Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலகப்படத்தில் இலங்கையை அடையாளம் காட்டத் தெரியாத அமெரிக்க செனட்டரே கண்டனப் பிரேரணையை முன்வைத்துள்ளார்! – லலித் வீரதுங்க.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

உலகப்படத்தில் இலங்கையை அடையாளம் காட்டத் தெரியாத அமெரிக்க செனட்டரே கண்டனப் பிரேரணையை முன்வைத்துள்ளார்! – லலித் வீரதுங்க. 

[saturday, 2014-02-15 08:56:18]
lalith-150214-150.jpg

உலக வரைபடத்தில் இலங்கை எந்த இடத்தில் இருக்கின்றது என்பதை தெரிந்து கொள்ளாத, பொது அறிவு இல்லாத அமெரிக்க காங்கிரஸின் ஓர் உறுப்பினரே இலங்கைக்கு எதிராக கண்டனப் பிரேரணையை முன்மொழிவதற்கு தலைமை தாங்கியிருக்கிறார் என ஜனாதிபதியின் செயலர் லலித் வீரதுங்க தெரிவித்தார். நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தும் தேசிய நடவடிக்கை திட்டத்திற்கு தலைமை தாங்கும் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, ஊடகங்களின் தலைமை அதிகாரிகளை கொழும்பில் சந்தித்து உரையாடிய போதே இவ்வாறு தெரிவித்திருக்கிறார்.

  

இலங்கை எங்கிருக்கிறது என்று உலக வரைபடத்தில் கண்டுபிடிக்கும் பொது அறிவு அற்றவர்களை அங்கத்தவர்களாக கொண்டிருக்கும் அமெரிக்க காங்கிரஸ், இலங்கைக்கு எதிரான கண்டனப் பிரேரணைகளை நிறைவேற்றுவதற்கு எத்தனிப்பது வேதனையை அளிக்கிறது. நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நாம் ஒவ்வொன்றாக பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். முதலில் காணாமல் போனவர்களை கண்டுபிடிக்கும் ஆணைக்குழுவின் செயற்பாட்டுக்கு முன்னுரிமை அளிப்பது அவசியம்.

காணாமல் போனவர்களின் எண்ணிக்கையை சரியாக மதிப்பீடு செய்த பின்னர் அடுத்த நடவடிக்கை எடுக்கப்படும். காணாமல் போனவர்கள் தொடர்பான ஆணைக் குழுவுக்கு காணாமல் போனோர் பற்றி 13,000 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. இதன்படி, சுமார் 8,000 பொதுமக்கள் காணாமல் போயிருப்பதாக முறைப்பாடுகளில் சுட்டிக்காட்டப்படுகிறது.

2012ம் ஆண்டு மே மாதத்தில் அன்றைய அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஹிலாரி கிளின்டனுக்கு இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகள் குறித்து நாம் தகவல்களை பெற்றுக் கொடுத்த போது, நாம் அந்த அம்மையாருக்கு நல்லிணக்கப்பாட்டை சில மாதங்களில் செய்து முடிக்க முடியாது என்பதை சுட்டிக்காட்டி, குறுகிய காலத்தில் இந்தப் பிரச்சினையை தீர்த்து வைப்பதற்கு நாம் மாயாஜாலக்காரர்கள் அல்ல என்பதை நினைவுபடுத்தினோம்.

ஏற்கனவே நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்து வதற்கு நாம் 18 மாதங்களை செலவு செய்துள்ளோம். இது தொடர்பாக நாம் பெருமளவு பணிகளை செய்து முடித்திருக்கிறோம். 1977ம் ஆண்டு இலங்கை நிர்வாக சேவையில் இருந்த போது என்னுடன் இருந்த சகாக்களில் ஒருவர் அல்லது இருவருக்கு மாத்திரமே தமிழ்மொழி அறிவு இருந்தது. இதனால், அரசாங்கம் இலங்கை நிர்வாக சேவைக்கு தமிழ்மொழி அறிவுடையவர்களை சேர்த்துக் கொள்வதற்காக சமீபத்தில் விசேட பரீட்சை ஒன்றையும் நடத்தியது. இவ்விதம் நாம் இப்போது தமிழ் அறிவு படைத்தவர்களை அரசாங்கத்தின் உயர் அதிகாரிகளாக நியமிப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

வடமாகாணத்தில் தற்போது நிலை கொண்டிருக்கும் இராணுவத்தினரின் எண்ணிக்கை குறைக்கப்பட்டிருக்கிறது., 2009ம் ஆண்டில் வடமாகாணத்தில் இருந்த இராணுவத்தினரின் எண்ணிக்கை 2013ம் ஆண்டில் 30 சதவீதமாக குறைக்கப்பட்டிருக்கிறது. அதுபோன்று கிழக்கு மாகாணத்தில் ஆயுதப்படையினரின் எண்ணிக்கை 26 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. யுத்தத்தினால் பாதிக்கப்படாத நாட்டின் பல பிரதேசங்களில் சுமார் 50 சதவீதமான ஆயுதப்படையினர் நிலை கொண்டுள்ளார்கள்.நாட்டின் பாதுகாப்பை கவனத்திற்கு எடுத்து அவ்வப்போது ஆயுதப் படையினரின் எண்ணிக்கையை குறைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்திருக்கிறது.

