Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழர்களுக்கு நியமனம் கிழக்கில் வழங்கப்படமாட்டாது கிழக்கின் ஆளுநர். கூட்டமைப்பு கண்டனம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களுக்கு நியமனம் கிழக்கில் வழங்கப்படமாட்டாது கிழக்கின் ஆளுநர். கூட்டமைப்பு கண்டனம்

By Editor on March 12, 2014

govner_a-1024x685.jpg

விடுதலைப் புலிகளுக்கு கிழக்கில் நாங்கள் நியமனம் வழங்கத் தயாராக இல்லை. நீங்கள் எங்கு போய் முறையிட்டாலும் தமிழர்களுக்கு நியமனம் கிழக்கில் வழங்கப்படமாட்டாது என தன்னைச் சந்திக்க வந்த பட்டதாரிகளிடம் கிழக்கின் ஆளுநர் கூறியதை தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு வன்மையாகக் கண்டிப்பதாக அரியநேத்திரன் எம். பி. தெரிவித்தார்.

 

கிழக்கு மாகாணத்துக்கென நடாத்தப்பட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர் போட்டிப் பரீட்சையில் அதிகூடிய புள்ளிகளைப் பெற்றிருந்தும் நேர்முகப்பரீட்சைக்கு அழைக்கப்படாமல் இருந்த மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களைச் சேர்ந்த பட்டதாரிகள் பலர் கிழக்கின் ஆளுநர் ரியல் அட்மிரல் மொஹான் விஜயவிக்கிரமவை சந்தித்து தமது குறைபாடுகளைச் சொல்லி திருகோணமலையிலுள்ள ஆளுநர் அலுவலகத்துக்கு கடந்த திங்கட்கிழமை சென்றிருந்தார்கள்.

 

அவ்வாறு சென்ற பட்டதாரிகளிடம் ஆளுநர் நடந்து கொண்ட முறை பற்றி பத்திரிகைகளுக்கு தெரிவித்த போதே அரியநேத்திரன் மேற்கண்டவாறு கூறினார். இது தொடர்பில் அவர் தொடர்ந்து கூறுகையில் மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களைச் சேர்ந்த தமிழ் இளைஞர்கள் யுவதிகள் அபிவிருத்தி உத்தியோகத்தர் போட்டிப் பரீட்சையில் மிகக்கூடிய புள்ளிகளைப் பெற்றிருந்த போதிலும் இனவிகிதாசார அடிப் படையில் தமிழர்களுக்கு மட்டக் களப் பிலும் அம்பாறையிலும் இடமில்லையென காரணம் காட்டி நேர்முகப்பரீட்சைக்கு முதலாம் நிலை தொடக்கம் 5 ஆம் நிலைப் புள்ளிகளைப் பரீட்சையில் பெற்றவர்கள் கூட அழைக்கப்படவில்லை.

 

மிகக்குறைந்தளவு புள்ளிகளைப் பெற்ற முஸ்லிம் சிங்கள பரீட்சார்த்திகளே நேர்முகப்பரீட்சைக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.இந்த அநீதியை தெரியப்படுத்த மேற்படி இரண்டு மாவட்டங்களைச் சேர்ந்த பட்டதாரிகளே ஆளுநரை சந்தித்து தமது கவலையைத் தெரிவிக்க சென்றுள்ளனர்.

 

ஆளுநர் நடந்து கொண்ட முறை அராஜகமானதும் நாகரீகமற்றதும் ஆகும். நீங்கள் அனைவரும் விடுதலைப்புலிகளைச் சேர்ந்தவர்கள். நீதிமன்றமல்ல எங்கு சென்றாலும் தமிழர்களுக்கு நியமனம் வழங்கப்படமாட்டாது என ஒரு இராணுவத்தளபதி போல் நடந்து கொண்டுள்ளார். கடந்த காலங்களில் இந்த மாவட்டங்களில் தமிழர்களுக்கு கூடுதலான நியமனம் வழங்கப்பட்டுள்ளது. முஸ்லிம்களும் சிங்களவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 

இனிவரும் காலங்களில் தமிழர்களுக்கு நியமனம் வழங்கப்படமாட்டாது என அந்த பட்டதாரி இளைஞர்களையும் யுவதிகளையும் அநாகரிகமாக நடத்திக் கொண்டதுடன் ஒரு இராணுவத் தளபதி போல் நடந்தும் கொண்டுள்ளார். இது வன்மையாகக் கண்டிக்கத்தக்க ஒரு விடயமாகும்.

