்பை லீக் போட்டியில் இந்திய அணி 73 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது

 

வங்கதேசத்தில், 5வது 'டுவென்டி-20' உலக கோப்பை தொடர் நடக்கிறது. மிர்புரில் இன்று நடக்கும் 'பிரிவு-2' லீக் போட்டியில் இந்திய அணி, ஆஸ்திரேலியாவை சந்தித்தது. 'டாஸ்' வென்ற ஆஸ்திரேலியா அணி கேப்டன் பெய்லி 'பவுலிங்' தேர்வு செய்தார். இதனையடுத்து, இந்திய அணி பேட்டிங் செய்கிறது. இந்திய அணியில் தவான், ஷமி நீக்கப்பட்டு ரகானே, மோகித் சர்மா வாய்ப்பு பெற்றனர்.

 

இந்திய அணிக்கு ரோகித் சர்மா (5) சொதப்பினார். ரகானே (19), கோஹ்லி (23) அதிக நேரம் நீடிக்கவில்லை. ரெய்னா (6) ஏமாற்றினார். பின் இணைந்த கேப்டன் தோனி, யுவராஜ் ஜோடி சிறப்பாக விளையாடியது. யுவராஜ் அரை சதம் அடித்தார். தோனி 24 ரன்களில் அவுட்டானார். ஜடேஜா டக்-அவுட் ஆனார். யுவராஜ் 60 ரன்களில் ஆட்டமிழந்தார். இ்ந்திய அணி20 ஓவரில், 7 விக்கெட்டுக்கு 159 ரன்கள் எடுத்தது. அ்ஷ்வின் (2), புவனேஷ்வர் (0) அவுட்டாகாமல் இருந்தனர்.

 

ஆஸ்திரேலிய அணிக்கு அஷ்வின் சுழலில் பின்ச் (6), வார்னர் (19) சிக்கினர். ஒயிட் டக்–அவுட் ஆனார். வாட்சன் 1 ரன்னில் வௌியேறினார். மேக்ஸ்வெல் (23) ஆறுதல் தந்தார். பெய்லி (8) ஜடேஜாவிடம் சிக்கினார்.மிஸ்ரா பந்தில் ஹாட்ஜ் (13), ஹாடின் (6) பெவிலிய்ன் திரும்பினர். பின் வந்தவர்களும் சொதப்ப, ஆஸ்திரேலிய அணி 16.2 ஓவரில், 86 ரன்களுக்கு ஆல்–அவுட்டாகி தோல்வியடைந்தது. இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக அஷ்வின் 4 விக்கெட் வீழ்த்தினார்.

 

http://sports.dinamalar.com/2014/03/1396112192/kohliindiacricket.html

இலங்கை – நியூஸிலாந்து இன்று பலப்பரீட்சை : சங்கா, மஹேலவுக்கு இது இறுதிப் போட்டியா?

ஐ.சி.சி.யின் 5 ஆவது உலக இருபது–-20 கிண்ணத்தொடரின் அரையிறுதிக்குள் நுழை வதற்கான தீர்க்மான போட்டியில் இலங்கை அணியும் நியூஸிலாந்து அணி யும் இன்று மோதவுள்ளன. அதேவேளை, இப்போட்டியில் இலங்கை அணி தோல்வியடையும் பட்சத்தில் இலங்கை அணியின் சிரேஷ்ட வீரர்களான குமார் சங்கக்கார மற்றும் மஹேல ஜெயவர்தன ஆகியோருக்கு இது இறுதி இருபதுக்கு -20 போட்டியாகவும் அமைந்து விடும் சாத்தியம் உள்ளது.

