Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மகிந்தவின் வாக்குறுதிகளை உலகம் நம்பக்கூடாது! - சர்வதேச விசாரணையே ஒரேவழி!! - சுமந்திரன் கோரிக்கை!!!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்தவின் வாக்குறுதிகளை உலகம் நம்பக்கூடாது! - சர்வதேச விசாரணையே ஒரேவழி!! - சுமந்திரன் கோரிக்கை!!!

சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவார் என்று இனிமேலும் நம்புவதை சர்வதேச சமூகம் உடன் கைவிட வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

சிறிலங்காவின் 66வது சுதந்திரதின உரையில், சர்வதேசத்துக்கு அளித்த வாக்குறுதிகளை ஒருபோதும் நிறைவேற்ற முடியாது என்று சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச வெளிப்படையாகக் கூறியுள்ளார். எனவே, சிறிலங்கா ஜனாதிபதி வாக்குறுதிகளை நிறைவேற்றுவார் என்று இனியும் சர்வதேச சமூகம் நம்பிக்கொண்டிருக்கக் கூடாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

'சர்வதேச சமூகம் தாமாக முன்வந்து இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்டப் போரில் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்து பக்கச்சார்பற்ற சர்வதேச விசாரணையை நடத்த வேண்டும். இதை வலியுறுத்தி அடுத்த மாதம் ஜெனிவா மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்படவேண்டும் என்று நாம் சர்வதேச சமூகத்திடம் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றோம்' என்றும் அவர் குறிப்பிட்டார்.

கேகாலையில் செவ்வாயன்று நடைபெற்ற சிறிலங்காவின் 66வது சுதந்திரதின பிரதான நிகழ்வில் சிறிலங்கா ஜனாதிபதி, 'சிறிலங்காவுக்கு எதிராக முன்வைக்கப்படும் போர்க்குற்றச்சாட்டுகள் அநீதியானவை. வடக்கு மக்களை கேடயங்களாகப் பயன்படுத்தி பலிகடாவாக்க சர்வதேச சக்திகள் முயற்சிக்கின்றன. கசப்பான அனுபவங்களைக் கடற்கரையில் எழுத வேண்டும்' என்று நீண்ட உரையாற்றியிருந்தார்.

சிறிலங்கா ஜனாதிபதியின் இந்தக் கூற்றுக்கள் தொடர்பில் கருத்துத் தெரிவித்த போதே கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், '2009 மே 26ஆம் திகதி சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூனுடன் சேர்ந்து வெளியிட்ட கூட்டறிக்கையில் இறுதிப் போரில் போர்க்குற்றங்கள் இடம்பெற்றிருந்ததை ஏற்றுக்கொண்டிருந்தார்.

அத்துடன் இதுதொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணையை நடத்துவார் என்று வாக்குறுதியளித்திருந்தார். ஆனால், தன்னுடைய வாக்குறுதிகளை நிறைவேற்றமாட்டார் என்று சுதந்திரதின உரையில் சிறிலங்கா ஜனாதிபதி வெளிப்படையாகக் தெரிவித்துள்ளார்.

எனவே, சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தான் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவார் என்று இனிமேலும் நம்புவதை சர்வதேச சமூகம் உடன் கைவிட வேண்டும்.

போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்து பக்கச்சார்பற்ற சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும். இறுதிக்கட்டப் போரில் அரச படைகள், விடுதலைப் புலிகள் என இரு தரப்பினர் மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. எனவே, இலங்கையில் ஒரு தரப்பு விசாரணையை அதாவது அரசதரப்பு விசாரணையை நம்ப முடியாது. இந்நிலையில்தான் நாம் சர்வதேச விசாரணையைக் கோருகின்றோம்.

நாட்டில் நல்லிணக்கம் ஏற்பட வேண்டுமெனில், உண்மைகள் வெளிக்கொண்டு வரப்படவேண்டும். அதைவிடுத்து இந்த உண்மைகளை சிறிலங்கா ஜனாதிபதியின் கூற்றின்படி கடற்கரையில் எழுதி வைப்பதால் நாட்டில் நல்லிணக்கம், சமத்துவம், நீதி ஏற்பட வாய்ப்பிருக்கவே மாட்டாது. எனவே, பக்கச்சார்பற்ற சர்வதேச விசாரணை மூலமாகத்தான் நடந்த உண்மைகளை வெளிக்கொணர முடியும்' என மேலும் தெரிவித்துள்ளார்.

http://www.ponguthamil.com/showcontentnews.aspx?sectionid=1&contentid=7c615b59-cf1a-44fa-b308-1e135f281cb5

எங்களின்ரைகள் சும்மா குற்றம் சாட்டினார்க்ள். அவர்களும் தங்களின் நேரத்துடன் வந்து போர் குற்ற விசாரணைக்கு கேட்கிறார்கள். நாம் சற்று நேரகாலத்திற்கு ஆரம்பித்துவிட்டோம். அவ்வளவுதான்.

மகிந்தவே வந்து வாக்குறிதிகளை நிறைவேற்றமுடியாது என்று சொல்லுமளவுக்கு எங்களுக்கு புரிதல் இல்லாமல் இருந்ததையோட்டி மகிந்தவே வேதனைப்பட்டு மேடையேறி சொல்லியிருப்பார். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.