 

இது போன்றே அண்மையில் முகாமைத்துவ உதவியாளர் நியமனத்தையும் ஆளுநர் செய்துள்ளார். அதற்கு எதிராக நீதிமன்றம் செல்ல வேண்டிய தேவை எமக்கு ஏற்பட்டது. இதன் காரணமாகவே ஆளுநர்களை சிவில் உத்தியோகத்தர் ஒருவரை நியமிக்கும் படி கோரி வந்துள்ளோம். முன்னாள் முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தனின் ஆலோ சனைப்படி ஆளுநரைச் சந்திக்க சென்ற அந்தப் பட்டதாரிகளுடன் ஆளுநர் நடந்து கொண்ட முறை அநாகரிகத்தன்மை வாய்ந்ததென அவர் மேலும் தெரிவித்தார்.

 

http://www.supeedsam.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95/

 

Edited by shanthy

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கூட்டமைப்பு இப்ப பெரிசா கிழக்கை பற்றி கதைக்கிறது இல்லை ...சேர்ந்து இழுக்க கடினமோ தெரியவில்லை ...அங்கே ஒரு மாகாண சபை இருக்கிறது , அதன் எதிர் கட்சி தலைவர் யார் என்றே எனக்கு தெரியாது/ வேறை ஆக்களுக்கு தெரியுமோ தெரியாது  ...அந்தளவில் அவர்களின் முக்கியத்த்துவம் கூட்டமைப்பால் , வெளி உலகத்தீட்கு தெரியபடுத்தபடுகிறது ...அனந்தி ஜெனீவா போகலாம் என்றால் அங்கே உள்ள ஒருவர் ஏன் போக முடியாது ?

 ...அனந்தி ஜெனீவா போகலாம் என்றால் அங்கே உள்ள ஒருவர் ஏன் போக முடியாது ?

வடமாகாணம் மாதிரியே, கிழக்கு மாகாண சபை தீர்மானத்தை எடுத்து அனுப்பிவைதிருக்க வேண்டும்.

ஈழத் தமிழர் அனைவருமே சுதந்திரம் பெற்ற காலம் முதல் பல்வேறு அடக்குமுறைகளுக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றனர்.

 

இதனால் ஏற்பட்ட போராட்டங்கள் எல்லாம் நாமறிந்ததே. ஆனால் இந்தப் பிரச்சினை வடககு கிழக்கு பிரச்சினையாக மாறி இப்போது வடக்கு மாகாணத்திற்கான பிரச்சினையாக மாறியுள்ளது போன்று அரசியல்வாதிகள் பலர் நடந்து கொள்கின்றனர். இது மாவட்டமாக பின்னர் பிரதேசமாக சுருங்கி விடுமோ என்ற அச்சமும் எழுகிறது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வடமாகாணம் மாதிரியே, கிழக்கு மாகாண சபை தீர்மானத்தை எடுத்து அனுப்பிவைதிருக்க வேண்டும்.

 

மல்லை , உங்கட பகிடி எல்லோருக்கும் விளங்காது :)

 

அதை கொன்சம் விளக்கமாக -இப்படி பாமர மக்களுக்கும் விளங்குகிற மாதிரி சொல்ல வேண்டும் ..