பிரிவு-–1 தென்னாபிரிக்க அணி ஏற்கனவே அரையிறுதியை உறுதிசெய்துள்ள நிலையில் அப்பிரிவில் 2 ஆவதாக அரையிறுதிக்குள் நுழைவது யார் என்ற போராட்டத்திலேயே இன்று இரு அணிகளும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

லீக் சுற்றில் இதுவரை தலா 3 போட்டிகளில் விளையாடியுள்ள இரு அணிகளும் 2 வெற்றி ஒரு தோல்வி என தலா 4 புள்ளிகளை பெற்றுள்ளன. இந்நிலையிலேயே தமது இறுதி லீக் போட்டியில் ஒன்றையொன்று சந்திக்கும் இரு அணிகளும் இன்று இறுதிவரை வெற்றிக்காக போராடவுள்ளன.

அணித்­த­லைவர் சந்­திமால் ஐ.சி.சி.யின் ஒரு போட்­டித்­த­டைக்­குள்­ளா­கி­யுள்­ளதால் இன்­றைய போட்­டியில் இலங்கை அணியை லசித் மலிங்க தலை­மை ­தாங்­க­வுள்ளார். மிக வும் தீர்க்­க­மான போட்­டியில் அழுத்­தங்­க­ளுக்கு மத்­தியில் தலை­மை­யேற்­க­வுள்ள மலிங்க, அணியை வெற்­றிப்­பா­தைக்கு அழைத்துச் செல்­வாரா என்ற எதிர் பார்ப்பு எழுந்துள்ளது.

இரு அணிகளுக்கும் கட்டாய வெற்றியை நோக்கியதாக அமைந்துள்ள இப்போட்டி இறுதிவரை விறுவிறுப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதுவரையில் இரு அணிகளும் 12 இரு பது–20 போட்டிகளில் மோதியுள்ளன.
அதில் இரு அணிகளும் தலா 5 வெற்றிகளைப்பெற்றுள்ளதுடன் ஒரு போட்டி சமநிலையிலும் மற்றயது முடிவு எட்டப்ப டாதும் நிறைவு கண்டுள்ளன.

http://www.virakesari.lk/?q=node/362623

 

ஹேரத்தின் சுழலில் சிக்கியது நியூசிலாந்து: த்ரில் வெற்றியுடன் அரையிறுதிக்குள் நுழைந்தது இலங்கை

New-Zealand-v-Sri-Lanka-World-T20_zps9a2

 

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான வாழ்வா சாவா போட்டியில் ரங்கண ஹேரத்தின் அபார பந்து வீச்சுடன் 59 ஓட்டங்களால் த்ரில் வெற்றி பெற்ற இலங்கை அணி அரையிறுதிக்குள் நுழைந்தது.
5ஆவது இருபது-20 உலக கிண்ணத் தொடர் பங்களாதேஷில் இடம்பெற்று வருகின்றது. இதன் சுப்பர் 10 சுற்றில் விளையாடும் 10 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.

இதன்படி குழு 1இல் இலங்கை, தென்னாபிரிக்கா,  இங்கிலாந்து, நியூசிலாந்து, நெதர்லாந்து அணிகளும், குழு2இல் இந்தியா, அவுஸ்திரேலியா, பாகிஸ்தான், மேற்கிந்திய தீவுகள், பங்களாதேஷ் அணிகளும் இடம் வகிக்கின்றன.

இதில் ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள ஏனைய அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும்.

இந்த நிலையில் சூப்பர்–10 சுற்றில் குழு2இல் இன்று இரவு சிட்டகொங் தேசிய மைதானத்தில் அரங்கேறிய  ஆட்டத்தில் இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

இரு அணிகளும் அரையிறுதிக்குள் நுழையும் நோக்கில் களமிறங்கியிருந்தமையால் போட்டி சுவாரஸ்யமாக காணப்பட்டது.

இப்போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து முதலில் களத்தடுப்பை மேற்கொள்ள தீர்மானித்தது. அந்தவகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 19.2 ஓவர்களில் சகல விக்கெட்டுகளை இழந்து 119 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.

இதனையடுத் களமிறங்கிய நியூசிலாந்து 15.3 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 60 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியை தழுவியது.

