Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரஜீவ் கொலைக்குற்ற வழக்கில் உடந்தையாக காணப்பட்டவர்களை விடுவித்தால் காங்கிரசின் இளங்கோவன் குழு தீவிரவாதிகளாக மாறுவார்களா?

Featured Replies

இளங்கோவன் என்ற தமிழ் நாட்டுக் காங்கிரஸ் அரசியல்வாதி, ரஜீவ் காந்தியின் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஏழுபேரும் விடுவிக்கப்பட்டால் தாம் தீவிரவாதிகளாக மாறப்போவதாக மிரட்டிருயிருக்கிறார் என்று முகநூலில் சில செய்திகள் சொல்கின்றன..

https://www.facebook.com/Sevanthinetwork/timeline?filter=1

இப்போதாவது புரிகிறதா தீவிரவாதிகள் ஒழிந்திருக்கும் குகை எங்கே என்று. தலைமைகள் தொடக்கம் தொண்டுகள் வரைக்கும் உள்ளே தள்ளப்பட வேண்டியவர்களின் மடம் அது. பிடித்து உள்ளே தள்ளிவிட வேண்டியதுதானே. ஏன் தாமதம்? என்றுதான் கேட்கத் தோன்றுகிறது.

 

ரஜீவ் காந்தி காலம் தொடக்கம் பதவியில் இருந்தபோதெல்லாம் கொள்ளை அள்ளிய கட்சியின் தமிழ்நாட்டு தலைவர் ஒருவரின் மானம் கெட்டதனமான வீராப்பு பேச்சு அது. இந்த வீரவண்டி அரசியல்வாதிக்கு பாகிஸ்தானிய போர்வீரரர்கள் இந்தியாவுக்குள் ஊடுருவி இந்திய இராணுவ வீரர்களின் தலைகளை கொய்து சென்றதை காங்கிரஸ் கட்சி மக்களவையில் மறைத்த போது இந்த தேசிய வீரவேசம் எங்கே போனது. அன்று அந்த கதையை மக்களவையில் மறைத்து, இந்திய தேசியத்தை காக்க துட்டு இல்லாத பரதேசிகளாக அல்லாவா இந்த காங்கிரசின் தலைமைகள் முழுவதும் நடந்து கொண்டார்கள். இதையல்லவா பா.ஜ.க "காங்கிரசின் கோளைததனத்தால் அக்கம் பக்க நாடுகள் ஆக்கிரமிப்பில் இறங்குகின்றன " என்று குற்றம் சாட்டுகிறது.  வாயால் செப்படி வீரம் காட்டும் இந்த வீரக்குட்டி காங்கிரஸ்காரர்கள் தேசியத்தைக் காக்க தாங்கள் தீவிரவாதியாகி தற்கொலை முயற்சிகளில் இறங்காமல் தங்கள் உறவுகளை போர்வீரகளாக பாகிஸ்தானிய சீன எல்லைகளுக்கு அனுப்பி வைப்பார்களா? பிரித்தானிய இளவரசரே ஆப்கானிஸ்தானில் சென்று சண்டை செய்துவிட்டுத்தான் தனக்கு பரம்பரை உரிமையான முடிக்கு திரும்பி வந்திருக்கிறார். நாட்டுக்காக துரும்பு தூக்கி போடாத இந்த பரம்பரை அரசியல்வாதிகள் தாம் தீவிரவாதிகளாகி விடுவோம் என்று கூறி யாரை ஐயா எமாற்றுகிறார்கள்?