யுத்த காலத்தில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து அவற்றின் மீதான விசாரணையின் ஆதாரங்கள் தற்போது மேல் நடவடிக்கை எடுப்பதற்காக சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மூதூரில் ஏ.சி.எப். என்ற சர்வதேச தொண்டர் அமைப்பின் உறுப்பினர்களின் கொலை தொடர்பாக சட்டமா அதிபர் குற்றம் இழைத்தவர்களுக்கு எதிராக சட்டப்பூர்வமாக வழக்குகளை தொடர்ந்துள்ளார். எல்.ரி.ரி.ஈ.யின் சிறுவர் போராளிகளும் இப்போது விடுவிக்கப்பட்டுள்ளார்கள். அத்துடன் முன்னாள் எல்.ரி.ரி.ஈ. ஆயுதப்படை வீரர்கள் 11ஆயிரத்து 872 பேர் விடுவிக்கப்பட்டுள்ளார்கள். அதே வேளையில் 171 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்காக புனர்வாழ்வு நிலையங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள்.

யுத்தம் முடிவடைந்த பின்னர் தனியாருக்கு சொந்தமான 20 ஆயிரம் ஏக்கர் காணி அவற்றின் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. அரசாங்கத்திற்கு சொந்தமான 5,700 ஏக்கர் காணியும் இப்போது விடுவிக்கப்பட்டுள்ளது. நல்லிணக்க ஆணைக்குழுவின் 285 பரிந்துரைகளில் 43 பரிந்துரைகள் நல்லிணக்க செயற்பாடுகள் தொடர்பாகவும் மும்மொழி தொடர்பானவையாகவும் அமைந்திருக்கின்றன. இது தொடர்பாக அரசாங்கம் உரிய சட்டத்திருத்தங்களை மேற்கொண்டு வருகிறது.

அமெரிக்க காங்கிரஸின் 40 உறுப்பினர்களை சந்தித்து இலங்கையின் நிலைப்பாட்டை விளக்கிக்கூறிய போது, யுத்தம் பல்லாண்டுகளாக நடைபெற்ற போதும் யுத்தத்தின் இறுதி இரண்டுவார கால நிகழ்வுகள் குறித்து மாத்திரம் அமெரிக்கா அக்கறை காட்டுவது தவறு என்பதை சுட்டியதாக ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க மேலும் தெரிவித்தார்.

btn-back.gif   lg-share-en.gif

http://www.seithy.com/breifNews.php?newsID=103672&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

உலக வரைபடத்தில் இலங்கை எந்த இடத்தில் இருக்கின்றது என்பதை தெரிந்து கொள்ளாத, பொது அறிவு இல்லாத அமெரிக்க காங்கிரஸின் ஓர் உறுப்பினரே இலங்கைக்கு எதிராக கண்டனப் பிரேரணையை முன்மொழிவதற்கு தலைமை தாங்கியிருக்கிறார் 

 

அது தானே

அவர் எப்படி சொல்லலாம்

படம் இருந்தால் போட்டு மிதியுங்கள்

தூதராலயத்துக்கு முன் பொட்டு எரியுங்கள்  அன்பர்களே...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அமெரிக்கர்களே மண்டை கழண்டவர்கள் என்று லலித் வீரததுங்காவிற்க்கு தெரியாதது போல .

உலக வரைபடத்தில் இலங்கை எந்த இடத்தில் இருக்கின்றது என்பதை தெரிந்து கொள்ளாத, பொது அறிவு இல்லாத அமெரிக்க காங்கிரஸின் ஓர் உறுப்பினரே இலங்கைக்கு எதிராக கண்டனப் பிரேரணையை முன்மொழிவதற்கு தலைமை தாங்கியிருக்கிறார்

அது தானே

அவர் எப்படி சொல்லலாம்

படம் இருந்தால் போட்டு மிதியுங்கள்

தூதராலயத்துக்கு முன் பொட்டு எரியுங்கள் அன்பர்களே...

எங்கள் பொது பல யோசென கட்சியின் செயலாளர் நாயகத்திற்கு உடம்பு முழுக்க மூளை.

சிறி லங்காவை முன்னேற்ற தன்னை வருத்தி பிழிகிறார். :D

  • கருத்துக்கள உறவுகள்

அணுகுண்டுப் பரிசோதனை செய்வதற்கு மிருகங்கள் மட்டுமே வாழும் தீவாக இலங்கையை அமெரிக்கக் காங்கிரசு கண்டுபிடித்து சிபாரிசு செய்தபோது அங்கு நாகரீகமடைந்த மக்கள் வாழ்வதாக அமெரிக்காவிற்கு எடுத்துக் காட்டியவர் யேசுவை ஆராதிக்கும் ஒரு தமிழ் போதகர் என்பதாகப் படித்த ஞாபகம் உள்ளது. :o

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.