 

http://www.virakesari.lk/?q=node/362658

முதலாவது  அரை இறுதி போட்டி

ஏப்ரல் 3ம் திகதி

 

ஸ்ரீலங்கா  எதிர் வெஸ்ட் இண்டீஸ் அல்லது பாகிஸ்தான்

 

இரண்டாவது அரை இறுதி போட்டி

ஏப்ரல் 4ம் திகதி

 

இந்தியா  எதிர்  தென் ஆப்ரிக்கா

ஆஸ்திரேலியா ஆறுதல் வெற்றி
ஏப்ரல் 01, 2014.
 

 

மிர்புர்: வங்கதேசத்துக்கு எதிரான ‘டுவென்டி–20’ உலக கோப்பை தொடரின் லீக் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றி பெற்றது.

 

வங்கதேசத்தில் ‘டுவென்டி–20’ உலக கோப்பை தொடர் நடக்கிறது. மிர்புரில் இன்று நடக்கும் ‘பிரிவு–2’ லீக் போட்டியில் வங்கதேசம், ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. ‘டாஸ்’ வென்ற வங்கதேச அணி கேப்டன் முஷ்பிகுர் ரஹிம் ‘பேட்டிங்’ தேர்வு செய்தார்.வங்கதேச அணிக்கு தமிம் இக்பால் (5), அனாமுல் (0) அதிர்ச்சி தந்தனர். அரை சதம் கடந்த சாகிப் 66 ரன்களில் அவுட்டானார். முஷ்பிகுர் ரஹிம் 47 ரன்கள் எடுத்தார்.  நாசிர் 14 ரன்களில் திரும்பினார்.

வங்கதேச அணி 20 ஓவரில், 5 விக்கெட்டுக்கு 153 ரன்கள் எடுத்தது.

 

ஆஸ்திரேலிய அணிக்கு பின்ச், வார்னர் ஜோடி சிறப்பான துவக்கம் தந்தது. அரை சதம் கடந்த பின்ச் 71 ரன்கள் எடுத்தார். வார்னர் (48) அரை சத வாய்ப்பை இழந்தார். மேக்ஸவெல் (5) சொதப்பினார். ஆஸ்திரேலிய அணி 17.3 ஓவரில், 3 விக்கெட்டுக்கு 158 ரன்கள் எடுத்து, வெற்றி பெற்றது. ஒயிட் (18), பெய்லி (11) அவுட்டாகாமல் இருந்தனர்.

ஏற்கனவே 3 போட்டியில் தோல்வியடைந்த ஆஸ்திரேலிய அணிக்கு, இந்த வெற்றி ஆறுதல் தந்தது.

 

http://sports.dinamalar.com/2014/04/1396350599/Shakibcricket.html

அரையிறுதியில் வெஸ்ட் இண்டீஸ்
 

 

மிர்புர்: பாகிஸ்தானுக்கு எதிரான 'டுவென்டி-20' உலக கோப்பை லீக் போட்டியில் 84 ரன்கள் வி்ததியாசத்தில் வெற்றி பெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணி அரையிறுதிக்கு முன்னேறியது.

 

வங்கதேசத்தில், 5வது 'டுவென்டி-20' உலக கோப்பை தொடர் நடக்கிறது. மிர்புரில் இன்று நடந்த 'பிரிவு-2' லீக் போட்டியில், 'நடப்பு சாம்பியன்' வெஸ்ட் இண்டீஸ் அணி, பாகிஸ்தானுடன் மோதின. 'டாஸ்' வென்ற வெஸ்ட் இண்டீஸ அணி கேப்டன் சமி 'பேட்டிங்' தேர்வு செய்தார்.

 

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு ஸ்மித் (8), கெய்ல் (5) சொதப்பினர். சிம்மன்ஸ் (31), சாமுவேல்ஸ் (20) ஓரளவு கைகொடுத்தனர். பிராவோ, சமி ஜோடி அசத்தியது. பிராவோ 46 ரன்களில் அவுட்டானார். வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவரில், 6 விக்கெட்டுக்கு 166 ரன்கள் எடுத்தது. சமி (42), ரசல் (0) அவுட்டாகாமல் இருந்தனர்.