செய்யாத குற்றதிற்காக 23 மூன்று வருடங்கள் சிறையில் கழி தின்று, இன்னமும் உள்ளே பூட்டப்பட்டிருக்கும் அப்பாவிகள் மீது இந்த வீரம் காட்டும் பெருச்சாளிகள் தாங்களும் இந்திய அமைதிப்படையில் சேர்ந்து தமிழ் ஈழம் போய் ஈழத்தமிழ் மக்களுக்கு எதிராக புலிகளைத் தாக்கி போராடியிருக்கலாமே.  இளங்கோவன் இந்த வசனத்தால் தமிழ்ஈழத்தில் ரஜீவ்காந்தி செய்த கொலைகளால்தான் புலிகள் தீவிரவாதிகளாக மாற வேண்டி நேர்ந்தது என்கிறாரா? புலி என்றால் பயந்து போய் கோடிகளுக்குள் ஒழித்த பேடிகள் இன்று புலிகளை சர்வதேசம் அழித்துவிட்டது என்ற துணிச்சலில் தாங்கள் தீவிரவாதிகளாக மாறுவார்கள் என்று வாய்வீரம் காட்டுகிறார்களா? இதை ரஜீவ் காந்தி இறந்த போது அல்லது புலிகள் இருந்த போது கூறியிருந்தால் யாராவது இவரையும் ஒரு மனிதனாக கணித்திருப்பார்கள். இப்போது இது சுத்த பேடித்தனமான வீரவேசக்கதை.  எப்படியோ தேர்தலுக்கு பின்னாலாவது எழுவரும் வெளியே வரத்தான் போகிறார்கள். உங்கள இன்றைய வீரவார்த்தைகளை அன்று தன்னும் காப்பாற்றுவீர்களா? கருணை மனு நிராகரிக்கப்பட்டு தூக்கு ஊர்ஜிதம் செய்யபட்ட போது செங்கொடி என்ற தியாகி செய்தது போல காங்கிரஸ் பெருசாளி இளங்கோவனும் செய்வாரா? இல்லை; வரும்  தேர்தலில் காங்கிரஸ், தமிழ் நாட்டில் விலாசம் இல்லாமல் போனவுடன் தானும் தலைமறைவாவாரா? உங்களை மாதிரி வாய் வீர பேடிகள் எல்லாம், பெண்கள் முறமெடுத்து புலியோட்டிய தமிழ் பரம்பரம்பரகளில் தோன்ற தமிழ் என்ன பாவம் செய்ததோ?

 

கொலை, கொள்ளை, காமுக குற்றங்களை செய்துவிட்டு நூற்று முப்பது கோடி மக்களின் கண்கள் முன்னால் தலைமறைவாக திரியும் கட்சி இது. மத்திய மந்திரி சசிதூரின் மூன்றாவது மனவி சுனந்தா, தனது  மந்திரிக கணவன் பெண்களுடன் கள்ளத்தொடர்புகள் வைத்திருக்கிறார் என்றதை வெளிவிட்டவுடன் எப்படிக்கொலையுண்டார் என்பது பற்றி விசாரிக்க காங்கிரசின் தலைமைப்பீடமோ அல்லது இளங்கோவனோ எப்போதாவது அக்கறை காட்டினார்களா? குற்றம் செய்யாதவ்ர்களை சிறையில் வைத்திருப்பத்தால் அரசியல் கதிரையில் அமர்ந்த்திருக்கும் கட்சி இது. தமிழ் ஈழத்துக்குள் உள்ளுட்டு கணவன்மார், பிள்ளைகளின் முன்னால் பெண்களை மானபங்க படுத்தி இந்திய இராணுவம் கொலை செய்துவிட்டு போனபோது நியாயத்திற்காக துடிக்காத மானம் இல்லாத இந்த அரசியல்வாதிக்கு இப்போது தேசியத்துக்காக துடிக்கிறதாம் இரத்தம். அதனால் ஈழத்தமிழரை ரஜீவ் அந்த அவலம் செய்து கொலை செய்த போது தனக்கு தேசிய உணர்வு தமிழர் அழிய வேண்டும் என்று சொல்லித்தந்ததாம். அதனால் இன்று கோட்டால் பிழையாக குற்றம் சாட்டப்பட்டவர்கள் வெளியே வந்தால் தான் தீவிரவாதியாக மாறுவாராம். ரஜீவின் கீழ் இந்திய இராணுவம் செய்த போர்க்குற்றதை ஐ.நா விசாரிக்க வேண்டும் என்று இவர்கள் ஆதரித்து இலங்கை வந்த சிங்களவர்களெ அமெரிக்கா சென்று வாதடியிருக்கிறார்கள். சோனகிரி காங்கிரஸ் அரசியல்வாதியான இளங்கோவன், சிங்களவரால் இந்தியா மீது போர்க்குற்ற விசாரணை வந்தால் தான்  தேசியத்தை மதித்து தீவிரவாதியாக மாறுவேன் என்று கூறினாரா? இவர்தான், காந்தி என்ற பெயரை களவெடுத்து சூடிக்கொண்டு கொலைகளும் கொள்ளைகளையும் செய்துவரும் இத்தாலிய மாபிக்களுக்கு செம்பு தூக்கும் காந்தியின் காங்கிரஸ் தொண்டனாம். காந்தியால் ஏற்படுத்தி வைக்கபட்ட காந்தி என்ற பெயரையும், காங்கிரஸ் என்ற பெயரையும் திருடாமல் இவர்களால் பதவியில் ஏறி கொள்ளை அடிக்ககூட முடியவில்லை.     

