Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐநா மனித உரிமைச் சபையின் தீர்மானத்தால் இஸ்ரேலை எதுவும் செய்ய முடியவில்லை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஐநா மனித உரிமைச் சபையின் தீர்மானத்தால் இஸ்ரேலை எதுவும் செய்ய முடியவில்லை:-

 

பாதுகாப்புச் சபைக்கு செல்லாத வரை பயமில்லை:- ஐநாவின் தீர்மானத்தை தோற்கடிக்க ஆரபுதேசத்தை நாட வேண்டும் என்கிறார் இலங்கை மனித உரிமைகள் ஆணையாளர்:-

HUMAN%20RIGHTS%20COMMISSON%20OF%20SRILAN

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையில் இலங்கையின் மீது இரண்டு தீர்மானங்கள் நிறைவேற்றினாலும் அவை ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு சபைக்கு அனுப்பப்படாது விடின் நாட்டுக்கு பாதிப்பு அல்லது கெடுதி ஏற்பட இடமில்லையென இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் கலாநிதி பிரதீபா மகாநாமஹேவா கூறினார்.

கொழும்பில் நடத்தப்பட்ட மனித உரிமை விழிப்புணர்வு நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் இஸ்ரேலுக்கு எதிராக பல பிரேரணைகள் நிறைவேற்றப்பட்ட போதும் இஸ்ரேலுக்கு எதிராக எதுவும் நடக்கவில்லை. இது போலவே இந்த பிரேரணை ஐ.நா பாதுகாப்பு சபைக்கு அனுப்பப்படாதுவிடின் இலங்கைக்கு எதுவும் நடைபெறாது என்றும் அவர் கூறினார்.

இலங்கையானது ரோம் நியதிச்சட்டத்தை ஏற்று கையொப்பமிடவில்லை. இதனால் சர்வதேச குற்றச்செயல் நீதிமன்றம் இலங்கைக்கு எதிராக யுத்த குற்ற விசாரணைகளை நேரடியாக மேற்கொள்ளும் சாத்தியமில்லை என்றும் அவர் கூறினார்.

ஆயினும், இலங்கைக்கு எதிரான யுத்தக் குற்றச்சாட்டுகளை விசாரிக்க ஒரு சர்வதேச விசாரணை ஆணைக்குழுவை அமைக்கும் சாத்தியம் உள்ளதென மகாநாமஹேவா கூறினார்.

எனவே, இலங்கைக்கு இப்படியான தீர்மானம் வருமிடத்து அதனை தோற்கடிக்க நட்பு நாடுகளின் ஆதரவை திரட்ட வேண்டுமென மகாநாமஹேவா தெரிவித்துள்ளார்.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/102689/language/ta-IN/article.aspx

ஆக இலங்கையில் மனிதவுரிமை ஆணைக்குழு மனிதவுரிமையை நிலைநாட்ட பாடுபடாமல் அதில் இருந்து தப்பும் தந்திரோபாயத்தைத்தான் தேடுகிறது அல்லது ஆலோசனை வழங்குகிறது.

 

இலங்கை அரசினால் அமைக்கப்படும் எந்தவொரு அமைப்பும் பெரினைவாதத்தை தூக்கிப்பிடித்தி பாதுகாக்கவே பயன்படுத்தப்படும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.