 

சான்டோகி வீசிய முதல் பந்தில் ஷேசாத் டக்-அவுட் ஆனார். பத்ரீ சுழலில் கம்ரான் அக்மல் (0), உமர் அக்மல் (1), சோயப் மாலிக் (2) அடுத்தடுத்து விழுந்தனர். கேப்டன் ஹபீசும் 19 ரன்களில் பெவிலியன் திரும்பினார் பின் வந்த நரைனின் சுழலில், மக்சூத் (18), தன்வீர் (14), அப்ரிதி (18) சரணடைந்தனர். சயீத் அஜ்மல் (1), உமர் குல் (4) வெளியேற, பாகிஸ்தான் அணி 17.5 ஓவரில், 82 ரன்கள் மட்டும் எடுத்து, 84 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. வெஸ்ட் இண்டீஸ் அணி சார்பில் பத்ரீ, நரைன் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.

 

http://www.dinamalar.com/iccworldt20/Newsdetails.php?id=945362

 

  • கருத்துக்கள உறவுகள்
T20 தர வரிசையில் இந்தியா முதலிடம்! இலங்கையை பின்னுக்குத் தள்ளியது!
புதன், 2 ஏப்ரல் 2014 (15:27 IST)
 
நடப்பு 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் இதுவரை தோல்வி அடையாது அரையிறுதிக்கு முன்னேறிய தோனி தலைமை இந்திய அணி T20 சர்வதேச கிரிக்கெட் தரவரிசையில் இலங்கையைப் பின்னுக்குத் தள்ளி மீண்டும் முதலிடம் பிடித்தது.
130 தரவரிசைப் புள்ளிகளுடன் இந்தியாவும் இலங்கையும் ஒரே நிலயில் இருந்தாலும் தோல்வியடையாமல் இதுவரை சென்றதால் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
 
நடப்பு T20 உலக சாம்பியன்களான வெஸ்ட் இண்டீஸ் அணி 5வது இடத்திற்கு ஆஸ்ட்ரேலியாவை பின்னுக்குத் தள்ளி சென்றுள்ளது.

அரை இறுதிப் போட்டிக்கும் மலிங்கவே அணித் தலைவர்

மேற்கிந்தியத் தீவுகள் அணியுடன் இன்று இடம்பெறவுள்ள இருபதுக்கு-20 உலகக் கிண்ண அரையிறுதிப் போட்டிக்கும் லசித் மலிங்கவே தலைமை தாங்குவார் என இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

அதன்படி, இலங்கை அணியின் இருபதுக்கு -20 அணித் தலைவர் தினேஷ் சந்திமல் இன்றைய போட்டியில் விளையாட மாட்டார் என இலங்கை கிரிக்கெட் சபையின் முகாமையாளர் அறிவித்துள்ளார்.

 

http://www.virakesari.lk/articles/2014/04/03/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AF%87-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களத்தின் முண்ணனி வீரர்கள் மேற்கிந்திய வீரர்களின் பந்துகளுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்து கொண்டிருக்கிறார்கள், தற்பொழுது 3 விக்கேட் இழப்புக்கு 58 ஓட்டங்களை சிங்களம் பெற்றிருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

மகெல ஒரு பந்து கூட அடிக்கவில்லை ஏன்ட கவலையில ஜெர்மனியில் ஒருத்தர் இருப்பதாக ராய்தனின் பிளிம்ப் பலூன் தகவல் அனுப்பியிருக்கு

மகெல ஒரு பந்து கூட அடிக்கவில்லை ஏன்ட கவலையில ஜெர்மனியில் ஒருத்தர் இருப்பதாக ராய்தனின் பிளிம்ப் பலூன் தகவல் அனுப்பியிருக்கு

 

olderinfantlaughing_zps2d1c31da.jpg:lol: :lol:

  • கருத்துக்கள உறவுகள்

சொன்னேன் தானே யோக்கர் பாபா எண்டு.......

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.