 

பதவியில் இருந்த பா.ஜ.க தேர்தலுக்கு பயந்து கருணை மனுவை கண்ணெடுத்தும் பார்க்கவில்லை. பதவிக்கு வந்த காங்கிரஸ் பழிவாங்கலிற்காக வேண்டுமென்றே கிடப்பில் போட்டுவிட்டு, பிரியங்காவை நளினியை சந்தித்து நாடகமாட வைத்தார்கள். அதன் பின்னர் மூவரின் கருணை மனுக்கள் நிராகரிக்கப்பட்டு தூக்கு நிச்சயம் செய்யப்பட்டது. விசாரணையின் போது நளினிக்கு செய்த கொடூரங்கள் வெளியே வரமுடியாமல் தடுக்கப்பட்டிருகிறது. ஆனால் பேரறிவாளன் கதை அதுவல்ல. அவர் நிராபராதி என்பதும், காங்கிரசின் பழிவாங்களால் தூக்கு கயிற்றை முத்தமிடமிருந்தவர் தமிழ் உலகெங்கும் ஐயம் திரிபற எடுத்துச்சொல்லப்பட்டுவிட்டது. ஆனாலும் இந்த ஏழுபெரையும் விடுவிப்பதை தடுக்க எடுக்கும் புதிய முயற்சிகளில் ஒன்று இவர்களில் ஒருவரான நளினி ஏற்கவே மன்னிக்கப்பட்டவர் என்பது. இதில் அவர்கள் ஏன் மற்றவர்கள் அறுவரையும் தன்னும் வெளியேவிடக்கூடாது என்று சொல்லவரவில்லை. நளினிக்கு ஏற்கனவே ஒரு மன்னிப்பு கிடைத்ததால் மற்றையவர்கள் அறுவரும் சேர்ந்து வெளியே போக கூடாது என்று வாதாடுகிறார்கள். நடந்த உணமையானது, நளினிக்கு மன்னிப்பு கொடுத்தமை, குற்றமற்ற மூவரையும் தூக்குவதை இலகுவாக்கவே. இப்போது உண்மையை மூட்டி மறைத்து மறு திசையில் வாதிடுகிறார்கள். நளினியின் மன்னிப்பை வைத்து தாங்கள் இலக்கு வைத்தவர்களை திரும்பவும் மாட்டி வைக்க முனைகிறார்கள்.