 

1.அனந்தி கதைக்க போகிற வட மாகாணத்த்துக்கு ஆக , அவரை அனுப்பியது வட மாகாண சபை 

 

2.சுமந்திரன் கதைக்க போகிறார் , இலங்கை நாடாளுமன்றத்துக்காக - அதனால்தான் அவர் போர் குற்ற விசாரணை தேவை இல்லை என்பது - இன்னும் விளக்கம் குறைந்த ஆக்களுக்காக

 

3.கிழக்கு மாகாணத்தில் இருந்து ஒருவரும் இல்லை , ஏன்னெனில் அந்த மாகாணசபை ஒருவரையும் அனுப்பவில்லை -அவர்கள் நடுநிலையோ தெரியவில்லை :))

அனந்தி ஜெனீவா போகலாம் என்றால் அங்கே உள்ள ஒருவர் ஏன் போக முடியாது

 

இது கேள்வி.

 

வடமாகாணம் மாதிரியே, கிழக்கு மாகாண சபை தீர்மானத்தை எடுத்து அனுப்பிவைதிருக்க வேண்டும்.

 

இது பதில்

 

1.அனந்தி கதைக்க போகிற வட மாகாணத்த்துக்கு ஆக ,அவரை அனுப்பியது வட மாகாண சபை

2.சுமந்திரன் கதைக்க போகிறார் , இலங்கை நாடாளுமன்றத்துக்காக - அதனால்தான் அவர் போர் குற்ற விசாரணை தேவை இல்லை என்பது - இன்னும் விளக்கம் குறைந்த ஆக்களுக்காக

3.கிழக்கு மாகாணத்தில் இருந்து ஒருவரும் இல்லை , ஏன்னெனில் அந்த மாகாணசபை ஒருவரையும் அனுப்பவில்லை -அவர்கள் நடுநிலையோ தெரியவில்லை :))

 

 

 

இது விளக்கம் குறந்தவர்களுக்கான கேள்வியின் விளக்கமா அல்லது பதிலின் விளக்கமா என்பதுவும் விளங்கவில்லை. 

 

விளக்கம் குறைந்தவர்களுக்கு நாம் என்ன செய்ய முடியும்?

 

துரோணர் குருவியை காட்ட அருசுனனுக்கு கழுத்து மட்டும் தெரிந்தாம்.  துரியோதனுக்கு காடு, வானம், பூமி சகலதும் தெரிந்ததாம்.

 

பிரேரணையை வலுவாக்க வேண்டும் என்று அமெரிக்காவிடம் கோரிக்கை வைப்பதறக்காக சுமந்திரனை அரசு  பணம் கொடுத்து அனுப்பியதை விள்க்கம் குறைந்தவர்களுக்கு சொன்னால் அவர்களுக்கு அது விளங்கவா போகிறது. அதனால் அந்த விளக்கம் குறைந்தவர்களை அவர்கள் பாட்டுக்கு விட்டுவிடுங்கள். நமக்கு அந்த வம்பு வேண்டாம். (அனந்தியை வடமாகாணம் அனுப்பியது விதைவைகள், காணாமல் போனோரின் பிரதிநிதியாக. வடமாகாணத்துக்காக கதைப்பதற்கு என்று எங்கே சொல்லப்பட்டிருக்கு? )

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

துரோணர் குருவியை காட்ட அருசுனனுக்கு கழுத்து மட்டும் தெரிந்தாம்.  துரியோதனுக்கு காடு, வானம், பூமி சகலதும் தெரிந்ததாம்.

 

 

இவர்கள் போவது தமிழர்களை பிரதிநிதிபடுத்தி என்றால் ஏன் TNA கிழக்கு மாகாணத்தில் இருந்தும் ஒருவரை  அனுப்பவில்லை என்பதுதான் எனது கேள்வி. அதற்க்கு நீங்கள் சொல்லுகிறீர்கள் , அதை கிழக்கு மாகாண சபை அனுப்ப வேண்டும் என்று ...அதுக்கும் இதுக்கும் என்ன தொடர்பு ? என்ன விதத்தில் சுமந்திரன் போகிறாரோ அதே விதத்தில் கிழக்கு மாகாணத்தில் இருந்தும் ஒருவர் போலாம்தானே ...? அதற்க்கு ஏன் கிழக்கு மாகாண சபை அனுமதி /அனுசரணை வேண்டும்? 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.