 

அது போக குற்றவாளிகளை வெளியேவிட்டால் குற்ற நடத்தைகள் கூடும் என்கிறார்கள். தீவிரவாதம் ஒழிந்திருக்கும் இளங்கோவனும் காங்கிரஸ்  கொள்ளையர்களும் வெளியே  இருப்பதுதான் உண்மையில் இந்தியாவில் குற்றம் அதிகரிப்பதற்கான காரணம். UPF ஆட்சியின் பின்னர்தான், பாலியல் வன்முறை, கொலை, இலஞ்ச ஊழல்கள் அதிகரித்தது என்றதை நடுவு நிலைமயான சர்வதேச ஊடகங்கள் பல முறை எடுத்து சொல்லிவிட்டன.

 

இன்றைய சர்வதேச நாடுகள் பலவற்றில் சட்ட அமைப்புகள் ஐரோப்பிய நாடுகளை பின்பற்றியதே. இந்தியாவும் அப்படியே. அதாவது கோட்டால் குற்றம் சாட்டப்பட்டவர் ஒருவரின் நிலையை மாற்ற முடியாது என்பதாகும். ஆனால் அதை மாற்றாமல் அவரை வெளியேவிட பல வழிமுறைகளும் அந்த சட்டங்களில் இருக்கின்றன. கருணை மனுக்கள் இப்படியானவையே. மேலும் பரல் என்பது திருந்திய குற்றவாளிகளுக்கானது. எனது அபிப்பிராயபடி கருணை மனுவையும் பரலையும் தொடுக்க முடியாது என்றுதான் நினக்கிறேன். ஆனால் நளியின் இடத்தில் இந்திய  சட்டங்களில் கருணை மனுவில் தண்டணை குறைக்கபட்டவர் பரோல் மூலம் போக முடியாது என்கிறார்கள் போலிருக்கு. கருணை மனு தூக்கு தண்டனை கைதிளுக்கு மட்டும்தான் பாவிக்கப்படுகிறது. இவர்களின் வாதத்தை பார்த்தால் கருணை மனுவுக்கு கோரிக்கை விட்டவர் ஒருவர் தன்னை பிற்காலம் நிராபராதி என்று மரபணு பரிசோதனைகள் மூலம் கூட நிருபிக்க முடியாது என்பார்கள் போலிருக்கிறது. அமெரிக்காவில் காரணம் எதுவும் இல்லாமல், குற்ற்வாளி மன்னிப்பிற்க்கு கோரிக்கைவிடாமல், அதிபர் ஒருவர் தனது விருபத்துக்கு குற்றவாளிகளை விடுதலை செய்ய முடியும். அவர்கள் தங்களின் பதவிக்காலம் முடியும் போது பலரை சொந்த விருப்பு, வெறுப்பின் பெயரில் விடுதலை செய்ய முடிகிறது. எனவே பல இடங்களில் குற்றவாளிகள் வெளியேவர சட்டத்தில் பல வழிகள் இருக்கும் போது இந்த ஏழுபேரையும் விடுவிப்பத்தால் மட்டும் குற்றங்கள் அதிகரிக்கும் என்பது எடுபடத்தக்க வாதம் அல்ல. உண்மையில் இவர்களின் கருணைமனு 11 வருடங்களுக்கு முன்னர் ஏற்கப்பட்டு இவர்கள் அன்றே வெளியே வந்திருக்க வேண்டியவர்கள் என்பதுதான் உண்மை. ஆனால் தேர்தலுக்கு பயந்து அரசியல் கட்சிகள் இந்த வழக்கில் தாங்கள்தான் குற்றவாளிகளாக நடந்து கொண்டுள்ள்னர்.

 

வழக்கில் காட்டப்படும் சாட்சிகளின் ஆதாரங்களுக்கு மேலே போய் தீர்ப்பு வழங்கப்படாது என்றது யூரர்களுக்கு இருக்கும் கட்டுப்பாடு. ஆனால் நீதிபதிக்கு குற்றம் சட்டப்பட்டவர் தனக்கு என்ன தண்டனை கேட்கிறார் என்பதை பொறுத்தோ அல்லது, அவர் தன்னைக் குற்றவாளியாக ஏற்றுகொள்கிறாரா அல்லது மறுக்கிறாரா என்பதற்கோ மேலே போய் வழக்கை விசாரித்து தீர்ப்பு வழங்க முடியாதா? எதற்காக பிரதம நீதியரசர் சதாசிவம் தலைமையிலான குழு குற்றவாளிகள் தம்மிடம் கேட்காத ஒன்றான அவர்களின் விடுதலையை பரிந்துரைத்தார்கள் என்று வாதாடுகிறார்கள். பல வழக்குகளில் நீதிபதிகள் வழக்குகளின் வெளியே சென்று சட்ட ஆலோசனை கருத்துக்கள் சொல்லியிருக்கிறார்கள். காங்கிரசார் தாங்கள் கோடுகளுக்கு செல்லாத அரசியல்வாதிகள் போல இந்த வழக்கில் மட்டும் நாடகமாடுவது சுத்த அரசியல் நோக்கமல்லவா? இந்த நீதியரசர் குழு வழக்கை தெரிந்தவர்கள்தான். குற்றம் சட்டப்பட்டவர்கள் கருணை மனுவுக்கு கோரிக்கை வைத்திருந்தாலும், அதற்கும் மேலாக சென்று தொடர்ந்தும் தாங்கள் சுற்றவாளிகள் என்ற நிலைப்பாட்டையே எடுத்துச் சொல்லியியும் வருகிறார்கள் என்றதையும் அறிந்தவர்கள்தான் இந்த நீதிபதிகள். மேலும் பிரதான விசாரணையாளனான தியாகராஜன் தான் இந்த வழக்கில் தப்பு பண்ணியதாகவும் ஒத்துக்கொண்டுமிருக்கிறார் என்பதையும் அறிந்தவர்கள்தான்.  இவற்றை கவனத்தை கொண்டு 23 வருடமாக இந்த வழக்கில் உழலும் குற்றம் சட்டபட்டவர்களும், மத்திய, மாநில அரசுகளுக்கும் உகந்த ஒரு நடிவடிக்கையை நீதியரசர்கள் முன் வைத்ததில் என்ன தப்பு? 23 வருடங்கள் தொடரும் இந்த வழக்கை எப்படி முடிவுக்கு கொண்டுவரலாம் என்று அவர்கள் கருத்துக்கூற முடியாதா?  அல்லது இது கேட்காத போது நீதிபதிகள் கொடுத்த அறிவுரை என்பதால் சட்டத்தில் இடம் இருந்தாலும் அவர்களை இனி வெளியே விடமுடியாது என்கிறாகளா? இதில் மத்திய அரசின் நீதியரசர்கள் பரிந்துரைதிருந்தால் என்ன, அல்லது பரிந்துரைக்க மறுத்திருந்தால் என்ன 432, 433, 435 போன்ற சரத்துக்களில் மானிநில அரசுக்கு அவர்களை விடுதலை செய்ய அதிகாரம் இருக்காயின் மாநில அரசு அவ்வாறு விடுதலை செய்வதில் என்ன தப்பு? இந்த வழக்கை அவர்கள் முடித்து வைத்துவிட்டால் இனி காங்கிரசுக்கு அரசியல் எதிர்காலமே இல்லாமல் போவிடப்போவதாக துடிக்கிறார்களே.

 

அரசியல்வாதிகள் யாருமே எப்போதுமே சுத்தமானவர்கள் அல்ல. இதற்கு வைகோவும்தான் அடக்கம். பலரால் கனவானக  போற்றப்படும் வைகோவின் கதையை எடுத்தாலும் எங்கோவாது ஒரு மாசு மறுவை கண்டுபிடிக்கலாமாக்கும். ஆனால் இந்த வழக்கில்அவரின் உழைப்பு  சுயலாபம் கொள்ளாதது என்று அடித்து வாதாட நமக்கு எந்த கூச்சமும் கிடையாது. வைகோ கோட்டு வாசலில் நின்றுகொண்டே முதல் அமைச்சர் ஜெயலிதாவுக்கு கோட்டு தீர்ப்பு எந்த சரத்துக்களை பாவித்து மானில அரசாங்கம் செயல்பட வேண்டும் என்று கூறியதை சொன்னது வரவிருக்கும் தேர்தலில் ஏற்படுத்தும் அரசியல் கூட்டா? அல்லது அது ஒரு தேர்தல் பிரசாரமா? வைகோ பா.ஜ.வுடன் ஏற்கனவே கூட்டு சேர்ந்துவிட்டார் என்றதை காங்கிரசார் நம்பவில்லையா? அப்புறம் எதற்காக அவர் கோட்டிலிருந்தே எல்லோரையும் விடுக்கும் படி கேட்ட கோரிக்கையை முதல் அமைச்சர் ஜெயலலிதா செயல்ப்படுத்த அது முதலமைச்சர் ஜெயலலிதாவின் அரசியல் நகர்வு என்று ஏய்க்கப் பார்க்கிறார்கள் காங்கிரசார்? இவ்வளவு காலமும் அந்த வழக்கின் பின்னால் தன் உழைப்பை போட்ட வைகோ கோட்டில் இருந்தே வேறு சிக்கல்கள் எழமுன்னர் கோட்டு ஆலோசனக்கு இணங்க தமிழ்நாடு அரசை அவர்களை விடுவிக்க சொன்னத்தில் என்ன தப்பு. தன்னுடன் இன்றை நேரத்தில் அரசியல் கூட்டில் இல்லாத ஒருவரின் கோரிக்கையை கேட்டு அதற்கு இணங்கிப் போனத்தில் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நடத்தையில் காங்கிரசார் எங்கிருந்து அரசியல் நோக்கம் கற்பிக்கிறார்கள். உண்மை என்ன என்றால் தமிழ் நாட்டில் கங்கிரசே இனி எம்.பீக்களாக வரப்போவதில்லை. எனவே தமிழ் நாட்டு காங்கிரசாருக்கு நியமன எம்.பி. பதவிகளாவது வேண்டுமாயின் காங்கிரஸ் வடக்கிலாவது வெல்ல வேண்டும். அதனால்தான் இந்த இளங்கோவன் போன்ற தமிழ்நாடு அரசியல் வாதிகள் தாங்கள் தீவிரவாதிகளாக மாறிவிடுவோம் என்று கூறி வடக்கில் காங்கிரசை காப்பாற்றும் தற்கொலை முயற்சிகளில் இறங்கியிருக்கிறார்கள்.

Edited by மல்லையூரன்

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் மல்லை அண்ணா...இதை நான் முகப் புத்தகத்தில் யாரோ போட அதை யாழ் திண்ணையில் போட்டேன்..ஆனால் இதை ஊடகங்ளில் தேடினேன் கிடைக்க வில்லை...ஆதாரத்தோடை கிடைத்தால் கண்டிப்பாய் இணைக்கிறேன்....அவன் ஒரு ரவுடி போன்று..புதிய தலைமுறை நிகழ்ச்சி ஒன்றில் இவன் தேவை இல்லாமல் கதிரையை கீழ போட்டு உடைத்து சண்டித்தனம் செய்தவன்....இவன் சொன்னாலும் ஆச்சரியப் படப் போறது இல்லை...அவன்ட கட்சியே தீவிரவாத கட்ச்சி தான்....

தீவிரமா ஊழலில் இறங்குவார்.

எப்பவோ செத்த ராசீவை வைத்து அரசியல் பண்ணுறார். இவரை தமிழகத்தில் சீரியஸா எடுப்பதில்லை.

  • தொடங்கியவர்

பலே இளங்கோவனின் குத்துக்கறணம்.

 

 

இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்கு ரத்து செய்யப்பட்ட பேரறிவாளனை மட்டும் விடுவிப்பதில் நியாயம் இருக்கிறது என்று மூத்த காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் கூறியுள்ளார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் தூக்கை ஆயுள் தண்டனையாக்கியது உச்சநீதிமன்றம். இதைத் தொடர்ந்து ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் இந்த மூவர் உட்பட 7 பேரையும் விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு செய்தது.

ஆனால் இதற்கு மத்திய அரசும் காங்கிரஸ் கட்சியும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. அதே நேரத்தில் பேரறிவாளனை மட்டும் விடுதலை செய்யலாம் என மூத்த காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் கருத்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கருத்து தெரிவிக்கையில், மூவரையும் விடுதலை செய்த ‘உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு மிகவும் மோசமான தீர்ப்பு. பேரறிவாளன் மட்டும் பெற்றரி வாங்கிக் கொடுத்தார்; மற்றபடி அவருக்கு எதுவும் தெரியாது என்கிறார்கள்.

அதனை விசாரித்த அதிகாரியே அதைத்தான் இப்போது சொல்லியிருக்கிறார். அதனால், பேரறிவாளனை மட்டும் தண்டனை இல்லாமல் செய்தால், அதில் ஓரளவு நியாயம் இருக்கிறது.

அதனை ஏற்றுக்கொள்ள முடியும். ஆனால், முருகன், சாந்தன் இருவரும் ராஜீவ் காந்தி கொலை செயல் நடக்கும் அந்த இடத்தில் இருந்தவர்கள். இவர்களை விடுதலை செய்யப்போகிறார்கள் என்று சொல்வது, நீதித் துறை மீதே நம்பிக்கை இல்லாமல் செய்யக்கூடிய செயல். அவர்களுக்குத் தூக்குத் தண்டனை கொடுத்தால்தான் நீதி நிலைக்கும் என்று கூறியுள்ளார்.

 

http://news.tamilstar.com/archives/59829#more

 

நளனி தனக்கு பலமிரட்டல்கள் விசாரணை அதிகாரிகளால் விடுக்கp பட்டதென்றாரே? நளனியிடம் பிரியங்கா என்ன கேட்டார் என்றும், அவர் என்ன பதில் சொன்னார் என்றதையும் இளங்கோவன் சொல்வாரா? ஜெயலலிதா அன்றே கேட்டது போல் கைதியை சந்திக்க பிரியங்கா எந்தவையில் அதிகாரம் பெற்றிருந்தார்?

 

அந்த இடத்திl இருந்தவர்கள்தான் கொலையாளிகள் என்றால் பிரபாரனை ஏன் தேடினார்கள். பிரபாகரனை தேடியவர்கள் ஏன் சு.சாவன்னாவை தேடவில்லை

 

பேரறிவாளன்மட்டும்தான் தான் குற்றமற்ற்வர் என்றாரா? மற்ற்வர்கள் 100% மும் தாங்கள் குற்ற்வாளிகள்தான் என்கிறார்களா?

  • கருத்துக்கள உறவுகள்

பிரதம நீதியரசர் இளங்கோவன் கருத்து தெரிவித்துவிட்டார்..! :wub:

  • கருத்துக்கள உறவுகள்

முதலில்... இந்திய உச்ச நீதிமன்ற தீர்ப்பை... விமர்சித்த இளங்கோவனை,
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் கைது செய்து... 25 ஆண்டுகள் சிறையில் போட வேண்டும்.

Edited by தமிழ் சிறி

1380127_365559633587205_1222012053_n.jpg

காஷ்மீர், நக்சலைட், பஞ்சாபி, ஈழத்தமிழ் படுகொலைகளை நிறைவேற்றிய கொங்கிரஸ் தான் தெற்காசியாவின் மிகப்பெரிய பயங்கரவாத அமைப்பு.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.